எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 16, 2011

அம்பத்தூர் நரகம்!!

 எங்க வீட்டிலே மிச்சம் இருக்கும் சாமான்களைக் கொஞ்சம் எடுத்து வரலாம்னுபோனால் வீட்டுக்குள் நுழையவே முடியவில்லை. வழியில் வரிசையாக மணல், செங்கல், ஜல்லி கொட்டப்பட்டு, வழியென்றால் சத்தியமாக தெரு நட்ட நடுவில் கொட்டப்பட்டுள்ளது. மனிதர் நடமாடவே கஷ்டம். இந்த அழகில் தினம் தினம் பெய்யும் மழை வேறு. லாரிகள், டிராக்டர்கள், ஜேசிபி, மினி வான்கள் என எல்லாம் வந்து மாட்டிக்கொள்கின்றன. இந்த லாரி மாட்டிக்கொண்டு நகரமுடியாமல்! :((((((
 
 தண்ணீர் தேங்கி நடமாட முடியாமல் சேறாக இருக்கும் சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள் தேங்கி நிற்கும் தண்ணீர். இவ்வளவு மோசமான சாலையிலும் அதைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் குடி இருக்கும் மக்கள். இதைக் குறைந்த பக்ஷம் தெருக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் போட்டு ரப்பிஷ், கிராவல் போட்டு அடித்தால் சாலை கொஞ்சம் நடக்க லாயக்காக இருக்கும். நாங்க இருக்கையில் எல்லாரையும் கேட்டு அலுத்துப் போய்க் கொஞ்ச தூரம் வரையாவது நாம் செய்யலாம் என எங்க எதிர்வீட்டுக்காரரும், நாங்களும் முடிவு செய்தபோது கிளம்பும்படி ஆயிற்று. அப்படியும் ரப்பிஷாவது போடலாம் எனில் ஒரு சிலர் அதற்கு ஆக்ஷேபம் தெரிவிக்கின்றனராம். எங்களிடமே சிலர் ரப்பிஷைப் போட்டு நடக்க முடியாமல் பண்ணிட்டீங்க என முன்பு போட்டபோது வந்து சண்டை போட்டார்கள். :((((
 
 
 
Posted by Picasa
மேலுள்ள படத்திலும் இந்தக் கடைசிப்படத்திலும் காணப்படும் வண்டிகள் எல்லாம் எங்க வீட்டு வாசலை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. நாங்க இருக்கையிலேயே சற்றும் கவலைப்படாமல் நிறுத்துவாங்க. கேட்டால், "அதுக்கென்ன இப்போ!" என அலக்ஷியமாகப் பதில் வரும். இப்போக் கேட்கவே வேண்டாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு எப்போது?? முனிசிபாலிட்டியில் தினம் தொலைபேசி ஜல்லி கிரஷரை ஒரு லோடு கொட்டிச் சாலையை நடக்கத் தகுதியானதாகப் பண்ணும்படிக் கேட்டோம். நாங்க இருக்கும்வரையில் தினமும் இதோ இன்று, இதோ இன்று எனச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு இப்போ வரதே இல்லை!

21 comments:

 1. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இதுதான் நிலைமை

  ReplyDelete
 2. அம்பத்தூர் நகரம்..நரகமாயிடுத்து.

  ReplyDelete
 3. இதென்ன பொறுப்பில்லாத பதில். இவர்களின் அலட்சியத்தால் கஷ்ட்டப்படுவது பொதுமக்கள்தானே?

  ReplyDelete
 4. கீதாம்மா,
  வணக்கம்.வீடு மாற்றியும் இன்னும்
  அம்பத்தூர்தானா?மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.நிற்க.
  இலக்கியவானில் குறிப்பிடத்தக்க நட்சத்திரமான அ.மோ.வின் நெருங்கிய உறவினரான நீங்கள் லக்கி இல்லையா?ஒரு நாவலை நீங்களே தட்டச்சியிருக்கறீர்கள்.இந்த வாய்ப்பு
  எல்லோருக்கும் கிடைக்குமா?.
  நீங்கள் எப்போது மதுரையில் இருந்தீர்கள்? கழுதைஅக்கிரகாரம் பற்றி
  யெல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்களே.
  பழைய மதுரையெல்லாம் இ
  ப்போதுதினமும் மாறிக்கொண்டே இருக்கிறது.வருத்த்ததுட்ன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.என்ன செய்வது?

  ReplyDelete
 5. கிராமத்துக்காக்கை, முதல் வருகைக்கு நன்றி. சென்னை என்ன? தமிழ்நாடு முழுதுமே இது தான் நிலைமை! :(((

  ReplyDelete
 6. ராம்வி, நரகத்தில் தான் வசிக்கிறோம். இவ்வளவு மோசமானதொரு நகராட்சியைக் காணவே முடியாது. இத்தனைக்கும் பெருமளவு வருவாய் உள்ள நகராட்சி.

  ReplyDelete
 7. வாங்க லக்ஷ்மி, பொறுப்பு இருந்தால்தான் கவலைப்படவே வேண்டாமே. நேற்றுப் பெய்த மழையில் மறுபடியும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. நல்லவேளையா சாமான்களை முன்னாடியே எப்படியோ கஷ்டப்பட்டு அகற்றிவிட்டோமோ, பிழைத்தது!

  ReplyDelete
 8. வாங்க ராதாகிருஷ்ணன், உங்க சுப்ரதீபத்தில் சீக்கிரம் தீபம் எரியட்டும்.

  முதல்வரவுக்கு நன்றி/

  அம்பத்தூர் பழகிவிட்டது. அதோடு நிலத்தைக் கொடுக்கவும் இஷ்டமில்லை. இங்கே அடுக்குமாடிக்குடியிருப்பில் எண்ணூறு சதுர அடி(பிளிந்த் ஏரியா) வாங்க முப்பத்தைந்து லக்ஷம் ஆகிறது. அந்தப் புறாக்கூண்டுக்குக் கொஞ்சம் சின்னதாய்க் கட்டிக்கொண்டே போய்விடலாம் என யோசிக்கிறோம். எப்படியும் இப்போது தொடர்மழை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது!

  ReplyDelete
 9. மதுரையில் என் கல்யாணம் வரை இருந்தேன். அப்பா ரிடையர் ஆகும்வரை இருந்தார். சோமசுந்தரம் காலனியில் வீடு கட்டி இருந்தார். ஆனால் இருந்ததெல்லாம் மேலாவணி மூலவீதி, மேலமாசிவீதி தான். கழுதை அக்ரஹாரத்தில் எனக்குச் சின்ன வயசில் இருந்தோம்; அங்கே இருக்கையில் தான் நான் பள்ளியில் சேர்ந்தேன்.

  ReplyDelete
 10. மதுரை நாகரிகமாக முகத்தை மாற்றிக்கொண்டாலும் மக்களின் மனம் பெரும்பான்மையாக அதே மாதிரி மென்மையாகவும் உதவும் மனப்பான்மையோடும் இருப்பதைச் சென்ற வாரம் ஒரு கல்யாணத்துக்காக மூன்று நாட்கள் பயணமாக வந்தபோது கவனித்தேன். அதே வெகுளியான ஜனங்கள்!

  ReplyDelete
 11. சகோதரி,
  தங்கள் உடன் பதிலுக்கு நன்றி.தங்கள்
  அப்பா பெயர் கேட்டிருந்தேனே.பார்க்கவில்லையா?
  நான்1959ல் சேதுபதியில்11 ம் வகுப்பு
  முடித்தேன்.
  மதுரை வாசத்தைப்பற்றி பதிவிட்டிருக்கிறீர்களா?தெரிவிக்கவும்.அண்ணா திரு.ஜி.வி.தான்
  உங்கள் தளத்திற்கு directசெய்தார்.
  சுப்ரதீபம் பற்றி எப்படிக்கண்டு பிடித்தீர்கள்?எனக்கே மறந்து விட்டது.
  என் பையன் ஆரம்பித்துக்கொடுத்தான்
  டைப்பிங் தெரியாததால்வேகமாக பதிவிடமுடியவில்லை.ஆர்வக்கோளா
  று.இனிமேல் முயற்சிக்க வேண்டும்.

  ReplyDelete
 12. 59??? அப்போ எங்க அண்ணாவை விடவும் நீங்க சீனியர். :))))) அண்ணா 63? 64?? அப்படினு நினைக்கிறேன். அப்பா பெயரைவிடவும் அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் மூட்டைப்பூச்சி என்பதாகும். அவரோடு பரமசாமி வாத்தியார், பெரிய தறி வாத்தியார், சின்னத்தறி வாத்தியார், தச்சு வாத்தியார் வேலுமணி, தமிழாசிரியர் வி.ஜி..ஸ்ரீநிவாசன், ஈ.சுப்ரமணியம், (இவரின் இரண்டாவது மகள் என் தம்பி மனைவி), எல்.வி.வரதராஜன், பி.என்.எஸ். என அழைக்கப்படும் சுப்ரமணியம், செல்லப்பா வாத்தியார், C.கல்யாணசுந்தரம், வி.புஷ்பவனம்,

  ராமையாஅவர்களையும் நினைவில் இருக்கிறது. அவருக்குப் பின்னரே வி.புஷ்பவனம் வந்தார்னு நினைக்கிறேன். இப்போ அப்பா பெயரைக் கண்டுபிடிங்க!

  சுப்ரதீபம் பதிவுக்கே உங்கள் பெயர் அழைத்துச் செல்கிறது. சீக்கிரம் அதில் ஏதேனும் பதிவிடுங்கள், என்னோட ப்ரொபைலில் மதுரைமாநகரம் வலைப்பக்கம் என்னுடைய மதுரை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நேரம் இருக்கையில் பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 13. என்ன கொடுமை :(

  ReplyDelete
 14. அடுத்த சென்னைப் பயணத்தில் உங்க வீட்ல தான் டேரா.

  ReplyDelete
 15. இந்த நரகத்திலேயே தான் திரும்பவும் கட்டணுமா?ஆனா மத்த இடமும் இதுக்கு மேலயோ என்னமோ known devil is better than unnown devil!!:(((தான்

  ReplyDelete
 16. அப்பா பற்றி டேமேஜிங்காக கூறுகிறீர்களே.சேதுபதியில் பட்டப்பெயர்
  இல்லாத ஆசிரியர் கிடையாது.கிருஷ்ணசாமியா,அல்லது
  அவர்ஹிந்தி ஆசிரியரா?பெரிய புதிராகப்
  போட்டுவிட்டீர்களே.இ.எஸ்.என்னும்
  இ.சுப்பிரமணியம் சார் எனக்கு 11-ல்
  தமிழ் எடுத்தார்.அருமையாக நடத்துவார்,பக்கா ஜெண்டில்மேன்.ப
  ள்ளிபற்றி இவ்வளவு விவரங்ஙள் எப்படித்தெரியும்?அண்ணா கூறினாரா?

  ReplyDelete
 17. என்ன ஒரு மோசமான இடமாகி விட்டிருக்கிறது இந்த வீதி.:(
  மக்களின் அலட்சியம் புரிபடவில்லை. வியாதிகளுக்கு வித்திட்டுக் கொண்டு இருக்கிறார்களே.
  நல்லவேளை அங்கேயிருந்து கிளம்பினீர்கள்.
  கடந்த இரண்டு நாட்கள் மழை சென்னையையே அமிழ்த்திவிடும் போல இருக்கிறதே.

  ReplyDelete
 18. மாதேவி, இந்தக் கொடுமையைக் கடந்த பத்துவருடங்களாக அனுபவிக்கிறோம். அதற்கு முன்னர் எங்கள் தெருதான் எல்லாத் தெருவிற்கும் சுத்தத்திற்கு முன்னோடி! :((( இப்போ சமீப காலமாய் இரண்டு வருடங்களாக மிக மிக மோசமான உதாரணம்!

  ReplyDelete
 19. அப்பாதுரை, கட்டாயமாய். நிச்சயம் வாங்க. வீட்டுக்குள்ளே ஒண்ணும் தெரியாது!

  ReplyDelete
 20. ஜெயஸ்ரீ, நரகமாக ஆனது இப்போத் தானே! சென்னை மாநகராட்சியோடு இணைப்பதால் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை. அதோடு நிலம் விற்றுவிட்டால் மீண்டும் வாங்க முடியாது. இதை வாங்க நாங்க பட்ட கஷ்டம், வீட்டைக் கட்டப் பட்ட கஷ்டம் எல்லாம் நினைச்சாக் குழந்தைகள் கொடுக்கக்கூடாது என்றே கூறுகின்றனர்.

  ReplyDelete
 21. ராதாகிருஷ்ணன், அது டேமேஜிங் எல்லாம் இல்லை. ஸ்மைலி போடவில்லை. அதான் அப்படித் தோணுது. மற்றபடி பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் குடும்ப நண்பர்கள். அண்ணா சொல்லணும்னே இல்லை. எல்லாருமே வீட்டுக்கு வருவாங்க. அனைத்து ஆசிரியர்களும் குடும்ப விசேஷங்களில் பங்கெடுத்துக்கொண்டு உதவி செய்வார்கள். எங்க வீட்டு சமாராதனைனா முதல் நாளே எல்லாரும் வந்து ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்.வி.வி.க்கு நான் ரொம்பவே செல்லமும் கூட.

  ReplyDelete