எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 06, 2012

எண்ணங்கள், எண்ணங்கள்!

நேற்றிலிருந்து மின்சாரம் அடிக்கடி போய்விட்டு வருகிறது.  எப்போப் போகும், எப்போ வரும்னு சொல்ல முடியலை. :( அதோடு ஜேசிபி மெஷின்கள் வந்து சாலையைத் தோண்டிக் கொண்டு இருப்பதால் (எனக்குத் தெரிஞ்சு மூணு வருஷமாத் தோண்டறாங்க) தொலைபேசி, இணைய இணைப்புக்கான கேபிள்கள் எல்லா இடங்களிலும் அறுந்து போய் அது வேறே பிரச்னை!  இங்கே பக்கத்திலே இத்தனை மாசங்களாப் பூட்டிக் கிடந்த வீட்டை இடிக்கிறாங்க.  அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தான்!  அவங்க மின்சாரம் இல்லைனாக் கூட ஜெனரேட்டர் மூலம் வீட்டைக் குடைந்து கொண்டிருக்கின்றனர்.  காலம்பர ஐந்து மணிக்கே ஆரம்பிச்சா ராத்திரி ஒன்பது மணி வரை சத்தம்.  அந்த நேரம் யாரானும் தொலைபேசியில் அழைத்தாலும் கேட்கிறதில்லை.  அப்படியே மணி சத்தம் கேட்டாலும் நாம பேசறது அவங்களுக்குப் புரியறதில்லை.  அவங்க பேசறது நமக்குப் புரியறதில்லை.  மொத்தத்தில் இந்தியா வந்ததில் இருந்து இராப் பகலாத் தூக்கம் இல்லை. :(

இது எல்லாம் எப்போ முடியும்?? அம்பத்தூர் முனிசிபாலிடியாக இருந்தப்போ செய்தது கூட இப்போ மாநகராட்சியில் இணைந்ததும் கிடைக்கவில்லை.  ஆனால் இதற்கு ஒரு முடிவு காண்பாரும் இல்லை.   வெட்கமாக இருக்கிறது. ஒன்றரை கி.மீட்டருக்குள் உள்ள தூரத்துக்கு ஆட்டோக்காரர்கள் கூசாமல் எண்பது ரூபாய் கேட்கின்றனர்.  கி.மீட்டருக்கு 20ரூ என்று வைத்துக் கொண்டால் கூட முப்பது ரூபாய் தான் வரும்.  நாம் கேட்டால் சாலையைக் குறித்துக் குறை கூறி நம்மிடமே சண்டை போடுகின்றனர்.  அந்தந்தத் தெருக்காரங்களே கூடிச் சாலை போட்டுக் கொண்டால் கூட மீண்டும் மாநகராட்சியில் வந்து தோண்ட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம்??  நமக்குக் கைவிட்டுச் செலவு செய்து நஷ்டம் அடைந்தது தான் மிஞ்சும்.  எல்லாரும் இதைக் கேட்கின்றனர்.


தமிழ்நாட்டில் விவாகரத்து முன்னணியில் இருக்கிறதாம்.  தினசரிப் பத்திரிகைச்செய்தி. என்ன சொல்றது?  விட்டுக் கொடுத்தலும், அனுசரித்துப் போவதும் சுத்தமாய் இல்லை.   அதோடு பல பெண்களும் மிகவும் அதிகமாய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு காரணம்.  பெற்றோரும் துணை இருக்கப் பெண்களும் பல்வேறுவிதமான நிபந்தனைகள் போடுகின்றனர்.  இது குறித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் ம்ஹ்ஹும், இப்போ வேண்டாம்.  இரு தரப்பிலும் தவறுகள் நிறைய.  ஆண்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தவறு.

இன்றைய இளம் பெற்றோர்கள் ஒரே குழந்தை போதும்னு முடிவு பண்ணறாங்க.  கேட்டால் இதை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு;  இதிலே இன்னொண்ணா? னு கேள்வி வருது.  தப்பு; பெரிய தப்பு.  நீங்க முதல் குழந்தைக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசே அதற்கு ஒரு தம்பியோ, தங்கையோ தான்.  ஒரே குழந்தையாக இருப்பதால் கிடைக்கும் அளவு மீறிய செல்லத்தால், சலுகைகளால் அந்தக் குழந்தை எவரோடும் ஒத்துப் போவதில்லை.  கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதால் பிடிவாதம், கோபம், மனிதர்களைத் தூக்கி எறிந்து பேசுதல் என இருக்கிறது.  அதோடு மனபலம் இருக்கும் குழந்தை என்றால் சரி.  அது இல்லாத குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனியாக வாழக் கொஞ்சம் அச்சப்படுகின்றனர் என்பது தான் உண்மை.  பெற்றோரும் பொத்திப் பொத்தி வளர்க்கின்றனர்.  இத்தகைய குழந்தைகள் வாலிபப் பருவம் வந்தும் குழந்தையாகவே நடந்து கொள்கின்றனர்;  பெற்றோரும் குழந்தையாகவே நடத்துகின்றனர்.  விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், பகிர்ந்து உண்ணுதல், மனம் விட்டுப் பேசுவது போன்றவை இத்தகைய குழந்தைகளிடம் காணக் கிடைக்காது. 

பொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை விடவும் 2--ஆம் குழந்தை மிகவும் இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும், பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும்.  யோசியுங்கள்.  நம் நாட்டில் ஏற்கெனவே கலாசாரங்கள் சீரழிந்து வருகின்றன.  ஓரளவாவது காப்பாற்றப் பட்டு எதிர்காலத்துத் தலைமுறை பண்பும், அன்பும், மனிதத் தன்மையுடனும் இருக்க வேண்டுமானால் நாம் இந்த வழிமுறையைப் பின்பற்றியே ஆகவேண்டும்.

27 comments:

 1. //தமிழ்நாட்டில் விவாகரத்து முன்னணியில் இருக்கிறதாம். தினசரிப் பத்திரிகைச்செய்தி. என்ன சொல்றது? விட்டுக் கொடுத்தலும், அனுசரித்துப் போவதும் சுத்தமாய் இல்லை. ....... இரு தரப்பிலும் தவறுகள் நிறைய. ஆண்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தவறு.
  // உண்மை.... விட்டுக்கொடுத்தல் என்பதே இல்லாமல் போய்விட்டது. எங்கு சென்று முடியுமோ!

  ஒரே குழந்தை - என்ன சொல்வது என்று புரியவில்லை. ஏனெனில் எனக்கும் ஒரு பெண் தான்!.....

  எண்ணங்களை பகிர்ந்து கொண்டது நன்று.

  ReplyDelete
 2. @Venkat Nagaraj, Better Late than Never! :)))) Blessings!

  ReplyDelete
 3. //பொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை விடவும் 2--ஆம் குழந்தை மிகவும் இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும், பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும்//

  amam amam. (nan rendavathu kulanthai enbatharkum intha amamukum entha sambanthamum illai)

  ReplyDelete
 4. எங்க வீட்டுல இரண்டாவது(பெண்) குழந்தையின் பிடிவாதம்தான் அதிகம்.

  ReplyDelete
 5. குழந்தைகள் விஷயத்தில் நீங்க சொல்வது ரொம்ப சரிதான்

  ReplyDelete
 6. அம்பத்தூரை விட்டால் ஸ்ரீரங்கம்தானா.... ஏன் சென்னையிலேயே வேறு ஏரியாவில் கொஞ்ச நாள் வாடகைக்கு நீங்கள் இருக்கக் கூடாது?

  அவசர யுகம், நிறைய சம்பாதிக்கும் ஆண், பெண், இவற்றோடு கூட்டுக் குடும்பக் கலாச்சாரம் மறைந்ததும் விவாகரத்துக்குக் காரணமாகிறது. இப்போது புதிய சட்டம் வேறு அதில். ஒரு கையெழுத்து, ஒரே ஒரு கையெழுத்து போதும் என்று! கேரளாவில் அமலாகியும் விட்டதாமே...

  ஒரு குழந்தைப் பாலிசியை வேறு கோணத்தில் சொல்கிறீர்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தையும் பார்க்க வேண்டியிருக்கே...ஆனால் ஒற்றைக் குழந்தை நாகரீகத்தில் பல உறவுகளே மறையும் அபாயத்தில் இருப்பதும் நிஜம்!

  ReplyDelete
 7. எல்கே, இதுக்கு மாறுபட்ட கருத்துகளும் +இல் பார்த்தோம். ஆகவே வளர்ப்பும் ஒரு காரணம் எனலாம். :)))) இங்கேயே பாருங்க விச்சு என்ன சொல்றார்னு. :D

  ReplyDelete
 8. வாங்க விச்சு,இரண்டாவது குழந்தை நாள் கழிச்சுப் பிறந்திருந்தால் நாம் ரொம்பச் செல்லம் கொடுத்தால் அது பிடிவாதம் பிடிக்கும் குழந்தையாக இருக்கலாம். சில குழந்தை சொன்னதையும் கேட்கும். அநேகமாய்ச் சாப்பிடப் படுத்துவதில்லை. முதல் குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து அதுவும் சாப்பிட ஆரம்பித்துவிடும். முதல் குழந்தைக்கு எல்லாமே புது அநுபவம் ஆச்சே? :)))) அம்மாவும் புதுசு; அப்பாவும் புதுசு; குழந்தையும் புதுசு.

  ReplyDelete
 9. லக்ஷ்மி, இந்த விஷயத்தில் ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் போல! :))))

  ReplyDelete
 10. வாங்க ஸ்ரீராம், அம்பத்தூரை விட்டால் எங்கேனு கிட்டத்தட்ட ஐந்து வருஷமாக அலசியாச்சு. மைசூரில் கூட வீடு பார்த்தோம். பெண்களூரையும், ஹோசூரையும் விடவில்லை. கும்பகோணம், பெரியகுளம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலினு அலசினோம். பல பதிவுகள் தேறும். :))))

  ReplyDelete
 11. நீங்க சென்னைக் காதலர்னா, நான் சொல்வதைக் கேட்டு வருத்தப் படுவீங்க.. 1963-ஆம் வருஷம் பதினொரு வயசில் முதல் முதல் சென்னையைப் பார்த்தப்போவே பிடிக்கலை. அதிலே இருந்து சென்னை என்றால் வேப்பங்காய் தான். என் ஆரம்பப் பதிவுகளில் இது ஓரளவுக்குச் சொல்லியும் இருப்பேன்.

  ReplyDelete
 12. அதோடு இங்கே வீட்டு வாடகை அதிகம், பொலூஷன், தண்ணீர் பற்றாக்குறை, சென்னைக்குள்ளேயே வேறிடம் போனால் பாக்கெட் பால் தான் வாங்கணும். இப்படி எத்தனையோ. எங்க வீட்டிலேயே இருக்கலாம்னா இரண்டு பக்கமும் ஃப்ளாட் காரங்க குப்பையும், ஏறிக்குதிக்கிறதும் அமர்க்களமா இருக்கு. நாம் அங்கேயே இருந்து கொண்டு தினம் தினம் அவங்க கிட்டே கத்திட்டு இருக்க முடியாது. எதிரே இரண்டு ஃப்ளாட் அவங்க போடும் குப்பையும், விடும் கழிவு நீரும் நேரே நம்ம வீட்டு வாசலுக்கு வராப்போல் சரிவு கட்டி அமைச்சிருக்காங்க. :(((( ஒண்ணும் பண்ணமுடியாது. செப்டிக் டாங்க் தண்ணீர் நான்கு ஃப்ளாட் காரங்களோடதும் தெருவில் தான் விடறாங்க. அது வேறே நாற்றம், கொசுத்தொல்லைனு பிரச்னை! என்னத்தைச் சொல்றது?

  ReplyDelete
 13. ஒரு காலத்தில் அமைதிப் பூங்கா தான். :)))))

  ReplyDelete
 14. ஒரு குழந்தைப் பாலிசியை வேறு கோணத்தில் சொல்கிறீர்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தையும் பார்க்க வேண்டியிருக்கே...ஆனால் ஒற்றைக் குழந்தை நாகரீகத்தில் பல உறவுகளே மறையும் அபாயத்தில் இருப்பதும் நிஜம்!//

  என்னோட கருத்து 2 குழந்தைகள் கட்டாயம் வேண்டும். அதுவும் முதல் குழந்தைக்கு 3-ஆம் வயது முடியறதுக்குள்ளே 2-ஆவது குழந்தை பிறந்துவிட வேண்டும். அதிகம் இடைவெளி இருந்தால் முதல் குழந்தையின் மனநிலை கட்டாயம் பாதிக்கிறது.

  ReplyDelete
 15. வட இந்தியாவில் குறைந்தது 3 குழந்தைகள். பஞ்சாபில் கட்டாயமாய் 3 குழந்தைகள். அங்கெல்லாம் இன்னமும் 3 குழந்தைகள்னு சொல்லித் தான் கு.க. விளம்பரமே. 2 குழந்தைகளுக்கு இன்னும் வரலை. தமிழ்நாட்டிலே தான் கு.க. அதிகம் என்பதோடு ஒரு குழந்தைக் கலாசாரமும் இங்கே தான் அதிகம். அதனால் வற்புறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது. இது சரியல்ல.:(((( சமூகப் பாதிப்பே ஏற்படும்.

  ReplyDelete
 16. மார்ச்-24 போய் எவ்வளவு நாளாச்சு?.. கடைசியில் ஸ்ரீராம் @ கோ., அரண்மனைக்கு வந்து, அரணமனைக்கு இட்டு வந்த பாதை அடுத்த, எதிர்த்த, பக்க என்று எதையுமே பார்க்க வில்லையா?

  ReplyDelete
 17. ஜீவி சார், இப்போ அடைக்கலம் இல்லை புகுந்திருக்கோம். காட்டுக்குள்ளே இருக்கும் இந்த (பர்ணசாலை?)அரண்மனைக்குத் தான் கூப்பிட்டேன். வரமாட்டேனு சொல்லிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டும் பார்த்தாச்சு. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரமாம். அதனால் அவங்க நாட்டிலே இருக்கும் அரண்மனைக்குத் தான் போவேனு சொல்லிட்டு அங்கே போய்க் கொடுத்திருக்காங்க. போய்க் கலெக்ட் பண்ணிக்கணும். எங்கே? கிளம்பவே முடியலை! ஊர்வலத் தேதி முடிவு பண்ணணும். இதுக்கு நடுவிலே தலைநகரம்/தலைமைக் கழகம்(?) மாற்றம் வேறே. முழி பிதுங்குது! :)))))))

  ReplyDelete
 18. பர்ணசாலையா?.. அந்த அரண்மனை விட்டு வந்த ஜோரில் 'இங்கு' நீங்கள் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடிப் பதிவும் போட்ட நினைவு இருக்கிறது. அந்த சடுதியிலேயே அமெரிக்கப் பயணம் என்று நினைக்கிறேன். அங்கு போன அடுத்த நாளே பதிவு போடத் துவங்கி விட்டீர்கள். 'ஊரைச் சுற்றிப் பார்த்தோம்,ஓய்வெடுத்தோம்' என்று கொஞ்சம் கூட நினைத்ததில்லை நீங்கள். இங்கு வந்தவுடனே, எல்லா லெளகீக அனுசரிப்புகளுக்கு இடையே யும் பதிவு போடத் துவங்கியாச்சு. இத்தனைக்கும் நடுவே ஸ்ரீரங்க செட்டில்கள். முடிவுகள் எடுப்பதில், அதை நடைமுறைப்படுத்துதலில், எவ்வளவு தீர்மானமும், தீர்க்கமும் என்று எல்லாமே ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆச்சு; அடுத்தாற்போல் ஸ்ரீரங்கப் பயணம்.எல்லாவிதங்களிலும் பொது புத்தியிலிருந்து மாறுபட்டவர். எந்த நேரத்திலும் நான் நானாக இருக்க விரும்புவர்.இதான் நீங்களாகத் தெரிகிறது.

  உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று மற்றவர்களை எந்நேரமும் நினைக்க வைக்கிறீர்கள்.

  கொஞ்சம் கூட அயராத உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். interesting.

  ReplyDelete
 20. வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும் (ஓகே இதை சாய்ஸ்ல விட்டுறுவோம்), பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும் ஒரு குழந்தையே எங்க வீட்டுல கிடையாது.

  ReplyDelete
 21. எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப என் தத்தெடுக்கக் கூடாது?

  ReplyDelete
 22. விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். interesting.//

  படிக்கிறேன் அப்பாதுரை. :)))

  ReplyDelete
 23. வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும் (ஓகே இதை சாய்ஸ்ல விட்டுறுவோம்), பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும் ஒரு குழந்தையே எங்க வீட்டுல கிடையாது.//

  ஹிஹிஹி, ஓகே ஓகே.

  ReplyDelete
 24. எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப என் தத்தெடுக்கக் கூடாது?//

  முதலில் இதைக் குறிக்க நினைச்சேன்; அப்புறமாத் தனிப்பதிவு போட நினைச்சு விட்டுட்டேன். குழந்தை இல்லாமல் விவாகரத்து வரை போன தம்பதியரை தத்து எடுக்கச் சொல்லி ஆலோசனை சொன்னது உண்டு. எங்க குடும்பத்திலேயே குழந்தை இல்லாத் தம்பதிகளை தத்து எடுக்கச் சொன்னதும் உண்டு. என் தம்பி ஒருத்தர்(சித்தி பையர்) மதுரையில் ஹிந்துவில் வேலை செய்கிறார். அவர் முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததும், இரண்டாவது குழந்தையைப் பெண் குழந்தை வேண்டுமென்று திட்டமிட்டு தத்து எடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 10. மெம்பிஸில் இருக்கும் எங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் கூட மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்து எடுக்க நினைத்தனர். ஆனால் சில தனிப்பட்ட சொந்தக்காரணங்களால் அவர்களால் இயலவில்லை.

  இது குறித்துத் தனியாக எழுத வேண்டும் என்பதாலேயே இதில் சேர்க்கவில்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.

  ReplyDelete
 25. எண்ணங்கள் எப்படி மூன்றாயிற்று. யாரோடதோன்னு நினைத்தேன்:)

  நானும் பார்க்கும் இளம்தம்பதிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதும் பெற்றுக் கொள்ளுங்கள். மனம் ஒன்றிப் பெற்றுக் கொள்ளவேண்டும். எங்க அரண்மனைக்கு எப்ப வருவதாகப் ப்ளான்.

  ReplyDelete
 26. எங்க அரண்மனைக்கு எப்ப வருவதாகப் ப்ளான்.//

  அதான் தெரியலை; ஏற்கெனவே வெயில் தாங்காமல் எங்கேயும் போகாமலேயே வழக்கமான ஸ்கின் பிரச்னை வந்தாச்சு. மூணு நாளாத் தூக்கமில்லை. :)))))

  ReplyDelete
 27. எல்லாவிதங்களிலும் பொது புத்தியிலிருந்து மாறுபட்டவர். எந்த நேரத்திலும் நான் நானாக இருக்க விரும்புவர்.இதான் நீங்களாகத் தெரிகிறது.

  உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று மற்றவர்களை எந்நேரமும் நினைக்க வைக்கிறீர்கள்.

  கொஞ்சம் கூட அயராத உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!//

  ஜீவி சார், ஏற்கெனவே இதுக்குக் கொடுத்த பதிலைக் காணோம். :)))))கரண்ட் போச்சு; அதிலே அதுவும் போச்சு போல; இப்போத் தான் பார்க்கிறேன்; பதிலைக் காக்கா தூக்கிண்டு போனதை. :))))

  உங்கள் அன்பின் மிகுதியால் அதிகமாய்ப் புகழ்கிறீர்கள். இத்தனைக்கும் நான் என்னைத் தகுதியானவளாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன். நன்றி.

  ReplyDelete