எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 30, 2012

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

பெண்கள் உந்நதமான நிலையில் இருக்க வேண்டியவர்கள்.  அவர்கள் காலம் காலமாக ஒடுக்கப் பட்டே வந்திருக்கிறார்கள் என்பது பொதுவான கருத்து. இங்கே அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. இப்போது நாம் பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கையில் கூடப் பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது என்பதையும் அறிவோம். ஆகவே பெண் என்ன மட்டமானவளா, ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் கேட்பதோடு ஆண் குழந்தை பிறந்தால் தான் வம்ச வ்ருத்தி எனச் சொல்வதையும் தவறாகவே புரிந்து கொள்கிறோம். பெண்ணில்லாமல் கருவைச் சுமக்க யாரும் இல்லை.  ஆகவே பெண் வேண்டாம் என யாருமே சொல்வதில்லை. என்றாலும் ஏன் இந்தப் பாகுபாடு? விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.

விஞ்ஞான முறையில் யோசித்தால் இதற்கான காரணம் நமக்குப் ப்ள்ளிகளிலேயே போதிக்கப் படுகிறது.  ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.  இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.  இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.  தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.  தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.  ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+xசேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. 

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.  ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். மனித இனம் குறித்த அறிவை விஞ்ஞானிகள் பல ஜெனடிக் நுட்பங்கள் மூலம் கண்டறிந்து கூறி வருகின்றனர்.  ஆனால் நம் ரிஷிகளும், முனிவர்களும் இதைத் தங்கள் மெய்ஞ்ஞானத்தால் அறிந்திருந்த காரணத்தாலேயே இப்படி வரையறுத்திருக்கிறார்கள்.  ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.  ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.  இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.  இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.  தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.  பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.  பெண் எப்போதும் பெண்; 100% பெண் ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.  இதிலே வேடிக்கை என்னவெனில் ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.  ஆனால் அதிலே உருவாகும் ஆண் பெண்ணை அடக்கி ஆள்கிறான் என்பதும் விந்தையிலும் விந்தை. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான    y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.


பெண்கள் மட்டுமே  பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும் காரணமும் இதனால் தான்.  இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.  மேலும் இந்த க்ரோமோசோம்கள் முற்றிலும் அழிந்துவிட்டால் ஆணினமே இல்லாமலும் போய் விடும் அல்லவா? பெண்ணே பெண் குழந்தையைப் படைத்துக்கொள்ளும் சாத்தியங்கள் உருவாகலாம்.  ஆனால் ஆண்??

உட்கார்ந்து யோசிச்சோம். நல்லதே நடக்கும்.  என் தம்பி எனக்கு தினம் தினம் திருமந்திரம் என்னும் நூலைப் பரிசளித்தார். தற்சமயம் அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதோடு அப்பாதுரை திருவாசகம் குறித்துக் கூறிய கருத்துக்களையும் யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது இணையத்தில் திருவாசகத்தையும் கொஞ்சம் கொஞ்சம் வாசித்து வருகிறேன்.  புத்தகம் எடுத்துவரலை. அப்பாதுரைக்கு அளிக்க வேண்டிய பதில்களும் கிடைத்தன என்றாலும் இப்போது அதற்கு சூழ்நிலை சரியில்லை.  மனம் ஒருமைப் படவில்லை. அதனால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டேன். அப்போது தான் இவை எல்லாம் நம் முன்னோர்கள் யோசித்து வைத்திருப்பதைக் குறித்து ஆச்சரியம் வந்தது.  பகிர்ந்தேன். இதை நேத்தே போட்டிருந்தேன்.  என்னமோ சுரதாவிலே இருந்து காப்பி, பேஸ்ட் பண்ணறச்சே தகராறு ஆயிருக்கு போல!


26 comments:

 1. விஞ்ஞான முறையில் இதை ஆராய்ச்சி செய்ய பல ஜோடிகளை, அவர்களின் குடும்ப வரலாறை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று ஜோடிகளில் இதில் பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன். எஸ் பி பி ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்தவர் தெரியுமோ?

  ReplyDelete
 2. extensive DNA studies have been done. there was an article in INdia TOday at that time with a comment that these findings could be politically explosive. that was the end of it. have not heard since.

  ReplyDelete
 3. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. கோத்திரத்துக்கும் க்ரோமோசோமுக்கும் முடிச்சு போடுறது சுவாரசியம் என்றாலும் ஒரு கேள்வி கிள்ளுதே? பிராமணரல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கோத்திரத்துக்கு எங்கே போவார்கள்?

  ஒரு வேளை ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற வெறியும் கோத்திரத்தின் விளைவு தானோ? இருக்காது. பிராமணர்கள் அல்லாதவரும் பெண் பிள்ளைகளை வெறுக்கிறார்களே? :)

  நைசா திருவாசகத்தை இழுத்திருக்கீங்க?

  ReplyDelete
 5. வாங்க ஸ்ரீராம், ஏற்கெனவே இந்த ஆய்வு நடந்திருக்குனு வா.தி. சொல்றாரே. எஸ்பிபி விஷயம் அந்த நாட்களிலேயே அறிந்த ஒன்று

  ReplyDelete
 6. வாங்க வா.தி. எந்த வருஷம் வந்ததுனு தெரியலை. மாதாந்திர, வாராந்திர புத்தகங்கள் படிக்கிறதை நிறுத்திப் பத்து வருஷம் ஆகப் போகுது. அதனால் தெரியலை. நம்ம நாட்டிலே இதை எல்லாம் வெளிநாட்டார் சொன்னால் தானே ஏத்துப்பாங்க. :(

  ReplyDelete
 7. நன்றி கோவை 2 தில்லி.

  ReplyDelete
 8. வாங்க அப்பாதுரை, எல்லாருமே ஒரே பிரஜாபதியிடமிருந்து தோன்றியவர்களே என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு இடம் இருக்காது.அவரவர் வர்ணங்கள் வேறுபட்டதால் கோத்திரங்கள் மாறி, குலங்கள் மாறி இப்போது உள்ள நடைமுறையில் ஜாதி மட்டுமே இருக்கிறது. :( அதை மட்டும் வைத்து நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா? ஆண் குழந்தையின் மூலமே குறிப்பிட்ட வம்சம் நிலைக்கிறது என்பது தான் காரணம் என்பதைத் தெளிவாய்ச் சொல்லி விட்டேனே. ஆகவே அனைவருமே ஆண் குழந்தைகளை இயல்பாகவே விரும்புகின்றனர்.

  திருவாசகத்தை நைசாக எல்லாம் இழுக்கலை. :)) உங்க பெயரைச் சொல்லித் தான் போட்டிருக்கேன். உங்களோட புரிதலைத் தான் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன். நாம தனியா வச்சுக்கலாம் அதை.

  ReplyDelete
 9. எல்லாருமே ஒரே ப்ரஜாபதி... எங்கேயோ போகுதுங்க.

  ஆண் குழந்தை விருப்பத்தைப் பற்றி நான் சொல்லவில்லை - அதன் மறுபக்கமான பெண் குழந்தை வெறுப்பைப் பற்றிச் சொல்ல விரும்பினேன்.

  திருவாசகத்தை இழுங்க. உங்களை மாதிரி நாலு பேர் இழுத்தா இதை இன்னும் நாலு பேர் படிப்பாங்க. (என்னோட புரிதல் எல்லாமே தேவைக்கேத்த புரிதல் :)


  @ஸ்ரீராம்
  கொஞ்சம் இந்த கோத்திர வெங்காயத்தை உரித்துப் பாத்தா எல்லாருமே ஒரே கோத்திரம் தான். யக்! (இல்லின்னா ஆகா!)

  ReplyDelete
 10. நீங்கள் சொல்வது உண்மைதான் என்று சொல்வதில் சந்தோஷப் படுகிறேன் அப்பாஜி!

  ReplyDelete
 11. மாமி

  உங்கள் மச்சினர் உடல் நலம் சரியாகி விட்டதா? இன்னும் டெல்லி வாசமா இல்லை ஊர் திரும்பி ஆகிவிட்டதா?

  கோத்திரம் என்ற வார்த்தையின் மூலம் என்று எங்கோ படித்தது - சட்டென்று ஞாபகம் வரவில்லை. பதிவர் திவா என்று நினைக்கிறேன் - முன்பு கோத்திரம், ப்ரவரம் எல்லாம் எழுதி இருந்தாரே.

  அந்த காலத்தில் ஒரு ரிஷியின் கீழ் உள்ள மாணவர்கள் குருகுலத்தில் மாடு மேய்க்கவும் செய்வார்களாம். அப்படி போகும் போது அதே மாட்டு மந்தையை சேர்ந்தவர்கள் சக கோத்ரி (பசு மாட்டின் பெயர் ஹிந்தியில் गाय) என்று மருவி வந்ததாம். அந்த குழுவின் பெயரும் கோத்திரம் என்றானதாம். எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

  SPB யின் கதை காதல் கதையில்லையோ? ஒரு நிகழ்ச்சியில் தான் சக கோத்திரம் காரணமாக elope செய்ததாக கூறினார்.

  ReplyDelete
 12. @ஸ்ரீராம்
  கொஞ்சம் இந்த கோத்திர வெங்காயத்தை உரித்துப் பாத்தா எல்லாருமே ஒரே கோத்திரம் தான். யக்! (இல்லின்னா ஆகா!)

  நீங்கள் சொல்வது உண்மைதான் என்று சொல்வதில் சந்தோஷப் படுகிறேன் அப்பாஜி!//

  @appadurai,
  @sriram,

  will come to this point after some time.

  Srini,

  thanks for your kind enquiries. He is improving. Yesterday he asked something to eat and drink. But it was not allowed by the Doctors. He enquired about all of us. But again they put him in ventilation for another two days.

  ReplyDelete

 13. அந்தந்தப் பெயரில் இருக்கும் முனிவர்கள் பார்த்துக் கொண்ட பசுக்கள் கூட்டத்தைப் பொறுத்து கோத்ரங்கள் அமைந்ததாக நானும் படித்த ஞாபகம் இருக்கிறது!

  ReplyDelete
 14. மைத்துனர் நலம்பெறட்டும்.

  ReplyDelete
 15. அருமையான கருத்துப் பரிமாற்றம் ... நெறைய தெரிஞ்சுக்கறேன்

  ReplyDelete
 16. தலைவியார் வணக்கம். ஒரு கேள்வி!

  ஒரு தகப்பனுக்கு ஆண் குழந்தைகளே இல்லை. அவனுக்கு இரு பெண் குழந்தைகள் மட்டுமே.

  மூத்தவள் அம்மாவின் உடல்வாகு, முகச்சாயல், பண்பிலும் அம்மாவைப் போன்றே ஒத்திருக்கிறாள்.

  இளையவள், அச்சு அசல் அப்பாவைப் போலவே! தோற்றம், பண்பு என இரண்டிலும்.

  அவனுடைய மரபணுக்கள் இளையவளிடத்தில் பொதிந்திருக்கிறது என்பது புலனாகிறது.

  ஆக, இளையவள் வழியாக அவனது மரபின் நீட்சி தொடர்கிறதுதானே?! அவனது வம்சாவளி நின்று விட்டது என எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்??

  ReplyDelete
 17. நல்லதொரு பதிவு.
  நம்பிக்கை வைப்பவர்கள் தான் குறைந்துவிட்டார்கள்.
  இரத்தப் பரிசோதனை மூலம் தங்களையே சோதித்துக் கொண்ட நல்ல தம்பதிகளும் குடும்பங்களும்
  நன்றாக இருக்கின்றன. சம்பந்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டவர்கல் பாதிக்கப் பட்டக் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
  பூர்வ புண்ணிய ஸ்தானம்.

  ReplyDelete
 18. ஶ்ரீராம், நீங்க சொல்றது சரி, இதைக் குறித்து தி.வா. (வா.தி.) எழுதினதாவும் நினைவிலே இருக்கு. அவரோட வலைப்பக்கத்திலே தேடிப் பார்க்கிறேன். மின்சாரம் இருக்கிறச்சே. :))))

  ReplyDelete
 19. மாதேவி, நன்றிம்மா

  ReplyDelete
 20. எல்கே, நன்றி. இன்னும் நிறையவே இது குறித்துப் படிச்சேன். நினைவில் இருந்ததை மட்டும் பகிர்ந்தேன்.

  ReplyDelete
 21. பழமை வாங்க, வாங்க, நீண்ட நாட்கள் கழிச்சு வலைப்பக்கம் வந்ததுக்கு நன்றி.
  சாயல் தான் அப்பா மாதிரியே தவிர அப்பாவின் Y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை. ஆகவே பெண்கள் மூலம் வம்சாவளி தொடர்வதில்லை. புரிஞ்சுப்பீங்கனு நம்பறேன். பெண்களிடம் என்னதான் அப்பாவின் சாயல்கள், குணங்கள், நடத்தைகள் இருந்தாலும் க்ரோமோசோம்கள் எல்லாமே எக்ஸ் தான்.

  ReplyDelete
 22. வல்லி, ரொம்பவே நன்றி. எங்க வீட்டிலேயும் ரத்தப் பரிசோதனை என்னோட முதல் பிரசவத்துக்கு அப்புறமா ஆரம்பிச்சது. :))) ஏன்னா எனக்கு "O" Rh-ve அப்படினு கண்டுபிடிக்கப் பட்டது A +ve லே பிறந்த என்னோட பொண்ணு மஞ்சள் காமாலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் எங்க அண்ணா, மன்னி, எங்க சித்தப்பா பெண்கள், மாமா பெண்கள்னு எல்லாருமே பார்த்துக் கொண்டார்கள். :)))) ஆக அதுவும் ஒரு நன்மைக்கே.

  ReplyDelete
 23. பசுக்களைப் பார்த்துக் கொண்டவர்கள் என்று சொன்னாலும் 'கோ' என்றால் அரசன், உயர்ந்த குணமுடையவர்கள் என்ற அர்த்தத்துடன் அந்த பரம்பரையில் வந்தவர்களை அந்தந்த கோத்ரம் என்று சொல்லியதாகவும்

  மானசீக புத்திரர், சங்கல்ப புத்திரர் அப்புறம் சிஷ்ய பரம்பரையாகவும் கோத்ரங்கள் தொடர்ந்தன என்றும், அதாவது பிரம்மாவின் மானசீக புத்திரர் வசிஷ்டர், வசிஷ்டரின் புத்திரர் சக்தி, சக்தியின் புத்திரர் பராசரர், பராசரரின் சங்கல்ப புத்திரர் வியாசர். வியாசருக்குப் பின் பரம்பரை தொடரவில்லை. வேதங்களை நான்காகப் பிரித்த வியாசர் காலத்துக்குப் பிறகு அப்பாவிடம் அத்தியாயனம் செய்யும் முறை போய் சிஷ்ய பரம்பரை வந்தது எனவும், இன்னும் கூட வியாசருக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது எனவும், பிரளயத்துக்குத் தப்பிய அத்திரி ஆங்கீரச உள்ளிட்ட சப்தரிஷிகள்தான் அப்புறம் பரம்பரையாகத் தொடர்ந்தார்கள் எனவும்...

  எப்போதோ படித்தது, யாரிடமோ கேட்டது கூடக் குழப்பமாக நினைவுக்கு வருகிறது. இதில் எந்த அளவு சரியாக நினைவில் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை!

  ReplyDelete