எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 21, 2012

ஜாம் நகருக்கு வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக்கோங்க!

இந்த வருஷம் முதல் நாளில் இருந்தே சுண்டல் நல்ல போணியாகிட்டு இருக்கு.  நேத்திக்கு மொச்சைக்கொட்டைச் சுண்டல், ருசி பார்க்கக் கூட எங்களுக்குக் கிடைக்கலை.  அதிலும் சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து அமர்க்களப் படுத்திவிட்டுப் போகிறார்கள்.  மனதிலே கொலு வைத்ததன் ஜன்ம சாபல்யம் இந்த வருஷம் ஏற்பட்டுள்ளது. இதுவே சென்னையில் என்றால் நிஜம்ம்மாவே வெற்றிலை, பாக்கு, பூரண கும்பத்தோடு எடுத்துட்டுப் போய்க் கூப்பிட்டாலும் எதிர் வீட்டுக்கார மாமியைத் தவிர வேறே யாரும் வர மாட்டாங்க. :( அவங்க வீட்டுக்கு நானும், எங்க வீட்டுக்கு அவங்களும் தான் சுண்டல் பரிமாற்றமும், வெற்றிலை, பாக்குப் பரிமாற்றமும் செய்துப்போம்.

ஆனால் நாங்க வடக்கே இருந்தப்போ கூடப் பரவாயில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போ நிறைய நண்பர்கள் இருந்ததால் அவங்க மனைவிகளை எல்லாம் கூப்பிட்டு நவராத்திரி வெற்றிலை, பாக்குக் கொடுத்துப் பழக்கம் செய்துட்டு வந்தாச்சு.  அடுத்து குஜராத் போனப்போ எங்க யாருக்குமே (நம்ம ரங்க்ஸைத் தவிர) ராஜஸ்தானை விட்டுப் போக மனசே இல்லை.  ஆனால் ஊர் மாற்றல் கொடுத்தால் போய்த் தானே ஆகணும்.  குஜராத் வரச்சேயே வேப்பமரம் இருக்கா, காக்காய் இருக்குமா, கிளி, குயில் இருக்குமானு ஒரே கவலை.  அங்கே வேப்பந்தோப்புக்குள்ளே தான் வீடுனு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி.  வந்த சில நாட்களிலேயே நம்ம சுப்புக்குட்டிகளும் வந்து ஆஜர் கொடுத்துத் துணைக்கு நாங்களும் இருக்கோம்னு சொல்லிட்டுப் போச்சுங்க.  ஒவ்வொண்ணும் எத்தனை நீளம்ங்கறீங்க?  சும்மா ஐந்தடி சுப்புக்குட்டிங்கல்லாம் சர்வ சாதாரணமா நிலைப்படியில் நீள நெடுகப் படுத்துக்கும்.  கையிலே கம்பை வைத்துக்கொண்டு தான் ராத்திரி படுத்துப்போம்.  அது பாட்டுக்கு தானும் மெத்தையிலே படுத்துப்பேன்னு வந்துட்டால் என்ன செய்யறது!

கொலுவைப் பத்திச் சொல்ல வந்துட்டு சுப்புக்குட்டியைப் பத்திச் சொல்லப் போயிட்டேன்.  அந்த வருஷம் நவராத்திரியும் வந்தது.  நாங்க இருந்த பி.ஜி. லைன்ஸ், சொலேரியம் சாலையில் எங்களோடு சேர்த்து ஒரே ஒரு தமிழ்க்காரங்க.  ஆனாலும் குஜராத்தில் நவராத்திரி பிரபலம் என்பதாலும், எல்லாருக்கும் இந்தத் தென்னிந்திய கொலு பற்றிய அறிவு கொஞ்சம் இருந்ததாலும் பழகிய நண்பர்கள் வீட்டுப் பெண்கள் வந்தாங்க தான்.  ஆனால் அங்கே இருந்த தமிழ்க்காரப் பெண்மணி கண்டோன்மெண்டைத் தவிர நகருக்குள்ளும் சிலர் இருக்காங்கனு சொல்லி இருந்தாங்க.  அவங்களிலே ஒருத்தர் எங்க அலுவலகத்தைச் சேர்ந்தவங்க என்பதால் கூப்பிட்டாங்கனு நாங்க குடும்பத்தோட போயிருந்தோம்.  அப்போ அந்தப் பெண் நவராத்திரி வெற்றிலை, பாக்கு வாங்கச் சிலர் கூப்பிட்டிருப்பதாயும் தானும் போகப் போறேனு சொல்லி என்னையும் கூப்பிட்டாங்க.  நான் தயாராக வரலை.  போனால் எத்தனை நேரம் ஆகுமோனு யோசனை.  ஆனால் நம்ம ரங்க்ஸ் குழந்தைங்களை அழைச்சுட்டுத் தான் வீட்டுக்குப் போவதாயும் என்னைப் போயிட்டு அவங்களையும் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வரும்படியும் சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.  சரினு நானும் ஒரு வீடுதானேனு நினைச்சுட்டுப் போனேன்.

போனேனா!

17 comments:

 1. சுப்புக்குட்டி இல்லாத இடமே இல்லையோ கீதா,. நேத்திதான் சுபாஷினி கிட்ட சொல்லிண்டிருந்தேன். கீதா ம்,ஆதிரி தைரியசாலி இல்லைன்னு.
  சஸ்பென்ஸில நிறுத்தறதே வழக்கமாப் போச்சு:)
  இன்னிக்கு துலாஸ்நானம் விஜய்டிவில.

  ReplyDelete
 2. வாங்க வல்லி. சுப்புக்குட்டி இல்லாத இடம் ஏது? எல்லா இடத்திலேயும் இருக்குங்க. அதுங்களோட இடத்திலே தான் நாம வீடு கட்டறோம். :))))

  நாங்க இருந்த கன்டோன்மென்ட் ஏரியாவெல்லாம் காடாகவே இருக்கும். ஆகவே சுப்புக்குட்டி மட்டுமில்லாமல் பெரிய காட்டுப் பூனை, மயில்கள், கிளிகள், மரங்கொத்திகள், விதவிதமான பெயர் தெரியாப் பறவைகள், குழி முயல்கள்னு நிறைய உண்டு. அந்தக் குழி முயல்கள் ஓடுகையில் எங்க பையர் துரத்திப் பிடிக்கப் போவார். அது மாட்டிக்கவே மாட்டிக்காது. யு.எஸ்ஸில் மெம்பிஸில் பெண் வீட்டுக்கருகில் இருந்த காட்டில் நிறைய மான்கள். ஏரிக்குத் தண்ணீர் குடிக்க வரும்.

  ReplyDelete
 3. சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து அமர்க்களப் படுத்திவிட்டுப் போகிறார்கள்

  அமர்க்களமான கொலுவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. வாங்க ராஜராஜேஸ்வரி, அலங்கரித்த குத்துவிளக்கைப் போன்ற பெண்குழந்தைகள், சிரிப்பும், விளையாட்டும், பாட்டும், ஆட்டமுமாகக் கொலுவுக்கே ஒரு களை வந்துவிட்டது. சில சமயம் எல்லாப்பொம்மைகளையும் வைத்திருந்திருக்கலாம்; இந்தக் குழந்தைகள் ரசிப்பாங்களேனும் தோணுது.

  ஒரு பெண் இருந்தாலே அந்த இடமே வெளிச்சமாகும். இங்கே ஐந்தாறு குழந்தைகள். கேட்கணுமா.

  ReplyDelete
 5. சுப்புக் குட்டி... :) எங்கும் நிறைந்திருக்கும்!

  நல்ல அனுபவம் தான். கரெக்டா சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சீட்டீங்களே!

  ReplyDelete
 6. ஜாம் நகருக்குப் போய் ஏன் வெற்றிலைப் பாக்கு? பன் பட்டர் வாங்கி, பன் பட்டர் ஜாம் ஆக சாப்பிட்டுவிடலாமே!

  ReplyDelete
 7. வாங்க வெங்கட், சுப்புக்குட்டியைப் பத்தின பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. திகிலூட்டும் நிகழ்வுகள். :)))))

  ReplyDelete
 8. வாங்க கெளதம் சார், நீங்க சுண்டலே கொடுக்காமல் ஏமாத்திட்டு, இங்கே வந்து பன், பட்டர், ஜாமா? அஸ்கு, புஸ்கு! :P :P :P

  ReplyDelete
 9. இந்த வருடம் கொலு வெச்ச்சபுரம் , பதிவுலக நண்பர்களை கூப்பிடலாம்னு நினைப்பில் உங்களை கூப்பிடலாம்னு பார்த்தா நீங்க இங்க இல்லை. :(

  ReplyDelete
 10. நல்ல பதிவு கீதாமா.,

  நவராத்திரி வாழ்த்துக்கள்!

  கொலுவுக்கு நாங்களும் ப்ரெசென்ட் மேடம் :) :)

  அப்புறம் வழக்கம் போல சஸ்பென்ஸ் ஓ சஸ்பென்ஸ் !

  ReplyDelete
 11. சுவாரசியமா கதையை ஆரம்பிச்சு 'போனேனான்னு' சஸ்பென்ஸ் வெச்சுடீங்களே. சீக்கிரம் சொல்லுங்க அடுத்து என்ன ஆச்சுன்னு. நீங்க அடுத்த பதிவு எழுதி முடிக்கறவரைக்கும் கரண்ட் கட் ஆகாம இருக்கணும்னு இங்க நான் வேண்டிக்கறேன். :))
  உங்க நவராத்திரி நிறைவா போயிண்டு இருக்கறதை படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 12. கொஞ நா வெளி ஊரு போயிட்டு வந்துபார்த்தா நிறைய பதிவு படிக்க காத்துகிட்டு இருக்கே. ஒன்னொன்னா வரேன்

  ReplyDelete
 13. வாங்க எல்கே, சென்னையிலேயே இருந்திருந்தாலும், மழை இல்லாட்டியும் என்னாலே வர முடியுமானு சந்தேகமே. :( ஆசை என்னமோ இருக்கு.

  ReplyDelete
 14. வாங்க ப்ரியா, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப் போடணும்னு நினைச்சேன். வந்துட்டீங்க. :))) வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 15. வாங்க மீனாக்ஷி, உங்க பிரார்த்தனை பலிச்சிருக்குனு நினைக்கிறேன். இரண்டு நாட்களா மொத்தம் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் தடை செய்யறாங்க. பனிரண்டில் இருந்து நான்கு மணி வரை. மாலை ஆறிலிருந்து எட்டு வரை. இரவு சில சமயம் ஒரு மணி நேரத் தடை. மற்றபடி மின்சாரம் ஏதோ பரவாயில்லைனு சொல்லணும். :)))))

  ReplyDelete
 16. வாங்க லக்ஷ்மி, காணோமே, பிசி போலிருக்குனு நினைச்சேன். உங்க பதிவுக்கு வர முடியலை. நேரம் கிடைக்கிறச்சே மின்சாரம் இருக்க மாட்டேங்குது. மின்சாரம் இருக்கிறச்சே நம்ம வலைப்பக்கத்து வேலைகளும் குழும வேலைகளும் சரியாப் போகுது. விரைவில் வரேன்.

  ReplyDelete
 17. சிறிய பெண்களுடன் களைகட்டிய நவராத்திரி. மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது வாழ்த்துகள்.

  ReplyDelete