எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 26, 2012

லீவு முடிஞ்சு வந்துட்டோமுல்ல!

ஹிஹிஹி, அதுக்குள்ளே ஸ்ரீராம் மெமோ அனுப்பிட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நான் ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ணப் போறதை மட்டும் சொன்னேன்.  இன்னொரு கல்யாணமும் இன்னிக்கு அட்டென்ட் பண்ணிட்டு சாயந்திரம் தான் வந்தேன்.

ரெண்டு கல்யாணமும் கிரான்டாக நடந்தது.

கல்யாண சமையல் சாதம்!
அந்தக் காய்கறிகளும் பிரமாதம்
இதுவே எனக்குப் போதும்!

ஆஹ அஹ அஹா, அஹாஹாஹஹா!

ரசம் சாதத்துக்கு அப்பளமும்  எல்லாப் பந்தியிலும்
இரண்டு முறை கிடைச்சது!

ஹிஹிஹி

ஆனாப் பாருங்க, இன்னிக்கு மத்தியானம்சாப்பிடறச்சே அப்பளம் போடச் சொன்னா முதல் அப்பளத்தையே முடிக்கலையேனு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கேட்டுட்டார். எத்தனை அப்பளம் போட்டால் என்ன? நாங்க சாப்பிட்டுக் காட்ட மாட்டோம்? 

24 comments:

 1. //எத்தனை அப்பளம் போட்டால் என்ன? நாங்க சாப்பிட்டுக் காட்ட மாட்டோம்? //

  :)))

  ReplyDelete
 2. எனக்கு பொரித்த அப்பளத்தை விட சுட்ட அப்பளம்தான் பிடிக்கும்; ஆனால் கல்யாண விருந்துகளிலோ, ஹோட்டல்களிலோ யாரும் சுட்ட அப்பளம் போடுவதில்லை!

  ReplyDelete
 3. 3 நாள் எக்ஸ்ட்ரா லீவை எதுல சேர்க்கறது? பாவம் உங்களுக்குத்தான் இந்த ஒருவார, சாரி பத்து நாள் பதிவுகளைச் சேர்த்து வைத்துப் படிக்க எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்?
  உங்கள் வழக்கமான தளங்களில்
  அப்பாதுரையோட 'அவல் என்று நினைத்தால்'
  வல்லிம்மாவோட 'பச்சை மண்' சீரிஸ்,
  ரிஷபன் சாரோட வலைச்சர வாரம்.... இதெல்லாம் ஸ்பெஷல்!
  அப்புறம் அப்புறம்.... ஹிஹி எங்கள் ப்ளாக்...!

  ReplyDelete
 4. உண்மையா சொல்லப் போனால் நாங்கதான் க்ர்ர் போடணும்.
  போனப் போறது. அப்பளத்தைப் பக்கத்தில் வைத்துவிடுவதுதானே பழக்கம்:)
  இரண்டாவது அப்பளம் கொடுக்க மறுத்தவருக்கு தான் சாப்பிடக் கிடைக்கமல் போய்விடும் என்று பயம் வந்ததாம். நண்பர் ஒருவரைப் பார்க்க முடிந்ததா கீதா.

  ReplyDelete
 5. கல்யாணசாப்பாடு ரொம்ப பலமோ.உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு இல்லியா நல்லா ரெஸ்ட் எடுதுட்டு வாங்க

  ReplyDelete
 6. லீவு முடிஞ்சு வந்தாச்சா மாமி.....
  கல்யாணம் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.

  வல்லிம்மா எப்படியாவது உங்களை பார்த்துடணும்னு சொன்னாங்க.என்கிட்டயும் உங்க செல்நம்பர் இல்லை. வீட்டு நம்பர் தான் இருந்தது. சந்திச்சீங்களா?

  ReplyDelete
 7. நன்றி எல்கே. :)))

  ReplyDelete
 8. வாங்க வெங்கட், பின்னே அப்பளக் கணக்கெல்லாம் கேட்டால் கட்சியைக் கலைச்சுட மாட்டோம்! :)))))

  ReplyDelete
 9. கெளதம் சார், சுட்ட அப்பளத்திலே மேலே நெய்யை உருக்கி ஊத்திண்டு ரசம், ஜீரக, மிளகு அரைச்ச ரசம் சாதம் சாப்பிட்டால் சொர்க்கம் தான். அதுக்காகப் பொரிச்சதை விட முடியுமா என்ன! :))))

  ReplyDelete
 10. வாங்க டிடி, நன்றி.

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம்,

  கடைசி மூணு நாளிலே தான் இன்னொரு கல்யாணமே நடந்தது. நேத்தித்தான் அந்தக் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரமா ஶ்ரீரங்கம் வந்தோம். :)))))லீவு சொல்றச்சே அதைச் சொல்ல மறந்திருக்கேன். :)))))

  ReplyDelete
 12. ஹிஹிஹி, வல்லி, சாரி, அன்னிக்குப் பேச்சைப் பாதியிலே நிறுத்தறாப்போல் ஆச்சு. பாலிகைக்கு நாழி ஆச்சுனு கூப்பிட்டிருக்காங்க. :))))

  ReplyDelete
 13. வாங்க லக்ஷ்மி, கல்யாணச் சாப்பாடு பலமெல்லாம் இல்லை. ரொம்பவே கவனமாத் தான் சாப்பிட்டேன். நம்ம வயிறு நமக்குத் தானே தெரியும். :)))))பொண்ணு, மாப்பிள்ளை எல்லாம் ஶ்ரீரங்கம் வராங்க. அதோட இன்னிக்குக் கார்த்திகை வேறே. அதான் ரொம்பவே பிசி. :)))))

  ReplyDelete
 14. வாங்க கோவை2 தில்லி, எங்கேயும் போகலை. ஒரே ஒருத்தரை ரொம்ப நாட்களாச் சந்திக்க வேண்டி இருந்தது. அது சத்திரம் பக்கத்திலே என்பதால் போயிட்டு வந்தோம். :)))))

  ReplyDelete
 15. வந்ததும் வராததுமா அப்பளம் பத்தி எழுதுறீங்களே இதுல என்னவோ பெரிய மர்மம் இருக்குனு தோணுது.

  எல்கே சாப்பாடு பரிமாறால்னு இதைப் பத்தி இன்னொரு பதிவு எழுதினாலும் எழுதுவார்.

  kgg - எனக்கும் இந்த சந்தேகம் தோணும். கல்யாண விருந்துகளில் சுட்ட அப்பளம் போடுவதில்லையே, ஏன்?

  என் தங்கை பெண் கல்யாணத்தில் எண்ணை சொட்டும் அப்பளத்தைப் பார்த்து பயந்து போய் சுட்ட அப்பளாம் தருவீங்களானு கேட்டப்ப, நான் ஏதோ தகாத வார்த்தை சொன்னாப்புல பார்த்தார் பரிமாறுபவர். இன்னொன்றையும் கவனித்தேன் - இப்பல்லாம் கல்யாண வீட்டுக்காரங்க யாரையும் பந்தியில் பரிமாற விடுறதில்லே. எல்லாம் கான்ட்ரேக்ட் ஆட்கள் தான்.

  சுட்டப்பளாம் விளிபில் ஒரு ஸ்பூன் விழுது நெய்.. விள்ளலாக உடைத்து நெய் மினி ஸ்கூப் செஞ்சு உள்ளே தள்ளினா...

  ReplyDelete
 16. அப்பளக் கணக்கெல்லாம் கேட்டால் கட்சியைக் கலைச்சுட மாட்டோம்! :)))))

  ஹாஹாஹாஹா!

  ReplyDelete
 17. //எல்கே சாப்பாடு பரிமாறால்னு இதைப் பத்தி இன்னொரு பதிவு எழுதினாலும் எழுதுவார்./

  appadurai eluthalame?

  ReplyDelete
 18. பாயாசம் முந்தின இலையோட நின்னுபோச்சா இல்லையா? அப்பதான் கல்யாணம் அடென்ட் பண்ணதா ஒத்துக்கலாம்.

  ReplyDelete
 19. //சுட்டப்பளாம் விளிபில் ஒரு ஸ்பூன் விழுது நெய்.. விள்ளலாக உடைத்து நெய் மினி ஸ்கூப் செஞ்சு உள்ளே தள்ளினா...//

  ஆஹா, அப்பாதுரை, அதுவும் அரிசி அப்பளமாக இருந்துட்டால் கேட்கவே வேண்டாம். சொர்க்கம் பக்கத்தில்! :))))))

  ReplyDelete
 20. //அப்பளக் கணக்கெல்லாம் கேட்டால் கட்சியைக் கலைச்சுட மாட்டோம்! :)))))//

  பின்னே! கட்சியிலே ஆல் இன் ஆலாக இருக்கிறதே நான் ஒருத்திதான். வெளியே சொல்லிடாதீங்க. :))))

  ReplyDelete
 21. எழுதுங்க எல்கே. :)))

  ReplyDelete
 22. //பாயாசம் முந்தின இலையோட நின்னுபோச்சா இல்லையா? அப்பதான் கல்யாணம் அடென்ட் பண்ணதா ஒத்துக்கலாம்.//

  நீங்க வேறே வா.தி. இப்போல்லாம் கல்யாணங்களிலே பாயச ட்ரென்ட் மாறிப் போச்சு. பால் பாயாசம் கொடுக்கிறதில்லை. கேரளா டைப் பாயசம் தான். அதான் அடிக்கடி வீட்டிலேயே பண்ணிடறேனே! சோ போரடிக்குது, பாயாசத்தை எனக்கும் கேட்கறச்சே! பக்கத்து இலையையும் தாண்டி இல்லை வராங்க! :P :P :P :P

  ReplyDelete