எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 09, 2013

பெருமாளே, பெருமாளே! :))))

முந்தாநாள் கோயிலுக்குப் போயிருந்தோம்.  தாயார் சந்நிதிக்கு முதல்லே போனோம்.  மூணரைக்கு நடை சாத்திடுவாங்கனு சொன்னதால் கிட்டத்தட்ட ஓட்டம் .  அங்கே உள்ளே நுழையும்கொலு மண்டபக் கதவு சார்த்துவதும், நாங்க போவதும் சரியா இருந்தது.  திறந்து உள்ளே போய் 50 ரூ சீட்டுக் கேட்டால் சீட்டுக் கொடுப்பவர் பேசாம உள்ளே போங்கண்ணே!  சீட்டெல்லாம் வாங்கிட்டிருந்தீங்கன்னா நேரம் ஆயிடும்.  மூடறதுக்குள்ளே போய் தரிசனம் பண்ணுங்கனு சொன்னார். இது முதல் ஆச்சரியம்

இரண்டாவது ஆச்சரியம், பெருமாள் சந்நிதியில்.நேரே போயிட்டே இருக்கலாம், பெருமாள் சாவகாசமாக் காத்து வாங்கிட்டு இருக்கார்னு சொன்னாங்க.  அங்கேயும் சீட்டுக் கொடுக்கும் வரிசையில் நிற்கப் போனால் திரும்பக் கோயில் ஊழியர் வந்து எதுக்குக் காசு கொடுத்துப் போறீங்க?  ஒருத்தருமே இல்லை.  பேசாம இந்த இலவச தரிசன வரிசைக்கு வந்து பார்த்துட்டுப் போங்க.  சீக்கிரமா உள்ளே போயிடலாம்னு சொல்லிட்டார்.   கொஞ்சம் சுத்த வேண்டி இருந்தது தான்.  கயிறு கட்டித் தடுப்புக் கிட்டத்தட்டத் திருப்பதி போலச் செய்திருக்காங்க.  முன்னால் இத்தனை நீள வரிசைக்குக் கயிறு கட்டியதில்லை. ஆர்யபடாள் வாசல் வழியே உள்ளே போனால் நேரே ஐம்பது ரூ சீட்டு வாங்கும் கிளி மண்டபத்துக்குப் போயிடலாம்.  இப்போ அதுக்குச் சுத்த வேண்டி இருக்கு.  அதை விடவும் இலவச தரிசனத்துக்கு நான்கைந்து இடங்களில் சுத்தினாலும் விரைவில் உள்ளே போய் தரிசனம் பண்ண முடிஞ்சது.  நிஜம்மாவே பெருமாள் காத்து வாங்கிண்டு தான் இருந்தார்.  நம்பெருமாளுக்குச் சிரிப்புத் தாங்கலை. என்ன ஓசியிலே பார்க்க வந்தியானு கேட்கிறார் போல இருக்குனு நினைச்சேன்.  திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.  போ, போ னு விரட்டலை.

ஆஹா, இது ஶ்ரீரங்கம் கோயில் தானா?


வீட்டிலே விருந்தாளிகள்.  ஆகையால்  ஆருக்கும் அடங்காத நீலியின் தொடர் பதிவு நாளைக்குத் தான். :)))))

22 comments:


 1. "பெருமாளே, பெருமாளே! :))))"

  திவ்ய தரிசனம் ..!

  ReplyDelete
 2. //அதை விடவும் இலவச தரிசனத்துக்கு நான்கைந்து இடங்களில் சுத்தினாலும் விரைவில் உள்ளே போய் தரிசனம் பண்ண முடிஞ்சது. நிஜம்மாவே பெருமாள் காத்து வாங்கிண்டு தான் இருந்தார். நம்பெருமாளுக்குச் சிரிப்புத் தாங்கலை. என்ன ஓசியிலே பார்க்க வந்தியானு கேட்கிறார் போல இருக்குனு நினைச்சேன். திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் பார்த்தோம். போ, போ னு விரட்டலை.ஆஹா, இது ஶ்ரீரங்கம் கோயில் தானா?//

  மிகவும் ஆச்சர்யம் தான்.

  தரிஸனம் அதுவும் நிம்மதியாக அவசரப்
  ப டு த் தா ம ல் ;)))))

  >>>>>

  ReplyDelete
 3. //வீட்டிலே விருந்தாளிகள். ஆகையால் ஆருக்கும் அடங்காத நீலியின் தொடர் பதிவு நாளைக்குத் தான். :))))) //

  அடடா, மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது.

  மெதுவாகவே வெளியாகட்டும்..

  ஒருவாரம் ஆனாலும் பரவாயில்லை.

  தினமும் விருந்தாளிகள் வரக்கடவது. ;)))))

  ReplyDelete
 4. வியப்பு தான் அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பெருமாள் காசு இல்லாதவனுக்கும் தரிசனம் தருவார்.
  காசு கொடுக்காதவனுக்கும் தரிசனம் தருவார்.

  அவருக்கு எப்பப்ப யார் யார் கிட்டே
  எத்தனை எதனை வாங்கணும் அப்படின்னு
  நன்னாவே தெரியும்.

  நீங்க ஒருவேளை ராஜேஸ்வரி வலைலே இருக்கற பாட்டை
  கோவிந்தா கோவிந்தா அப்படின்னு பாடிண்டே போயிருப்பீர்கள்.

  சுப்பு தாத்தா.
  www.pureaameekam.blogspot.com

  ReplyDelete
 6. வேடிக்கையான மனித மனசு.

  சிரமங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு சிரமங்களாவே பார்த்து அந்த சிரமம் இல்லாத சுலப நேரத்திலும் 'வழக்கமா அந்த சிரமம் இருக்குமே, இப்போ ஏன் இல்லை?' என்று ஆச்சரியப்படுகிற மனசு. சின்ன சின்ன சுலபங்கள் கூட பெரிய அளவிலான நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

  இந்தத் தடவை, சடாரி சேவை, துளசி தீர்த்தம் பெற்றுக்கொண்டது எல்லாம் திருப்தியாக இருந்ததா?.. ஒருதடவை
  துளசிதீர்த்தம் பெற்றும் பெறாமலிருந்த பொழுது ஒரு குறை இருந்தது உங்களுக்கு. பெருமாளா பார்த்து அந்தக் குறையை நிறையாக இப்போது ஆக்கியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

  ஒரு பொறி போதும். அதை நீங்கள் டெவலப் பண்ற வித்தை, கைதேர்ந்த
  கலையாக இருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. கொடுத்து வைத்தவர்.....!

  ReplyDelete
 8. இதற்கெல்லாம் ஆச்சர்யப்படுமளவு செய்து விட்டார்கள் இல்லை? கொஞ்சம் முன்னால் போயிருந்தால் கட்டண தரிசனமாகத்தான் இருந்திருக்குமோ...

  ReplyDelete
 9. ஆச்சரியம் தான்....

  நான் இன்னும் தாயாரைப் பார்க்கலை....போயிட்டு பிரதட்சணம் பண்ணிட்டு வந்துட்டேன்.

  கோவிலுக்கு வந்துட்டு, இங்கே ஒரு எட்டு வராமப் போயிட்டீங்களே மாமி....:)

  ReplyDelete
 10. வாங்க ராஜராஜேஸ்வரி, உண்மையில் திவ்ய தரிசனம் தான்.

  ReplyDelete
 11. வாங்க வைகோ சார், எதிர்பாராமல் கிடைத்த பரிசு. :)))

  ReplyDelete
 12. //மெதுவாகவே வெளியாகட்டும்..
  ஒருவாரம் ஆனாலும் பரவாயில்லை.
  தினமும் விருந்தாளிகள் வரக்கடவது. ;)))))//

  அநியாயமா இல்லையோ! :))) எப்போவும் எழுதி வைச்சுப்பேன். பதிவை ஷெட்யூல் பண்ணிடுவேன். இந்த முறை பதிவு போடும் எண்ணமே இல்லை. அதோடு விருந்தினர்கள் வந்ததால் கணினியிலே உட்காரமுடியலை. சின்னக் குழந்தை வேறே வந்திருந்ததாலே நேரம் சரியாப் போச்சு. :))))

  ReplyDelete
 13. வாங்க டிடி, நன்றிப்பா.

  ReplyDelete
 14. வாங்க சூரி சார், அவ்வப்போது வந்து பின்னூட்டம் போடுவதற்கு நன்றி. நான் இன்னமும் ராஜராஜேஸ்வரியின் பாட்டைக் கேட்கலை. கொலு வைக்கலைனு பேரே தவிர, நேரமே இல்லாமல் என்னமோ பிசி! :)))))

  ReplyDelete
 15. இதே பெருமாளைப் பவித்ரோத்சவம் சமயம் பார்க்கப் போய் ஆர்யபடாள் வாசலையே அடைச்சுட்டாங்க. வெயில்லே வெளியே நிக்க முடியாம வீட்டுக்குத் திரும்பிட்டோம். ச்ரவணத்திற்குப் பின்னர் அது.:)))) அன்னிக்குப் பார்த்திருந்தா திருவடி தரிசனம் கிடைத்திருக்கும். இப்போ எண்ணெய்க்காப்பு சார்த்தி இருப்பதால் திருவடி தரிசனம் தீபாவளி வரை இல்லை. பாவம், பெருமாள் இருக்கிறதே தண்ணீருக்குள்ளே! அதிலே மாசக்கணக்கா தைலக்காப்பு வேறே! அதான் இந்த ஊரிலே ஜாஸ்தி மழையே பெய்யறதில்லை. :)))))

  ReplyDelete
 16. ரொம்ப நன்றி ஜீவி சார், துளசி தீர்த்தம் கிடைக்காமல் போனது சித்ரா பெளர்ணமியின் போது நம்பெருமாள் அம்மாமண்டபம் வருகை தந்தப்போ. இங்கே சந்நிதியில் எல்லாருக்கும் தீர்த்தம், சடாரி கிடைச்சுடும். தாயார் சந்நிதியில் அரைச்ச மஞ்சள். ஆண்டாள் சந்நிதியில் தைலச்சக்கை. :)))))

  ReplyDelete
 17. வாங்க ஜிஎம்பி சார், யாரு கொடுத்து வைச்சவர்? பெருமாளா? அவருக்கென்ன? ஜாலியாத் தான் இருக்கார். :))))

  ReplyDelete
 18. ஶ்ரீராம், கொஞ்சம் முன்னே போனவங்க தான் தரிசனம் எளிதா இருக்கு, சீக்கிரம் போங்கனு சொன்னாங்க. அன்னிக்குக் காலம்பர விஸ்வரூபதரிசனத்துக்கே கூட்டம் இல்லையாம், கோதண்டராமர் சந்நிதியில் பேசிக்கொண்டாங்க. நாங்க விஸ்வரூப தரிசனம் போகத் தான் நினைச்சிருந்தோம். ஆனால் ஐந்தரைக்கு நடை சாத்திடுவாங்களேனு யோசிச்சு வேண்டாம்னு விட்டோம். போயிருக்கலாமோனு அப்புறமா நினைச்சேன். :))) ஆசை என்பது எப்போவுமே பேராசையில் தானே கொண்டு விடும். :))))

  ReplyDelete
 19. வாங்க கோவை2தில்லி, உங்க வீட்டைத் தாண்டிண்டு தான் போனோம்; வந்தோம். :)))

  உங்க கிட்டே முன் கூட்டியே சொல்லலைனு ஒரு காரணம்

  இரண்டாவது காரணம் கோயிலில் இவ்வளவு சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்னு நினைக்கலை.

  மூணாவது விருந்தாளிங்க வெளியே போயிருந்தாங்க. வரதுக்குள்ளே வீட்டுக்கு வரணும். சாவி எங்க கிட்டே இருந்தது. :))))) நிச்சயமா தீபாவளிக்குள்ளே ஒரு முறை வரோம். :))))

  ReplyDelete
 20. கோவை2தில்லி, அப்படியே நவராத்திர்ப் பதிவுகளையும் ஒரு பார்வை பார்க்கக் கூடாதோ! :)))

  ReplyDelete
 21. முன்கூட்டி சொல்லணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை. அவசியம் ஒருநாள் வாங்கோ மாமி. தீபாவளிக்கு ”அவரும்” வரார்....:)

  நேரம் கிடைக்கும் போது விடுபட்ட பதிவுகளையும் வந்து படிக்கிறேன்.

  ReplyDelete
 22. எனக்குக் கூட ஒருமுறை இந்த மாதிரி தரிசனம் கிடைத்தது. ஓடி ஓடி, சுத்தி சுத்தி வந்து சேவித்தேன்.
  சில சமயங்களில் இப்படி!

  ReplyDelete