எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 03, 2013

ஆதார் அடையாள அட்டை பற்றி!

நீங்க ஆதார் அட்டை வாங்கிட்டீங்களா?  பெரியதொரு வேலை. ஆனால் மிக எளிமையான ஒன்று.  எனினும் முன் திட்டம் சரியாக இடாமையாலும், பயிற்சி பெற்ற நபர்கள் இல்லாததாலும் ஆதார் அடையாள அட்டைப் பதிவுக்கு ஏகத்துக்குக் கூட்டம் நெரிகிறது. மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி இருப்பதாகச் சொல்கின்றனர்.  அதோடு ஆதார் கணக்கெடுப்பின் போது  கொடுக்கும் வங்கி எண்ணிற்கு எரிவாயு சிலிண்டரின் மான்யத் தொகையை  மத்திய அரசே நேரடியாக அளிக்கும் என்றும் ஒரு அறிவிப்பு.  தமிழ்நாட்டிற்கு வேண்டாம்னு இங்கே முதலமைச்சர் சொல்ல, தள்ளிப் போடப்பட்டு ஒருவழியா இன்னிக்கு ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு செய்தவர்களுக்கு, இன்று அடையாளங்கள் பதிவு செய்யப்படும்னு நேத்திக்கு தினசரியில் வந்தது.

நம்ம ரங்க்ஸுக்குக் கேட்கணுமா?  இன்னிக்குக் காலம்பர ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிட்டார்.  ஒன்பதே காலுக்கு அங்கே ஆஜர்.  அங்கிருந்து ஃபோன். இன்னிக்கு டோக்கன் மட்டும் தராங்க.  நீ வர வேண்டாம்னு.  டோக்கன் வாங்கறச்சே என்னோட எண்ணுக்கும் சேர்த்துக் கொடுத்துட்டாங்க. (கைலை யாத்திரைக்கு இப்படித்தான் அகஸ்மாத்தாக் கிளம்பினேன். அது போல நான் போகாமலே என் எண் வந்துவிட்டது.) உடனே சமையலை முடிச்சுக் கிளம்பி வானு மறுபடி ஒரு அழைப்பு.  சமையலை முடிச்சுக் கொண்டு பதினொன்றரை மணிக்குக் கிளம்பினேன்.  அங்கே இருக்கும் வரிசையைப் பார்த்தால் இன்னிக்கு ஆகாது போல் இருந்தது.  அங்கே ரங்க்ஸும் எப்போ வேணாக் கீழே விழுந்துடுவேன்ங்கற நிலை.  நான் நின்று கொண்டு அவரை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு வர அனுப்பி வைச்சேன்.  அவர் வந்ததும் நான் போய் உட்கார்ந்தேன்.  தரையில் உட்காரணும்.  நம்மால் ஆகாதது.  கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.  அப்புறமா ரங்க்ஸிடம் சொல்லிட்டு அலுவலகத்துக்குள்ளே போய் உட்கார்ந்துவிட்டேன்.  அலவலக ஊழியருக்குத் தெரிஞ்சவங்க வந்தால் அந்தப் பக்கமாக அனுப்பி வைக்கிறார். என்னத்தைச் சொல்றது.  கொஞ்ச நேரம் கழிச்சு ரங்க்ஸும், அங்கே அறிமுகம் ஆன நண்பர்களோடு உள்ளேயே வந்து உட்கார்ந்தார்.

அத்தனை கூட்டத்துக்கும் படம் எடுக்கக் கணினியில் பதிய இரு இளைஞர்கள் மட்டுமே.  காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது அவங்க இயற்கையின் அழைப்பைக் கூடச் சட்டை செய்யாமல் வேலை செய்ய வேண்டிய நெருக்கடி.  இதிலே அலுவலக ஊழியர்களின் சிபாரிசுகள் வேறே. இரண்டு பேருக்கும் ஒரு ப்ரின்டர், ப்ரின்டரின் கேபிள் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறிப் பயணித்து அலுத்திருக்கும் அதுக்கு.  அங்கேயே நின்றிருந்த சமயம் கேபிளை நாங்களே வாங்கிக் கொடுத்து உதவினோம். ஒருத்தருக்குக் குறைந்தது இருபது நிமிடம் ஆகிறது.  கூடவே ஆட்களைப் போட்டு வரும் மக்கள் உட்காரவும் நாற்காலிகள் போட்டு ஏதேனும் ஒரு கல்யாண மண்டபத்தில் முன் பதிவு செய்து இடம் கேட்டு மக்களையும் அங்கே வரச் சொல்லிச் செய்யலாம்.  நீங்க யாரேனும் போறதா இருந்தால் தண்ணீர்(முக்கியம்) நின்றபடியே சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதேனும் எடுத்துச் செல்லுங்கள்.  நீங்கள் சீக்கிரமே போனாலும் டோக்கன் வாங்கிப் படங்கள் எடுத்து ரேகைகள் பதிவு செய்யக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

ஒரு வழியா எங்களுக்கு நேரம் வரச்சே  பகல் மூன்று மணி ஆகிவிட்டது. வார்ட் நம்பர் நான் சொன்னது சரியில்லைனு ஊழியர் சாதிக்க, இன்னிக்கு கோவிந்தா கோவிந்தா தானோனு நான் நடுங்க. நடுவிலே பல குறுக்கீடுகள் வேறே,  ஒருவழியா நான் சொன்ன வார்டிலேயே என்னோட பெயர், எண் கிடைக்கப் பதிவு முடிஞ்சது.  அடுத்து ரங்க்ஸுக்கும் பதிவு முடிஞ்சு இருவருக்கும் பதிவு முடிந்ததுக்கான அடையாளச் சீட்டைக்(ஆதார் தனியா போஸ்டில் வரும்.) கொடுத்து அனுப்பினார்.  வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது மணி நான்கு. :(   ஆதார் அடையாள அட்டையை ஶ்ரீரங்கம் தொகுதிக்காரங்க வாங்க காந்தி ரோடில் கார்ப்பொரேஷன் அலுவலகத்தில் சென்று ஏற்கெனவே கொடுத்திருக்கும் சீட்டின் எண்ணைக் காட்டி டோக்கன் வாங்கிக்கணும்.  நாளைக்கும் டோக்கன் கொடுக்கிறார்கள்.


For more details contact:

npr.rgi@censusindia.gov.in
www.uidai.gov.in
www.censusindia.gov.in

25 comments:


 1. "ஆதார் அடையாள அட்டை"

  தங்களுக்குக் கிடைக்க இருப்பது கேட்க சந்தோஷம்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நான் ஒருவழியாக ஆதார் அட்டை வாங்கிட்டேன்.

  யான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகமும். ;)))))

  ReplyDelete
 3. எங்களுக்கு ஆதார் கார்ட் வந்து ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிறது.அட்டை வந்தவுடன் பேங்கில் உங்கள் a/c நம்பருடன் இணைக்க வேண்டும்.

  ReplyDelete
 4. மானியம் வழங்க ஆதார் கார்டுடன் இணைப்பது கூடாது என்று உச்ச நீதி மன்ற ஆணை ஒன்று சில நாட்கள் முன் வந்தது. அரசாங்கம் ஒப்புக்கொண்டதா தெரியவில்லை.

  ReplyDelete
 5. ஆகா... ரொம்ப சந்தோசம்...!

  ReplyDelete

 6. கமெண்ட், சூடான பெருமூச்சு மட்டும்!

  சமையல் காஸ் நேரடி மானியம் திட்டம்: அறிவித்தபடி அரியலூரில் துவக்கப்படவில்லை

  முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம்,'மாநில அரசுகளுடன், கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு, நேரடி பண மானியம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என, கூறி, பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

  இதையடுத்து, அரியலூரில், சமையல் காஸ் நேரடி பண மானியம் திட்டம், செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர், வங்கி, வினியோகஸ்தர் ஆகிய மூன்றையும் இணைப்பது என்பது, எளிதில் முடியாத காரியம். தமிழக அரசு மற்றும் பொது மக்களின் கருத்துக்களை அறியவே, அக்., 1ல் திட்டம் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.

  தற்போது, மக்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில், நேரடி பண மானியம் திட்டம், அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதி முதல் தான், செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தினமலர் செய்தி!தினமலர் செய்தி.

  ReplyDelete
 7. வாழ்த்துகள் கீதா.
  ஆதார வேண்டாம் என்று இங்க பேச்சு.
  குழப்பம். உங்கள் முயற்சி எப்போழூதும் வெற்றி பெறும்.

  ReplyDelete
 8. ஆதார் அமர்க்களங்கள் எங்க ஊர்ல எப்பவோ முடிஞ்சிருச்சு. அதுக்கு அடுத்த கொடுமையான ஆதார் அட்டை + வங்கி கணக்கு + கேஸ் சிலிண்டர் இணைப்பு இதுவும் நடந்து முடிஞ்சு இப்ப நாங்க ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ரேட்டில் சிலிண்டர் வாங்குறோம். அதுல பாதி பாங்குல போட்டுடறோம்னு சொல்றாங்க. கொடுத்த காசுல சரியா பாதி வராது. கேட்டா டேக்ஸாம். :(((

  ReplyDelete
 9. உண்மையில் இந்த ஆதார் அட்டைக்கு கைரேகைகள், கண்ணாமுழியெல்லாம் படம் பிடிக்க அவசியமே இல்லை. பிடிக்கவும் கூடாதாம். இந்த விவரங்கள் எல்லாம் குத்தம் புரிஞ்சவங்க கிட்ட எடுக்க வேண்டியதுன்னு சொல்றாங்க. என்னா உத்தரவு வந்து என்ன? படம் பிடிச்சு அடுத்த கட்டத்தை நாங்க அடைஞ்சிட்டோம்.

  ReplyDelete
 10. நாங்களும் இப்படித்தான் ஒருநாள் முழுக்க உட்கார்ந்து ஒருவழியா வாங்கிட்டோம்!

  ReplyDelete
 11. தில்லியில் சில மணி நேரங்களில் கிடைத்தது....

  இன்னும் இதற்கான குழப்பங்கள் தீர்ந்த பாடில்லை - அரசின் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு அடையாள அட்டை கொடுக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.....

  ReplyDelete
 12. ஆதார் அட்டை ஒருவழியாகக் கைக்கு வந்து சேர்ந்த பின்---

  அந்த அட்டையில் குறிப்பிட்டிருக்கும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்த பின்--

  அதற்குப் பின் ஆதார் எண்ணை நம் காஸ் கணக்கு எண்ணுடன் இணைத்தபின்--

  எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள் என்று இப்பொழுதே தெரிகிறது.

  ஒவ்வொரு ஸ்டெப்பிற்குமான விண்ணப்பப் படிவங்களை செப்.8-ம் தேதிய 'தி ஹிந்து' ஆங்கில தினசரி சென்னைப் பதிப்பில் 7-ம் பக்கத்தில் விளம்பரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

  www.petroleum.nic.in/dbtl -- மேலதிகத் தகவல்களுக்கு.

  ReplyDelete
 13. வாங்க வைகோ சார், வீட்டில் உறவினர் வருகை தொடர்ந்து. அதனால் இணையம் வந்தால் சும்மா ஓரிரு மடல்கள் பார்ப்பதும் பதிவு எழுதி வைச்சதைப் போடுவதுமா இருக்கு. இது தான் ஆன்லைனில் எழுதின பதிவு. போதும் போதும்னு பண்ணிட்டாங்க அன்னிக்கு.:)))))

  ReplyDelete
 14. வாங்க ஜிஎம்பி சார், எங்களுக்கும் ஆதார் அட்டை சென்னை விலாசத்துக்கு 2011 ஆம் வருடமே வந்தாச்சு தான். ஆனால் திருச்சி, ஶ்ரீரங்கம் மாறியதால் புதுசாத் தான் வாங்கணும்னு சொல்லிட்டாங்க. இங்குள்ள சென்சஸ் கணக்கோடு இணைக்கிறதாலே புதுசா மறுபடி சென்சஸில் இணைத்து வாங்க வேண்டி இருந்ததால் இரண்டு வருஷங்கள் ஆயிடுச்சு. இப்போவும் அடையாளச் சீட்டுத் தான் வந்திருக்கு. அட்டை தபாலில் வரும்.

  ReplyDelete
 15. ஆமாம், ஶ்ரீராம், நீங்க சொல்வது சரியே. அதோடு சுப்ரீம் கோர்ட் வேறே சேவைகளுக்காக ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாதுனு தீர்ப்புச் சொல்லி இருக்கு. அதை மறு பரிசீலனை செய்யச் சொல்லி மத்திய அரசு அணுகி இருக்கு. என்னவோ போங்க. இந்த ஆதார் ஆதாரத்திலேயே குழப்பமயம்! :))))

  ReplyDelete
 16. வாங்க வல்லி, எங்கேயும் எப்போதும் ஆதார் குறித்துக் குழப்பமே! :)))

  ReplyDelete
 17. வாங்க புதுகை, மானியத்துக்கும் வரிப் பிடிப்புன்னா அப்புறம் எதுக்கு மானியம்னு அறிவிக்கிறாங்கனு தெரியலை. எங்களை வங்கிக் கணக்குக் கொடுக்கச் சொல்லி எரிவாயு ஏஜென்ட் கேட்டிருக்கார். வங்கிக் கணக்குக் கொடுக்கணும். :))) பார்ப்போம் என்ன ஆகுதுனு!

  ReplyDelete
 18. வாங்க ரஞ்சனி, ஒருவழியா எங்களுக்கும் வேலை முடிஞ்சது.:)

  ReplyDelete
 19. வாங்க வெங்கட், அது வேறே குழப்பம் பாக்கி இருக்கா? :))))

  ReplyDelete
 20. ஜீவி சார், இன்னிக்குப் போய் ஆதார் எண்ணை காஸ் கனெக்‌ஷனோடு கொடுத்தாச்சு. வங்கிக் கணக்குத் தான் கொடுக்கணும். அடுத்து என்னனு தெரியலை! :))

  ReplyDelete
 21. I am Soundararajan .A I have received Aadhaar car after some years passe with sperling mistake Enrollment No.1111/81104/199921., AadhaarNo. 3524 0648 9943 incorrect data is invalied. what to do this is not accept anywhere.

  ReplyDelete
 22. My Enrolment no 2017/49754/18462 my house is shipped where are got my Aadhaar card please help me

  ReplyDelete
 23. I'm Raja Rajeswari. I have enrolled for Aadhaar Card on 16-8-2015 and the No.is2017/30824/13176. But I have not yet received my Original Aadhaar Card so far. I have downloaded Aadhaar thro' Net. But in Government offices/Banks they need only the Original Aadhaar. Please inform me whom I contact for getting the Original.

  ReplyDelete
  Replies

  1. https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.pdf

   go to this link and do the needful.

   Delete