எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 26, 2013

பெண்கள், இந்நாட்டின் கண்கள்? அல்லது புண்கள்?? :(

சூரி சார்,

நீங்க இன்னமும் அறுபது, எழுபதுகளின் மாமியார்த்தனங்களை விட்டு வெளியே வரலையோனு நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இருபது வருடங்களாகவே எந்தப் பிள்ளையின் அம்மாவும், ஸ்டேடஸோ, சீர் வரிசைகளோ, பெண் வீட்டில் மரியாதை செய்யலைனோ சொல்லிக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவதில்லை; மருமகள்களை அந்தக் காரணத்துக்காகப் படுத்துவதாகவும் தெரியவில்லை.  அதிலெல்லாம் மாறித் தான் வருகிறது.  ஆகவே நீங்க சொன்ன மாதிரி சீர் வரிசை இல்லைனோ, ஸ்ப்ளிட் ஏசி இல்லைனோ பிள்ளையின் அம்மா நிறுத்தலை.

சொல்லப் போனால் பிள்ளை வீட்டினருக்கு இருக்கும் வசதிக்கு மூணு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தும் இந்தப் பிள்ளைக்குச் சொத்து மிஞ்சும். ஆகவே நிச்சயமாய் இம்மாதிரி அல்பக் காரணத்துக்காக நிறுத்தறவங்க அவங்க இல்லை.  அது சர்வ நிச்சயம்.

முதல் பிள்ளையின் கல்யாணம் எவ்வளவு ஆசையும்,ஆவலும் கொண்டு எதிர்பார்த்தாங்க என்பதையும் கல்யாணத்துக்கு அப்புறம் மருமகள் வேலைக்குப் போக இஷ்டப்பட்டால் போகட்டும் என்றும் அது பிள்ளையும், பெண்ணும் பேசி முடிவு செய்துக்கட்டும் என்றும் விலகி இருந்தவங்க.  பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொண்டு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த பின்னரே பிள்ளையின் அப்பா, அம்மா, பெண்ணின் அப்பா, அம்மாவிடம் பேசித் திருமணத்தை நிச்சயம் செய்தனர். அதுவே ஒரு சின்னக் கல்யாணம் போல் கோலாகலமாக நடந்தது. :(

எங்க பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கையில் எங்க சம்பந்தி வீட்டில் ஏசி எல்லாம் கிடையாது.  அதுக்காக நாங்க கல்யாணத்தை நிச்சயம் செய்யாமல் இல்லை;  நிறுத்தவும் இல்லை.  இந்தக் காலத்தில் பெண்ணும், பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே பேசிக்கிறது, முடிவு செய்துக்கறதுனு ஆன பின்னால், பிள்ளையின் அப்பா, அம்மாவோ, பெண்ணின் அப்பா, அம்மாவோ இதை எல்லாம் முக்கியமான குறைகளா நினைப்பதும் இல்லை.

இந்தக் காலத்துக்கு வாங்க சார், எப்போதும் போல் வழக்கப்படி பிள்ளையைப் பெத்தவங்களையே குறை சொல்லக் கூடாது.  இந்தக் காலம் பெண்களின் காலம் என்பதை நீங்க ஒத்துக்கறீங்க தானே!  அப்படி இருக்கையில் இப்போது பெண்கள் கல்யாணத்துக்குப் போடும் கண்டிஷன்களை எல்லாம் பற்றித் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் (சிலநாட்கள் முன்னர் கல்கியில் கூட வந்தது.  எங்கள் ப்ளாகிலும் பதிவாய்ப் போட்டிருந்தாங்க) வரதை எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா? 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்துக்கும் பெண்ணால் நிச்சயமாய் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது கஷ்டமே.  வளைந்து கொடுப்பதே கேவலம் என இக்காலப் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நினைக்கின்றனர். மேலும் இந்தப் பெண் திருமணத்தின் அர்த்தத்தையே கொச்சைப்படுத்துவது உங்களில் எவருக்கும் புரியவே இல்லையே என நினைக்கவும் ஆச்சரியமா இருக்கு! :(

தி.வா. சொன்னதும் தான் மறுபடி அப்பாதுரையோட கமென்டைப் பார்த்தேன். ஏன் நல்ல கர்ப்பமா வேண்டும்னு பிரார்த்திச்சுக்கக் கூடாது?  கர்பம் நல்ல கர்பமாக இருந்தால் தானே வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது.  இது ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது புரியலையா?  நம் சந்ததிகள் நல்லா இருக்கணும்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்கு?  இப்படி ஒவ்வொரு குடும்பமும் நினைச்சுப் பிரார்த்திச்சுக் கொண்டால் வருங்காலமும் நன்றாக இருக்குமே!  குடும்பம் சேர்ந்து தானே சமூகம், சமூகம் சேர்ந்து நகரம், நாடு!  நகரமும், நாடும் இப்போது இந்த அளவுக்கு மோசமாக் கெட்டுப் போயிருக்குனா சரியான நெறிமுறைகள் இல்லாமல் போனதே காரணம் என்பதோடு முப்பது வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் பெற்றோர் ஒரே குழந்தை போதும்னு முடிவெடுத்ததும் இன்னொரு முக்கியக் காரணம்.  பல பெண்குழந்தைகள் அழிக்கப்பட்டன.

விளைவு?? இன்னிக்குப் பெண்கள் கிடைப்பதே கஷ்டமாய் இருக்கிறது. கிடைத்தாலும் இப்படிப் பல நிபந்தனைகள்.  கல்யாணத்தைப் புனிதமாக நினைப்பதே கேவலம் என்றொரு எண்ணம்.  ஆனால் இத்தனைக்கும் நடுவில் இன்னமும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும், வேலைக்குச் செல்வதும், ஒன்றுக்கும் மேல் இரண்டாவது குழந்தையும் பெற்றுக் கொண்டிருப்பதும், குடும்பத்துக்காகக் குழந்தைகளுக்காக வேலையை விட்டு விட்டுப் பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.  இதில் நவநாகரிக, நவீனப் பெண்களும் அடக்கம். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்குத் தான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையா!  அதற்கே அவங்களுக்கு ஒரு சல்யூட்!!!

அதோட இன்னொரு விஷயம், முதல்முறையா இந்தப் பொண்ணு தான் குழந்தையைப் பாத்துக்க முடியாதுனு சொல்லலை.  என் உறவினர் பையருக்குப் பார்த்த இன்னொரு பெண்ணும் இதே கண்டிஷன் போட்டிருக்கார். பெண்ணின் அப்பா, அம்மா எங்களுக்கு வயசாச்சு, எங்களால் பார்த்துக்க முடியாது.  உங்க வம்சத்து வாரிசு தான், அதனால் நீங்க தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். ஆக இது ஒண்ணும் இப்போப் புதுசா நடக்கலை தான். ஆனால் பெண்கள் இதைத் தான் சுதந்திரம், விடுதலைனு நினைச்சுக்கிறது தான் சரியா வரலை. அதுவும் இப்போதெல்லாம் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகள் மட்டுமின்றிக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலும் மனைவிக்கு உதவியாகத் தான் இருக்கிறார்கள்.

ஜிஎம்பி சார் சொல்வது ஒரு விதத்தில் சரி.  இங்கே பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடிக்கலைனோ, பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிக்கலைனோ, சீர் வரிசைகள் விஷயத்திலோ கல்யாணம் நிக்கலை.  பெண் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பையரைத் தன் வழிக்கு மாற்ற வேண்டி முயற்சிக்கையில் அவங்க இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு! அதன் மூலம் ஏற்பட்ட எதிர்பாரா விளைவு என்ற அளவிலே நான் புரிஞ்சுட்டு இருக்கேன்.  ஒரே பெண். கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. ஆகையால் அந்தப் பெண் நினைச்சதை நடத்திடணும்னு நினைச்சிருக்கலாம்.

பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இக்காலப் பெண்களைப் பற்றிய ஒரு தகவல்:  இப்போது பெண்கள் எத்தகைய கொடூரத்துக்கும் போவாங்க, அதற்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணம் திருவானைக்காவல் வைர வியாபாரி, அவர் மகன், மகள் அனைவரையும் கொலைசெய்த பெண்மணியும், அவருடைய கள்ளக் காதலும் சாட்சி!  சினிமாவை விடக் கொடூரம் இது.  கொலை செய்துட்டு அந்தப் பாவத்தைக் கழுவ ஷிர்டி போனாங்களாம். போன உயிர் திரும்பியா வரும்? :(

39 comments:

 1. //ஏனெனில் கடந்த இருபது வருடங்களாகவே எந்தப் பிள்ளையின் அம்மாவும், ஸ்டேடஸோ, சீர் வரிசைகளோ, பெண் வீட்டில் மரியாதை செய்யலைனோ சொல்லிக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவதில்லை; மருமகள்களை அந்தக் காரணத்துக்காகப் படுத்துவதாகவும் தெரியவில்லை. அதிலெல்லாம் மாறித் தான் வருகிறது. //

  இல்லை என்று சொல்ல முடியாது...சதவிகிதம் குறைந்திருகிறது...

  அந்த காலத்து படங்களில் வருவது போல, மாமியார் பட்டுப்புடவை கட்டி, கழுத்து நிறைய நகைகள் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு மருமகள்களை வேலைக்காரி போல் நடத்துவது இல்லை என்றாலும் இன்னும் family politics இருக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 2. முதல் வரவுக்கு நன்றி தன்யா. கணவனுக்கும், மனைவிக்குமே, அம்மாவுக்கும், பெண்ணுக்கும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும், அப்பாவுக்கும் பிள்ளைக்கும், அப்பாவுக்கும் பெண்ணுக்குமே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கையில் மாமியார் மருமகள் பாலிடிக்ஸ் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் எல்லார் வீட்டிலும் உண்டு தான். என் வீடு உட்பட.

  ஆனால் இப்போதெல்லாம் இரு தரப்பிலும் நாசூக்காக அதை ஒதுக்கி வாழவும் செய்கின்றனர். ஒரு சில வீடுகளில் அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொண்டு விடுகின்றனர். ஒரு சிலர் பொருட்படுத்துவதில்லை.

  ReplyDelete
 3. // என் உறவினர் பையருக்குப் பார்த்த இன்னொரு பெண்ணும் இதே கண்டிஷன் போட்டிருக்கார். பெண்ணின் அப்பா, அம்மா எங்களுக்கு வயசாச்சு, எங்களால் பார்த்துக்க முடியாது. உங்க வம்சத்து வாரிசு தான், அதனால் நீங்க தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம்.//

  ஏன் பெண்ணின் பெற்றோர் குழந்தையை பார்க்க வேண்டும்? பையனின் பெற்றோருக்கும் அதே பொறுப்பு உண்டு அல்லவா?

  நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் எனது பயிற்சியாளர் என்னிடம் சொன்னது இது... "உங்கள் குழந்தைகளை வளர்ப்பது உங்கள் கடமை... உங்கள் பெற்றோர் கடமை அல்ல".

  ReplyDelete
 4. :-)

  Hmmm விளக்கத்துக்கு நன்றி... எனக்கு ரொம்ப நாளாவே இந்த சந்தேகமெல்லாம் இருந்தது... இன்னைக்கு நீங்க மாட்டுனீங்க :-)

  ReplyDelete
 5. மாமியார் மருமகள் பாலிடிக்ஸ் இல்லை என்றால்... சுவாரசியம் வேண்டாமோ...? (ஒரு அளவோடு)

  ஷிர்டி சென்று விட்டால் பாவம் போய் விடுமா...?

  ReplyDelete
 6. Geetha amma one more doubt

  //ஒரே பெண். கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. ஆகையால் அந்தப் பெண் நினைச்சதை நடத்திடணும்னு நினைச்சிருக்கலாம்.//

  இதை நான் வன்மையாக மென்மையா கண்டிக்கிறேன்:-)

  என்னைப் பொறுத்தவரை இது ஒரு சப்பை கட்டு :-) ஒரே பெண்/ பையனாக இருப்பவர்களிடத்தில் வெளி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. அதற்கு அவர்கள் ஒத்துழைக்காத போது அவர்கள் மீது ஏவப்படும் ஆயுதம் தான் "கூட பொறந்தவங்க யாரும் இல்ல அதனால் அனுசரிச்சு போக தெரியல ".

  இதே அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்று யாராவது இருந்தால் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது... அவர்களுக்கு சப்போர்ட் செய்ய ஆள் இருக்கிறது என்று தெரிந்தாலே ஒதுங்கி சென்றுவிடுவார்கள்...

  தெரியாமத்தான் கேக்குறேன் கூட பிறந்தவங்க இருக்குறவங்க எல்லாம் கோவம் வராதா ?பிடிவாத குணம் இல்லையா? என்னை கேட்டா அவங்களுக்குத் தான் அதிகமா இருக்கு :-)

  possessiveness கோபம், அழுகை, ஆசை, காதல், பாசம், சந்தோசம் எல்லாமே எல்லாருக்குள்ளேயும் இருக்குதானே ...
  கூடபொறந்தவங்க இருக்குற பொண்ணு / பையன் யார் வந்து எது கேட்டாலும் தூக்கி கொடுத்துடுவங்களா என்ன?

  ஒரே பிள்ளையாக வளர்ந்தாலும், உடன்பிறப்புகளோடு வளந்தாலும் எல்லாம் வளர்ந்த விதத்தில்தான் இருக்கிறது.. :-)

  ReplyDelete
 7. பின்னூட்டங்களுக்கு விரிவான பதில் அளிக்கவே ஒரு பதிவு - புதுமை - அருமை. ;)

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. கணவன் மனைவியைக் கொடுமை செய்வதும், மனைவி கணவனைக் கொடுமை செய்வதும், கள்ளக் காதலும், கொலைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. கணவனும் மனைவியும் தாங்கள் ஒருவரைச் சார்ந்து ஒருவர் ஆயுசு பரியந்தம் வாழப் போகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த கண்டிஷன்கள் எல்லாம் காணாமல் போகும். சேரும்போதே விவாகரத்தை உபயோகப்படுத்தும் வாய்ப்பை நினைத்துப் பார்த்தால் இப்படிக் குயுக்தியாகத்தான் தோன்றும். என்ன கண்டிஷன்களோ... என்ன உரிமைகளோ...உரிமை வேண்டும் என்ற பெயரில் புரிதல் இல்லாமல் போகிறார்கள்.

  ReplyDelete
 9. பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமை , காலக்காலமாக மறுக்கப் பட்டது போய் இப்போது துஷ்பிரயோகமாகிறதோ என்று சந்தேகம் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாமல் ஆகாசம் பார்த்தே வாழ்க்கைப் பயணம் துவக்க நினைக்கிறார்களோ. ?

  ReplyDelete
 10. 2013ல கூட அதே மாமியார்தனம் மாப்பிள்ளைதனம் இருக்க்குங்க.. வெளில பாருங்க... ஒருதலையாவே எழுதினார் எப்படி.. நான் சாமி கும்பிடுறதைப் பத்தி எழுதறாப்புல..

  ReplyDelete
 11. நல்ல கர்ப்பமா வேண்டிக்கலாம் தப்பில்லே.. கலவியிலும் அசிங்கம் கிடையாது.. ஆனால் கலவி நிறைவான அந்த தருணத்தில் அப்படி நினைப்பது அசிங்கம் இல்லையா? உண்மையாகவா?. ஹ்ம்... பெரியவர்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 12. எந்தக் காலத்திலும் கணவன்-மனைவி என்று எடுத்துக் கொண்டால் 'மஹாராஜன் உலகை ஆளலாம்; இந்த மஹாராணி அவனை ஆளலாம்' கதை தான்.

  மாமியார் பக்க சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்குபவர்கள், தங்கள் மகன்-மகள் திருமணத்திற்குப் பிறகு அவர்களை விட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒதுங்க முடியவில்லை எனில், முற்பகல் செய்யின்' வினையை உணர்வார்கள். வரும் காலத்தில் இந்த மாதிரியான உறவு சம்பந்தப்பட்ட வேதனைகள் அதிகமாக இருக்கும். இல்லை எனில் உறவின் அடிப்படையிலான பந்தங்கள் படிப்படியாகக் குறைந்து விடும்.

  ReplyDelete
 13. இன்னொரு பக்கம் என் நாத்தனார், என் மாமியார் என்று பெருமை பாராட்டிக் கொண்டு (வெளிக்குத் தானோ என்னவோ தெரியவில்லை)பிறந்த குடும்ப உறவுகளை அலட்சியப்படுத்தும் போக்கும் இருக்கிறது.

  ReplyDelete
 14. பிள்ளையைப் பெற்றவர்கள் அந்தப் பிள்ளையோடு இருப்பது தான் காலாதிகால வழக்கமாக இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்களும் பெண் புகுந்த இடத்தில் 'வந்து-போவதாக'
  இருப்பதையே விரும்புகிறார்கள்.
  அவர்கள் வந்து போவதும் பேரக் குழந்தைகளின் மேல் கொண்டுள்ள அலாதியான ப்ரீதியினால் இருக்கும். என்றைக்கும் பெண் வயிற்று குழந்தைகளிடம் பெண்ணைப் பெற்றவர்களுக்கு அதீத அன்பு இருக்கும்.

  வயதான பெற்றோர்களைப் பேணிக்காப்பது பிள்ளைக்கும், மருமகளுக்கும் சமூகத்தில் அலாதியான ஒரு பெருமையே அவர்களுக்குச் சேர்க்கிறது.

  தன் பெற்றோர்களை தன் மனைவி அன்போடு நடத்துகையில், மனைவியின் பெற்றோர்களும்
  தன் தாய்-தந்தையர் போலவே அவனுக்குத் தெரிவார்கள். இருபக்க அன்பும் பெற்று பேரக்குழந்தைகள் மனவளர்ச்சியுடன் ஆரோக்கியமாக வளர்வர். இந்தக் காலப் பெரியவர்கள் கூட குடும்ப உறவுகளினால் பலப்படும் நெடுங்கால பலன்களைக் கருத்தில் கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 15. வரவுக்கு நன்றி தன்யா. சதவீதம் குறைந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். சில மாமியார்கள் படுத்துவதும் தெரியும். நானே எழுதி இருக்கேன். ஆனால் பெரும்பாலும் குறைந்து தான் இருக்கிறது. இந்தத் தலைமுறை மாமியார்கள் ஓரளவுக்குப் படிச்சவங்களாவும், வேலைக்குப் போறவங்க, போனவங்களாவும் இருப்பதும் காரணம்.

  மற்றபடி சின்னச் சின்ன மனவேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும். ஒரே சமையலறையில் இரண்டு பெண்கள் ஒற்றுமையாய்ச் சமைப்பது என்பது மிகக் கடினம். :))))

  ReplyDelete
 16. //ஏன் பெண்ணின் பெற்றோர் குழந்தையை பார்க்க வேண்டும்? பையனின் பெற்றோருக்கும் அதே பொறுப்பு உண்டு அல்லவா?//

  நிச்சயமா. பையரின் பெற்றோருக்கு அதிகமாவே பொறுப்பு உண்டு. ஆனால் மருமகளை மாமியாரிடம் குழந்தையை விட்டுட்டுப் போகச் சொல்லுங்களேன்! எல்லாப் பெண்களுக்குமே தன் பெற்றோரிடம் தான் தன் குழந்தை நெருங்கிய உறவு வைச்சுக்கணும்னு மறைமுகமான ஆசை உண்டு. சிலர் வெளிப்படையாகவே காட்டிப்பாங்க. சிலர் இரண்டு பக்கமும் மாறி மாறிக் குழந்தையைப் பார்த்துக்க அனுமதிப்பாங்க. இதிலேயும் இப்போக் கொஞ்சம் கொஞ்சம் மாறித் தான் வருகிறது.

  என் ஓரகத்தியின் பிள்ளையை முழுக்க முழுக்க எங்க மாமியார் தான் வளர்த்தார். ஆகவே இது அந்தப் பெண்ணின் மனோநிலையைப் பொறுத்தே முடிவு செய்யணும்.

  ReplyDelete
 17. //நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் எனது பயிற்சியாளர் என்னிடம் சொன்னது இது... "உங்கள் குழந்தைகளை வளர்ப்பது உங்கள் கடமை... உங்கள் பெற்றோர் கடமை அல்ல.//

  :))) உங்க பயிற்சியாளர் சொன்னது சரியே. எனக்கு நல்ல வேலை கிடைச்சும், முதல் குழந்தை பிறந்ததுமே சம்பளமில்லா விடுமுறை எடுத்துக் கொண்டு இருந்தேன். இரண்டாவது குழந்தை பிறந்ததும் வேலையை ராஜிநாமா செய்தேன். என்னைப் பொறுத்தவரை பணக்கஷ்டம் அனுபவித்தாலும் வேலையை விட்டோமே என்ற வருத்தமெல்லாம் இல்லை. குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க முடிந்ததே என்ற சந்தோஷம் இருக்கிறது. குழந்தைகளையோ, இரு பக்கப் பெற்றோரையோ பந்தாடாமல் என் குழந்தைகள் என்னிடம் என்று முடிவு செய்து விட்டேன். :))))

  ReplyDelete
 18. //ஒரே பெண்/ பையனாக இருப்பவர்களிடத்தில் வெளி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. அதற்கு அவர்கள் ஒத்துழைக்காத போது அவர்கள் மீது ஏவப்படும் ஆயுதம் தான் "கூட பொறந்தவங்க யாரும் இல்ல அதனால் அனுசரிச்சு போக தெரியல ".//

  வெளி ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்கனு புரியலை. பெற்றோர் ஆதிக்கம் வெளி ஆதிக்கமாப் போக வாய்ப்பு இல்லை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஒரே குழந்தைக்குக் கேட்டதை வாங்கிக் கொடுத்துப் பகிர்ந்து கொள்ள விடாமல் தனிமைப்படுத்துகின்றனர் என்பதே நான் பார்த்தது.

  ஒரே குழந்தையாக இருக்கும் பெண் என்றாலும் சரி, பையர் என்றாலும் சரி, மற்ற உறவினர்களோடு சரியாகப் பழகுவதில்லை. தாங்கள் என்னமோ உயர்ந்த இடத்தில் இருப்பது போலவும், உறவினர் அதற்குப் பொருந்தாதவர்கள் போலும் நினைக்கின்றனர். இதில் அப்படி இல்லாதவங்களும் இருக்கலாம். ஒரு சிலர் ஒரே குழந்தையாக இருந்தாலும் எல்லோருடனும் பழக அனுமதிக்கிறார்கள். ஆகவே இதிலும் பெற்றோரின் பொறுப்பே முக்கியத்துவம் பெறுகிறது.

  ReplyDelete
 19. //தெரியாமத்தான் கேக்குறேன் கூட பிறந்தவங்க இருக்குறவங்க எல்லாம் கோவம் வராதா ?பிடிவாத குணம் இல்லையா? என்னை கேட்டா அவங்களுக்குத் தான் அதிகமா இருக்கு :-)//

  நிச்சயமா இருக்கும். இல்லைனு சொல்லலை. அக்காவுக்குச் செய்த மாதிரி தனக்குச் செய்யலையேனு கேட்கும் தங்கையும், தங்கைக்குக் கூடச் செய்திருக்காங்க, தனக்கில்லைனு நினைக்கும் அக்காவும் உண்டு தான். அண்ணன், தம்பிகளிலேயும் கேட்கவே வேண்டாம்.

  ஆனால் பொதுவாகப் பகிர்ந்து வாழ்தல் என்பது கூட்டுக் குடும்பத்தில் சகஜமாக ஏற்கும்படி இருக்கும். இப்போது அது குறைந்து வருகிறது. ஆகவே சகிப்புத் தன்மையும் குறைகிறது.

  ReplyDelete
 20. //மாமியார் மருமகள் பாலிடிக்ஸ் இல்லை என்றால்... சுவாரசியம் வேண்டாமோ...? (ஒரு அளவோடு)//

  உண்மை டிடி, இதிலும் ஒரு ருசி இருக்கிறது என வாழ்க்கையை ரசனையோடு பார்ப்பவர்கள் சிலரே.

  //ஷிர்டி சென்று விட்டால் பாவம் போய் விடுமா...?//

  இன்னிக்கு தினசரியைப் படிச்சால் வயித்தை எரிகிறது. கணவனைக் கொன்ற பின்னரும் குழந்தைகளிடமிருந்து பத்து வருடங்கள் மறைச்சு வைச்சிருக்காங்க அந்த அம்மா. பையனைக் கொன்றுவிட்டு, அதை மறைச்சு, அதைக் கேட்ட பெண்ணைக்கொன்று...... எப்படித் தான் மனம் வந்ததோ தெரியலை.

  அப்படி என்ன இருக்கு அந்தக் கள்ளக்காதலில்?? கடைசியில் அவன் தப்பி ஓடி விட்டான்! சொத்துக்காக எல்லாத்தையும் செய்திருக்கான். அப்போவானும் விழிச்சுக்க வேண்டாமா? அந்தப் பெண்மணியின் தாயாரும், மாப்பிள்ளை, பேரன், பேத்தி மறைவுக்கு மறைமுகக் காரணம். :((((

  எங்கே போனாலும் இந்தப் பாவம் தொலையாது.

  ReplyDelete
 21. நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 22. ஶ்ரீராம், அது தான் அறம் சார்ந்த சிந்தனைகளோ, அறம் சார்ந்த கல்வியோ இல்லாமல் போனதே இவற்றுக்குக் காரணம். இப்போதெல்லாம் அது சமயத்தைச் சார்ந்தது என்ற பெயரில் பள்ளிகளில் போதிப்பதே இல்லை. இல்வாழ்க்கையே அறம் சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இல்லாமல், உடல் சார்ந்த ஒன்றாக ஆகிப் போனப்புறம் என்னத்தைச் சொல்ல முடியும்?

  ReplyDelete
 23. ஜிஎம்பி சார், பெண்களுக்குப் படிக்கும் உரிமையும், வெளியே செல்லும் உரிமையும் தான் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து மறுக்கப்பட்டு வந்தது. மற்றப்படி காலம் காலமாகப் பெண்களை உயர்ந்த நிலையிலேயே வைத்து போஷித்தனர். இதையும் குற்றம் கூறி, அவங்களை ஏமாற்றுவதாகக் கூறிக் கொண்டு பெண் விடுதலைக்காரங்க விடுதலைக்காகப் போராடுவோம்னு ஆரம்பிச்சது எங்கேயோ கொண்டு போய் விட்டிருக்கு!

  தாலி என்பது வைதிக மார்க்கத்தில் இல்லவே இல்லை. தமிழ்நாட்டு வழக்கம் தான் தாலி. அதையும் வைதிக மார்க்கத்தில் கொண்டு வந்தாங்கனு சொல்லி தாலி மறுப்பு இயக்கம் நடத்தறாங்க. இவங்கல்லாம் சங்க காலப் பாடல்களையும், பழங்காலத் தமிழ் நூல்களையும் பார்த்திருந்தால், அர்த்தம் புரிந்து படித்திருந்தால் தாலி என்பது தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கமான ஒன்று என்பது புரிய வரும். :((((

  ReplyDelete
 24. வாங்க அப்பாதுரை, வெளியே நிறையக் காதில் விழுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த மருமகள் தாய் நாட்டிற்குக் கணவனோடு வந்ததும், தங்கள் வீட்டில் அத்தனை நாட்கள் தங்கி இருந்த மாமியார், மாமனாரை வேறே வீடு பார்த்துக் கொண்டு போங்கனு சொல்லி விரட்டி அடித்ததையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இதிலே மாமியார்த்தனமா? மருமகள் தனமா? அவங்களுக்கு ஒரே பிள்ளை வேறே. அந்த அம்மா இதய நோயாளி. இத்தனைக்கும் நடுவே சண்டை, சச்சரவு வேண்டாம்னு பிள்ளைக்காக வெளியே வீடு பார்த்துப் போயிட்டாங்க. மரும்கள் சொந்த அந்த மாமியாரின் சொந்த அண்ணா பெண். போதுமா? இன்னும் வேணுமா?

  வண்டி வண்டியாக ஸ்டாக் வைச்சிருக்கேன். பலதையும் வெளிப்படையாச் சொல்ல முடியலை. அதான் குறையே!

  ReplyDelete
 25. அப்பாதுரை, நல்ல கர்ப்பமாக இருந்தால் தானே குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்! குழந்தை சிறப்பாக வளர்க்கப்பட்டால் தான் குழந்தையோடு சேர்ந்து குடும்பம், சமூகம், நகரம், நாடுனு சிறக்க முடியும். ஆகவே நல்ல கர்ப்பமாகக் கொடுனு வேண்டிக்கிறதில் தப்பே இல்லை.

  பராசரர் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் பிள்ளை சிறந்து விளங்குவான் என்று தெரிந்தே தான் அந்த நேரத்தில் மனைவியைத் தேடிச் சென்றார். ஆனால் வழியில் தாமதம் ஆனதால்/அல்லது விதியின் தீர்ப்பு/ இதுவென்று இருந்ததால்(????) தனக்குப் படகு ஓட்டிய மச்சகந்தியிடம் விபரத்தைக் கூறி அவளுக்கு கர்ப்பதானம் செய்தார். அப்போது பிறந்த பிள்ளைதானே வியாசர். வேதங்களைத் தொகுத்து அளித்தவர். இன்றளவும் குரு பூர்ணிமாவன்று அவரைத் தான் முதலில் வழிபடுகிறோம். க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர் இல்லைனால் மஹாபாரதம் தான் ஏது?

  ReplyDelete
 26. ஜீவி சார், நான் சொன்னதிலுள்ள உட்கருத்தைப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
 27. //இன்னொரு பக்கம் என் நாத்தனார், என் மாமியார் என்று பெருமை பாராட்டிக் கொண்டு (வெளிக்குத் தானோ என்னவோ தெரியவில்லை)பிறந்த குடும்ப உறவுகளை அலட்சியப்படுத்தும் போக்கும் இருக்கிறது.//

  சில பெண்கள் பெருமைக்கும் கொண்டாடுவார்கள் தான். உண்மையாகக் கொண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் பிறந்த வீட்டை அலட்சியம் செய்வது சரியல்ல. :((( இதை நான் பார்த்தது இல்லை.

  ReplyDelete
 28. //தன் பெற்றோர்களை தன் மனைவி அன்போடு நடத்துகையில், மனைவியின் பெற்றோர்களும்
  தன் தாய்-தந்தையர் போலவே அவனுக்குத் தெரிவார்கள். இருபக்க அன்பும் பெற்று பேரக்குழந்தைகள் மனவளர்ச்சியுடன் ஆரோக்கியமாக வளர்வர்.//

  உண்மை தான் ஜீவி சார். குழந்தைகளின் நலனை உத்தேசித்தாவது பெற்றோர் தங்கள் மனப்போக்கை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் புரியக் காலம் ஆகுமோ?

  //இந்தக் காலப் பெரியவர்கள் கூட குடும்ப உறவுகளினால் பலப்படும் நெடுங்கால பலன்களைக் கருத்தில் கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது.//

  உண்மைதான், இவற்றை நாசூக்காக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது, பெண்ணைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; பிள்ளையைப் பெற்றவர்களும் தான். தான், தன் சுகம் என்றிருப்பதாலேயே சமூகம் கெட்டுக் கிடக்கிறது. இன்று தினசரியைப் பார்த்தாலே தினம் ஒரு கொலை, தற்கொலை, அதிலும் இளம்பெண்கள், ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள், மாணவிகள் தூக்குப் போட்டுக் கொள்வது சகஜமாக ஆகிவிட்டது. உயிரை மாய்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகுமா?

  ReplyDelete
 29. நம் கல்வி முறை மாற வேண்டும். பழங்கால குருகுலக் கல்வி முறை வர வேண்டும். ஆசிரிய, மாணவ உறவு அப்போது தான் மேம்படும். அதோடு அறம் சார்ந்த இல்வாழ்க்கை குறித்தும் அப்போது தான் புரியும். சும்மாவானும் தொலைக்காட்சிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகளை, அறவுரைகளைக் கேட்பதால் அறம் என்பது குறித்துப் புரிதல் வந்துவிடாது. ஏனெனில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு அது தொழில்.

  நிகழ்ச்சி முடிஞ்சதும் பணத்தை வாங்கிட்டுப் போயிட்டே இருப்பாங்க. ஒரு ஆசிரியரால் தான் மாணவர்களின் தேவைக்கு ஏற்பச் செயல்பட முடியும்.

  ReplyDelete
 30. மகாபாரதக் காலத்தில் பெண்ணைக் கட்டக் கொடுத்த பிறகு பெண் வாழும் வீட்டின் நல்லது கெட்டதுகளுக்குக் கூட பெண் வீட்டார் வர மாட்டார்களாம். இதுகுறித்து திரௌபதி கூட கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒருமுறை அழுது புலம்புகிறாராம். சகுனி மட்டும்தான் பெண்ணைக் கட்டிக் கொடுத்த வீட்டிலேயே தங்கியிருந்த ஒரே பெண் வீட்டு ஆளாம். கல்கியில் மகாபாரத மாந்தர்கள் பகுதியில் பிரபஞ்சன் எழுதி இருக்கிறார்.

  ReplyDelete
 31. மஹாபாரதக் காலத்துக்கு எல்லாம் போகவே வேண்டாம் ஶ்ரீராம், ஶ்ரீராமர் கல்யாணத்தில் கூட கோசலை, சுமித்திரை, கைகேயி போகவில்லை. வடமாநிலங்களிலேயே பிள்ளை கல்யாணத்துக்குத் தாய் செல்வது வழக்கம் இல்லை. (சில குறிப்பிட்ட இனத்தில்னு நினைக்கிறேன்.) அதே போல் பெண்ணின் பெற்றோர் மகள் வீட்டுக்கு வந்தால் இன்றும், இப்போதும் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். அவர்களுக்கு அது வழக்கம் இல்லை என்பதோடு கேவலமாகவும் நினைப்பார்களாம். :))))

  அதே போல் இன்றும் பல குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். என்ன ஒரு வீட்டில் சமையலறை மட்டும் தனித்தனியாக இருக்கும். மூன்று பிள்ளை எனில் மூன்று பேருக்கும் தனித்தனி சமையலறை, படுக்கை அறை. மற்றபடி ஒரே வீட்டில் தான் இருப்பார்கள். அதே போல் பிள்ளையின் பெற்றோர் ஒரு வாரம் ஒரு பிள்ளையின் வீட்டில் சாப்பிடுவார்கள். ஒரு வாரம் அவங்களே சமைத்துச் சாப்பிட்டுப்பாங்க. :))) இந்த நடைமுறை அங்கே சர்வ சகஜம்.

  ReplyDelete
 32. இந்த விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஜீவி ஸாரைக் காணோமே என்று நினைத்தேன். நல்ல வேளை வந்து விட்டார்.

  இதற்கு முந்தைய பதிவையும் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 33. முந்தைய பதிவைப் படிச்சதாத் தெரியலை. அல்லது கருத்துத் தெரிவிக்கலையோ???????????

  ReplyDelete
 34. //இதற்கு முந்தைய பதிவையும் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.//

  //முந்தைய பதிவைப் படிச்சதாத் தெரியலை. அல்லது கருத்துத் தெரிவிக்கலையோ???//

  படித்தேன்.

  ஒரு தடவைக்கு இருதடவைகள் நிதானமாகப் படித்தேன். அங்கேயே பின்னூட்டமிட்டிருந்தால், நூறுக்கு இழுத்துச் சென்றிருக்கலாம்.

  'எங்கள் பிளாக்' 'ஓடிப்போன உறவில்' கிடைத்த பின்னூட்ட அனுபவம் வாளாயிருந்து விட்டேன்.

  பெண்களின் சுய முன்னேற்றத்திற்கும்,
  அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும், வாழ்க்கை மேம்பாட்டிற்கும்,குடும்ப உறவுகளின் மேன்மைக்கும் அர்ப்பணித்த
  நிறைய கதைகள் எழுதியவன் என்பதினால்....

  ReplyDelete
 35. வாங்க ஜீவி சார், நினைச்சேன், கருத்துத் தெரிவிக்கலைனு தான். என்றாலும் சந்தேகமாவும் இருந்தது. :))) உங்க கருத்தை நீங்க தாராளமாச் சொல்லலாமே! அதோடு பின்னூட்டம் நூறாகணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லை. உண்மையாகவே. :))))))எனக்குனு உள்ளது கூடவும் கூடாமல், குறையவும் குறையாமல் எப்போதும் கிடைத்து வரும் என்பதில் எனக்கு சர்வ நிச்சயம். அதில் இந்தப் பின்னூட்டங்களும் அதற்கான எதிர்பார்ப்பும் சேர்ந்ததே! :)))))

  ReplyDelete
 36. / தாலி என்பது வைதிக மார்க்கத்தில் இல்லவே இல்லை. தமிழ்நாட்டு வழக்கம் தான் தாலி. அதையும் வைதிக மார்க்கத்தில் கொண்டு வந்தாங்கனு சொல்லி தாலி மறுப்பு இயக்கம் நடத்தறாங்க. இவங்கல்லாம் சங்க காலப் பாடல்களையும், பழங்காலத் தமிழ் நூல்களையும் பார்த்திருந்தால், அர்த்தம் புரிந்து படித்திருந்தால் தாலி என்பது தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கமான ஒன்று என்பது புரிய வரும். :((((/ என் பின்னூட்டத்தில் இது பற்றி எழுதவே இல்லையே. நீங்கள் எழுதும் போது உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 37. // தாலி என்பது வைதிக மார்க்கத்தில் இல்லவே இல்லை. தமிழ்நாட்டு வழக்கம் தான் தாலி. அதையும் வைதிக மார்க்கத்தில் கொண்டு வந்தாங்கனு சொல்லி தாலி மறுப்பு இயக்கம் நடத்தறாங்க. இவங்கல்லாம் சங்க காலப் பாடல்களையும், பழங்காலத் தமிழ் நூல்களையும் பார்த்திருந்தால், அர்த்தம் புரிந்து படித்திருந்தால் தாலி என்பது தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கமான ஒன்று என்பது புரிய வரும். :((((/ /


  இது பற்றி நான் எழுதிக் கொண்டிருந்த கல்யாணம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து வந்த தொடரிலும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கேன். தாலி எல்லாம் முக்கியத்துவம் இல்லை. தாலி கட்டினதும் கல்யாணம் ஆயிடுத்துனு சொல்ல முடியாது. சப்தபதி முடிந்தால் தான் கல்யாணம் நடந்ததாகச் சட்டரீதியாகவே சொல்வாங்கனு. இங்கே புதுசாச் சொல்லலை. அதன் தொடர்ச்சினு வைச்சுக்கலாம்.

  //என் பின்னூட்டத்தில் இது பற்றி எழுதவே இல்லையே. நீங்கள் எழுதும் போது உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.//

  அதோடு இது உங்களோட பின்னூட்டத்தின் பதிலும் இல்லை. பொதுவாகச் சொல்லப்பட்டது. ஒருவேளை எனக்கு நினைவு வந்து எழுதுகையில் உங்க பின்னூட்டத்துக்குப் பின்னர் அது வந்திருப்பதால் அப்படியான தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி அது பொதுவானதொரு பின்னூட்டமே. சப்தபதி குறித்து சூரி சார் சொன்னதையும் மற்றவற்றையும் நினைவில் கொண்டு எழுதுகையில் விட்டுப் போனது. அது தற்செயலாகத் தனியே வராமல் உங்க பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்கையில் கொடுத்திருக்கேன். இது கவனக் குறைவு தான். மற்றபடி உணர்ச்சி வசப்படுகிறேன் என்பதெல்லாம் உங்கள் கருத்து. அதுக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. :)))))

  ஹிஹிஹி, தொலைக்காட்சித் தொடர்களையும் சினிமாவில் உருக்கமான சீன்களையும் பார்த்துச் சிரிக்கிறவளைப் பார்த்து உணர்ச்சி வசப்படறேன்னு சொன்னா எப்படி? :)))))))

  ReplyDelete
 38. ஜீவி அவர்களின் பின்னூட்டங்களுடன் 100% உடன்படுகிறேன்.....

  ReplyDelete
 39. வாங்க மெளலி, உண்மை எப்போதுமே எல்லாராலும் ஏத்துக்க முடியாது. நீங்க ஏற்றுக் கொண்டது குறித்து மகிழ்ச்சி. இந்தச் சீர் வரிசைகள் பிள்ளையின் அம்மாக்கள் தான் இன்னமும் அதிகாரம் செலுத்துவதாய்ச் சொல்வதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கணும். எங்க சுற்றுவட்டாரத்தில் சுத்தமாய் இல்லை. :))))

  ReplyDelete