எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 10, 2013

விமரிசனமெல்லாம் இல்லை! எல்லாமே பழசுங்க! :)

பேய், பிசாசு வருதேனு முன்ன்னே, காஞ்சனா படம் பார்த்தேன்.  அதுக்கப்புறமா இப்போ ஹிந்தியிலேயும் ஜெயப்ரதா ஆவியாக நடிச்ச ஒரு படம் ஒண்ணு வந்தது.  கொஞ்ச நாட்கள் முன்னே முதல் பாதியைப் பார்த்திருந்தேனா.  இப்போ முந்தாநாள் மறுபடி படத்தைப் போட்டதும் அடுத்த பாதியைப் பார்த்தேன்.  ஜிதேந்திராவின் மனைவியான ஜெயப்ரதாவை, அவங்க மைத்துனரும், ஓரகத்தியும் சேர்ந்தே வேறே ஒருத்தர் உதவியோட கொன்னுடறாங்க.  ஜெயப்ரதாவுக்குச் சின்னக் குழந்தை இருக்கு.  குழந்தைக்குப் பால் கூடக் கொடுக்கிறதில்லை.

அதைப் பார்த்த ஜெயப்ரதாவின் ஆவி துடித்து அழுகிறது.  அடுப்படியிலே போய்ப் பாலைக் காய்ச்சப் பார்த்தால் ஹிஹிஹி, பால் பாத்திரத்தைப் பிடிக்க முடியலை ஆவியாலே. குழந்தையையும் தூக்க முடியலை.  அப்புறமா அம்மன் கோவிலுக்குப் போய் அழுது, பாட்டுப் பாடினதுக்கு அப்புறமா அம்மனோட தலையிலே இருக்கிற பூ ஆவிப்ரதா கையிலே விழுது.  அதுக்கப்புறமா குழந்தையைக்கொஞ்சிப் பால் கொடுத்து எல்லாம் பண்றாங்க.  அவங்க வீட்டு நாய் தான் அவங்க வந்திருக்கிறதைப் பார்க்க முடியும்.  மத்தவங்க கண்ணிலே படமாட்டாங்க.  எல்லாரும் குழந்தை அந்தரத்தில் இருக்கிறதைப் பார்த்துட்டு பயப்படறாங்க.

இத்தனை அமர்க்களத்துக்கும் ஜிதேந்திரா பாட்டுக்குக் குடிச்சுட்டு உட்கார்ந்திருக்கார்.  அப்போத் தானே ஹீரோ! திடீர்னு அவருக்குக் குழந்தையை ஷாக் கொடுத்துக் கொல்லப் போகிறச்சே அவங்க அண்ணன், அண்ணி பத்தித் தெரிஞ்சுடுது.  உடனே டிஷ்யூம், டிஷ்யூம் தான். அதுக்குள்ளே ஆவிப்ரதாவை ஒரு மாந்திரிகர் மூலமாக் கட்டிப் போட, ஆவிப்ரதா நீண்ட பிரசங்கம் செய்து அந்த மாந்திரிகருக்கு  உண்மையைப் புரிய வைக்க, அவரும் ஆவியை விடுவிக்க, சரியான நேரத்துக்கு வந்து வழக்கமா சண்டை நடக்கும் கோடவுனில் இருந்து குழந்தையை விடுவிக்கிறாங்க.  எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல் கடைசியில் போலீசோடு வரும் ஜிதேந்திரா கண்ணுக்கு மாந்திரிகர் (அவரும் அங்கே வந்துடறார்; பின்னே க்ளைமாக்ஸ் ஆச்சே!) உதவியோடு கொஞ்ச நேரம் ஜெயப்ரதா ஆவிப்ரதாவாத் தெரிய, அவரும் கண்கலங்கி எல்லாம் ஆனதும் அவங்க மறைஞ்சு போறாங்க. போலீஸ் எல்லாரையும் பிடிச்சுட்டுப் போகுது.  சுபம்!

நல்லாப் பூ சுத்தறாங்கப்பா காதிலே!

இன்னொரு படம் கொஞ்சம் காமெடியேனு பார்க்க ஆரம்பிச்சேன், அனுபம் கேரும், காதர்கானும் பீதாம்பர், நீலாம்பர்னு காமெடியனா நடிக்கிறாங்க. அனுபம் கேருக்குக் கண் தெரியாது. அவங்க கிட்டே எப்படியோ வைரம் வந்து சேருது.  எப்படினு அடுத்த தரம் படத்தை ஆரம்பத்திலே பார்த்தாத் தான் தெரியும். :)  அதை ஆட்டோவின் பெட்ரோல் டாங்கிலே யாரோ போட்டுடறாங்க. யாரு? ஆனால் இந்த உண்மை தெரிஞ்சு எல்லாரும் வைரத்தை எடுக்கப் பார்க்க, வில்லன்கள் அனுபம் கேரையும், காதர்கானையும் விரட்டுவதும், இரண்டு பேரும் பண்ணும் தற்செயலான செயல்களால் ஏற்படும் விளைவுகளும் நல்ல காமெடியாக இருந்தது.  இதிலும் வழக்கம்போல் படம் சுபம்.


 இப்போ மஹான் பார்த்துட்டு இருக்கேன்.  அமிதாப் 3 ரோல்லே நடிச்சது.  அப்பா,  இரண்டு மகன். அந்த நாளைய வில்லன் அம்ஜத்கான் தான் இதிலும் வில்லன்.  கூடவே ஷக்தி கபூரும்  அம்ஜத்தின் மகனான இன்னொரு வில்லன்.  ஆனால் இதில் அமிதாபின் பையராக அமிதாபிடமே ஏமாத்தி நடிக்கிறார்.  அமிதாபுக்கு ஜோடியாக அப்பா அமிதாபுக்கு வஹீதா ரஹ்மான், இன்னொரு அமிதாபுக்கு அம்மாவிடம் வளரும் அமிதாபுக்கு பர்வீன் பாபியும், வேறொருத்தரிடம் வளரும் அமிதாபுக்கு ஜீனத் அமனும் ஜோடி.  அவங்களுக்கு எல்லாம் வேலை இல்லை.  வஹீதா கொஞ்சம் நடிச்சுக் காட்டறாங்க. அம்புடுதேன்.  படம் முடியப் போகுது. முடிஞ்சாச்சு! :)))

11 comments:

  1. பேய்ப்படம், சாமிப்படம் எல்லாமே காமெடிதான். மஹான் அமிதாப் படங்களில் ஒரு அறுவைப் படம்!

    ReplyDelete
  2. //ஆவிப்ரதா// :-))))

    ReplyDelete
  3. இதிலிருந்து ஒண்ணு தெரிஞ்சுது - திருச்சியில் கரண்ட் கட் கம்மி... :)

    ReplyDelete
  4. நல்லாவே பூ சுத்துவாங்க காதிலே...!

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், அமிதாப் இருக்காரேனு பார்க்க ஆரம்பிச்சேன். :))) அறுவை தி கிரேட்!

    ReplyDelete
  6. வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  7. வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, ஜெயப்ரதாவைப் போட்டுட்டு சாகடிச்சாப் பின்னே என்ன பண்ணுவாங்க! ஆவியாக்கிட்டாங்க. அதான் ஆவிப்ரதா! :))))

    ReplyDelete
  8. நீங்க வேறே வெங்கட், ரெண்டு நாளுக்கும் மேலா மின்சாரம் படுத்தல் தாங்கலை! இன்னிக்கு பராமரிப்புப் பணினு சொல்லிட்டுக் காலம்பர போனது சாயந்திரம் ஐந்தேகாலுக்குத் தான் வந்தது. மாசம் ரெண்டு தரம் பராமரிப்புப் பண்ணறாங்க. ஒண்ணும் முன்னேற்றம் இல்லை! :(

    ReplyDelete
  9. வாங்க டிடி, முழம் , முழமாப் பூ சுத்தறாங்க. :)))

    ReplyDelete