எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 20, 2013

தாய்மொழியிலேயே பேசுங்களேன்! :)

 http://www.vallamai.com/?p=40743

மேலுள்ள சுட்டியில் வல்லமை மின்னிதழில் (கான்பூர்), பிட்டூர், வால்மீகி ஆசிரம அறிவிப்புப் பலகையின் என் மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டி சகோதரி தேமொழி அவர்கள் மொழிக்கொள்கை குறித்தும் தாய்மொழியிலேயே தமிழர்கள் பேசவேண்டியதன் அவசியம் குறித்தும் எழுதியுள்ளார்.  அதற்குச் சுருக்கமாய் நான் கொடுத்த பதில் இது. ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகை வைக்காததன் காரணம் அங்கே சுற்றுலா என்பது சுறுசுறுப்பாக நடைபெறுவது இல்லை. அதிகம் வருவதே உள்ளூர் மக்களும், எப்போதேனும் சுற்றுலாப் பயணிகளும் தான்.  அங்கிருக்கும் வழிகாட்டிகளுக்கும் ஆங்கில அறிவு என்பது கிடையாது. ஆனால் இனியாவது உத்திரப் பிரதேச அரசு இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அருமையான கட்டுரை..தமிழர்கள் தங்களுக்குள்ளாகத் தாய்மொழியிலேயே பேசவேண்டும் என்று சொல்வது சரியே.  ஆனால் இதை முதலில் கடைப்பிடிக்க வேண்டியவர்கள்  தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், எஃப்.எம். வானொலி சேவைக்காரர்களுமே.  அவர்களே ஆங்கிலம் கலந்த கலப்பு மொழியிலும், கொச்சைத் தமிழிலும் பேசி மொழியில் மாற்றத்தை தமிழ்த் தேசியமாக்கி வருகின்றனர். ஆங்கிலக்கலப்பில்லாமல் பேசும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியும், மக்கள் தொலைக்காட்சியும் மட்டுமே ஆகும். 

பல்லாண்டுகளாக அனைத்து தொழில் நுட்ப சேவைகளுக்கும் உரிய தமிழ்ப்பெயரை அறிமுகம் செய்து வைப்பதில் பொதிகை முன்னணியில் உள்ளது. என்றாலும் என்னுடைய கட்டுரையில் உள்ள அறிவிப்புப் பலகை குறித்த செய்தியில் ஒரு சிறிய தவறு.   வட மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவு. அதிலும் முக்கியமாய் உத்தரப் பிரதேசத்தின் இந்த சின்னக் கிராமத்து மக்களுக்கு ஆங்கில அறிவு என்பதே இல்லை. ஏழ்மையிலும், அறியாமையிலும் உள்ள மக்கள்..

அதோடு இந்த இடம் அரசால் அரசின் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடமும் அல்ல.  தொல்பொருள் துறையின் அறிவிப்போடு சரி. அலுவலகமோ, நிர்வாகமோ அங்கே நடைபெறவில்லை. சுற்றுலா என்பது இங்கே அத்தனை மும்முரமாகவும் கிடையாது. இந்த இடத்தைக் குறித்த தகவல்களை  மிகவும் நன்கு அறிந்தவர்கள் மட்டுமே வருகின்றனர்.  இன்னமும் மின் விநியோகம் கூடச் சரிவர வராத கிராமங்கள் இவை.  இவர்களுக்குத் தெரிந்தது அவர்கள் மொழி மட்டுமே.

ஆனால் அதே சமயம் லக்னோ, கான்பூர் போன்ற ரயில்வே நிறுத்தங்களில் ரயில்வே அறிவிப்புக்கள் ஹிந்தியில் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இதற்குக் காரணம் ஹிந்தி மொழியிலேயே படிப்பதும் தான்.  ஆங்கில வழியில் கல்வி கற்பது அங்கு மிகக் குறைவாகவே காணமுடியும்.  பெரிய நகரங்களில் இருக்கும். ஆனால் பெரும்பாலான உள்ளூர் மக்கள் ஹிந்தி மொழியில் படித்துவிட்டு உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையைப் பார்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய சாதனையாகவும் நினைக்கின்றனர்.  ஆங்கிலப் படிப்புப் படித்த பெரிய மனிதர் வீட்டுக் குழந்தைகள் ரயில்வே வேலைக்கெல்லாம் வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவும் முடியாது. 

நாங்கள் பலரிடம் பேசிப் பார்த்ததில் பெரிய நகரங்களில், பெரிய பணக்காரக் குடும்பங்கள், உயர் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள், அரசாங்க அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் குடும்பங்களைத் தவிர மற்றப் பெரும்பான்மை சாதாரண மக்கள் உயர்கல்வியைக் கூட விரும்புவதில்லை. தங்கள் சொந்த ஊரை விட்டு, சொந்த இருப்பிடம், அதன் சுகங்களை விட்டு வெளிக்கிளம்புவது அவர்களுக்கு மிகக் கஷ்டமான ஒன்று ஆகும்.

இது குறித்துப் பேசவும், எழுதவும் நிறையவே இருக்கிறது.  இப்போக் காலை வேளையில் அதிக நேரம் உட்கார முடியாது. முடிந்தால் பின்னர் வருகிறேன். மற்றவர் கருத்துக்களையும் அறிய வேண்டுமே! :)

16 comments:

  1. உங்களுக்கும், தேன்மொழி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. உள்ளூர் வேலை போதும் என்று நினைக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. வாங்க டிடி, அவங்க தேமொழி, தேன்மொழி இல்லை. :)))))

    ReplyDelete
  4. ஆமாம் ஶ்ரீராம், நாங்க கூட தென்னாடு வந்து கோயில் எல்லாம் பார்க்க வேண்டாமானு கேட்போம். அவங்களுக்கு அப்படி எல்லாம் ஆசை இல்லை. சம்பாதிக்கணும்; சாப்பிடணும்; சினிமா பார்க்கணும். அவ்வளவே! :)))))

    ReplyDelete
  5. மறந்துட்டேனே, குட்கா பான் இருந்தால் கூடப் போதும்! :))))

    ReplyDelete
  6. தென்னிந்தியாவில் உள்ளதுபோன்ற கல்வி ஆர்வம் வடஇந்தியாவின் உட்பகுதிகளில் இல்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலக்கல்வி தான் பயில்கிறார்கள். மற்றபடி, அங்கெல்லாம் தாய்மொழியைப் பற்றிய possessiveness கிடையாது. ஹிந்தி அழிந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இல்லை. எனவே, தமிழ்வாணன், தமிழச்சி போன்ற மொழிசார்ந்த பெயர்கள் அங்கு யாருக்கும் இல்லை. ஹிந்திப்ரியா, ஹிந்திதாசன் என்றெல்லாம் பெயர்கள் கிடையாது. மொழியை அவர்கள் இயல்பான ஒரு கருவியாகவே கருதுகிறார்கள்.

    ReplyDelete
  7. //தாய்மொழியிலேயே பேசுங்களேன்! :)//

    பேச முயற்சிக்கலாம். நல்லது தான்.

    ஆனால் எந்த ஒரு தாய்மொழியையும்விட நாம் என்ன சொல்கிறோம் என்பது பிறருக்கு மிகச்சுலபமாகப் புரிய வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.

    ReplyDelete
  8. திரு செல்லப்பா சார், நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. மொழிப்பற்று என்பது ஓரளவுக்குத் தான் இருக்கணும். எந்த மொழியும் வேறெந்த மொழியையும் அழிக்கப் போவதில்லை. :))))

    ReplyDelete
  9. வைகோ சார், தமிழ் தெரிந்த தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் தமிழில் பேசிக்கலாமே என்பதே அந்தக் கட்டுரையின் உட்கருத்து! :)))) அல்லது ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசலாமே என்பதும் கூட.

    ReplyDelete
  10. //Geetha Sambasivam said...
    வைகோ சார், தமிழ் தெரிந்த தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் தமிழில் பேசிக்கலாமே என்பதே அந்தக் கட்டுரையின் உட்கருத்து! :)))) அல்லது ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசலாமே என்பதும் கூட.//

    அப்படியெல்லாம் பேசினால் யாருக்கும் ஒன்றுமே புரியாது. அது மிகவும் கஷ்டம். Practical Difficulties உண்டு.

    ”பேருந்து நடத்துனர் அவர்களே, காலை வணக்கங்கள். யான் திருச்சி சந்திப்பின், நடுவன் பேருந்து நிலையம் செல்ல விழைகிறேன். எனக்கோர் பயணச்சீட்டு தாருங்கள், ஐயா”

    என்று நான் கூற ஆரம்பித்தால் என்னைப்பிடித்து பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி விட்டு விடுவார், அந்த கண்டக்டர்.

    ஜங்ஷன் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒரு டிக்கெட் ப்ளீஸ் என தயவாக அவருக்குப் புரியும் படியான தமிழில் நான் பேச வேண்டும். சரியான சில்லரைக்காயின்களையும் நான் தர வேண்டும். ;)))))

    ReplyDelete
  11. /Blogger Geetha Sambasivam said...

    ஆமாம் ஶ்ரீராம், நாங்க கூட தென்னாடு வந்து கோயில் எல்லாம் பார்க்க வேண்டாமானு கேட்போம். அவங்களுக்கு அப்படி எல்லாம் ஆசை இல்லை. சம்பாதிக்கணும்; சாப்பிடணும்; சினிமா பார்க்கணும். அவ்வளவே! :)))))


    தென்னாட்டு முக்கிய கோவில்களுக்கு வடநாட்டவர் நிறையவே வருகிறார்கள் சொல்லப் போனால் தென்னிந்தியரைவிட வட நாட்டினர்தெய்வ வழிபாடுகளில் சிறந்து இருக்கின்றனர்

    ReplyDelete
  12. வட இந்தியாவில் ஹிந்தியைத் தவிர வேறு மொழிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஹிந்தி மட்டும் தெரிந்தால் வட இந்தியா முழுவதுமே சமாளிக்க முடியும் என்பதும் அவர்கள் வாதம்.

    ReplyDelete
  13. வைகோ சார், தமிழிலே பேசணும்னால் சுத்தத் தனித் தமிழ்னு நினைக்கக் கூடாது! பேச்சுத் தமிழ் போதுமே!:)))) சில்லறைக்காசுனு சொல்லலாம். பஸ் எப்போவோ தமிழாயிடுச்சே! பஸ் நிறுத்தம்னு சொல்லிக்கலாம். :))))

    ReplyDelete
  14. ஜிஎம்பி சார், வடநாட்டு யாத்ரீகர்களை இங்கேயே பார்க்கிறேன் தான். பெரும்பாலானவர்கள் மராட்டி, குஜராத், ராஜஸ்தானியர்கள் மற்றும் வங்காளியர்கள் சிலராக இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஆந்திரா மக்கள் தான் நிறையச் சுற்றுலா செல்கிறார்கள்.

    நான் சொல்வது அடிமட்டத்து மக்கள் மற்றும் நடுத்தரக் குடிமக்கள். பெரும்பாலானவர்களால் செலவு பண்ண முடியாது என்பதே உண்மை நிலை. இன்னமும் அங்கே ஏழ்மையும், அறியாமையும் முழு வீச்சில் இருந்து வருகிறது. :(((((

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், ஹிந்தி மட்டும் போதும் தான்; ஆனால் வங்காளத்தில் செல்லுபடியாகுமா? குஜராத் போன புதுசில் குஜராத்தி மொழியிலேயும், செளராஷ்ட்ர மொழியிலேயும் தான் அதிகம் பேசினார்கள். நாம கேட்டால் கூட குஜராத்தியில் தான் சொல்லுவாங்க. வங்கி, தபால் அலுவலகங்களில் கூட. அப்புறமா ஒரு தரம் நான் தமிழில் பேச ஆரம்பிக்க பின்னர் அவங்களும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதில் கொடுக்க ஆரம்பிச்சாங்க! :))))))

    ReplyDelete
  16. வங்கியின் படிவங்கள் கூட குஜராத்தி அல்லது ஹிந்தியில் தான் முதலில் கொடுத்தாங்க. அப்புறமாச் சத்தம் போட்டதுக்குப் பின்னர் ஆங்கிலப் படிவங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். :))))

    ReplyDelete