எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 18, 2014

கண்ணே பாப்பா!
முந்தாநாள் மதியம் வெட்டிப் பொழுது போக்குகையில் தற்செயலாக இந்தப் படம்  வசந்த் தொலைக்காட்சியில் மத்தியானமாப் போட்டாங்க.  கறுப்பு வெள்ளைப்படம் தான். ஆரம்பம் கொஞ்சம் சொதப்பல் தான்.  கே.ஆர். விஜயா குற்றாலத்தில்  ஊர் சுற்றி (?) பார்க்க வரும் முத்துராமனின் பின்னணியே தெரியாமல் அவரிடம் தன்னை இழந்ததாகக் காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்.  என்ன இருந்தாலும் இளம் வயதுப் பெண் இப்படியா ஏமாறுவாங்க? ஆனால் இம்மாதிரிப் பெண்களை அந்தக் காலங்களில் (படம் அறுபதுகளில் வந்திருக்கணும்) "அபலை" என்ற பட்டம் சூட்டி இரக்கம் காட்டி மகிழ்வார்கள்.  அப்படியே இதிலும் நடக்கிறது.  பகவதிபுரம் தான் தன்னோட ஊர்னு கே.ஆர். விஜயாவை ஏமாத்திப் பாதியிலேயே விட்டுட்டுப் போறார்.  அந்த ஊரிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் வி.எஸ்.ராகவன் உதவியுடன் தங்கி இருந்த விஜயா  வர ஒவ்வொரு ரயிலிலும் முத்துராமனைத் தேடிக் கடைசியில் தனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ரயிலில் காண்கிறார்.  ஆனால் முத்துராமன் அவரைத் தெரியாது எனச் சொல்லி விடுகிறார்.

தன் தந்தையிடம் குழந்தையைச் சேர்ப்பிக்கச் சொல்லி விஜயா கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்து விடுகிறார்.  உறவினர் அனைவரும் குழந்தையை ஏற்க மறுக்க அது எப்படியோ ரயிலில் ஏறிச் சென்னை வருகிறது பெற்றோரைத் தேடி.  வந்த குழந்தை எப்படியோ பிச்சை எடுத்துப் பிழைக்கும் கும்பலிடம் சேர்ந்து கொள்கிறது.  குழந்தையை ஆதரிக்கும் சந்திரபாபு அதன் பெயரில் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு லக்ஷ ரூபாய்ப் பரிசு விழ ஆரம்பம் ஆகிறது விறுவிறுப்பு.

குழந்தையாக நடித்திருப்பது பேபி ராணியாம்.  நல்லா இயல்பா நடிக்கிறது. அதை விட நல்லா "ஓ"னு அழுகிறது.  அழுகை வெகு இயல்பு.  அதிலும் லாட்டரிச் சீட்டைக் களவாட வருபவர்களைச் சரியாகக் கணித்து அவர்களிடமிருந்து தப்பிப்பது;  வழியில் சந்திக்கும் நடிகை மனோரமா, உபந்நியாசகர் வேடத்தில் இருப்பவர்  வி.கே.ராமசாமி, ரிக்க்ஷாக்காரர், குப்பத்துக்காரர்கள் இத்தனை பேரையும் சமாளிக்கும் விதம் நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. நம்பியாரை முதலில் நம்பி அவருடன் செல்ல நினைக்கும் குழந்தை பின்னர் தப்பி விடுகிறது. கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கமிஷனர் சுந்தரராஜனிடம் வந்து சேர்ந்து உண்மையைச் சொல்கிறது.குழந்தையை நம்பியாரிடம் போய் இருக்கச் சொல்லும் சுந்தரராஜனிடம் மாட்டேன்னு சொல்லுகிறது.  பின்னர் நம்பியார் நல்லவர் தான் எனத் தெரிந்து கொண்டு அவரிடம் போகிறது.  அவர் மனைவியாக வரும் விஜயகுமாரிக்குக் குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையிடம் பாசமழை பொழிகிறார். முத்துராமன் பெண்களை ஏமாற்றிப் பிழைக்கும் கும்பலில் வேலை செய்கிறார்.  (அந்தக் காலத்திலேயே ஆன்டி ஹீரோவாக நடிச்சிருக்கார் முத்துராமன். )மனோகர் தான் தலைவர்.  குழந்தைக்குப் பரிசு கிடைத்திருப்பதும், அதன் பெற்றோர் படமும் தினசரிகளில் வரக் குழந்தையிடமிருந்து பணத்தைப் பிடுங்கத் தயாராகின்றனர் வில்லன் மனோகர்  குழுவினர்.  அதற்காக டி.கே.பகவதியின் மகளான கல்பனா (இதுவும் கே.ஆர்.விஜயா)வை குழந்தைக்குத் தாயாக நடிக்கச் சொல்ல பின்னர் நடப்பது தான் க்ளைமாக்ஸ். பி.மாதவன் இயக்கம்.  கதை கோர்வையாகச் சொல்லப்பட்டிருப்பதோடு சம்பவங்களும் முன்னுக்குப் பின் முரண் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அந்தக் காலத்தில் இந்தப்படம் நல்லா ஓடி இருக்கணும்.  கண்ணே பாப்பா, என் கனிமுத்துப்பாப்பா பாட்டு தான் ஹிட்  சாங்.  அடிக்கடி கேட்டிருக்கலாம்.  ஹிஹிஹி, அறுபதுகளில் வந்த படத்துக்கு இப்போ விமரிசனம் செய்தாச்சு.  நல்லா இருக்கா?

ரொம்ப நாள் ஆசை பாச மலர் படமும், பாலும் பழமும் படமும் பார்த்துட்டு விமரிசிக்கணும்னு இருக்கு.  அது என்னமோ தொலைக்காட்சியில் வரவே மாட்டேங்குதே! :)

21 comments:

 1. இந்தப் படம் நான் பார்த்ததில்லை. அப்புறம் 'கனி முத்து பாப்பா' என்று கூட ஒரு படம் வந்தது என்று நினைவு,. அதில் எஸ் பி பி பாடல் கூட உண்டு என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. ஹி..ஹி... நானு இந்தப் படம் சின்ன பாப்பாவா இருந்தப்பயே பாத்தாச்!(வேற வேலை இருந்தா தான!)..பாசமலர், பாலும் பழமும் பாக்காதது ஒரு பெரச்சனையா?!

  இந்தா பாருங்க யூட்யூப்ல!

  https://www.youtube.com/watch?v=cDaIejp3-Rg

  பாலும் பழமும்

  https://www.youtube.com/watch?v=z5AwjR342RE

  ஸ்ரீராம் ஜி! இயக்குனர் எஸ்.பி.எம் மின் முதல் படம் கனி முத்து பாப்பா.. 'ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே' அப்படிங்கற ஹிட் பாட்டு இருக்கு இதுல.. அந்த பாடலும் பாருங்க..

  https://www.youtube.com/watch?v=68R-ZMrmp98

  ReplyDelete
 3. இந்த படம் வீட்டில் சானல் மாற்றும் போது ஒரு நிமிடம் பார்த்தேன்! முழுதும் பார்த்திருக்கலாம்னு தோணுது!

  ReplyDelete

 4. ஹை... இது நல்லா இருக்கே. பழைய படங்களுக்கு விமரிசனம் என்ற பெயரில் ஒரு பதிவு. ...!

  ReplyDelete
 5. வாங்க ஶ்ரீராம், படம் விறுவிறுப்பாக இருந்தது. அதோடு கன்னா பின்னா நகைச்சுவையோ, டூயட் என்ற பெயரிலே அசிங்கமான நடன அசைவுகளோ, இரு பொருள் வசனங்களோ, பாடல்களோ இல்லை. படம் முழுமையும் குழந்தையே ஆக்கிரமிப்பு. :) இயல்பான நடிப்பும் கூட.

  ReplyDelete
 6. பார்வதி, வாங்க, பாலும், பழமும் பார்க்காதது பிரச்னை எல்லாம் இல்லை. எல்லோரும் பாராட்டும் ஜிவாஜி நடிப்பைப் பார்த்துச் சிப்புச் சிப்பா வருமே அதுக்காகத் தான். :)

  ReplyDelete
 7. வாங்க சுரேஷ், முழுதும் பார்க்கலாம் தான். படம் நல்லாவே இருந்தது. :)

  ReplyDelete
 8. ஜிஎம்பி சார், இதுவும் ஒரு பதிவு தானே! :))))

  ReplyDelete
 9. வெட்டிப் பொழுது போக்குகையில்….!!!!

  இந்த பளக்கமெல்லாம் உண்டா! ஒரு ட்யூட்டோரியல் எடுக்கிறது!

  ReplyDelete
 10. மறக்க முடியாத படம்...!

  லட்டு பாப்பா...!

  ReplyDelete
 11. அந்த நாளில் இது ஹிட் படமென்று நினைக்கிறேன். இதே போல் கதை தானே பெற்றால் தான் பிள்ளையா?

  ReplyDelete
 12. பாசமலர் நல்லாருக்கும்.. வாய் விட்டுச் சிரித்து வாங்கிக் கட்டிக் கொண்ட படம்.

  ReplyDelete
 13. ஹிஹி.. மறந்தே போச்சு. பாலும் பழமும் படத்துல சவுகார்ஜானகினு நினைக்கிறேன். கடைசி காட்சியிலே 'நான் நாட்டுக்கு சேவை செய்யப்போறேன்' என்று. ஒரு வண்டியில் ஏறுவார். அதுல காவல்னு போட்டிருக்கும். வெள்ளை பெயிண்ட் ஊடெ தெரியும்.

  ReplyDelete
 14. சிரிச்சுத் தள்ளனும்னா சிவாஜி படம் தான். மதிய வேளைல பொழுது போகும்

  ReplyDelete
 15. "இ"சார், டுயுடோரியலா? சரியாப் போச்சு போங்க! யாரும் ஏற்கெனவே எட்டிப்பார்க்கிறதில்லை. நான் வகுப்பு எடுத்தா அவ்வளவு தான்! :(

  ReplyDelete
 16. டிடி, பாப்பாவுக்காகத் தான் படம் ஓடினதுனு நினைவு.

  ReplyDelete
 17. அப்பாதுரை, பெற்றால் தான் பிள்ளையா பத்தித் தெரியலை. இது ஹிட் படம் தான்.

  ReplyDelete
 18. பாசமலர் நல்லாருக்குமா? ஹை? நீங்களா சொல்றீங்க? என்னமோ பார்க்கலாம். :)

  ReplyDelete
 19. பாலும் பழமுமிலே சௌகாரும் உண்டா? சிவாஜிக்கு அம்மா மாதிரி இருப்பாங்க! :)

  ReplyDelete
 20. சிவாஜி படமும் தான். இன்னும் சிலவும் இருக்கின்றன. :)

  ReplyDelete