எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 02, 2014

வந்தோம், வந்தோம், மும்பை வந்தோம்.

மைத்துனன் டெல்லியில் இருந்து மும்பை வந்ததில் இருந்தே கூப்பிட்டுட்டு இருந்தார்.  ஆனால் சென்னை மாதிரி மும்பையும் எனக்கு அலர்ஜிங்கறதாலே யோசனை! ஆனால் ரங்க்ஸுக்கு அவங்க அம்மாவைப் பார்க்கணும்னு இருந்திருக்கு. அதோட பண்டரிபுர் போகணும்னு வெறே ஆசை. ஆனால் நான் பண்டரிபுர் வரலை. என்னால்  நிக்க முடியாதுனு சொல்லிட்டேன். :(ஆகவெ நேத்துப் பல்லவன்லே  கிளம்பி மாலை 3- 45க்கு ஏர் இந்தியாவில் மும்பை வந்தோம். டிக்கெட் ஏற்கெனவே கன்செஷனில் வாங்கி இருந்தோம். ஆனால் ஏர் இந்தியாவில் இதான் முதல் பயணம்.  கொஞ்சம் யோசனையாவே இருந்தது.  அதோடு எல்லோருமே மும்பையில் மழை கொட்டுவதாகச் சொன்னார்கள். அது   வேறே விமானம் இறங்க பிரச்னை இல்லாமல் இருக்கணுமேனு கவலை.

ஆனால் கவலை வேறு விதத்தில் வந்தது. :) சரியான நேரம் மும்பை வந்துட்டோம். சாமான் பெற்றுக் கொள்ளும் இடம் வந்தால் முதலில் ரங்க்ஸின் பெட்டி வந்தது.  சரி, என் பெட்டி பின்னால் வரும்னு நினைச்சேன்.  கன்வேயர் பெல்ட் நின்னும் போயாச்சு.  பெட்டி வரலை. ஸ்ரீரங்கத்தில் கிளம்பும்போது   ரங்க்ஸ்   தனி யாக   ஒரு செட் ட்ரெஸ்  வைச்சுக்கோனு சொன்னார்.  நான் பெட்டியே வராமல் போகும்னு நினைக்கவே இல்லை.  ஆகவே தனியா எதுவும் வைச்சுக்கலை. மொத்தத் துணியும் மும்பைக்கு வராத அந்தப் பெட்டியில் தான். என்ன பண்ணுவதுனு ஒண்ணுமே புரியலை. யோசிச்சிட்டு இருந்தோம்.

ஏற்கெனவே நான் மும்பைக்கு முதல் முதல் வந்த கதை அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுக்கு அப்புறமும் மும்பை வந்தப்போ எல்லாம் பிரச்னைகள் தான்.  இம்முறையும் இப்படி ஆயிடுச்சேனு ஒரேயடியா அப்செட்.  இன்னமும் பெட்டி வந்தபாடில்லை.  என் வாழ்நாளிலேயே முதல்முறையாக உடுத்த உடைஇல்லாமல் நிற்பது இப்போது தான். இதுவும் அவனருள் தான். :) மற்றவை விபரமாகப்பின்னர்

13 comments:

  1. ஹா.....ஹா...ஹா...

    ஸாரி கேட்டேளா... உங்க கஷ்டத்தைச் சொன்னா நான் சிரிச்சுட்டன்... மும்பைன்னாலே வம்புதானா? ஆமாம், வடாபாவ் சாப்பிடுவீங்களோ!:))

    ReplyDelete
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இன்னிக்குக் கடையிலே போய்த் துணி எடுக்கலாம்னா இங்கே பக்க்த்தில் எங்கேயும் புடைவைக் கடையே இல்லை. அதோட புடைவைக்கு ஏத்தமாதிரி ப்ளவுஸ் தைச்சாகணும். :( நேத்துத் துணியையே நனைச்சுட்டுப்போட்டுட்டு இருக்கேன்.எல்லாம் நேரம்! kindal pannaringa?? paNNung, pannunga! ithuvum kadanthu pokum. konja nalaikku hihihi nu sirikka mudiyaathu. ikki, ikki nu thaan sirichchaakanum. :)

    ReplyDelete
  3. பேசாமல் சுரிதார் பைஜாமாவுக்கு மாறலாமே.....! ( இடுக்கண் வருங்கால் நகுக,)

    ReplyDelete
  4. ஆபத்துக்கு தோஷமில்லைன்னு ஏதாவது ஒரு கடைக்குப்போய் சுடிதார் நைட்டி என ஏதாவது நிறைய வாங்கிக்கொண்டு ஒப்பேத்துங்கோ.

    அதுவும் ஒரு மாறுதலாகவே இருக்கும்.

    மாமாவுக்குப் பிடித்தால் அதையே தொடர்ந்து அணிந்து மகிழ்லாம்.

    ஒரு 10 வயது குறைந்தது போலவும் காட்சியளிக்கும். ;)

    ReplyDelete
  5. பெட்டி இப்பொழுது உங்களித் தேடி வந்திருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. குளிக்குற வேலை மிச்சம். ரெஸ்ட் எடுங்க.

    என்னது.. துணி வேறே தோய்க்கிறீங்களா.. ரங்க்சோட பேன்ட் சர்ட் ஒண்ணை எடுத்துப் போட்டுக்குங்க. மாட்டீங்களா?

    ReplyDelete
  7. மும்பை என்றாலே உங்களுக்கு இப்படி ஏதாவது நிகழ்ந்துவிடுவது வருத்தமான ஒன்றுதான் ஆனால் பயணம் நினைவில் நின்றுவிடுகிறது!

    ReplyDelete
  8. ஜிஎம்பி சார், சல்வார் குர்த்தாவும் கொண்டு வந்திருக்கேன். அதுவும் சேர்ந்து தான் அந்தப் பையில் மாட்டிக் கொண்டது. :)

    காசிராஜலிங்கம், நன்றி

    வைகோ சார், கடைக்குப் போய் வாங்கித் தான் வந்தோம். ஆனால் அது போட்டுக்கலை. மாமியார் இப்போ 6 கஜம் தான் உடுத்துவதால் அவங்க புடைவையைக் கட்டிக் கொண்டு சமாளித்தேன்.

    ReplyDelete
  9. ராஜலட்சுமி ஆமாம் வந்தது. :))))

    அப்பாதுரை, என்னை மாதிரி இரண்டு பேர் நுழையலாம் அவரோட பான்ட் ஷர்டிலே! :)))

    சுரேஷ், என்னோட மும்பை அனுபவம் படிச்சிருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே.

    ReplyDelete
  10. ஓஹோ இங்க இன்னோரு பதிவா. சரி முன்னால் போட்ட பின்னூட்டத்துக்கு மாப்பு. மும்பையைச் சொல்லாதீங்க ஏர் இண்டியாவைச் சொல்லுங்க. நல்ல வேளை மழையில் மாட்டாம ப்ளேன் இறங்இத்தே. மச்சினர் டெல்லி விட்டாச்சா. நல்லதுதான். மும்பை ஜாலியான இடம்.

    ReplyDelete
  11. பையன் = பையர்
    மைத்துனன் = மைத்துனர்

    இல்லையோ, உங்கள் வழக்கப்படி.



    ReplyDelete
  12. ஆமாம், வல்லி, ஏர் இந்தியாவில் கன்செஷனில் டிக்கெட் கிடைக்கவே மைத்துனர் வாங்கி அனுப்பிட்டார். :) அதான் அதிலே பயணம். இல்லைனா இன்டிகோ தான் சேவை நல்லா இருக்கு. ஏர் இந்தியாவில் சாப்பாடு அவங்களே கொடுக்கிறாங்க. ஆனால் என்ன, இன்டிகோன்னா சாப்பாடு கையிலே கொண்டு வந்துடலாம்.

    ReplyDelete

  13. ஆமாம் ஜீவி சார், அதான் வழக்கம். :) ஆனால் அன்னிக்கு இருந்த மன நிலைமையிலே ஏதோ எழுதினேன். அம்புடே! :) பெட்டி வந்ததும் தான் நிம்மதி ஆச்சு. முக்கியமான மருந்துகள் வேறே அதிலே மாட்டிக் கொண்டிருந்தன. :)

    ReplyDelete