எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 13, 2014

நடுவர் யார் என்பதை முதல் 2 மாதங்களிலேயே கண்டு பிடித்தேன்!

நடுவர் யார்?

திரு வைகோ அவர்களின் இந்தப் பதிவில் நடுவர் யாரெனத் தெரிவித்திருப்பதோடு வெற்றி பெற்றவர்களையும் தெரிவித்திருக்கிறார்.  நானும் அதில் இடம் பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  மற்றவர்கள் எப்படியோ தெரியாது, என்னைப்பொறுத்தவரையில் வைகோ சார் கதைகளின் விமரிசனப் போட்டி ஆரம்பித்த நாலைந்து வாரத்திலேயே நடுவர் அவர்களை நான் கண்டு பிடித்துவிட்டேன்.  அது நடுவர் தானாக என் பதிவுக்கு வந்து கொடுத்த பின்னூட்டத்தினால் தான். :))))


காட்டிக் கொடுத்த பதிவு

முதலில் விஷயம் புரியாமலேயே அவர் சொன்னதுக்கெல்லாம் அப்பாவியாய் (ஹிஹி) பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்புறமாத் தான் புரிஞ்சது.  அவரோட பின்னூட்டங்களைத் திரும்பவும் படிச்சால் விஷயம் தெள்ளத் தெளிவாக, வெள்ளிடை மலையாகப் புரிந்தே போய் விட்டது.  ஆனால் இதை எப்படி உறுதி செய்வது?  அதிலும் இந்தப் போட்டி குறித்து எதுவுமே அறியாதவர் போல் அவர் கேட்டதும், நானும் மண்ணாந்தையாக அதற்குச் சுட்டி கொடுத்ததும், பின்னர் படிக்கையில் சிரிப்பாக வந்தது.  ஆஹா, மாட்டிக்கிட்டாரேனு நினைச்சேன்.  கொஞ்ச நாட்களிலேயே அதற்கு ஏற்றாற்போல் வைகோ சார் நடுவர் மூலம் விமரிசனப் போட்டியில் கலந்துக்கிறவங்களுக்கு ஒரு ஆலோசனைப் பதிவு போட்டார்.  அந்தப் பதிவைப் படிச்சதுமே ஆஹா, நாம் நினைச்சது தான் சரினு புரிஞ்சது.

Tips and suggestions

முதிர்ந்தபார்வை

தனக்குத் தானே நீதிபதி

இதிலே தனக்குத் தானே நீதிபதி பதிவில் நடுவரின் ஆலோசனைகளைப் படித்ததும் நடுவர் யார் என்பது உறுதியாகப் புரிந்து விட்டது.  என்றாலும் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகங்களையும் துடைத்து எறிந்தது முதிர்ந்த பார்வை விமரிசனம். ஆக மொத்தம் நடுவர் தானே வந்து தன்னைக் காட்டிக் கொண்டு போய்விட்டார். இதைத் தான் ஶ்ரீராம் யானை தன்னை மறைத்துக் கொண்டாலும் தும்பிக்கை காட்டிக் கொடுத்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்.  அப்போ அது எங்கே சொன்னார்னு தெரியாமல் தவிச்சேன்.  நம்மை மாதிரி இன்னொருத்தரும் கண்டு பிடிச்சிருக்கார் போலிருக்கேனு நினைச்சேன்.  ஆனால் ஶ்ரீராம் போட்டியில் இல்லை.

அதையும் தேடி அலைந்தேன்.  ஆனாலும் நடுவர் போட்டிக்கு நடுவரின் பெயரை எழுதி அனுப்பிட்டேன்.  அது உறுதியா எனத் தெரியாமல் தவிப்பாக இருந்தது. அப்பாதுரை வந்து பல பின்னூட்டங்களில் மறைமுகமாக அவர் பெயரைச் சொல்லவும் உறுதியானது.  ஆனால் நிறையப் பேர் யூகிச்சிருப்பாங்கனு நினைச்சேன். நான்கே பேர்கள் தான் என்பதில் கொஞ்சம் ஏமாற்றமே!  மற்றபடி இந்த வெற்றி மட்டும் நான் எதிர்பார்த்ததே! கீழ்க்கண்ட இந்த வரிகளில் தான் அவர்தான் நடுவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். 


காட்டிக் கொடுத்த வரிகள்:

காட்டிக்கொடுத்த பதிவில் ஜீவி சாரின் பின்னூட்டங்களின் சில வரிகள்


பதிவுலகில் தான் சிறப்பாக எழுதக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?.. எத்தனை எழுத்தாளர்கள்?.. உங்களுக்குத் தெரிந்த திறமைசாலிகளின் காதுகளில் தான் இந்த போட்டி பற்றி கிசுகிசுத்து வையுங்களேன். எல்லாம் நிறைய பேரின் கற்பனை ஆற்றலை பார்க்க படிக்க சந்தர்ப்பம் கிடைக்குமே என்பதற்காகத்தான்.. :)) 


என்ன தான் மாறுபட்ட கோணமாக இருந்தாலும், இந்த பெயர் இருக்கிறதே அது தான் எல்லாத்தையும் மறைத்துக் கொண்டு முன்னாடி முன்னாடி நிற்கும். என்ன சொல்கிறீர்கள்?..



25 comments:

  1. ஓ... நடுவர் யார்னு சொல்லிட்டாரா.... இதோ போய்ப் பார்க்கிறேன்!

    நீங்கள் காட்டியுள்ள உதாரணம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் பதிவிலும், அவருடைய டிப்ஸ் பதிவிலும் கருத்தும் வார்த்தைகளுமே ஒன்றாய் இருந்த வரிகள் நிறைய!

    ஆனால் மிகவும் சுவாரஸ்யமான (புதிர்ப்) போட்டிகள்.

    ReplyDelete
  2. ஶ்ரீராம், ஒரு உதாரணம் எங்கே சொல்லி இருக்கேன்? கிட்டத்தட்ட 4 உதாரணப் பதிவுகள் காட்டி இருக்கேன். :)))) என்றாலும் என்னோட பதிவில் அவர் இட்ட பின்னூட்டமே அவரைக் காட்டிக் கொடுத்தது என்றால் அதில் பொய்யில்லை. :)))))

    ReplyDelete
  3. அவர் அதை வேண்டுமென்றேதான் செய்தார் என்றே நினைக்கிறேன். எந்த அளவு நம்மைக் கவனித்து வைத்திருக்கிறார்கள் நம் நண்பர்கள் என்று அவரும் சந்தடி சாக்கில் ஆழம் பார்த்திருக்கிறார்! :))))

    ReplyDelete
  4. அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துகள் கீதா. யானை துதிக்கைன்னு ஸ்ரீராம் சொன்னதும் நீங்களோன்னு கூடச் சந்தேகம் வந்தது. எனக்குத்தான் பொறுமை போதவில்லை விமரிசனங்கள் எழுத.

    ReplyDelete

  5. நடுவர் யாரென்று நானும் யூகித்திருந்தேன்( அதுவும் சரியாய்) ஆனால் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளாத காரணத்தால் எழுதி அனுப்பவில்லை. அவருக்கு அவருடைய கருத்துக்களைச் சொல்லாமல் இருப்பதுசிரமமான விஷயம். அவர் எழுத்தைப் படித்துப் பார்த்தவுடன் அதுவே காட்டிக் கொடுத்துவிடும் நான்கே பேர்கள்தான் கண்டு பிடித்தார்கள் என்பது போட்டிக்கு வேண்டுமானால் சரியாயிருக்கும். அந்த நால்வரில் ஒருவரான உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //. நான்கே பார்கள் தான் என்பதில் கொஞ்சம் ஏமாற்றமே! //

    பார்கள் = பேர்கள்.

    திருத்தி விடவும்.

    இதை ஓர் பின்னூட்டமாக வெளியிட வேண்டாம்.

    பிறகு நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  7. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ஒருமுறை பரிசு பெற்றவர்கள் தாங்கள் விமர்சனம் எழுதும் முறையை சொன்னால் மற்றவர்களுக்கும் பயன்படுமே என கருத்துரையில் கேட்டிருந்தார்..

    அப்போது பளிச் என பூ வனம் மலர்ந்து காட்டிக்கொடுத்தது.!

    ReplyDelete
  8. உங்களுக்கு கொடுத்த பின்னூட்டத்தில் தான் நானும் கண்டுபிடித்தேன் ஜீவிசார் தான் என்று.
    அப்பாதுரை சார் எழுத்தை விமர்சனம் செய்தது.
    காக்கா கதை உங்கள் பாணியில் கேட்டவுடன் இன்னும் தெளிவாக தெரிந்து விட்டது. அவர்தான் என்று. வை.கோ சார் பதிவுகளை இடை இடையே ஊருகளுக்கு சென்று விட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை எல்லா பதிவுகளையும்.
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    ஊரில் இருக்கும் நாளில் உங்கள் பதிவுகளை படிக்க வேண்டும் .

    ReplyDelete
  9. இருக்கலாம் ஶ்ரீராம். அப்படித் தான் இருக்கணும். :)

    ReplyDelete
  10. வாங்க வல்லி, யாரோ கேட்டதுக்கு நான் நடுவர் இல்லைனு சொல்லி இருந்தேனே. நடுவரா இருந்தா போட்டியிலே எப்படிக் கலந்துக்கறதாம்? :)))

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார், விஜிகே 31,32,33,34 ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு நீங்களும் எழுதி இருக்கலாம். :)

    ReplyDelete
  12. வைகோ சார், அதனால் என்ன, திருத்திட்டேன். :)) யானைக்கும் அடி சறுக்குமே! அதிலும் இப்போல்லாம் கீ போர்ட் தகராறில் சில எழுத்துக்கள் சரியா விழறதில்லை.

    ReplyDelete
  13. வாங்க ராஜராஜேஸ்வரி, இப்படித் தான் எழுத்தில் பழகிய சில சொற்கள் காட்டிக் கொடுக்கும். :)

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, நிதானமாக வந்து படியுங்கள். அவசரம் ஏதும் இல்லை. நீங்களும் போட்டியில் கலந்து கொண்டு எழுதி இருக்கலாம். குறைந்த பக்ஷமாக நடுவர் போட்டியிலாவது கலந்து கொண்டிருக்கலாம். :)

    ReplyDelete

  15. இவர்தான்னு ஒரு ஐடியா இருந்தாலும் நடுவுல சில சமயம் ரிஷபன், சுந்தர்ஜியாக இருக்குமோனு ஒரு சந்தேகம் வந்தது. பிறகு ஒரு சொற்பிரயோகம் இவருடைய தும்பிக்கையானது. அப்பால இவுருனு பிரிஞ்சிகினேன்.

    பாராட்டுக்கள். வெள்ளிடை மலைனா என்னனு மட்டும் சொல்லிடுங்க ப்லீஸ்.

    நீங்க நிச்சயம் கண்டுபிடிச்சுடுவீங்கனு நினைச்சது உண்மை. ஜீவி அவர்களின் கடமையுணர்வில் வியந்து போனேன் என்பதும்.

    ReplyDelete
  16. சூப்பர்!.. உங்கள் திறமையை திரும்ப திரும்ப நிரூபித்து வருகிறீர்கள்!..பாராட்டு மழையே தரேன் உங்களுக்கு!..

    ReplyDelete
  17. அப்பாதுரை, ஒரு பெரிய சமவெளியில் மலை மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்குமோ அதைத் தான் "வெள்ளிடைமலை" என்பார்கள். யாரும் சொல்லாமலேயே நாமே அறிந்து உணர்வது. இங்கே அப்படித் தான் ஜீவி சாரைக் கண்டு பிடித்தேன். :))))

    ReplyDelete
  18. பார்வதி, ரொம்ப நன்றி. ஹிஹிஹி, எல்லாப் போட்டிகளிலும் தொடர்ந்து வென்ற கீதா நான் இல்லை. அது கீதமஞ்சரி என்னும் கீதா மதிவாணன். பெயரைப் பார்த்துத் தப்பாப் புரிஞ்சுட்டீங்க போல! பாராட்டு மழை இங்கே பெய்யுது! :))))

    ReplyDelete
  19. வாழ்த்துகள். நான் யூகித்தது சரிதான்..... :)

    ReplyDelete
  20. சிறந்த பகிர்வு
    இனிதே தொடருங்கள்

    ReplyDelete
  21. வாங்க வெங்கட், யூகத்தை எழுதிப் பரிசைப் பகிர்ந்திருக்கலாமே! :) எனக்கு அவர் ஒருத்தரைத் தவிர வேறு எவரையும் தோன்றவே இல்லை. சொல்லப் போனால் பலரும் ரிஷபன் சாரை நினைத்திருக்கின்றனர். அவரோட எழுத்துக்கும் நடுவரோட எழுத்து நடைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். ஆகவே சுலபமாகக் கண்டு பிடிக்கலாம். :)))

    ReplyDelete
  22. நன்றி காசிராஜலிங்கம்.

    ReplyDelete
  23. பலரும் ரிஷபன் சாரை நினைத்திருக்கின்றனர். அவரோட எழுத்துக்கும் நடுவரோட எழுத்து நடைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். /

    ரிஷபன் சார் நடுவராக இருந்திருந்தால் புத்து வரிக்கு மிகாமல் விமர்சனம் எழுத்த சொல்லியிருப்பாரோ என்னவோ..!

    திருக்குறள் மாதிரி குறுக தரித்த ஆக்கங்களே அவரது ஸ்பெஷாலிட்டி..!

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி said...

    //பலரும் ரிஷபன் சாரை நினைத்திருக்கின்றனர். அவரோட எழுத்துக்கும் நடுவரோட எழுத்து நடைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்.//

    கரெக்ட் :) மிகச்சரியே !

    //ரிஷபன் சார் நடுவராக இருந்திருந்தால் புத்து வரிக்கு மிகாமல் விமர்சனம் எழுத்த சொல்லியிருப்பாரோ என்னவோ..!//

    இதுவும் கரெக்ட். அதுபோல ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருந்தால், அத்தனை பரிசுகளையும் நம் பெரியவர் முனைவர் கந்தசாமி ஐயா அவர்களே தட்டிச்சென்றிருப்பார்கள் !

    //திருக்குறள் மாதிரி குறுக தரித்த ஆக்கங்களே அவரது ஸ்பெஷாலிட்டி..!//

    இதுவும் ரொம்ப ரொம்ப கரெக்ட். :)

    ReplyDelete
  25. பாராட்டுக்கள்.

    ReplyDelete