எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 16, 2014

சப்பாத்தி, சப்பாத்தி தான், ரொட்டி, ரொட்டி தான்!

சப்பாத்தி


"திங்க" கிழமை வந்தாலே எங்கள் ப்ளாகிலே "திங்க" என்ன போட்டிருப்பாங்கனு பார்க்கத் தோணும்.  சில/பல வாரங்கள் நான் பார்க்கிறச்சே எதுவும் வராது.  சரினு கணினியை அணைச்சுட்டு ஒரு மணி, இரண்டு மணி கழிச்சுத் திறந்து பார்த்தாப் பதிவு வந்திருக்கும்.  யாரேனும் கருத்தும் சொல்லி இருப்பாங்க. எ.கொ.இ.ச.னு நொந்துக்கிட்டு சாப்பிட என்ன இருக்குனு பார்ப்பேன்.  நேத்திக்குக் கணினி பக்கமே வரமுடியலை! இன்னிக்குக் காலம்பரயும் உடனே பார்க்க முடியலை.  கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தாச் சப்பாத்திப் புராணம், அதிலே நமக்கு அழைப்பும் கூட.சின்ன வயசிலே சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சது எப்போனு நினைவில் சரியா இல்லாட்டியும் கூட, தால், சப்பாத்தி சாப்பிட்டோம்னு அரைகுறை நினைவா இருக்கு. அப்போல்லாம் ரேஷனிலே கோதுமை கொடுப்பாங்க.  மொட்டை கோதுமைனு அதைச் சொல்லுவாங்க.  கோதுமைக்கு மொட்டை எல்லாம் அடிப்பாங்களா என்ன?  இன்னும் சிலர் வடக்கே இதை எல்லாம் குதிரைக்குப் போடுவாங்கனு சொல்லிப்பாங்க.  அதைத் தானா நாம சாப்பிடறோம்னு எல்லாம் புரியாத, தெரியாத வயசிலேயே அதை மாவா அரைச்சு அம்மா சப்பாத்தி பண்ணுவா.


அம்மாவுக்கும் விதம் விதமாகச் சமைத்துப் போடப்பிடிக்கும். அப்போதெல்லாம் கோதுமை மாவைப் பிசைந்து அப்பளம் போல் இட்டு அதைத் தோசைக்கல்லில் போட்டு நெய்யோ, எண்ணெயோ ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுப்பாங்க.  அது கொஞ்சம் மொறுமொறுனே இருக்கும்.  சப்பாத்தின்னா அப்படித் தான் இருக்கும்னு நினைச்சுப்போம். ஆனாலும் தால் மட்டுமில்லாமல், தக்காளிக்காய்க் கூட்டு, தக்காளிக் கூட்டு, வெங்காயம், தக்காளி வதக்கல்னு அம்மா பண்ணுவா. அபூர்வமாக் கிடைக்கும் காலிஃப்ளவரில் கூட வெங்காயம் சேர்த்துக் கறி பண்ணுவா. அப்பா அதைத் தொடவே மாட்டார்.  ஆனால் பெரிய வெங்காயமோ, குடைமிளகாயோ பார்த்ததே இல்லை.என்னோட அம்மாவின் ஒன்று விட்ட அண்ணாவின் மாட்டுப் பெண் புனாவில் பிறந்து வளர்ந்து படித்துவிட்டு மதுரைக்குக் கல்யாணமாகி மேலாவணி மூலவீதிக்கு வந்து சேர்ந்தாள்.  அவங்க மூலமா அப்போத் தான் அம்மாவுக்குச் சப்பாத்தியை மடிச்சு மடிச்சுப் போட்டு இடும் பரோட்டா அறிமுகம் ஆனது.  அதோடு இல்லாமல் உ.கி.யையே விதம் விதமாச் சமைக்கவும் தெரிய வந்த்து. அம்மா உ.கி.வெங்காயம் போட்டுச் செய்யும் கறி மிக நன்றாகச் சாப்பாடுடனும் சரி, சப்பாத்தியுடனும் சரி சுவையாக இருக்கும்.   நானும் அப்படித் தான் சப்பாத்தி பண்ணிட்டு இருந்தேன்.  ஆனால் பண்ணின உடனே மூடி வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் என்பதை என் சுய சமையலில் கண்டு பிடித்தேன்.   அதோடு அப்போவெல்லாம் சப்பாத்தியை இட்ட உடனே அடுப்பில் போட்டுப் பண்ணி எடுக்கணும்னும் தெரியாது.  நிறைய இட்டு ஒரு பேப்பரில்  போட்டுக் கொண்டு அதை ஒவ்வொண்ணாக எடுத்து தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வேக வைப்போம்.


நாங்க தோசை மாதிரிச் சுட்டு எடுப்பது உண்மையில் சப்பாத்தியே இல்லை என்பதை நான் முதல் முதல் ராஜஸ்தான் வந்ததும் புரிந்து கொண்டேன். நான் பண்ணும் சப்பாத்தியைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க.  அவங்க இட்லியையும், தோசையையும் பார்த்து பதிலுக்கு நான் சிரிப்பேன். மாவை உருட்டிப் பிசைவதில் இருந்து இடும்போது திரும்பத் திரும்ப மாவைப் பிசைந்து உருட்டினால் தான் சப்பாத்தி நன்கு இட வரும் என்பதோடு மெலிதாக இருந்தாலும் முறுகாமல் பூப்போல் வரும் என்றும் அதுவே இரட்டை மடிப்பாக வரும் என்றும் புரிந்து கொண்டேன்.  மெலிதாக மடித்துப் போட்டு இட்டு தோசைக்கல்லில்  போட்டு இருபக்கமும் நெய் தடவினால் அது சப்பாத்தி என்றும், மெலிதாக இட்டு விட்டுத் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் லேசாகச்  சூடு செய்து விட்டு அனலில் வாட்டி எடுப்பது ஃபுல்கா ரொட்டி என்றும், உள்ளே வெண்ணெய் தடவி மடித்து  மடித்துப் போட்டு இட்டு கொஞ்சம் இல்லை நிறையவே கனமாகப் பண்ணினால் அது தான் பரோட்டா அல்லது பஞ்சாபி மொழியில் தவா பூரி அல்லது பராந்தா என்றும் புரிந்து கொண்டேன். ரொட்டியை இட்டதும் தோசைக்கல்லிலேயே போட்டு வாட்டி ஒரு வெள்ளைத் துணியால் ஒத்தி ஒத்தி எடுத்துச் சப்பாத்தியைச் சுற்றிச் சுற்றித் திருப்பிப் போட்டு தோசைக்கல்லிலேயே உப்ப வைத்து எடுத்தால் அது தவா ரொட்டி என்றும் புரிந்தது.அதைத் தவிரவும் ருமாலி ரொட்டி, கஸ்டர்ட் ஸ்டஃப் செய்து பண்ணும் பரோட்டா, நான், தந்தூர் ரொட்டி ஆகியவையும் பழக்கம் ஆகியது.


இன்னும் உ.கி. வேக வைத்து மசாலா சாமான்கள் சேர்த்துக் கறி போல் செய்து உள்ளே ஸ்டஃப் பண்ணும் ஆலு பரோட்டா,

ஆலு பரோட்டா


வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்பு,மஞ்சள் பொடி சேர்த்துச் சற்று நேரம் வைத்த பின்னர் கோதுமை மாவில் சேர்த்து விட்டுக் காரம் , மசாலா சேர்த்துச் செய்யும் மேதி பரோட்டா,
மேதி பரோட்டா


தேப்லா, இரண்டு, மூன்று மாவுகள் சேர்த்துச் செய்யும் மிஸ்ஸி ரொட்டி, முள்ளங்கிக்கறியை உள்ளே ஸ்டஃப் செய்யும் மூலி ரொட்டி, சோள மாவு சேர்த்துச் செய்யும் ரொட்டி, கம்பு ரொட்டி என விதவிதமான ரொட்டி வகைகள் இருப்பதும், தால் பாட்டி என்னும் ராஜஸ்தானின் முக்கிய உணவையும் குறித்து அறிய நேர்ந்தது.

தால் பாட்டி

தால் பாட்டிக்கு பாட்டியைச் சுட்டும் செய்யலாம்; நெய்யிலோ, எண்ணெயிலோ பொரித்தும் செய்யலாம். அதை உதிர்த்துக் கொண்டு கட்டாயமாய் அதன் தலையில் நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் காரமான தாலை அதன் மேல் ஊற்றிக் கொண்டு சாப்பிட வேண்டும்.
சூர்மா லட்டு

இதற்குப் பின்னர் சாப்பிடும் சூர்மா எனப்படும் இனிப்பு இனிப்போ இனிப்பு.  கோதுமை மாவு அல்லது ரவையை வறுத்துப்பொடித்த மாவில் வெல்லம் சேர்த்துப் பெரும்பாலும் பண்ணுவார்கள்.  இப்போதெல்லாம் சர்க்கரையும் சேர்க்கின்றனர். இதிலேயும் நெய் நிறைய இருக்கும்.  இதன் பின்னர் மீட்டா லஸ்ஸி குடிக்கவேண்டும்.  இது ஒரு முழுச் சிறப்பு  விருந்து உணவாக ராஜஸ்தானின் தென் பகுதியில் விருந்தினருக்குச் சமைப்பார்கள்.ஒருவேளை தொடருமோ? :)


நான் எடுத்த சில படங்கள், பரோட்டா பண்ணுகையில், தால் பண்ணுகையில் எடுத்தவை நாளை வெளிவரும்.

இதில் உள்ள படங்கள் கூகிள் உபயம்.  கூகிளாருக்கு நன்றி.

இதை எழுதிப் போட்டுட்டுக் காணாமல் போய்த் தேடிக் கண்டு பிடித்துப் போட வைத்தவருக்கு என் நன்றி. :)

18 comments:

 1. ஆமாம் வயசாயி பல்லும் போனால் வசக்கு வசக்கு, சவுக்கு சவுக்குதான் :))
  ஐயி யோ! பாவம் ஏன் பாட்டிய சுட்டு தால் ல போட்டாச்சு!!பாட்டிய தால்லேந்து எடுத்து sorry சொல்லிட்டு லட்டும் லஸ்ஸியும் குடுங்க .

  நானும் கொஞ்சம் வம்பிழுக்கலாமேனு பாத்தேன் :)))

  ReplyDelete
 2. இதெல்லாம் நீங்களே பண்ணுவீங்களா? இந்த புகை படமெல்லாம் நீங்க எடுத்ததா? இல்லைனா ஒரிஜினல் ஆ யாரு எடுத்தாங்களோ அவங்க லிங்க் குடுக்கலாம் இல்லையா?


  http://sivamgss.blogspot.in/2014/08/blog-post_69.html

  இத எழுதினது நீங்கதானே?

  தனியா லிங்க் குடுக்க முடியலனா google-கு கிரெடிட் குடுக்கலாம். Am I correct or not?

  ReplyDelete
 3. எத்தனை எத்தனை ரோட்டிகளடா... என்று பாடத் தோன்றுகிறது.. சிறுவயதில் எனக்கும் அம்மா போட்ட "சாதா" சப்பாத்திதான் முதல் அறிமுகம்! அனால் எனக்கும் சப்பாத்தியை விட அம்மா செய்யும் குருமாதான் ரொம்ப்......ப இஷ்டம்! எனக்கு மட்டுமில்லை, என் சகோதர சகோதரிகளுக்கும்! சப்பாத்தி ரெடியாகுமுன்பே குருமாவை சரி சமமாக பங்கு போட்டு விடுவோம். சும்மாவே முக்கால் சாப்பிட்டு விடுவேன்.

  ம்ம்ம்.... அது ஒரு சப்பாத்தி காலம்!

  ReplyDelete
 4. தேவை - டால் ரெசிபி.

  ReplyDelete
 5. ஜிக் லாக், ஏதோ கையும் களவுமா என்னைப் பிடிச்சுட்டாப்போல நினைக்கறீங்க போலிருக்கே. என்னோட முழுப்பதிவையும் காப்பி அடிக்கிறதுக்கும் கூகிளில் படங்கள் தேடிப் போடறதுக்கும் வித்தியாசம் இருக்கு. எந்தப் படங்களும் நான் எடுத்ததுனு சொல்லவும் இல்லை. கடைசியில் படங்கள் கூகிளாருக்கு நன்றினு போட்டிருந்தேன். அது பப்ளிஷ் பண்ணும்போது வரலை. எப்போவும் கூகிளில் படங்கள் எடுக்கையிலேயோ செய்திகள் சேகரித்தாலோ அதைக் குறிப்பிடுவது என் வழக்கம். முந்தைய சில பதிவுகளிலும் பார்க்கவும். இந்த ஒரு பதிவை மட்டும் பார்க்க வேண்டாம்.

  இணையம் தகராறு, பதிவு பப்ளிஷ் ஆகும்போது வந்த எரர் ஆகியவற்றால் நன்றி சொல்லிப் போட்டது வரவில்லை. இப்போது இணைக்கிறேன். நானும் இதெல்லாம் நானே பண்ணிப் படங்களும் எடுத்து வைத்திருக்கேன். அதைத் தனியாச் சாப்பிடலாம் வாங்க என்னும் பதிவில் போட்டுட்டும் இருக்கேன்.

  ReplyDelete
 6. ஜிக்லாக்,

  நீங்க தான் என்னோட அந்தப்ப்திவைக் காப்பி பண்ணி இருக்கீங்களோனு சந்தேகம் இப்போ வருது. :))) இல்லைனா இவ்வளவு கோபம் வராதே! :))))

  ReplyDelete
 7. வாங்க ஜெயஶ்ரீ, பாட்டி கொஞ்சம் கெட்டியாக உடைச்சுச் சாப்பிடும் பதத்தில் இருக்கும். ஆனால் கையாலேயே நொறுக்கலாம். அதன் மேல் அந்தக் காரமான தாலை ஊத்துவாங்க. :)

  ReplyDelete
 8. ஶ்ரீராம், குருமானு இங்கே தான் பண்ணறோம். வட மாநிலத்தில் தினசரிச் சாப்பாடே சப்பாத்தி, ரொட்டி ஆகியவை தான் என்பதால் இரண்டு தால், இரண்டு காய்களோடு இருக்கும். குறைந்த பக்ஷம் ஒரு தால் இருகாய்களாவது இருக்கும். இங்கே பண்ணும் குருமாவைப் பார்த்தா அவங்க வெறுத்துப் போயிடுவாங்க. ஒருத்தர் சப்பாத்தி சாப்பிட்ட தன்னோட அனுபவத்தைச் சொல்லி இருக்கார். :))))

  ReplyDelete
 9. கௌதமன் சார், நாளைக்கு! விதவிதமான காய்கள், தால்கள் எல்லாமும் பகிரப்படும். :)))))

  ReplyDelete
 10. போட மறந்துட்டேன் னு சொல்லி போட்ருந்த கூட நான் நம்பி இருப்பேன். போட்டேன் publish ஆகல நு சொல்றீங்களே. publish பண்ணும் பொது ஒரு லைன் மட்டும் விட்டு போச்சா ?

  உங்க மத்த போஸ்ட் ல லிங்க் குடுத்துருக்கீங்க, ஒத்துக்கறேன். ஒருவேளை உங்க போஸ்ட் அ கோப்பி அடிச்சு போட்டவங்களும் லிங்க் குடுக்க மறந்துருப்பங்க இல்ல புப்ளிஷ் ஆகும் பொது அவங்க வீட்லும் மின்சாரம் / இணையம் போயிருக்கும்.

  உங்கள கையும் களவுமா புடிச்சு என்ன ஆக போகுது? தனக்கு வந்த ரத்தம் அடுத்தவங்களுக்கு னா தக்காளி சட்னி, அதானே ? :-))))))

  ReplyDelete
 11. ஜிக்லாக், திரும்பத் திரும்பச் சொல்றதில் உங்களுக்கு சந்தோஷம்னா சரி. என்னைக் காப்பி அடிச்சவங்க அமெரிக்காவில் மின்சாரம் எப்போவும் கிடைக்கும் இடத்தில் இருக்காங்க. நான் தமிழ்நாட்டில் ஶ்ரீரங்கத்தில் எப்போ மின்சாரம் போகும்,எப்போ வரும்னு தெரியாமல் இருக்கேன்.

  பப்ளிஷ் கொடுக்கையில் எரர் வரதை முடிஞ்சால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பறேன். இப்போதைக்கு அவ்வளவு தான் பதில். இந்த எரர் குறித்து என் நண்பர்கள் பலரிடமும் கேட்டிருக்கேன். உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏதும் எனக்கு இல்லை.

  இதே போல் கூகிளில் இருந்து படங்கள் எடுத்துப் போடும் அனைவர் பதிவுக்கும் சென்று சொல்லுங்கள். அது தான் நியாயமாக இருக்கும்.

  திரும்பத் திரும்ப எரர் வந்ததில் பதிவை காப்பி, பேஸ்ட் பண்ணும்போது கடைசி வரி காப்பி ஆகாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. இது என் சொந்த அனுபவம்.

  கொடுக்கும் கருத்துக்களே காணாமல் போகின்றன. என் பதிவில் கருத்துச் சொன்னவர்கள் பலரும் ஏன் என்னோட பின்னூட்டம் வெளியாகலைனு கேட்பாங்க. எனக்கும் பலரோட பதிவுகளில் அதே போல் ஆகும்.

  ReplyDelete
 12. ஜெயஷ்ரி கமெண்டுக்கு ஒரு பிளஸ். சாம்பு மாமா பாவம், எவ்ளோ கத்துண்டு இருக்காரு.. :P

  மின்சார பிரச்சனைய பத்தி உங்க தொகுதி எம்.எல்.ஏ கிட்ட புகார் குடுங்க. :))

  ஹலோ கீதா பாட்டி, நோ டென்ஷன்.

  ReplyDelete
 13. எங்க வீட்டிலயும் மன்னி டில்லி போய் வந்தபிறகு தான் ரோட்டியின் பலவிதங்கள் கற்றுக் கொண்டோம். பிறகு முதல் மருமகள் வந்தபிறகு வகை வகையாகச் செய்து சாப்பிடுவாள்.அவளிடம் கற்றுக் கொண்டேன்.தால் பாட்டி இப்போதுதான் பார்க்கிறேன்.துபாய் ஹோட்டல்களில் கூட பார்த்ததில்லை. அருமையான விளக்கங்கள். நன்றி மா.

  ReplyDelete
 14. அசத்தல்.

  தால்பாட்டி நமக்கு புதிது.

  ReplyDelete
 15. அம்பி, என்ன ரொம்பத் துள்ளலா இருக்கு? தாத்தா, மூக்கு ஜாக்கிரதை. அநாவசியமா மூக்கை நுழைக்காதீங்க! :))))

  ReplyDelete
 16. வல்லி, "பா"ட்டி செய்முறையும் சொல்றேன். கொஞ்சம் சிரமப்படணும். :))))

  ReplyDelete
 17. வாங்க மாதேவி, ரொம்ப நாளாச்சு பார்த்து. :)

  ReplyDelete
 18. ஜிக்லாக், இப்படித் தான் வரும். இதுக்கு என்ன சொல்றீங்க? ஸ்க்ரீன் ஷாட் சரியா வரலை. :(

  An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss

  ReplyDelete