எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 23, 2015

பயணங்கள் முடிவதில்லை! 6

ராமேஸ்வரம் வரும் வழியில் தான் கோதண்டராமர் கோயில் இருக்கு.  அங்கே தான் விபீஷணனுக்கு   பட்டாபிஷேஹம் ஆயிற்றாம்.


கோயிலைப் படம் எடுக்கத் தடை போட்டுட்டாங்க.  இதை எடுக்கையிலேயே கூட்ட நெரிசலும் தாங்கலை.  எடுக்கவும் விடலை. படிகள் நிறைய உள்ள கோயில். மக்கள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருந்தனர்.  ஒரு சிலர் படம் எடுக்கையில் ஆக்ஷேபம் வேறு செய்தனர். அதோடு மேலே காமிராவைக் கொண்டு போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.  அதே போல் ராமேஸ்வரம் கோயிலிலும் காமிரா, அலைபேசி ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.  அல்லது நாம் அங்குள்ள லாக்கரில் டெபாசிட் செய்ய வேண்டும். ரிஷபன் எப்படியோ கோபுரத்தையும் வீதியையும் படம் எடுத்திருக்கார்.  அதுக்கே எங்களை அனுமதிக்கலை.

[Image1]

இதான் கோயிலுக்கு ஏறும் இடம்.  முதல்லே படிகளைப் பார்த்துட்டு ரங்க்ஸ் கிட்டே நான் வரலை, நீங்க போங்கனு சொல்லிட்டேன்.  அப்புறமாப் பார்த்தாப் படமும் எடுக்க விடலை.  எல்லாம் நம் நேரம்! :( கூட்டமும் நெரியுது.  மேலேயே ஏறிடுவோம்னு ஏறிட்டேன். வார இறுதி என்பதோடு விடுமுறை, விழாக்காலம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் உச்சத்தில் இருந்தன.  கருவறையில் கோதண்டத்துடன் காட்சி தரும் ஶ்ரீராமர், அருகில் சீதை, லக்ஷ்மணரோடு, அதிசயமாக விபீஷணனும் உடன் இருக்கக் காட்சி தருகிறார்.  கொஞ்சம் கிட்டே போய்ப் பார்த்தால் தான் விபீஷணாழ்வார் இருப்பதைப் பார்க்க முடியும்.

மன்னார் வளைகுடாவுக்கும் , வங்காள விரிகுடாவுக்கும் இடையிலுள்ள சின்னத் தீவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் தான் விபீஷண சரணாகதிக்குப் பின்னர் ஶ்ரீராமர் விபீஷணனுக்குப் பட்டம் சூட்டியதாகச் சொல்கின்றனர்.  வைகானஸ ஆகமத்தின்படி இந்தக் கோயில் நடைபெறுவதாகச் சொல்கின்றனர். வருடா வருடம் விபீஷணப் பட்டாபிஷேஹம் ஆனி மாதம்  வளர்பிறை நவமி திதியில் நடைபெறுவதாகவும் சொல்கின்றனர்.  இந்தத் தலத்தில் அதிசயமாக கருடாழ் வாரும், ஶ்ரீராமாநுஜரும் முன் மண்டபத்தில் காணப்படுகின்றனர்.  ஊரை விட்டு ஒதுக்கமாக ஒரு தீவில் இருப்பதால் மாலை ஆறுமணிக்கேக் கோயில் நடை சார்த்தப்படுகிறது.  காலையிலும் திறக்க ஏழுமணிக்கு மேல் ஆகும் என்றனர். இந்தத் தலத்தையே கோதண்டம் என்னும் பெயரிலும் அழைக்கின்றனர். 

கோயில் முகப்புப் படம் கொடுத்தவர் கூகிளார்.  நாங்கள் யாருமே( பையர் உட்பட) படம் எடுக்கவில்லை. :(  ராமேஸ்வரம் படங்களும் இல்லை. அங்கேயும் காமிரா, அலைபேசி எல்லாவற்றையும் வண்டி நிறுத்தும் இடத்திலேயே கார் ஓட்டுநரிடம் ஒப்படைக்க வேண்டி இருந்தது.  கைப்பையை மட்டும் திறந்து காட்டிவிட்டு எடுத்துச் சென்றோம்.  அதிலும் வீட்டுச் சாவிக்குக் கொஞ்சம் சந்தேகப்பட்டார்கள். 

20 comments:

  1. கோவில் இடம் கவர்கிறது.
    விபீஷணாழ்வார்? how sad!

    ReplyDelete
    Replies
    1. கோயில் இடம் மனதைக் கவரும் விதமாகத் தான் இருந்தது. ஏன் விபீஷணாழ்வார் என்றதும் வருத்தம் அப்பாதுரை? :)

      Delete
  2. வம்பிழுப்பதல்லாமல்..... இப்பத்தான் கவனிக்கிறேன். அடியேன் கொள்கையும் அஃதே.

    ReplyDelete
  3. Google glass அணிந்து செல்ல அனுமதிப்பார்களா? இப்பல்லாம் சட்டைப் பித்தானில் பொருத்திக்கொள்ளும் தரமான கேமரா மலிவான விலையில் கிடைக்கிறது. எல்லாம் வல்ல சைனாவின் கிருபை.

    ReplyDelete
    Replies
    1. கூகிள் க்ளாசோ, சட்டைப்பித்தான் காமிராவோ எதானாலும் மெடல் டிடெக்டரிடம் மாட்டிக் கொள்ளுமே அப்பாதுரை? :)

      Delete
  4. இங்கெல்லாம் ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும்!

    :)))))

    ReplyDelete
    Replies
    1. போயிட்டு வாங்க ஶ்ரீராம். எனக்கு இது மூணாம் முறையோ, நாலாம் முறையோ, நினைவில் இல்லை. :)

      Delete
  5. வணக்கம்
    அறியாத தகவலை அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. புதிய தலத்தை அறிந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. பலருக்கும் தெரியவில்லை தான்.

      Delete
  7. பல இடங்களில் இப்படி காமிரா கொண்டு செல்வதற்கு தடை.... புகைப்படங்கள் எடுக்கவும் தான். சில இடங்களில் மீறி நீங்கள் புகைப்படம் எடுத்தால், அப்புகைப்படத்தை Delete செய்து விட்டுத்தான் மறுவேலை! :(

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எனக்கும் காமிராவில் படம் எடுக்கையில் காமிரா பிடுங்கப்பட்டு படங்கள் அழிக்கப்பட்ட அனுபவம் உண்டு. :)

      Delete
  8. Replies
    1. வாங்க எல்கே, என்ன அதிசயமா? ஆமாம், தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் வழியில் உள்ளது இந்தக் கோயில்.

      Delete
  9. கோவில் அழகாக இருக்கிறது. இன்னும் ராமேஸ்வரம் போகவில்லை. இதேபோல சேதுக்கரையில் ஒரு கோவில் இருக்கிறதே. ஆனால் படிக்கட்டுகள் இல்லை. கடற்கரையிலேயே இருக்கிறது. இது வேற கோவில் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சேதுக்கரையிலேயே இருக்கும் கோயில் நம்ம ஆஞ்சியோடது ரஞ்சனி. அங்கிருந்து திருப்புல்லாணி போகும் வழியில் காட்டுக்குள்ளே ஏகாந்த ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மோசமான நிலையில் இருக்கிறதாம். முன்னாடி அது பத்தித் தெரியலை. இப்போத் தான் தெரிய வந்தது. அங்கே போயிருந்திருக்கலாம். போகலை. பார்ப்போம். இன்னொரு சேதுப் பயணம் வாய்த்தால்! :))))

      Delete
  10. நானும் மூன்று முறை பார்த்து இருக்கிறேன், ஒரு முறை மாட்டு வண்டியில் போய். மாட்டு வண்டி அனுபவம் புதுமையாக இருந்தது அப்போது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, இப்போல்லாம் மாட்டு வண்டிப் பயணம் அரிதாகி விட்டது. எங்க பொண்ணு ரொம்ப ஆசைப்பட்டாள்னு நாங்க அவளுக்குக் குழந்தை பிறந்து முதல் மொட்டைக்கு வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது மாட்டு வண்டிப் பயணம் செய்ய வைத்தோம். :) அதே போல் மதுரையில் குதிரை வண்டியிலும் பயணம் செய்ய வைத்தோம். வட மாநிலங்களில் டாங்காவில் பயணம் செய்திருக்கிறோம். அது தனி சுகம். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குதிரை வண்டிகளில் உள்ளே காலை மடக்கி உட்கார வேண்டும். இப்போல்லாம் ரிக்‌ஷாக்களோ, குதிரை வண்டிகளோ, மாட்டு வண்டிகளோ காண முடியவில்லை. நேற்று கும்பகோணம் அருகிலுள்ள எங்க குலதெய்வக் கோயிலுக்குப் போகும்போதும் வரும்போதும் கதிரறுக்கும் வண்டிகள் தான் நிறையப் பார்க்க முடிந்தது. எல்லா நிலங்களுக்கும் மெஷின் வைத்தே கதிர் அறுத்துக் கொண்டிருந்தார்கள். படங்கள் எடுக்கலை. சாயந்திரம் யாரோ வரப் போவதாகச் சொல்லி இருந்ததால் உடனுக்குடன் திரும்பணும்னு அவசரப் பயணம். கடைசியில் யாரும் வரலை! :)

      Delete