எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 10, 2015

கண்ணன் செயல்!

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா!  ஓட்டம் ஒரு வழியாகக் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது என நம்புகிறேன்.  ஆகஸ்ட் மாதம் ஓட ஆரம்பித்த ஓட்டம் ஆறு மாதங்கள் போனதே தெரியாமல் ஓட்டமாய் ஓடி விட்டது.  அதிலும் டிசம்பரில் பையர் வந்ததில் இருந்து முந்தாநாள் ஊருக்குத் திரும்பச் செல்லும்வரை ஒரே ஓட்டம் தான்.  ஒரு நாள் ஒரு நிமிடமாக ஓடி விட்டது. இனி கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் போனவற்றை எல்லாம் படிக்க வேண்டும். 

இரண்டு நாட்கள் சென்னைப் பயணம்.  வழக்கமான மருத்துவப் பரிசோதனை. இங்கே வந்ததில் இருந்து எட்டிப் பார்க்காத ஆஸ்த்மா தொந்திரவு கடந்த இரு மாதங்களாகத் தொந்திரவு கொடுத்து வருகிறது.   தொலைபேசிப் பேசுபவர்களிடம் பேச முடியாமல் இருமல் துளைத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே முக்கியமாய்ப் போனோம்.  மருந்துகள் மாற்றிக் கொடுத்திருக்கிறார்.  கடந்த இரு நாட்களாக இரவில் தூக்கம் பரவாயில்லை என்னும்படி தூங்குகிறேன்.  இனியாவது எழுதவும் ஆரம்பிக்க வேண்டும்.   பல பதிவுகள் முடிக்காமல் கிடக்கின்றன. ஒவ்வொன்றாகத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். இப்படி எத்தனையோ வேண்டுதல்கள்.  ஆயிற்று. இரண்டு நாட்களில் பொங்கல் பண்டிகை வந்துவிடும்.  அதிலே மூன்று நாள் போய் விடும். அதுக்கப்புறமாவது முடியுமா?  எல்லாம் கண்ணன் செயல்!  அவன் நினைக்கிறது தான் நடக்கும்.  அவனே அவனுக்கு வேண்டியபடி நடத்திக் கொள்வான்.

திருப்பாவைக் கோலப் பதிவுகள் நாளை வரும்! :)

12 comments:

  1. உடல் நலத்தில் கவனம் வையுங்கள்.

    வீடு மாற்றிய தூசியிலேயே ஆஸ்த்மா தொந்தரவு அதிகரித்திருக்கக் கூடும்.

    மெள்ள வாங்க..

    ReplyDelete
    Replies
    1. இப்போப் பரவாயில்லை ஶ்ரீராம், கடந்த இரு நாட்களாக உடல்நிலையில் முன்னேற்றம் என்னால் உணர முடிந்தது.

      Delete
  2. உடல்நலம் முக்கியமில்லையா? கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, ரொம்ப நாட்களாய்க் காணோமே! உடம்பு இப்போப் பரவாயில்லை. நன்றி.

      Delete
  3. உடல்நிலை முக்கியம் அம்மா... பதிவுகள் எல்லாம் அப்புறம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, உடம்பு சரியாகிக் கொண்டிருக்கிறது, மெதுவாய்த் தான் பதிவுகள் போடுவேன். :)

      Delete
  4. உங்களைப் பேச விடாமல் செய்ததே. இனிமேலாவது சரியாகட்டும்.கண்ணன் என்றதும் ஓடி வந்தேன்.பத்திரமாக இருங்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. இப்போ எவ்வளவோ பரவாயில்லை. கண்ணன் கதை இன்னும் எழுத ஆரம்பிக்கலை. நாளைக்குள் ஆரம்பிக்கலாம். :)

      Delete
  5. கண்ணன் செயலால் உடல் நலம் சீராகி பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், உடல்நலம் பரவாயில்லை.

      Delete
  6. ”உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் “ என்று எழுதத் துவங்கி இருக்கிறேன். நம் மீது நம்பிக்கை வரவேண்டும். சமாளிக்கத் திடம் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ ஜிஎம்பி சார், இன்று வரை என்னைக் காப்பாற்றி வருவது என் நம்பிக்கையும் திடமும் தான் ஐயா! :)

      Delete