எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 05, 2015

அம்மாமண்டபமும், என் அனுபவங்களும்!

ஒரு வாரமாய் அம்மாமண்டபம் ஆஞ்சியைப் போய்ப் பார்த்துட்டு வரேன். அங்கே இருக்கும் பட்டாசாரியார் வரவங்க கிட்டே எல்லாம் பணம் கேட்கிறார்.   அந்த ஆஞ்சி தூணில் இருக்கும் ஒரு சிற்பமே.  யாரோ வழிபட ஆரம்பித்து இப்போது ஒரே கூட்டம். அங்கே நடக்கும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆஞ்சி.  சமயத்தில் அவர் இதழ்க்கடையில் தெரியும் மெல்லிய சிரிப்பு அதைக் கண்டு தானோனு எனக்குத் தோணும்

உள்ளேவே நுழைய முடியாதபடிக்குக் கூட்டம் சில நாட்கள் நெரிசலாக இருக்கும்.  இந்த அழகில் நம்ம குடியிருப்பு வளாகத்திலிருந்து மூன்றாவது கட்டிடத்தை ஆளும் கட்சியின் தேர்தல் அலுவலகம் ஆக்கி இருக்காங்க.  நம்ம குடியிருப்பு வளாகத்தின் வாசலில் நோ பார்க்கிங் எனப் பெரிய பானர் தொங்குகிறது.  இவண் ஶ்ரீரங்கம் காவல் துறைனு எல்லாம் போட்டிருக்கு.  ஆனால் தினம் ஒரு ஐம்பது வண்டிக்குக் குறையாமல் நெருக்கி அடிச்சுட்டு நிற்கும். எல்லாம் கரை வேட்டிக்காரங்க வண்டி தான்.

சில சமயம் கூட்டமாக அவங்க அம்மா மண்டபத்துக்குள்ளேயும் வருவாங்க.  எதுக்குனு தெரியலை.   நடைமேடையில் அவங்க ஆக்கிரமிப்பு என்றால் நடைமேடையை ஒட்டின சாலைப்பகுதியில் வரிசையாக கார்கள், இரு சக்கர வண்டிகள் நிறுத்தி இருக்கும்.  சில சமயம் இடைவெளியே இருக்காது. நாம கீழே இறங்கிச் சாலையில் தான் நடக்கணும்.  சாலையின் எதிர்ப்பக்கமும் அதே போல் வண்டிகள் வரிசை கட்டும்.  ஶ்ரீரங்கம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பேருந்துகள், சிற்றுந்துகள் என அங்கேயும் வரிசையாகக் காணமுடியும்.  நாம நடு சாலையில் தான் நடக்கணும்.  நாம போகும் போதுதான் ரயில் நிலையத்திலிருந்து வரும் மாநரகப் பேருந்து (எ.பி. இல்லை) அம்மாமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்.

இது பத்தாதுன்னு எதிரே திருச்சி செல்லும் மாநரகப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என நிற்கும். அந்தப் பக்கம் நடைமேடையில் குளிரூட்டப்பட்ட நிழற்குடை வேறு இருக்கு.  ஆனாலும் மக்கள் வெளியே நின்னால் தான் பேருந்தில் ஏற முடியும்.  ஏனெனில் இந்தத் தனியார் பேருந்துகள் நாம ஏறும்போதே விசில் கொடுப்பாங்க. ஒரு கால் வண்டியின் முதல்படியிலும் இன்னொரு கால் தரையிலும் இருக்கும்.  ஒரு முறை பேருந்தில் ஏறும்போது மல்லாக்க விழத் தெரிந்தேன். பிழைத்தேன். அதுக்கப்புறமாப் பேருந்துப் பயணமே வைச்சுக்கறது இல்லை.

அம்மா மண்டபம் நுழையும் வழியில் இருக்கும் சத்திரத்தில் கல்யாணம் நடந்தால் கேட்கவே வேண்டாம்.  எல்லா வண்டிகளும் அம்மா மண்டபம் நுழைவாயிலை மறைத்துக் கொண்டு நிற்கும். சத்திர வாசலில் ஒரே கூட்டமாக இருக்கும்.  எல்லாத்தையும் தாண்டித் தான் உள்ளே போகணும். கூடியவரை மாநரகாட்சி அம்மாமண்டபத்தைச் சுத்தமாக வைத்திருக்கவே முயல்கிறது.  ஆனால் பொது ஜனங்களின் ஒத்துழைப்பு இல்லை.


அம்மா மண்டபத்தில் தினம் வரும் யானையார் அங்கேயே சோகமாக நின்று கொண்டிருப்பார். சில நாட்களுக்கு முன்னர் தான் அதன் ஒரு பாகனைப் பற்றிச் செய்தி தினசரிகளில் வந்தது.  என்றாலும் அந்த ஆனையார் இளைத்துத் துரும்பாகவே இருக்கார். பார்த்தாலே பாவமாக இருக்கும்.  இதுக்கு நடுவிலே அங்கே முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய வரும் பயணிகள், உள்ளூர் வாசிகள் கும்பல்.  கடைகளுக்கெல்லாம் நல்ல வியாபாரம். இரு பக்கமும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள்.  அவர்களைப் படம் எடுக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி.  எதற்குப் படம் எடுக்கிறாங்கனு தெரியாமலே அவர்களிடம் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள் யாரானும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.  பணம் தான் வேணும்.  அதுவும் குறைந்தது 2 ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்.  ஒரு ரூபாயெல்லாம் போட்டுவிட்டு வர முடியாது.

பல பெண்களின் சேலைகள் சுத்தமாகவும், விலை 500 ரூபாய்க்குக் குறையாமலும் இருக்கிறது.  எப்படிக் கட்டுபடி ஆகிறது என நினைத்துக் கொள்வேன்.  இரண்டு நாட்கள் முன்னர் ஒருத்தர் ஒரு பை நிறைய உணவுப் பொட்டலங்கள் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கொடுத்தார்.  சிலர் தான் வாங்கிக் கொண்டனர். பலரும் மறுத்துவிட்டனர். ஆஞ்சிக்கு அர்ச்சனை செய்யும் பட்டாசாரியார் செய்யும் பிரசாதம் அங்கே சிலரால் வாங்கிக் கொள்ளப் படுகிறது.  பட்டாசாரியார் ஆஞ்சி இருக்கும் தூணின் கீழேயே  அடுப்பு வைத்துக் கொண்டு சமைக்கிறார் அந்த பட்டாசாரியார்.  பொங்கல், சுண்டல், தயிர்சாதம், பாயசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியன மாற்றி மாற்றி வரும் பிரசாதங்கள்.

ஆஞ்சியைத் தவிர உள்ளே பிள்ளையார், காவிரி அம்மன், சிவன், பார்வதி, நவகிரஹங்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆஞ்சியைப் போய்ப் பார்த்துட்டு வரதுக்கே அரை மணி ஆயிடறதாலே அந்தப் பக்கம் போக முடியலை.  ஶ்ரீரங்கம் வந்த புதுசிலே சிவன் கோயில் பிரதோஷம் வழிபாட்டுக்குப் போயிட்டு இருந்தோம்.  அப்புறமா அதுவும் முடியலை.  ஆஞ்சியை மட்டும் ஏதோ போய்ப் பார்க்க முடியுதே!  அதே பெரிய விஷயம்!

ஒரு நாள் காமிரா அல்லது அலைபேசி எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்துட்டு வரணும். எங்கே காலை வேளையில் வீட்டு வேலைகள் இருப்பதால் சாவகாசமாகப் போக முடியறதில்லை. :) நீங்க எப்போவும் இப்படித் தான் சொல்றீங்கனு வெங்கட் நாகராஜ் இதைப் படிச்சால் சிரிப்பார். ஹிஹிஹி, முக்கியமா எனக்குக் கிளம்பறச்சே காமிராவெல்லாம் நினைவிலேயே வரதில்லை.  அலைபேசியும் எடுத்துட்டுப் போக நினைப்பு வரதில்லை. வெளிஊருக்குப் போறச்சே கொண்டு போறதே பெரிய விஷயம்! :)))))

16 comments:

 1. அம்மா மண்டபம் நீங்கள் சொல்லும் இடத்துக்குத்தான் அன்று நாங்கள் அதிகாலை வந்திருந்தோம். வரும் வழியில் ஒரு ஆஞ்சனேயர் பார்த்தோம். மண்டபத்துக்குள் ஒரு ஆஞ்சி இருக்காரா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம், மண்டபத்துள் நுழைந்ததுமே நடுவில் இருக்கும் மேடை தான் பெருமாள் வந்து தங்குமிடம். அந்த மேடைக்கு இடப்பக்கமாக ஒரு தூணில் ஆஞ்சி இருக்கார். வணக்கம் சொல்லிக் கொண்டு கை கூப்பி நின்று கொண்டிருப்பார்.

   Delete
  2. நீங்க பார்த்த ஆஞ்சி எங்கே இருக்கார் ஶ்ரீராம்? நேத்தே கேட்க நினைச்சு மறந்துடுத்து. :)

   Delete
  3. ம்ம்.... வழியில் இருந்தது.... எப்படிச் சொல்வது?

   Delete
 2. ஓ....ஆஞ்சின்னா என்னன்னு யோசிச்சேன்....ஆஞ்சநேயரோட செல்லப்பேரா!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா பாலு, இப்படி எல்லோருக்கும் செல்லப் பெயர் வைக்கிறது உண்டு. :)))) அதிலும் ஆஞ்சிக்குக் கட்டாயம் செல்லப் பெயர் அழைப்புத் தான். :)

   Delete
 3. ஆஞ்சி என்ற சொல் பிரயோகம் கொஞ்சம் யோசிக்க வைத்தது! செல்போன் கேமரா இருந்தாலும் எனக்கும் புகைப்படம் எடுக்க தோணுவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், நான் உள்ளூர்க் கோயில்கள் செல்கையில் எடுத்துட்டே போவதில்லை. சில சமயம் ஏதாவது தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்தால் அப்போக் கைபேசி மட்டும் எடுத்துட்டுப் போவேன். அதுவும் அபூர்வம் தான்! :)

   Delete
 4. யானை பாவம்...

  காமிரா மறப்பது சகஜம் தான்... ஆனால் கைபேசி...!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், டிடி, யானை பாவம் தான். காமிரா என்ன கை பேசியையும் ஞாபகமா மறந்து வைப்போமே! :))

   Delete
 5. காமிரா, அலைபேசி எதுவுமே வேண்டம் நீங்க எழுதுவதே நாங்க நேரில் பார்பது மாதிரி இருக்கு ,மாமி.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ராம்வி. பாராட்டுக்கு ரொம்பவே நன்றி.

   Delete
 6. தெற்கு வாசலிலிருந்து அம்மா மண்டபம் போகும் வழியில் தான் என் அக்காவின் வீடும் இருக்கிறது. நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் அங்கிருந்து உங்கள் வீட்டிற்கு நடந்து வந்துவிடலாம் போலிருக்கு.
  உங்களைப் போலத்தான் நானும். அலைபேசி எடுத்துப் போனாலும் போட்டோ எடுக்க மறந்து விடும். தனியாகப் போகும்போது நிச்சயம் அலைபேசி எடுத்துக் கொண்டு போவேன். ஒரு பாதுகாப்புக்குத்தான்.
  அம்மா மண்டப அனுபவம் படிக்க சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. தனியாப் போனால் கூட அலைபேசி எடுத்துட்டுப் போக நினைப்பு வரதில்லை ரஞ்சனி! :))) எங்காவது ஊர்களுக்குச் சென்றால் தான் இப்போல்லாம் கட்டாயமாய் எடுத்துக்கறோம். :) உங்க அக்கா வீடு அம்மாமண்டபம் ரோடிலே தான் இருக்கா? ஶ்ரீரங்கம் வரச்சே கட்டாயமாய் வீட்டுக்கு வரீங்க! :)

   Delete
 7. //நீங்க எப்போவும் இப்படித் தான் சொல்றீங்கனு வெங்கட் நாகராஜ் இதைப் படிச்சால் சிரிப்பார்.//

  ஆஹா.... இதை எழுதணும்னு உங்களுக்கு நினைவு இருந்ததே! :)))

  தினம் தினம் செல்லும் பாதைகளில் இப்படி சில விஷயங்களை படம் எடுக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் எடுக்க முடிவதில்லை! அலுவலகம் செல்லும்போது கேமரா கொண்டு போக முடியாதே! அலைபேசியிலும் கேமரா நோ நோ!

  அம்மா மண்டபம் - என்னதான் மாநகராட்சி சுத்தமாக வைக்க நினைத்தாலும் வரும் மக்கள் அதை அசுத்தம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துவது போலத் தோன்றும்.....

  ReplyDelete
  Replies
  1. //ஆஹா.... இதை எழுதணும்னு உங்களுக்கு நினைவு இருந்ததே! :))) //

   நீங்க வேறே வெங்கட், எனக்குப் போன ஜன்மத்து ஞாபகமெல்லாம் வரதா ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்காராக்கும். :)))) அலைபேசியிலே காமிரா இருக்கு. வீடியோ வசதியும் இருக்கிறதை இப்போ சமீபத்தில் நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனப்போதான் தற்செயலாக் கண்டு பிடிச்சேன். கோபுரத்தை எடுக்கிறச்சே எதையோ அழுத்தி இருக்கேன். (என்னனு இனிமேல் கண்டு பிடிக்கணும்.) படம் அசைபடமாக வந்திருந்தது. :)))) அதோட அலைபேசியிலே நீலப்பல், இணைய இணைப்புக்கான வசதி, ஊரை விட்டு வெளி ஊர் செல்லும்போது சாலைகளைக் கண்டு பிடிக்கும் வசதினு (ஜிபிஆர் எஸ்) னு இருக்கு. எதையும் பயன்படுத்தறதில்லை. காமிரா மட்டும் அவ்வப்போது பயன்படுத்துவேன்!

   Delete