எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 24, 2015

நேற்றைய சம்பவங்களின் தொகுப்பு! :)

நேற்றைக்குப் போன பூணூல் கல்யாணத்தில் பூணூல் போட்டுக் கொண்ட பையருக்கு வயது ஏழு தான் நடக்கிறது.  விரும்பி உச்சிக் குடுமி வைத்துக் கொண்டார்.  பார்க்கவே அழகாக இருந்தது. வழக்கம் போல் படம் எடுக்கும் எண்ணம் இல்லாததால் காமிராவெல்லாம் எடுத்துப் போகலை! (வழக்கமே இல்லைனு யாருப்பா கூவறது?  பயணங்களுக்கு எல்லாம் கொண்டு போவேனே!) ஆனால் இந்தப் பையர் பூணூல் தரித்துக் கொண்ட அழகையும் மந்திரங்களை விடாமல் தப்பு இல்லாமல் சொன்ன அழகையும் பார்க்கையில் படம் எடுக்கத் தோன்றியது.

சத்திரம் அரதப் பழசு. சுதீந்திரர் மடத்தைச் சேர்ந்தது என்கிறார்கள்.  சத்திரமும் அவர் காலத்திலேயே கட்டி இருக்கணும். கல் தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நின்றன. கூரையைத் தாங்கவும் கல் தூண்களே!  தற்கால முறைப்படினு பார்த்தால் இந்திய முறைப்படியான கழிவறை ஒன்றே.  அதுவும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. :(  மாடியில் அந்தக்கால முறைப்படி ஆங்காங்கே படி ஏறி இறங்கிப் போகும்படியான மொட்டை மாடி என்பதோடு, கூண்டுகளும் எழுப்பப் பட்டிருந்தன.  ஶ்ரீராம் வந்தப்போ கலந்து கொண்ட கல்யாணச் சத்திரமே சென்னை மாதிரி இல்லை; பழமை என்று சொல்லி இருந்தார். இதைப் பார்த்தால் ராஜா காலத்துக் கட்டிடம்னு கண்ணை மூடிண்டு சொல்லலாம். முதலிலேயே சத்திரம் இப்படினு தெரிஞ்சிருந்தால் காமிராவிலே படம் எடுத்திருக்கலாம். இப்படியும் கட்டிடக் கலை இருக்குனு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். இடித்தால் கூட இடியுமானு சந்தேகமா இருக்கு.

சாப்பாடெல்லாம் மாடியிலே.  மாடி ஏறி இறங்கத் தான் முடியலைனு பார்த்தாக் கை அலம்பற குழாய் இருக்கும் இடமும் சாப்பாட்டுக் கூடத்திலிருந்து சில, பல படிகள் கீழிறங்கி இன்னொரு மாடிக்குப் போகணும். அங்கே வெட்ட வெளி.  காலை டிஃபன் போது ஒண்ணும் தெரியலை. மத்தியானம் சாப்பாடு முடிஞ்சுக் கை அலம்ப முடியலை.  கால் கொப்புளிச்சுடும் போலச் சூடு தாங்கவில்லை.  தீமிதி போல் உஷ்ணம்!  சாப்பிட்டிருக்கவே வேண்டாமோனு நினைச்சேன். :))) மற்றபடி கட்டிடக் கலையை ரசித்தேன். பூணூல் போட்டுக் கொண்ட பையரையும் ரசித்தேன். பூணூல் பையரின் சில படங்கள் செல்லினது போடறேன்.  அங்கிருந்த குறைந்த வெளிச்சத்தில் சரியா விழலை.  என்றாலும் போட்டே தீரணும்னு ஒரு ஆசை. நீங்களும் பார்த்தே தீரணும். :)))
பூணூல் பையர் தான் மொட்டைத் தலையோடு காணப்படுகிறார்.  முகம் எல்லாம் தெளிவாய்க் காட்ட வேண்டாம்னு தான் கொஞ்சம் தள்ளி இருந்தே எடுத்தேன். அனுமதி எல்லாம் வாங்கலை. அவங்களுக்குத் தெரியாது நான் பகிரும் விஷயம்.  ஆகவே தான் தெளிவில்லாத படம். :)))  ஒரு ஆசையில் இதை மட்டும் போட்டிருக்கேன். மற்றப் படங்களைப் போடப் போறதில்லை. 
*****************


தினம் பார்க்கப் போகும் ஆஞ்சிக்கு எதிரே ஶ்ரீராமர் இருக்கிறார்.  இந்த ஆஞ்சி அவரைப் பார்த்துத் தான் கை கூப்பி இருக்கார் என்றாலும் ஶ்ரீராமரை விடக் கொஞ்சம் உயரமாக இருக்கார்.  இன்னிக்கு ஆஞ்சியைப் பார்க்கப் போனப்போ ராமரையும் படம் எடுத்தேன். செல்லினது தான். 

அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் இருட்டாகத் தான் இருக்கும்.  ஆகவே வந்தவரை எடுத்திருக்கேன்.  நாலுநாளாக் காணாமல் போயிருந்த தும்பிக்கை நண்பர் இன்னிக்கு வந்துட்டார். மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்தது. 

14 comments:

 1. அடுத்தமுறை அங்கு வரும்போது உங்கள் கேமிராவைத் தூக்கிக் கொண்டு வந்துவிடப் போகிறேன்! :))))

  நான் சென்ற சத்திரத்தில் மாடி அறைகளும், கழிவறைகளும் நன்றாகவே இருந்தன.

  என் (ஒன்று விட்ட) தம்பி ஒருத்தன் இருக்கிறான். கோபாலன் என்று பெயர். அனைத்துவகை மந்திரங்களையும் கற்று வைத்திருக்கிறான். ருத்ரம், சமகம் முதல் பூணூல், கல்யாண மந்திரங்கள் வரை எல்லாவற்றையும் சொல்வான். நடத்தி வைப்பவர் அவனை ஏமாற்றி விட முடியாது! :))))

  நான் சொன்ன ஆஞ்சி கோவில் பார்த்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்ன ஆஞ்சியை இன்னும் பார்க்கவில்லை. அந்தப் பக்கம் போகவே வாய்ப்பில்லை. அதான்! போனால் பார்க்கிறேன். :))))
   எங்க வீட்டிலும் என் சொந்த அண்ணாவின் பையரும், பெரியப்பா பிள்ளை(அண்ணா)யின் பையரும் அத்யயனம் செய்தவர்கள். என் சொந்த அண்ணாவின் பையர் இப்போவும் ஆண்டு நிறைவு, கிரஹப்ரவேசம், சஷ்டி அப்த பூர்த்தி போன்ற விசேஷங்களுக்கு அவ்வப்போது நண்பர்களுக்காகச் சென்று நடத்தித் தருகிறார். இவர் நெதர்லான்டிஸில் கணக்கில் முனைவர் பட்டம் பெற்றவர். (டாக்டரேட்) அதன் பின்னர் பாரிஸிலும் பட்டம் பெற்றார்னு நினைக்கிறேன். இந்தியாவில் தான் இருக்கணும்னு இப்போ ஹைதராபாதில் டிசிஎஸ்ஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் மனைவியும் முனைவர் பட்டம் பெற்றவரே! AIIMS--இல் வேலை கிடைத்தும் கணவரை விட்டுப் பிரிந்திருக்கணும்னு வேலையை ஒத்துக்கலை! :)))) எங்களை மாதிரி பழம்பஞ்சாங்கம் அவங்களும். :))))

   Delete
  2. அட, மறந்துட்டேனே, காமிராவை எல்லாம் ஒளிச்சு வைச்சுடுவேனே! என்ன பண்ணுவீங்க?

   Delete
 2. குட்டிக்கண்ணனுக்கு மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வா.தி. அங்கே உங்களைத் தான் நினைத்துக் கொண்டோம். ஆசிகளுக்கு நன்றி.

   Delete
 3. குட்டிப் பையனுக்கு ஆசிகள்....

  ஸ்ரீராம் - காமெரா எடுத்துக் கொள்வதற்கு முன்னால் நான் எடுத்துக்கொள்ளவா!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி, வெங்கட், நீங்க ஏற்கெனவே ஒரு முறை அந்தக் காமிராவைக் கையில் எடுத்திருக்கீங்க! நினைவில் இருக்கோ, இல்லையோ தெரியலை! :)))) அதனால் அப்புறமாக் கிடையாது. :)

   Delete
 4. இந்தக் காலத்தில் விரும்பி மொட்டை குடுமி வைக்க விரும்பும் பையனா.?ஆச்சரியம்தான்....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பிசார், இந்தப் பையரின் அப்பாவும் கனரா வங்கியில் அதிகாரியாக இருந்தாலும் வேத அத்யயனம் பண்ணினதை மறக்காமல் இன்னும் பழக்கத்தில் வைத்திருக்கார். பிள்ளையையும் அப்படியே கொண்டு வருகிறார். குட்டிப் பையன் மிக அழகாக ருத்ரம், சமகம், லலிதா சஹஸ்ரநாமம் எல்லாம் சொல்லுகிறான்.

   Delete
 5. புதிய தலைமுறை பழைய சம்பிரதாயங்களை பின்பற்றுவது ஆச்சர்யம்தான்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், பெற்றோரின் வளர்ப்பில் இருக்கு இல்லையா?

   Delete
  2. தந்தை வழித் தாத்தாக்களில் ஒருத்தர் பரம வைதிகம் தான்! அதுவும் காரணமாக இருக்கலாம்.

   Delete
 6. செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete