எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 23, 2015

அரிசி சாகுபடி செய்யலாம் வாங்க!

அரிசி நம் நாட்டில் கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளாக உண்ணப்பட்டு வரும் உணவு. பலருக்கு முக்கியமான உணவே அரிசிச் சோறு தான். எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலகட்டத்திலேயே அரிசி நம் முக்கிய உணவாக ஆகி இருந்திருக்கிறது.  அஸ்ஸாம், சீனா, திபெத் ஆகிய இடங்களில் தோன்றி இருக்கலாமோ என்னும் ஓர் கருத்து இருந்தாலும் இதைக் குறித்து வேதங்களில் கூடச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிய வருகிறது.  சங்க இலக்கியங்களில் நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் என்றும்புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அரிசியைச் சேமிக்கப் பத்தாயங்கள், நெல் குதிர்கள், களஞ்சியங்கள் மண் பானைகள் போன்றவற்றில் பத்திரப்படுத்தி வந்தனர். செங்கற்களால் கட்டப்பட்டப் பெரிய பெரிய களஞ்சியங்களும் இருந்திருக்கின்றன. இதைக் குறித்த ஓர் படம் நாம் ஏற்கெனவே ஶ்ரீரங்கம் கோயிலில் இருப்பதைப் பார்த்தோம்.

நெல் குதிர் க்கான பட முடிவு
நெல் குதிர் க்கான பட முடிவு

இவ்வளவெல்லாம் பிரசித்தி பெற்ற அரிசிச் சோறு இன்று நாம் அனைவரும் உண்ண முடியாத ஓர் உணவாக மாறி வருகிறது. அரிசிச் சோறு  ஆபத்தானது என்னும் எண்ணம் நம் மனங்களிலே விதைக்கப்பட்டு வருகிறது. அரிசிச் சோற்றை உண்பதால் தான் நாம் தொந்தியும், தொப்பையுமாக குண்டாக ஆகி விடுகிறோம் என்று பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அரிசிச் சோற்றினாலே குண்டர்கள் உதயம் என்றால் நம் நாட்டிலே கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் குண்டர்கள் பரம்பரை தான் தோன்றி இருக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களோ, போர்க்களத்தில்  பல போர்களில் ஈடுபட்ட வீரர்களோ குண்டாக இருந்ததாகச் சரித்திரம் பேசவில்லை.  அந்தக் காலத்து மக்களைக் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் சித்திரங்கள், சிற்பங்கள் தீட்டும், செதுக்கும் ஓவியர்களோ, சிற்பிகளோ யாரேனும் ஒருவரை குண்டாகத் தொந்தி, தொப்பையுடன் வரைந்தோ அல்லது செதுக்கியோ காட்டி இருக்கின்றனரா? இல்லையே!

சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு அப்போது இல்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நம் நாட்டு மருத்துவ முறைகளில் முக்கியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவு குறித்தும் சொல்லப்பட்டே இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பீடித்துத் துன்பப் பட்டதாகத் தெரியவில்லை. சமீப காலங்களில் தான் இவை அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் நாம் முழுதும் தீட்டப்பட்ட அரிசியை உண்பது தான் காரணமே ஒழிய அரிசியே காரணம் அல்ல. அரிசிச் சோற்றை தட்டில் நிறையக் கொட்டிக்கொண்டு நாம் உண்பதும் இல்லை. அதோடு வெறும் சோற்றை மட்டும் உண்பது இல்லை. அதோடு பருப்பு, காய்கள் சேர்த்த சாம்பாரோ, அல்லது ரசமோ, மோரோ ஊற்றித் தான் சாப்பிடுகிறோம். கூடவே துணைக்குக் காய்களும் இருக்கின்றன.  நம் உடலுக்கும் மரபுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ற இந்த அரிசி உணவு அனைவருக்கும் கெடுதலான ஒன்று எனப் பிரசாரம் செய்யப்படுகிறது. 

அரிசிச் சோற்றுடன் சேர்க்கும் குழம்புப் பருப்பின் புரதம், காய்களின் சத்துக்கள், அனைத்தும் நம் சிறுகுடலால் உறிஞ்சி எடுக்கப்பட்டுச் சத்தாக மாறி நமக்கு நடமாடும் சக்தியைக் கொடுக்கிறது. இத்தகைய திறன்படைத்த அரிசியை இன்று ஒதுக்குவது சரியா?


தொடரும்.


ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் எடுக்கும்போதே 170க்குப் போயிடுது. அதனால் இன்றிலிருந்து சிறு தானியங்களுக்கு மாறி இருக்கோம். காலை குதிரைவாலி அரிசிப் பொங்கல்! பிரமாதம் போங்க! தொட்டுக்க கத்திரி, வெங்காயம் போட்ட பருப்புச் சேர்க்காத கொத்சு! மதியம் கைக்குத்தல் அரிசிச் சாதம், வடிக்கணும் போல. நான் குக்கரில் வைத்தேன். முதலில் குக்கரை அணைச்சதும் சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் சாதமே ஆகலை! :) அப்புறமா திரும்பக் குக்கரை வைச்சு கிட்டத்தட்டப் பத்து விசில் கொடுத்ததும் சாதம் ஆகி இருந்தது. புடலங்காய்ப் பொரிச்ச குழம்பு, எலுமிச்சை ரசம், நாரத்தங்காய் காரம் போட்ட ஊறுகாய்,  கத்திரிக்காய்க் கறி, மோர். படம் எடுக்கலை. காலையில் அவசரத்தில் நினைவில் வரலை. இப்போவும் காக்காய்க்கு இந்தச் சாதம் பிடிக்குமானு கவலைப் பட்டுக்கொண்டே போய்க் காக்காய்க்குச் சாதம் வைச்சுட்டு வரும்போது படம் எடுக்க மறந்துட்டேன். ராத்திரி கம்பு அடை! முடிஞ்சால் அதைப் படம் எடுத்துடறேன். :) சாப்பிடாமல் காத்திருங்க எல்லோரும்!

20 comments:

 1. தேவையான பதிவுதான். என் மகனும் அவன் சற்றே பருமனாயிருப்பதற்கு அரிசிச் சோறே காரணம் (அவன் அலுவலகத்தில் சொன்னார்களாம். நாம் சொல்வதை நம்புவதில்லை) என்று அதை அவாய்ட் செய்கிறான்.

  மாமா நடைப்பயிற்சி செய்வதில்லையா? உங்கள் மொழி.மா மூணு ரௌண்ட் வந்தாலே போதுமே...

  எங்கள் பக்கம் காணோமே, ஏன்?

  ReplyDelete
  Replies
  1. இதைக்குறித்து இன்னமும் தகவல்கள் திரட்டி வருகிறேன். இந்த பேலியோ பதிவுகளை எல்லாம் பார்த்ததில்/படித்ததில் இருந்தே இதைக் குறித்து எழுத ஆவல். இப்போத் தான் நேரம் வாய்த்தது.

   Delete
  2. கை வலி இரண்டு நாட்களாக! எப்படினே தெரியாமல் முழங்கைக்கு அருகே ரத்தம் கட்டிக் கொண்டு நீலநிறமாகக் கன்னிப் போயிருக்கு! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. அதோடு தூக்கம் சரியில்லை! :) அது தனிக்கதை! :)

   Delete
 2. மொ. மா என்பது மொழி மா ஆகி விட்டது. சதிகார மொபைல்! மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, மொபைல் கூட சதி பண்ணுதா! :)

   Delete
 3. நல்ல தொரு விழிப்புணர்வு பதிவை தொடங்கி இருக்கிறீர்கள்! அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், நம்நாட்டுப் பாரம்பரிய உணவு முறையையே நாம் மறந்து வருகிறோம். :(

   Delete
 4. உடல் உழைப்பு அறவே இல்லை. கொஞ்சதூரம்கூட நடக்கமாட்டேங்கறோம். இப்படி இருந்துக்கிட்டு அரிசியைக் குறை சொல்றது எப்படி? கொஞ்சம் கூட அரிசி சாப்பிடாத ஆளுங்க மட்டும் ஒல்லியாவா இருக்காங்க? எனக்குத்தெரிஞ்சு அரிசியை மட்டும் சாப்பிட்டு, சனிக்கிழமை சாகப்போறவங்க மாதிரி (எல்லாம் ஒரு பழமொழிதான்) இருந்த ஆட்களையும் பார்த்துருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. சரிதான் துளசி, நீங்க சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன். முழுக்க முழுக்க அரிசியையே உண்ணும் என் மாமியார், உண்ட என் மாமனார் ஆகியோருக்கு இந்தச் சர்க்கரை நோய் என்பது அண்டியதே இல்லை. என் மாமியார் இப்போதும் காஃபிக்குக் கரண்டியில் தான் சர்க்கரை போட்டுக் குடிப்பார்!

   Delete
 5. நீரிழிவு நோய்க்கு நடை ஒரு நல்ல கட்டுப்படுத்ட்க்ஹும் மருந்து. நான் திருச்சி குடீருப்பில் இருந்த போது நண்பர் ஒருவர் ஒரு நாளைக்குச் சுமார் ஆறு கி.மீ. நடப்பார். இண் னோரு நண்பர் இன்னதுதான் என்றில்லாமல் கிடைக்கும் எல்லாவற்றையும் கொறித்துக் கொ ண்டே இருப்பார். போட்டிக் கதை எழுதத் துவங்கி விட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு நடைப்பயிற்சி செய்து வருகிறோம் ஐயா. போட்டிக்கதை எல்லாம் நான் எழுதவில்லை. நேரமும் இல்லை. யோசிக்கவும் முடியலை! :)

   Delete
 6. குதிரைவாலி குழியப்பம் பாக்கலியா? கிச்சடி,தோசை,உப்புமா எல்லாமே நன்றாக இருக்கு. சிறுதானி்யங்கள் எல்லாம் சேர்த்து வறுத்தரைத்து வைத்துக் கொண்டு கஞ்சி அதுதான் எனக்கு இரண்டுநேரம் கை கொடுக்கிறது. கம்பு தோசைஅடைராத்ரிக்கா? ~ ~ஒரேயடியாக அரிசியைக் குறைத்தால் அலுப்பு வந்து விடும். கொஞ்சம் கூடவே அரிசியையும் கைகாட்டிக்கொண்டு வாருங்கள். அப்புறம் எல்லாமே அரிசிதான்னு சொல்லி விடலாம். எப்படி.?

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலை அம்மா, பார்க்கிறேன். ஆனால் வேறே எங்கோ படித்திருப்பேனோ? இன்று சோளத்தில் உப்புமா செய்தேன். முதலில் அலுமினியம் சட்டியிலேயே வேகப் போட்டேன். வேக நேரம் எடுத்தது. அப்புறமா அதைக் குக்கரில் மாற்றி வேக வைத்து எடுத்தேன். :) கொஞ்சம் மன அழுத்தம் எகிறிவிட்டது! :)

   Delete
 7. பழங்காலத்தில் கடுமையான உடல் உழைப்பு இருந்தது. அதோடு அவர்கள் ஒரு நேரம்தான் அரிசி சோறு சாப்பிட்டார்கள். இன்று நம்மிடம் உடலுழைப்பு இல்லை. அரிசியைத்தான் மூன்று நேரமும் இட்லி, சாதம், தோசை என்று வடிவத்தை மாற்றி சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். உடல் குண்டானதற்கு நம் உணவுப் பழக்கமும் உழைப்பின்மையுமே காரணம்.

  ReplyDelete
  Replies
  1. @செந்தில்குமார், ஒருவேளை அரிசிச் சோறா? சரியாப் போச்சு போங்க. காலங்கார்த்தாலே எல்லோருக்குமே பழைய சோறு சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது. ரொம்ப ஆசாரமானவங்க தவிர மத்தவங்க கட்டாயமாய்ப் பழைய சோறு சாப்பிடுவாங்க. இரவிலும் இட்லி, தோசை, அடை எனச் சாப்பிட்டாலும் கடைசியில் ஒரு கைப்பிடி மோர் சாதம் உண்ணும் வழக்கம் இன்றளவும் பல வீடுகளில் உண்டு. :)

   Delete
  2. உழைப்பின்மை காரணம் என்பது உண்மை. அதற்காக நம் மரபணுவிலேயே புதைந்திருக்கும் அரிசிச் சோற்றின் ருசியை விட முடியுமா சொல்லுங்க! :)))

   Delete
 8. வணக்கம்

  நல்லவிளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. சிறப்பான விளக்கம். அரிசி சாப்பிடுவதால் தான் உடல் பருத்து விடுகிறது என்று சொல்பவர்கள், கோதுமை உணவுகளை சாப்பிடும் வடக்கில் இருப்பவர்களை பார்க்க வேண்டும்.... இங்கே இருக்கும் அனைவருமே ஒல்லியா இருக்காங்களா என்ன! கோதுமை ரொட்டி மட்டுமே சாப்பிடும் இங்கே இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உண்டே!

  நல்ல பகிர்வு. தொடர்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோதுமை சாப்பிட்டாலும் குண்டாக இருப்பவர்கள் உண்டு. அதோடு அங்கே வெண்ணெய், நெய், க்ரீம், பால், தயிர், பனீர் என நிறையச் சாப்பிடுவாங்க. பனீரைத் தவிர மற்றவற்றில் கொழுப்புச் சத்து நிறைய இருக்குமே! குஜராத்தில் சப்ஜிகளில் எண்ணெய் மிதக்கும். ஊறுகாய் கேட்கவே வேண்டாம். தேநீரில் சர்க்கரை நிறையச் சேர்ப்பாங்க! :)

   Delete