எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 16, 2015

பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில் இருக்கு?

பிள்ளளையார் க்கான பட முடிவுஎல்லோரும் நம்ம நண்பரை அவங்க நண்பர்னு சொல்லிக்கிறாங்கப்பா! அநியாயமா இல்லையோ! நாளைக்கு அவர் வராரே நம்ம வீட்டுக்கு! இன்னிக்கே பூக்கள் எல்லாம் எக்கச்சக்க விலை! கதம்பம் உதிரிப்பூக்கள் வாங்கித் தொடுக்கலாம்னா வாங்கறாப்போல் இல்லை. நூறு கிராம் மல்லிகைப் பூ 40 ரூபாய்! இத்தனைக்கும் பூ வரத்து இருக்கு! இன்னிக்கு ஒரு நாள் தானே சம்பாதிக்கலாம்னு ஏகத்துக்கு விலையை ஏத்திட்டாங்க. பிள்ளையாரைக்  களிமண் கொண்டு அச்சில் போட்டுச் செய்து கொடுப்பவங்களே இங்கே இல்லையாம். எல்லாம் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பிள்ளையார்கள்.

போன வருஷம் எல்லாம் பிள்ளையார் வாங்க வேண்டாம்னு ரங்க்ஸ் சொல்லிட்டார். எனக்கு என்னமோ வருத்தமா இருந்தது.  இந்த வருஷம் சரினு வாங்கிண்டு வந்தார். 50 ரூபாய்க்குச் சின்னதாய்ப் பிள்ளையார். அவருக்குப் பவுடர் அடிச்சிருக்காங்க. கேட்டால் இங்கே எல்லாப் பிள்ளையார்களுக்கும் பவுடர் அடிச்சுத் தான் கொடுக்கறாங்களாம். அப்படியும் லேசா விரிசல் காண ஆரம்பிச்சிருக்கார். பேசாம நாளைக்கே வாங்கி இருக்கலாமோன்னா நாளைக்கு இந்தப் பிள்ளையாரையே நூறு ரூபாய்க்குக் கொடுப்பாங்க. அவங்க வைச்சது தான் சட்டம் நாளைக்கு!

சென்னையிலே பிள்ளையார் வாங்கினால் கூடவே குடை, எருக்கமாலை எல்லாமும் கொடுப்பாங்க. பழங்கள் வாங்கப்போனாலும் செட்டாக எல்லாப் பழங்களும் வைத்திருப்பாங்க. பிரப்பம்பழம் கூட இருக்கும். இங்கே எல்லாம் தனித்தனியாக இருக்கு! எருக்க மாலையே இல்லை பிள்ளையாருக்கு! மதுரையிலேயும் இப்படித் தான் பிள்ளையார் தனியா! அவருக்கான சாமக்கிரியைகள் தனியானு இருக்கும். சென்னை வந்த வருஷம் பிள்ளையார் வாங்கிட்டு வரும்போதே குடையையும் கொண்டு வந்த ரங்க்ஸைப் பார்த்து ஆச்சரியத்துடன் குடை வாங்கினீங்களானு கேட்கப் பிள்ளையாரோடு குடையும் சேர்ந்து தான் என்றார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டப்புறமும் குடையை நவராத்திரி வரை வைச்சிருந்தேன்.

அப்போல்லாம் மாவு கல்லுரலில் இடித்துக் கிளறிக் கொழுக்கட்டை செய்வேன். ஆகையால் முதல்நாளில் இருந்தே வேலை இருக்கும். பூரணமும் தயாரித்து வைத்துக் கொள்வேன். விநியோகம் நிறைய இருக்கும். இப்போ எல்லாமும் குறைஞ்சு போச்சு! எண்பதுகளில் தான் மிக்சி முதல் முதல் வாங்கினோம். அப்போதெல்லாம் சுமீத் மிக்சி தான் பிரபலம். அதுவும் முன் பதிவு செய்து வைத்து வாங்கணும். என்றாலும் அதில் கொழுக்கட்டைக்கு மாவு அரைப்பதெல்லாம் பயமாக இருந்த காலம். பயந்து பயந்து ரொம்ப முடியாமல் இருக்கும் சமயங்களில் மாவு அரைத்தால் மிஷின் சீக்கிரம் சூடாகி விடும். அணைச்சுடுவோம். பின்னர் மிச்ச அரிசியை மறுபடி கல்லுரலில் போட்டு இடித்து மாவாக்குவோம்.

கிட்டத்தட்ட அரைக்கிலோ அரிசி அப்போதெல்லாம் கொழுக்கட்டைக்குப் போடுவது உண்டு. வீட்டிலும் பத்துப் பேர் இருந்தார்கள். கொடுக்க வேண்டியவர்களும் நிறைய உண்டு. பல சமயங்களில் இந்த அரைக்கிலோ அரிசியும் போதாமல் வெறும் அரிசி மாவு மிஷினில் அரைத்து வைத்திருப்பதைப் போட்டுச் செய்து கொடுப்பதும் உண்டு. இப்போ சமீப காலங்களில் ஒரு கப் அரிசிக்குக் கொழுக்கட்டை பண்ணினாலே ராத்திரி வரை வருது. அதிலும் வெல்லம் போட்டது ரொம்பச் செய்ய முடியலை. ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாதே! :( உளுத்தங்கொழுக்கட்டை தான் ஓரளவுக்குச் சாப்பிடுவார். ஆகையால் இப்போதெல்லாம் முதல்நாளே எதுவும் செய்யறாப்போல் இல்லாமல் வேலையே இல்லாமல் ஆயிடுச்சு!

இனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும்பத்தில் பண்டிகை கொண்டாடுவாங்களா? இல்லைனாக் கடையில் வாங்கி மணையில் வைப்பாங்களா! தெரியாது. மருமகளுக்கும், பெண்ணுக்கும் கொழுக்கட்டை செய்யத் தெரிந்தாலும் அம்பேரிக்காவில் இதுக்கெல்லாம் லீவு ஏது?  இப்போதெல்லாம் அவசர யுகமாக ஆகிக்கொண்டு வருவதால் இங்கே இந்தியாவிலும் பெரும்பாலும் இதைக் கம்யூனிடி பண்டிகையாகவே கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் ஆகிக் கொண்டு வருகிறது.  முன்னெல்லாம் வடக்கே போன புதுசுலே அவங்க கடையிலே வாங்கி பக்ஷணங்களை சுவாமிக்கு நிவேதனம் செய்வதை அதிசயமாப் பார்ப்பேன். இப்போத் தமிழ்நாட்டிலேயே கொழுக்கட்டையிலே இருந்து எல்லாமும் விற்பனைக்கு வருது. அதுவும் இன்னிக்கு வாங்கறவங்களுக்குச் சிறப்பு இலவசப் பரிசுனு அறிவிப்போட! அதே போல் கிருஷ்ண ஜயந்திக்கும் வருது! இனி நவராத்திரிச் சுண்டலும் அப்படி வரும்போல! ஏற்கெனவே தீபாவளிக்கு இருக்கு!  கார்த்திகைக்குப் பொரி உருண்டையும் தயார் நிலையில் வந்தாச்சு! பொங்கலுக்கும் நவராத்திரிக்கும் தான் வரலைனு நினைக்கிறேன். 

34 comments:

 1. ஹும்! பொலம்பலே வேலையா போச்சு! :P:P:P

  ReplyDelete
 2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நோஸ்டால்ஜியானு சொல்வாங்க தம்பி! உங்களுக்குத் தெரியலை! :P :P :P :P :P

  ReplyDelete
 3. ஏற்பாடுகள் தெரிஞ்ச அளவில் ஆகிண்ட்ருக்கு. உள்ளது கொண்டு பிள்ளையார்.காலையில் பூஜை முடிச்சு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஆறரை 😁

  ReplyDelete
  Replies
  1. இப்போத் தான் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பீதி அடிச்சுக்கிடக்கார் கொழுக்கட்டையைப் பார்த்து! :)

   Delete
 4. கொழுக்கட்டை ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே...

  ReplyDelete
  Replies
  1. இதோ, இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடும் தம்பி! :)

   Delete
 5. வேகவைத்த கடலை ராஜ்மா என எல்லாம் டின்னில் பேக் செய்தபடி வெளிநாடுகளில் கிடைக்கிரதே. அது சுண்டலுக்கு மாற்று யோசனைதான் அவர்களுக்கு. செய்தால் இங்கும் சாப்பிட ஆள்கிடையாது. பண்டிகைகள் பூஜைமட்டும்தான். கடவுளும் டயட்டில் இருக்ககிறார். பழங்கள் போதும் போல இருக்கு. நான் அப்படிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நடை முறையில் ஒவ்வொன்றாய்க் குறைந்து கொண்டே வருகிரது. இதுதான் உண்மை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? எனக்கு இந்தச் செய்தி புதுசு அம்மா! ஆனாலும் எங்க பொண்ணோ, மாட்டுப்பொண்ணோ டின்னில் அடைத்ததை வாங்குவதில்லை! இந்த வருஷம் எப்படியோ ஓட்டியாச்சு! இனி புரட்டாசி சனிக்கிழமையும், மஹாலயம், நவராத்திரி தான். அதுக்கப்புறமா தீபாவளி நவம்பரில் தானே!

   Delete
 6. அதென்ன சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, கிருஷ்ண ஜயந்திக்குமுறுக்கு சீடை, கார்திகைக்கு அப்பம் பொறி...? கம்யூனிடி வழிபாட்டில் சில சௌகரியங்கள் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பிள்ளையாருக்கு மோதகம்னு தானே சொல்வாங்க வடமாநிலங்களில் கூட மோதகம் தான் பண்ணுவாங்க. இது வரை கம்யூனிடி வழிபாட்டைப் பார்த்ததில்லை. இனி அப்படி வருமோ என்னமோ!

   Delete
 7. கொழுக்கட்டை பிடிக்குதோ இல்லையோ, தேங்காய்-வெல்லம் பூரணம் ரொம்பவே பிடிக்கும். தில்லியில் யார் வீட்டுக்குப் போகறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்! :) அலுவலகமும் உண்டு! அதனால் மாலை தான் கிடைக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஹாப்பி கொழுக்கட்டை வெங்கட்! நிறையக் கிடைக்க விநாயகர் அருள் புரிவாராக! :)

   Delete
 8. எங்கே போனாலும் கொழுக்கட்டை என்றே பேச்சாச்சு.
  நாம் எல்லோரும் தின்னிபன்டாரம் நு பேரு வாங்கியாச்சு.

  மணி அடிச்சுண்டே கணேசன் பூஜை செய்வோமே
  கனி பழங்களுடன் கொழுக்கட்டை நைவேத்யம் செய்வோமே..

  பால் கொழுக்கட்டை, பூரணம் கொழுக்கட்டை
  உப்பு கொழுக்கட்டை உளுந்து கொழுக்கட்டை

  பிள்ளையாருக்கு ஜே. ஜே.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. பால் கொழுக்கட்டை பண்ணலை, தேங்காய்ப் பூரணம், உளுந்து கொழுக்கட்டை தான். அதுவே தின்னாகணும். :)இன்னிக்கு எல்லார் வீட்டிலும் கொழுக்கட்டை என்பதால் கொடுக்காதே என்பார்கள். :) கொஞ்சமாகப் பண்ணினாலும் மிஞ்சித் தான் போகிறது. ஹிஹி, நான் எப்போவோ தீனிப் பண்டாரம்னு பேர் வாங்கிட்டேனே! :)

   Delete
 9. இன்னிக்கு சாயந்திரம் தான் முடியும் போல! இந்த தடவை குழக்கட்டை சிம்பிள் ஆ ஒரு கோவா friend சொன்ன மாதிரி "சங்கர்ஷ்ட்டி dry fruits மோதகம்+! அவளோடது நன்னா இருந்தது. நம்பளோடது எப்படி இருக்குமோ! கிரீம் நெய்யெல்லாம் நோ ஹை ! . ரெடி பண்ணிவச்சுருக்ககேன். சாயந்திரம் தான் வந்து பண்ணனும். இருக்கவே இருக்கு அப்பமுடன் அவல் பொரி . பழம் பூக்கு குறைவில்லை இங்கே, இப்ப வசந்தம் இங்கே! ஆனா பிள்ளையாரப்பனுக்கு அருகம் புல் தான் இல்லை. இங்க வளராதோ? ஹாப்பி கணபதி பப்பா உங்க எல்லாருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் ஜெயஶ்ரீ. இங்கேயும் பூஜை எல்லாம் ஆயிடுச்சு! உங்களுக்கும் விநாய சதுர்த்தி வாழ்த்துகள்.

   Delete
 10. Replies
  1. யாராக்கும் இது? மௌலினு? புதுசா இருக்கு!

   Delete
 11. அன்பு கீதா,
  மனம் நிறைந்த பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

  பெண்ணுக்குப் பிள்ளையாரும் ஆஞ்சனேயரும் நண்பர்கள் என்பதால் கொழுக்கட்டை செய்துவிடுவாள்.

  திருச்சியில் புதுக் களிமண் பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் அதிசயமாக இருக்கிறது.

  கொழுக்கட்டை நன்றாக அமையவும்,பிள்ளையார் நல்ல படியாக வந்து கௌரவப் படுத்தவும்
  என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, கடந்த இரு வருடங்களாகப் பிள்ளையாரே வாங்கலை! ரொம்ப வருத்தமா இருந்தது. அதனால் இந்த வருஷம் வாங்கிட்டு வந்தார். புதுசாக் களிமண்ணை எடுத்து அச்சில் போட்டுச் செய்து கொடுப்பாங்கனு பார்த்தால் ஏற்கெனவே செய்து வைத்த பிள்ளையார் தான் கிடைச்சாராம். :) கொழுக்கட்டைக்கு என்ன! அது எப்படியும் வந்துடும்! :)

   Delete
 12. //இனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும்பத்தில் பண்டிகை கொண்டாடுவாங்களா?//

  ம்ம்....

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். நேற்றிரவு தோரணம் (20 ரூபாய்), இருக்கம் மாலை (10 ரூபாய்) போன்றவையும் பழங்களும், பூக்களும் வாங்கியாச்சு. விநாயகர் இன்று காலைதான் வாங்கணும். கொ.க அருள் உண்டான்னு தெரியலை. எல்லாம் பாஸ் அருள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், ஹாப்பி கொழுக்கட்டை! பாஸ் கொழுக்கட்டை அருள் புரிந்தாரா? :) இங்கே தோரணம், குடை, எருக்கம்மாலை போன்றவை கிடைக்கலை. மத்தது கிடைச்சது. சென்னையில் அழகாக கரும்புத்துண்டில் இருந்து வைச்சிருப்பாங்க. இங்கே உள்ள மக்களுக்குப் பிள்ளையாருக்கு என்ன பிடிக்கும்னு தெரியவே இல்லை! :)

   Delete
 13. மௌலி? மௌலியா? நெஜமாவா? வருக வருக! அக்காவுக்கு புத்திமதி சொல்லுக சொல்லுக!

  ReplyDelete
  Replies
  1. அதானே யார் அது மௌலியா? யாருக்கு புத்திமதி சொல்லணும்? :)

   Delete
 14. அக்கா! அனால்ஜின் தெரியும் நோவால்ஜின் தெரியும்.... ஆனா இந்த நோஸ்டால்ஜின் தெரியாதே!

  ReplyDelete
  Replies
  1. தம்பி, நீங்களும் "வம்பி"யா மாறிட்டு வரீங்க! :)

   Delete
  2. பின்ன அக்காவுக்கு தக்க தம்பியா இருக்க வேணாமா? ;-)))

   Delete
  3. அது!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்!

   Delete
 15. எங்கே பார்த்தாலும் கொழக்கட்டை விசாரமாவே இருக்கு. செய்யத் தெரிவதில்லை.தெரிந்தாலும் சலிப்பு. ஒரோர்முறை யோசித்தால், பண்டிகைநாட்களில் பெண்கள் இதையெல்லாம் இழுத்துபோட்டுக்கொண்டு சிரம்ப்பட வேண்டாமே எனத்தோன்றுகிறது. கடையிலே வாங்கி படையலிட்டால் பிள்ளையார் கோவிச்சுக்க மாட்டார்னு .தான் படுது.அட்ஜஸ்ட் பண்ணிப்பார் . சாந்தமூர்த்தியாக்கும்.. சடசடன்னு நாலு பூ அட்சதையை அவர்தலையில் போட்டு சட்டுபுட்டுன்னு பூஜையை முடிச்சுட்டு விடுமுறைதின(விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுன்னு சொல்லக்கூடாது) சிறப்பு திரைப்படம் பார்த்தா ஒண்ணும் தப்பில்லை. நோஸ்டால்ஜியா பத்தி கலாய்க்கறவர் கடலூர் டாக்டர் வாசுதேவன்ஜியா?

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் கொழுக்கட்டையை வீட்டிலேயே செய்வது தான் சிறப்பு மோகன் ஜி! பண்ண வரலைனா ஓகே! நான் இப்போதெல்லாம் ரொம்ப இழுத்துப் போட்டுக்கறதில்லை. இன்னிக்கு காலை எமகண்டம் முடிஞ்சு ஏழரைக்கு ஆரம்பிச்சேன். ஒன்பதரைக்கு எல்லாம் ரெடி! :)

   Delete
  2. //நோஸ்டால்ஜியா பத்தி கலாய்க்கறவர் கடலூர் டாக்டர் வாசுதேவன்ஜியா?//

   ஆமாம், தெரிந்திருக்கணுமே உங்களுக்கு! என்னைக் கலாய்க்கிறதுனா அவருக்கு, டிஆர்சி சார், மௌலி, அம்பி ஆகியோருக்கு அல்வா சாப்பிடறாப்போல்! :)))) அம்பி டாம்னா நான் ஜெரி! :) எப்போவும் ஜெயிப்பேன்! :)

   Delete
 16. ஆஹா... நாங்க கடலூர் நண்பர்களாச்சே!

  ReplyDelete
  Replies
  1. ஏமண்டி மோகன்காரு! எட்ல உன்னாரு? :-)

   Delete
 17. கொழுக்கட்டை நாஸ்டால்ஜியா இப்படித்தான் எங்கள் வீட்டிலும் முன்பு. இப்போது அதெல்லாம் குறைந்துவிட்டது....

  இனியெல்லாம் நீங்கள் சொல்லுவது போல் கடையில்தான் ...இப்போதே வந்துவிட்டது என்று கேள்வி அதாவது சொன்னால் செய்து கொடுக்கிறார்கள் என்று.....மாமிகள் வீட்டில்....

  கீதா

  ReplyDelete