எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 22, 2017

இன்னிக்கும் திரை விமரிசனம் தாங்க! :)

நேத்திக்கும் ஒரு சின்னப்படம் பார்த்தேன். ஹிந்திப்படம்! 31 அக்டோபர் என்னும் படம்! நல்ல படம்! ஆனால் இது ஓர் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மனதைத் தொட்ட படம். நடிகர்கள் எல்லோருமே எனக்குத் தெரியாதவங்க! ஆகவே அவங்களைப் பற்றிச் சொல்ல ஒண்ணுமில்லை என்றாலும் எல்லோருடைய நடிப்பும் இயல்பாக இருந்தது. காட்சி அமைப்புகளும் அருமை!  கடைசி வரை படம் தொய்வில்லாமல் சென்றது.  மனதைத் தொட்ட படம்!

31st october க்கான பட முடிவு

இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். ஹிஹிஹி, தமிழ்ப்படம்! நல்லவேளையா படம் பப்படம் இல்லை. ஏற்கெனவே பாதி பார்த்திருந்தேன்.  என்றாலும் இன்று மறுபடி முதலில் இருந்து போட்டுப் பார்த்தேன். இந்தப் படமும் கடைசி வரை விறுவிறுப்பு! இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் என்ற புதிய இளைஞர் மிக அருமையாகக் கோர்வையாகப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். இதில் நடித்திருப்பவர்களில் கலையரசன் தான் ஹீரோ என்றாலும் வில்லியாக வரும் ஷிவ்தா நாயர் என்பவர் நடிப்பில் முந்துகிறார். சாதனாவாக வரும் ஜனனி ஐயருக்குச் சும்ம்ம்ம்ம்ம்மா வந்துட்டுப் போகும் காட்சிகள் தான்.

அதே கண்கள் விமர்சனம் க்கான பட முடிவு
நல்லவேளையாகக் காதல் காட்சிகள், டூயட், மரத்தைச் சுற்றி ஓடுவது, வெள்ளை நிறத் தேவதைகள் புடைசூழ ஆடுவது என்றெல்லாம் படத்தைக் கொண்டு போகாமல் காட்சிகளை நிகழ்வுகளுக்கு ஏற்ப நகர்த்திக் கொண்டு சென்று இருப்பது ஒன்றே இயக்குநரின் திறமைக்கு சாட்சி. கலையரசன் கண் தெரியாதவராக நடித்திருக்கும்போதும் சரி, பின்னால் கண் தெரிபவராக வரும்போதும் சரி இயல்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய கண் தெரியாத போது இருந்த திறமையைப் பயன்படுத்தி வில்லியைப் பிடிக்கும் காட்சி மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது. கான்ஸ்டபிளாக வருபவர் மிக நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது வெறும் வார்த்தை. பின் பாதி முழுக்க அவரே ஆக்கிரமித்திருக்கிறார்.
அதே கண்கள் விமர்சனம் க்கான பட முடிவு
இத்தனை புகழும் அந்தப் படம் என்னவென்று கேட்கிறீர்களா? இதுக்குள்ளே தெரிஞ்சிருக்குமே! "அதே கண்கள்" என்ற படம் தான் அது! இது முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி ஏவிஎம் தயாரிப்பில் வந்த படத்தின் பெயராக இருந்தாலும் கதை அம்சம் முற்றிலும் வேறு.  இடைவேளை வரை கதையை யூகிக்க முடியாமல் கொண்டு சென்றிருக்கிறார். என்றாலும் அடுத்து கன்யாகுமரியில் மனோஜ் அறிமுகம் ஆகும்போது கதை ஓரளவுக்குப் புரிந்து விடுகிறது. என்றாலும் அடுத்து என்ன என்று கடைசிவரை திகிலாகவே கொண்டு சென்றிருக்கிறார் கதாசிரியர். இசை என்ற பெயரில் சப்தம் இல்லாமல் மென்மையான இசை!  பளிச்சென்ற ஒளிப்பதிவு, நன்றாகத் தொய்வே இல்லாமல் தொகுத்திருக்கும் விதம் என எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதுவே படத்தின் வெற்றிக்குச் சான்று!

ஒரு முறை பார்க்கலாம். 

10 comments:

 1. அதே கண்கள் சேமிப்பில் இருக்கிறது. இன்னும் பார்க்கவில்லை. அதே போல துருவங்கள் பதினாறும்! நல்ல பிரிண்டாக இல்லை... அதுதான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், படம் நன்றாகவே இருந்தது! துருவங்கள் பதினாறும் பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கு! :)

   Delete
  2. துருவங்கள் 16 நல்ல ப்ரின்ட் இல்லை என்றாலும் அதையும் பார்த்தாயிற்று...படம் நன்றாக இருந்தாலும் ப்ரின்ட் மோசமாக இருந்ததால் திருப்தியாக இல்லை..

   கீதா

   Delete
 2. ம்... விமர்சனத்தில் இறங்கிட்டீங்க... நன்று

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெஹெ, ஏதேனும் பொழுதைப் போக்க வழி! :)

   Delete
 3. பரவாயில்லை.. பார்க்காத படத்துக்குத்தான் விமரிசனம் எழுதியிருக்கீங்க. என்ன பண்ணறதுன்னு தெரியாமல், கே.டிவி பார்த்து நிறைய விமரிசனம் எழுத ஆரம்பிச்சுடாதீங்க.

  உங்கள் பார்வையில் இப்போ அந்த ஊர் எவ்வளவு மாறியிருக்கு இதெல்லாம் எழுதுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. நான் தொலைக்காட்சியையே சாயந்திரம் (இந்திய நேரப்படி ஏழிலிருந்து எட்டரை வரை) பார்ப்பது தான். இதிலே கேடிவியெல்லாம் பார்க்கிறதாவது! அந்த வழக்கமே வைச்சுக்கலை! மற்றபடி இங்கே எல்லாம் மாறுவது எனில் காலி இடங்களில் குடியிருப்புக்கள் கட்டிக் கொண்டு வருவதும் ஆங்காங்கே மால்கள் திறக்கப்படுவதும் தான்! எனினும் சாலைகள் போடுவதிலிருந்து எல்லாமும் அந்தந்த நேரப்படி திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. அதே போல் குடியிருப்புக்களிலும், தனி வீடுகளிலும் வாசலில் இருக்கும் புல் தரை பொதுவானது என்பதால் கார்ப்பரேஷன், முனிசிபாலிடி போன்றதொரு அமைப்பு ஆங்காங்கே ஒவ்வொரு பகுதிக்கும் ஆட்களை அனுப்பி அவற்றைச் சீராக வெட்டிப் பராமரிக்க ஏற்பாடு செய்து விடுகிறது. வெட்டப்பட்ட புற்களையும் கையோடு அப்புறப்படுத்திக் கொண்டு போயிடுவாங்க! நம்ம ஊர் போல் குவிச்சு வைச்சுட்டுத் தெரு பூராவும் பரவும் வரை காத்திருப்பதில்லை!

   Delete
 4. அதே கண்கள் லிஸ்டில் இருக்கிறது. இன்னும் பார்க்கலை....

  ReplyDelete
 5. அதே கண்கள் லிஸ்டில் இருக்கிறது. இன்னும் பார்க்கலை....

  கீதா

  ReplyDelete
 6. அருமையான கண்ணோட்டம்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete