எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 25, 2017

Pink (பிங்க்)

pink hindi movie க்கான பட முடிவு

தலைநகர் தில்லியில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், அதற்கு ஆணாதிக்க மனப்பான்மையே காரணம் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஓர்படம் "பிங்க்". அமிதாப் பச்சன் உடல் நிலை, மனநிலை சரியில்லாதவராக வருகிறார். தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டால் மட்டுமே நிகழ்காலச் சூழ்நிலைகளுக்கு அவரால் வர முடியும். இதில் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் அவர் மனைவி சாரா! ஆனால் அவர் உண்மையில் ஒரு பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழ்நிலை மற்றும் வயது காரணமாகத் தொழிலைத் தொடராமல் ஓய்வில் இருக்கும் அமிதாப் பச்சன், பாதிக்கப் பட்ட மூன்று பெண்களுக்காகத் தன் வக்கீல் தொழிலை மீண்டும் தொடர நேரிடுகிறது. தற்காலப் பெண்களின் சுதந்திரப் போக்கும் அவர்கள் தங்கள் சுயத்தை நிரூபிக்கப் போராடுவதும் கதையின் முக்கியக் கரு. அது எப்படி ஆணாதிக்கப் பேர்வழிகளால் சீரழிக்கப்படுகிறது, அவர்கள் இப்படிப் பட்ட பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது அமிதாப் வாயிலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அமிதாபின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் இந்தக் கதைக்குப் பொருந்தும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நன்றாக உள்வாங்கிச் செய்திருக்கிறார் அமிதாப்.

pink hindi movie க்கான பட முடிவு

படத்தில் நீதிமன்றக் காட்சிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை விடாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும்.  அரசு தரப்பு மற்றும்  உண்மையான குற்றவாளியான ராஜ்வீர் சிங்கின் வக்கீலாக வருபவர் புதுமுகம் (எனக்கு) பியூஷ் மேஹ்ரா என்பவர் அருமையாகக் கூண்டில் இருப்பவர்களிடம் விசாரணை செய்கிறார். ராஜ்வீர் சிங்காக நடிப்பவர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கத் பேடியாம். ஆன்டிரியாவாக வடகிழக்கு மாநிலப் பெண் ஆன்டிரியாவே நடித்துள்ளார். ஆனால் யாரும் நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டி இருக்கின்றனர்.

கதை அமைப்பு, காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு போன்றவை அருமையாக அமைந்து விட்டது. நீதிமன்றக் காட்சிகளில் மனம் ஒன்றிப் போய்விடுகிறோம்.  உண்மையில் படத்தில் நீதிபதி தீர்ப்புச் சொல்கையில் குற்றம் இழைத்த ஆண்களுக்கு ஆதரவாக இருக்கும்படி தான் அமைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னால் பெண்கள் மற்றும் மற்ற ரசிகர்களின் மனம் புண்படக் கூடாது என்பதால் கதைப் போக்கு அமிதாப் வெற்றி பெறுவதாகவும் பெண்களுக்கு வெற்றி கிடைப்பதாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.  மாற்றவில்லை எனில் இத்தகைய வெற்றி படத்துக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!

pink hindi movie க்கான பட முடிவு

சமூக நீதியைப் போதித்திருப்பதற்காக இந்தப்  படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.  ராஜஸ்தான் மாநிலக் காவல் துறையினருக்கு இந்தப் படத்தைச் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டுப் பார்க்க வைத்துப் பெண்களின் உரிமைகளையும், கௌரவத்தையும் பாதுகாப்பதோடு அல்லாமல் அவர்களுக்கான நீதியையும் சரியான முறையில் பெற்றுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றனர்.  குடியரசுத் தலைவர் மாளிகையிலும் நியூயார்க் ஐநாவிலும் சிறப்புக்காட்சியாகத் திரையிடப் பட்டிருக்கிறது. படத்தின் கதையை இங்கே விவரிக்கவில்லை. (நெ.த. கோவிச்சுக்கறாரே!)  :D நீங்களே நேரில் பார்த்துக்குங்க!

ஶ்ரீராம், படம் பார்த்து விமரிசனம் எழுதியாச்சு!

19 comments:

 1. மீண்டும் பின்னர் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஆச்சு? அப்புறமா வரலை? ஆனாலும் இந்தப் படத்தில் எனக்கு ஓர் நெருடல் இருக்கத் தான் செய்தது! :( விவரிக்கக் கஷ்டமாக இருந்தது!

   Delete
  2. நீங்கள் விவரிக்கக் கஷ்டப்பட்டிருக்கும் இடம் பணம் சம்பந்தப் பட்டது என்றால், அதற்கு படத்திலேயே விளக்கம் இருக்கிறது.

   நானும் அந்த அரசுத் தரப்பு வக்கீல் நடிப்பை ரசித்தேன்.

   இந்தப் படத்தில் அமிதாப்பின் நடிப்பு சம்திங் ஸ்பெஷல்! அவர் டாப் கியர் படங்கள் பக்கா மசாலா! ஆனால் அவரது இரண்டாம் இன்னிங்ஸில் நிறைய படங்கள் அவர் நடிப்பதற்கு தீனி போட்ட படங்கள். படம் சொல்லும் கருத்தையும் நானும் ரசித்தேன். கோர்ட் ஸீன்களை மறுபடி மறுபடி ரசித்தேன்.

   Delete
  3. யெஸ் மீ டூ.. இதே இதே

   Delete
  4. கருத்து....கீதா...விடுப்பட்டுவிட்டது

   Delete
 2. வழக்கம்போல முழுமையாக சொல்லி இருந்தால் எனக்கு செலவு மிச்சமாகி இருக்கும்....

  நெ.த. தடுத்து விட்டாரோ...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, நெ.த. பார்க்கிறச்சே சுவாரசியம் போயிடுமேனு யோசிக்கிறார்! :)

   Delete
 3. விமரிசனத்தில் முத்திரை பதிப்பதற்காக சினிமா விமரிசனம் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?

  நான் ஹிந்தி படம் பார்க்கமாட்டேன். (மொழி தெரியாது). நிறையபேர் 'வசூல்ராஜா'வைவிட முன்னாபாய் அட்டஹாசமா இருக்கும்னு. ஆனால் நான் வசூல்ராஜாவை மட்டும் பல பல தடவை பார்த்தேன். உங்களுக்கென்ன... நிறைய மொழிகள் தெரியும்....

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே நெ.த. நானே முத்திரை குத்திக் கொண்டால் தான் உண்டு! யார் வந்து முத்திரை குத்தப் போறாங்க! ஹிஹிஹி, வசூல் ராஜாவும் பார்த்தேன்! முன்னாபாயும் பார்த்தேன். தமிழ், கிந்தி இரண்டு மொழியிலும்! :) அதெல்லாம் அப்போ ஓர் தண்டனை போலப் பார்க்க நேரிட்டது! :))))

   Delete
  2. நெல்லை! நான் சிறுவயதிலிருந்தே நிறைய ஹிந்திப் படங்கள் பார்க்கும் வழக்கம். கிட்டத்தட்ட அதிலிருந்தும், ஆரம்ப கால டீவியினாலும்தான் கொஞ்சம் ஹிந்தி பழக்கம்!

   எப்பவுமே ஒரிஜினல் ஒரிஜினல்தான். எனவே முன்னாபாய் நன்றாயிருந்திருந்தால் அதிசயமில்லை. அதே சமயம் நாம் எதை முதலில் பார்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது. பர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன்!

   Delete
  3. சொன்னா நிறையபேர் தவறாக எண்ணிக்கொள்வார்கள். ஹிந்தி தெரியாமல் இருக்கக்கூடாது. ஹிந்தி, இந்தியனுக்கு ஒரு முக்கியமான மொழி. அதைமட்டும் தெரிந்திருந்தால், இந்தியனிடம் மட்டுமல்ல, பாகிஸ்தானி, பங்களாதேசிகளிடமும் பழகமுடியும். ஆனால், தமிழர்களிடம் பழகுவதற்குமட்டும் நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும்.

   ஸ்ரீராம்.. எனக்கு ஹிந்தி பேச ஆசை. ஆனா வராது. எனக்கு தமிழ் நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் 3 வருடங்கள் வசித்ததால், நேடிவ் தமிழ் மொழிகூட எனக்குத் தெரியாது (அதாவது நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், மதுரைத் தமிழ் போன்று). என் கசின் (சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவ்ன்) என்னிடம் 'என்ன சொல்றீங்கோ' அப்படி இப்படி என்றெல்லாம் பேசும்போது என்ன இப்படிப்பேசறானே என்று முதலில் தோன்றியது. 8வது படிக்கும்போது கன்னடம் (கர்'நாடகா பார்டரில் தமிழகத்தில் இருந்ததால்) நன்றாகத் தெரியும். அதுவும் சுத்தமா இப்போ மறந்துபோச்சு.

   Delete
 4. Iam not able to wite my comments as my Tamil fonts are givin g problem Anyway it does not matter as I rarely see films

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை. நீங்கள் நிதானமாகத் தமிழ் ஃபான்ட் சரியானதும் கருத்துச் சொன்னால் போதும். அதுவும் இந்தப் பதிவுக்குச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை!

   Delete
 5. நல்ல படம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட படம். வழக்கம் போலவே நான் இந்தப் படத்தினையும் பார்க்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. பாருங்க. நீங்க சொன்ன மலையாளப் படமும் பார்க்கணும்! :)

   Delete
 6. அருமையான கண்ணோட்டம்
  இவ்வாறான சிறந்த படங்களின் வருகை தேவை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். தமிழிலும் இப்போது இம்மாதிரிப் படங்கள் கொஞ்சம் கூடத் தரம் குறையாமல் எடுக்கப்பட்டுப் பார்க்க நேர்ந்தது. துருவங்கள் பதினாறு, குற்றம் 23, அதே கண்கள். மூன்றுமே நல்ல திரைப்படங்கள். அதிலும் குற்றம் 23 மிகவும் தேவையான கருத்தைச் சொல்லும் படம். ஆனால் அந்தப் படத்திற்கு வெகுஜனப் பார்வை இல்லை போல! :(

   Delete
 7. நல்ல படம்...ரசித்துப் பார்த்த படம்...

  ReplyDelete
 8. உங்கள் விமர்சனம் பார்த்து விட்டேன்.
  கொஞ்சம் படம் பார்க்கும் போதே மனம் பதைக்கிறது.
  மனம் முழுவதையும் பார்க்க விடாது போல.
  ஒரு காலத்தில் மொழி தெரியவில்லை என்றாலும் எல்லா மொழி படங்களும் நன்றாக இருக்கிறது என்று பார்ப்பது தான் இப்போது படம் பார்ப்பது தொலைக்காட்சியில் மட்டும் தான்.

  ReplyDelete