எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 06, 2018

பரவாக்கரை சென்ற பயணத்தின் தொடர்ச்சிப் பகுதி!


 பரவாக்கரை

முந்தைய பதிவை இங்கே காணலாம். பரவாக்கரையில்புதிய சிவன் கோயில் கட்டுவதைப் பார்த்த பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி மாயவரம் வழியாக வைத்தீஸ்வரன் கோயில் போகணும். அங்கே மறுநாள் வெள்ளிக்கிழமைக்கு அபிஷேஹம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குருக்கள் வைத்தீஸ்வரன் கோயிலிலேயே வந்து தங்கிவிடும்படி சொல்லி இருந்தார். வழியில் மாயவரத்தில் சாப்பிட்டுவிட்டு வைத்தீஸ்வரன் கோயில் போகலாம் என முடிவு. மாயவரத்தில் மயூரா லாட்ஜில் சாப்பாடு நன்றாக இருக்கும் என யாரோ சொன்னதில் நம்ம ரங்க்ஸுக்கு அங்கே தான் சாப்பிடணும்னு ஆசை. எனக்குச் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன். கருவிலியில் கொடுத்த தயிர்சாதமே இருந்தது. ஆகவே அதுவே போதும்னு சொல்லிட்டேன். டிரைவரும் அடுத்தடுத்துக் கிடைத்த பிரசாதங்களில் வயிறு பசி இல்லைனு சொல்லிட்டார். ஸ்வீட் சாப்பிடாத நம்மவரோ பசி தாங்காமல் மயூரா லாட்ஜில் இறங்கிச் சாப்பிடச் சென்றார். திரும்பி வந்து சாப்பாடு நன்றாக இருந்ததாய்ச் சொன்னார். நாளைக்குக் காலை ஆகாரம் வேணா மயூரா லாட்ஜில் வைச்சுக்கலாம்னு சொன்னேன்.

பின்னர் அங்கிருந்து ஓர் பத்து, இருபது நிமிடத்தில் வைத்தீஸ்வரன் கோயில் போயாச்சு. சுமார் பத்து வருடங்கள் முன்னர்  அப்புவுக்கு மொட்டை அடிக்கப் போனப்போத் தங்கிய அதே லாட்ஜைத் தேடிக் கொண்டு சென்றார் நம்ம ரங்க்ஸ். அந்தத் தெருவுக்குப் போய் ஒரு மாதிரி லாட்ஜைக் கண்டும் பிடிச்சார். முதலில் கேட்ட ஒரு லாட்ஜில் எல்லா அறைகளும் நிரம்பி வழிவதாகச் சொல்லிட்டாங்க! ஆகவே நாங்கள் முன்னர் தங்கிய அதே லாட்ஜைக் கண்டு பிடிச்சு அங்கே போய்த் தங்க அறை கேட்டதற்கு இருக்குனு சொல்லி ஓர் அறையைக் கொடுத்தார் அந்த லாட்ஜில் இருந்த ஓர் ஊழியர். அங்கே போனால் ஒரே கழிவறை நாற்றம் தாங்கலை. ஏ.சி.வேறே வேலை செய்யலை. அவரைக் கூப்பிட்டுக் கேட்டதற்கு அது நான் ஏ.சி. அறைனு சொல்லிட்டு ஏ.சி. அறைனு இரண்டாம் எண் அறையைக் கொடுத்தார். அந்த அறையில் தான் நாங்க முன்னர் போனப்போவும் தங்கினோம். அறை என்னமோ வசதி தான்! ஆனால் சுத்தம்! பராமரிப்பு! அது ரொம்பச் சுத்தம்! ஏ.சி. போட்டாங்க தான்! ஆனால் அதிலிருந்து சப்தம் தவிர்த்து எதுவும் வரலை! அந்த ஊழியரிடம் கேட்டதுக்கு லாட்ஜின் முதலாளி அம்மா சென்னையில் இருப்பதாகவும் தான் இதைப் பார்த்துக்கொள்வதாயும் சொன்னார்.  சரி, ஓர் இரவு தானே, சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டுக் கொஞ்சம் ஓய்வுக்குப் பின்னர் சிதம்பரம் கிளம்பினோம்.

அந்த லாட்ஜ் இருந்த தெருவின் முனையில் உள்ள காஃபிக் கடையில் காஃபி நன்றாக இருக்கும்னு சொல்லி இருந்தாங்க. ஆகவே அங்கே சென்றோம். கடை மதிய ஓய்வுக்குப் பின்னர் அப்போத் தான் திறந்திருந்தாங்க என்பதால் காஃபி கொடுக்கக்கொஞ்சம் தாமதம். உண்மையாவே காஃபி நன்றாகவே இருந்தது. பின்னர் சிதம்பரம் போனோம். ஏற்கெனவே தீக்ஷிதரிடம் சொல்லி விட்டோம். ஆகவே எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெரிய தீக்ஷிதருக்கு சதாபிஷேஹம் ஆயிருந்தபடியால் அவரையும் அவர் மனைவியையும் நமஸ்கரித்துக் கொண்டு அங்கேயும் ஓர் நல்ல காஃபி சாப்பிட்டுவிட்டு அவங்க கொடுத்த பக்ஷணங்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பினோம். கோயிலில் நல்ல தரிசனம். அதிகம் நடக்க முடியாததால் சிவகாமசுந்தரி கோயிலுக்குப் போக முடியலை. அதோடு கல் தரைச் சூடு வேறே! கோவிந்தராஜரையும் தரிசனம் செய்து கொண்டு அப்போது நடந்து கொண்டிருந்த கால பூஜை வழிபாடுகளையும் கற்பூர ஆரத்தியையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரே இருக்கும் கிருஷ்ண விலாஸில் தான் எப்போவும் சாப்பிடுவோம் என்பதால் அங்கே சென்றால் முற்றிலும் ஆள் மாறிவிட்டார்கள்.  என்ன செய்யறதுனு தெரியாமல்  ஆளுக்கு இரண்டு இட்லி மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

பின்னர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து லாட்ஜை அடைந்து இட்லி சாப்பிட்டு விட்டுப் படுத்தோம். தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதற்காக ரங்க்ஸ் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டதும் ஓர் படார்! மின்சாரம் போய் விட்டது. அங்கே ஜெனரேட்டர் வாசலில் இருந்ததால் அப்போது இரவு நேரத்துக்கு மாறி இருந்த ஊழியரிடம் கேட்டதுக்கு மத்தியானம் நாங்க ஓட்டல் அறையில் அறை எடுத்தப்போ இருந்தவர் தான் இந்த லாட்ஜை ஒத்திக்கு (குத்தகை மாதிரி) எடுத்திருப்பதாகவும் அவர் பராமரிப்பு வேலைகளையே செய்வதில்லை என்றும் சொன்னார். ஜெனரேட்டர் வீணாகி இருப்பதாயும் அதை ரிப்பேர் செய்ய மறுக்கிறார் என்றும் சொன்னார். இதைப் பற்றி லாட்ஜ் முதலாளிகளுக்கு எதுவும் தெரியாதாம். வெள்ளை அடிப்பது, கழிவறைச் சுத்தம் செய்வது போன்றவற்றிற்கு ஆட்களை ஏற்பாடு செய்யாமல் அவரே செய்து கொண்டு காசை மிச்சம் செய்கிறாராம். ஆகவே கழிவறைகளும் சுத்தமாக இல்லை! அறையும் சுத்தமாக இல்லை. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் காற்று இல்லை. அறையில் படுக்க முடியவில்லை. இன்வெர்டரில் பத்து நிமிஷம் ஓடிய மின் விசிறியும் நின்று விட்டது. 

46 comments:

 1. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா!

   Delete
 2. சீர்காழியில் 5 நட்சத்திர ஓட்டல் இருக்கே!
  வைத்தீஸ்வரன் கோவிலில் சதாபிஷேக ஓட்டல் நன்றாக இருக்கும் முன்பு நன்றாக இருந்தது.
  இப்போது எப்படி இருக்கோ தெரியவில்லை.
  நகைகடைத் தெருவில் உள்ள மயூராதானே?முன்பு மூன்று மயூரா ஓட்டல் இருந்தது.
  மாயூரா ஓட்டல் உரிமையாளர் இப்போது காளையார்குடி ஓட்டலில் ஒரு பங்குத்தார் ஆகிவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க கிளம்பிய மூன்று நாட்களும் தொடர்ந்து முஹூர்த்தநாட்கள் கோமதி! ஆகையால் எந்த லாட்ஜிலும் இடம் இல்லை. சதாபிஷேஹத்தில் இரண்டு கல்யாண கோஷ்டி! நிற்க இடம் இல்லை. பத்து வருஷம் முன்னாடி போனப்போ வசதியா இருந்ததை நினைச்சுட்டு இவர் அங்கே போனார். அதோடு அப்போ அந்தப் பெண்மணி சாப்பாடும் கொடுப்பேன் என்று சொன்னதால் அதை நினைச்சும் போயிருக்கலாம். :))))

   Delete
  2. முதல்லே சாப்பிட்டது எந்த மயூரானு தெரியலை. ஆனால் வைத்தீஸ்வரன் கோயில்லே இருந்து திரும்பும்போது டிஃபன் சாப்பிட்டது பட்டமங்கலத் தெரு மயூராவில். அங்கே ஏற்கெனவே 2,3 முறை சாப்பிட்டிருக்கோம்.

   Delete
 3. வைத்தீஸ்வரன் கோவிலை இரண்டு மூன்று முறை தாண்டித் தாண்டிச் சென்றுள்ளேனே தவிர, பார்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம்!!!!!!!!!!!!!!! எப்படி அவ்வளவு தூரத்தைத் தாண்டினீங்களோ! இஃகி, இஃகி, இஃகி!

   Delete
  2. அப்பா...
   ரொம்பக் கொடுமையடா சாமீ!...

   Delete
 4. உங்க ராசி.. நீங்கள் தங்கும் அறைகள் இப்படியே அமைகின்றன. முன்னர் தங்கிய இடமே என்று தேடாமல் புதிய இடம் தேடி இருக்கக் கூடாதோ!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்படி எல்லாம் சொல்ல முடியாதாக்கும். பல இடங்களில் தங்கும் இடங்கள் நன்றாகவே இருந்திருக்கின்றன. அயோத்தியில், அமிர்தசரில், கான்பூரில்! லக்னோவில் தங்கிய அறை நல்லா இருந்தது, சாப்பாடு தான் திராபை! கும்பகோணத்திலும் ராயாஸில் நல்லா இருக்கும். இப்போ குஜராத்தில் மாத்ருகயா போனப்போத் தங்கிய ஓட்டல் அருமையா இருந்தது! காஃபி, டீ, போர்ன்விடா, பூஸ்ட் எல்லாம் வைத்திருந்தார்கள் அறையிலேயே! இஃகி, இஃகி, ஆனால் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட சானல்கள் தான்! நாம் பார்க்கும் சானல்களுக்கு அது ஓடும் நேரத்தைப் பொறுத்துத் தனியாப் பணம் வசூலிப்பார்கள். மும்பை ஓட்டலிலும் அப்படித் தான்! :))))

   Delete
 5. கடை அப்போதுதான் திறக்கிறார்கள் என்றால் புது டிகாக்ஷனாக இருக்கும். எனவே காஃபி நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் ஶ்ரீராம், ஆனால் மறுநாள் காலையும் நன்றாகவே இருந்தது.

   Delete
 6. //முந்தைய பதிவை இங்கே காணலாம்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆரம்பமே கொயப்புறீங்களே.. இங்கே என்றால்.. அதிலேயே லிங் இணைக்கோணும்.. இது இங்கே எனச் சொல்லிப்போட்டு லிங் ஐ மேலே போட்டால்ல்?:) என்னைப்போன்ற ஞானிகள் கண்டுபிடிச்சிடுவோம்ம்:) நெ.தமிழன் ஸ்ரீராம் போன்றோர் தேடுவினம் எல்லோ?:) ஹையோ படிச்சதும் உடனேயே கிழிச்சு மாமாக்கு சுடும்.. சப்பாத்தி அடுப்பில போட்டு எரிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எல்லோரும் வருஷக் கணக்காச் சுட்டிகளை இப்படித் தான் கொடுத்துட்டு இருக்கோம்! உங்களுக்குப் பார்க்கத் தெரியலை! வெங்கட் பதிவிலே போய்ப் பாருங்க! அது சரி நேத்திக்குச் சப்பாத்தித் தான் சுட்டேன் என எப்படிக் கண்டு பிடிச்சீங்க? :))))

   Delete
  2. /// சப்பாத்தி தான் சுட்டேன்..என///

   சப்பாத்திய சுட்ட சத்தம்
   அங்கே வரைக்கும் கேட்டதாம்...லே!..

   Delete
 7. //நாளைக்குக் காலை ஆகாரம் வேணா மயூரா லாட்ஜில் வைச்சுக்கலாம்னு சொன்னேன்.//

  நல்லாத்தான் ஐடியாக் குடுக்கிறீங்க கர்:).. கொழும்பிலும் மயூரா அம்மன் கோயில் உண்டு... நம்பிக்கையான அம்மன்.. மயூரா லொஜ் எனவும் இருந்ததாக நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஏன், என்னோட ஐடியாவுக்கு என்ன குறைச்சல்? க்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 8. //பின்னர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து லாட்ஜை அடைந்து இட்லி சாப்பிட்டு விட்டுப் படுத்தோம்//

  கோயில் யாத்திரைபோலத் தெரியல்லியே:) ஏதோ இட்லிக்கு டிபனுக்குப் போனதைப்போலவே ஃபீலிங்கா இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு வைக்காதீங்க அதிரடி, ராத்திரிக்கு இரண்டே இரண்டு இட்லி கூடச் சாப்பிடலைனா மாத்திரைகள் எல்லாம் எப்படி எடுத்துக்க முடியும்? காலம்பர எழுந்துக்க வேண்டாமா? கோயில் யாத்திரைக்குப் போயிட்டு நம்ம நெ.த. ஶ்ரீராம் மாதிரிப் பிரசாத தரிசனமா பண்ணிட்டு வரோம்? :))))))

   Delete
  2. அவங்களை இழுக்கலேன்னா
   தூக்கம் வராதே!..:)

   Delete
  3. கோவிலுக்குப் போனதுக்கு அக்னாலட்ஜ்மெண்ட் பிரசாதம் வாங்கறது, சாப்பிடறது. அதுல இவங்களுக்குப் பொறாமை... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஸ்ரீரங்கம் வருவேன் (பெருமாளை தரிசனம் செய்ய). எங்க கோவில் பிரசாதம் கிடைக்கும், யாரை அப்ரோச் செய்யணும்னு கரெக்டா சொல்லணும். இல்லைனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சும்மா கருடன் மண்டபத்து பிரசாத வியாபாரக் கடையைச் சொல்லக்கூடாது.

   இனி, கோவில் தரிசனம் மட்டும் எழுதி, பிரசாதத்தை எழுத விட்டீங்கன்னா பார்த்துக்கோங்க.

   Delete
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. எனக்கென்ன பொறாமை? நான் சாப்பிடாத கோயில் பிரசாதமா? இஃகி, இஃகி! காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் காஞ்சிபுரம் இட்லிப் பிரசாதம், புளியோதரை, வெண்பொங்கல்னு எல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். அதே போல் ஸ்ரீரங்கத்திலும் மத்தியானமா மடப்பள்ளி வாசலிலேயே பட்டாசாரியார்கள் பிரசாதங்கள் குறைந்த விலைக்குக் கொடுப்பாங்க! அறநிலையத் துறை அதை இப்போ நிறுத்தி விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். முகப்பேர் சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் எந்த நேரம் போனாலும் ஏதாவது ஒரு பிரசாதம் கிடைக்கும். வேலூர் ஸ்ரீபுரத்திலும் எப்போப் போனாலும் பிரசாதம். இந்தத் தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் போதுமா? இஃகி, இஃகி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியோட புளியோதரையை விட்டுட்டேனே!

   Delete
 9. இம்முறை ஆதாரத்துக்காக ஒரு படம்கூடப் போடாமையால் எங்களுக்கு ஜந்தேகம் அதிகமாகி விட்டது:) அதாவது வீட்டிலிருந்துகொண்டே போனதுபோல பில்டப் காட்டி எழுதுறீங்களோஓஓ என:)) ஓகே ஓகே சரி சரி விரட்டாதீங்கோ.. ஜமாதானமாகிப் போயிடலாம்.

  ஆனா எனக்கொரு டவுட்டு.. நீங்க கோமதி அக்கா எல்லோரும் எப்படித்தான் இப்படிக் கோயில் கோயிலாக அலுப்பு களை இல்லாமல் சுத்துறீங்களோ என.. எனக்கு ஒரு இடம் போனாலே 2 நாள் நல்ல ரெஸ்ட் வேணும் ஹா ஹா ஹா.. வேர்க்கக்கூடாது சன நெரிசல் இருக்கக்கூடாது ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. அதிரா ரெஸ்ட் எடுத்து எடுத்து தான் சுத்துகிறோம்.
   இப்போது கோவில்களுக்கு அவ்வளவாய் போகவில்லையே! மீண்டும் இறைவன் அருளால் ஜனவரியிலிருந்து போக வாய்ப்பு இருந்தால் போகலாம்.

   Delete
  2. அதிரடி, இது போன மாசம் போனது கூட இல்லை. அதுக்கும் முந்திப் போனது! இப்போ எழுதறேன். இதுக்குத் தான் ஒழுங்கா எல்லாப் பதிவுகளையும் படிக்கணும்னு! போன மாசம் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக்கிளம்பிப் பூம்பாறை போனது இன்னமும் எழுதவே இல்லை! அதோடு ஒரு நாள் போயிட்டு வந்தால் ஒரு வாரம் ரெஸ்ட்!

   Delete
  3. ஜன நெரிசல் இருக்கிற கோயிலுக்கெல்லாம் நான் போகவே மாட்டேன். ஆனால் இந்த வியர்க்கும் விஷயம்! இஃகி, இஃகி, எனக்குக் கயிலையிலும் வேர்த்தது. கொடைக்கானலிலும் வேர்த்தது, ஊட்டியிலும் வேர்த்தது! நம்ம ரங்க்ஸுக்குப் பயம்மாவே இருக்கும் இது ஏன் இப்பூடினு! :))))

   Delete
  4. கீசா மேடம்... நீங்க சொன்னப்பறம்தான் எனக்கு நினைவுக்கு வருது. உங்களுக்கு பூம்பாறை கோவில் படங்கள் (நாங்கள் போனபோது எடுத்தது) அனுப்பணும்னு நினைத்தேன். விரைவில் அனுப்பறேன். அதுக்குள்ள இடுகை போடாதீங்க. சொல்லிட்டேன்.

   Delete
  5. படங்கள் வந்து சேர்ந்தன! நன்றி. மகாலக்ஷ்மி கோயிலுக்கு இம்முறை போகலை, பூம்பாறை மட்டும் போனோம். உடனே திரும்பியாச்சு! இங்கே அதிக வேலைகள் காத்திருந்தன.

   Delete
 10. இன்னொன்று கீசாக்கா.. எங்கு போனாலும்.. தங்குமிடம் மட்டும் சாப்பாடு இல்லாவிட்டாலும் சுத்தம் அவசியம் முக்கியமாக பாத்ரூம் வசதி.

  இப்போதானே அனைத்தும் நெட்டிலும்.. இல்லாட்டில் ஃபோனிலும் புக் பண்ணும் வசதி வந்துவிட்டதே.. அப்போ ஏற்கனவே பிளான் பண்ணி நல்ல ஹோட்டலாக புக் பண்ணுங்கோ.. எதுக்கு லொஜ் க்குப் போறீங்க கர்ர்:)) காசைப்பொத்திப் பொத்திச் சேர்த்து இனி என்ன பண்ணப் போறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஹா ஹா ஹா மீ ரன்னிங்:).

  ReplyDelete
  Replies
  1. ஞானி, ஒரு முறை ஆன்லைனில் மதுரையிலே ஓட்டல் புக் பண்ணிட்டு! 3 ஸ்டார் ஓட்டலாம்! போதும்டா சாமினு ஆயிடுத்து! அறை தான் அப்படின்னா ரெஸ்டாரன்டில் சாப்பிடப் போனால் காலம்பர செய்து வைத்த இட்லியை ஜில்லென்று எடுத்து வர அரைமணி! அதுக்கு அரைமணிக்கப்புறமா சாம்பார், சட்னி! ஒரு பெரிய நமஸ்காரம் போட்டுட்டு மறுநாளே கிளம்பிட்டோம்.:(

   Delete
  2. இந்த லாட்ஜ் மட்டும் என்ன குறைச்சல் வாடகையா என்ன? பத்து வருஷம் முன்னாடியே ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். இப்போ இரண்டாயிரம். ஏசி. வேலை செய்யாததால் ஆயிரத்து ஐநூறு! :(

   Delete
 11. பத்து வருடம் கடந்தும் அதே விடுதி, அறை கிடைத்தது ஆச்சர்யம்தான்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை கில்லர்ஜி! ஆனால் அந்த வசதி இப்போ இல்லை! :( அப்போ உண்மையாவே நல்ல வசதியா இருந்தது.

   Delete
 12. சாப்பாடு ஒருபுறம் இருக்கட்டும்..
  நிம்மதியாக ஒருபொழுது தங்கி - தூங்குவதற்குத்தான் எத்தனை இடைஞ்சல்கள்...

  நீங்கள் - மயிலாடுதுறையிலேயே தங்கியிருந்திருக்கலாம்...

  ஜகஜ்ஜால விளம்பரங்களால் - கும்பகோணம் அதிக செலவுக்கான ஊராகி விட்டது...

  மற்ற நாட்களில் காற்று வாங்கும் - படாடோப விடுதிகள்
  வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சரிகட்டிக் கொள்கின்றன..

  சந்து பொந்துகளில் இருந்த பழைய வீடுகள் எல்லாம் தங்கும் விடுதிகளாகி விட்டன..
  ஆயினும் ஒன்றும் சொல்வதற்கில்லை...

  பெரியதொரு குழுமத்திலிருந்து வெளியாகும் அச்சு ஊடகத்தில்
  அட்ட வீரட்ட தலங்கள் கும்பகோணத்தைச் சுற்றி இருக்கின்றன என்று
  எழுதியிருக்கின்றார்கள்... என்ன ஒரு பொய்!.. ஆனாலும் மக்கள் அதையே நம்புகின்றார்கள்...

  கும்பகோணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி - உண்மை நேர்மை தவிர்த்த எல்லாமும்!...

  பேருந்து நிலையத்தின் மாடியில் ஹோட்டல் கௌரி சங்கர்..
  முன்பு மிகவும் நன்றாக இருந்தது... தஞ்சையிலிருந்து குடந்தை சென்றால் அங்கே உணவருந்தாமல் வரமாட்டோம்...

  ஒரு வெங்கலக் குண்டானும் நாலைந்து பித்தளை டவரா செட்டுகளும் - டிகிரி காஃபி ஆகிவிட்டன...

  நாலாபுறமிருந்தும் கும்பகோணத்துக்குள் நுழைவதற்கு முன் சில இடங்களில் நடுத்தர உணவகங்கள் தோன்றியுள்ளன... ஓரளவுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் தரம்!..

  எப்படியோ ஓய்வூதியப் பணத்தை வைத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு உகந்ததாகி விட்டது...

  ஆனாலும் மனம் மிகவும் வருந்துகின்றது -
  நாம் பார்த்து மகிழ்ந்த கும்பகோணம் காணாமல் போயிற்றே.. என்று!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! முதல்லே மயிலாடுதுறையில் தங்கற ஐடியா தான்! அப்புறமா என்னமோ திடீர்னு மாத்திட்டார். கும்பகோணத்தில் நாங்க ராயாஸ் ஓட்டல் தவிர்த்து பெரிய கடைத் தெருவில் ஒரு ஓட்டல் (காசி டவர்ஸுக்கு எதிரே) அங்கே தங்குவோம். அங்கே இல்லைனா கூடியவரை மாயவரம் வந்து தங்குவோம். நீங்க சொல்றாப்போல் கௌரிசங்கர் நாங்களும் சென்னை அம்பத்தூர்-கும்பகோணம் பயணங்களில் பல முறை சாப்பிட்ட இடம். உண்மையாவே சாப்பாடு நல்லா இருந்தது. அது ஒரு காலம். கும்பகோணத்தில் செட்டில் ஆகும் எண்ணம் நம்ம ரங்க்ஸுக்கு ஒரு காலத்தில் இருந்தது. நல்லவேளையா அதன் மாறிய முகத்தைப் பார்த்துப் பிடிக்காமல் போச்சு!

   Delete
  2. /// கும்பகோணத்தில் செட்டில் ஆகும் எண்ணம் ...///

   நல்லவேளை..
   கும்பகோணம் தப்பித்தது...

   இஃகி... இஃகி!...

   Delete
 13. Replies
  1. வாங்க டிடி. நன்றி.

   Delete
 14. திட்டமிட்டுச் செய்ய வேண்டும் திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்பல ஆண்டுகள் சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவில்களுக்கு சென்றிருக்கிறோம் எந்தபிரச்சனையும் சந்தித்ததில்லை

  ReplyDelete
  Replies
  1. ஐயா, முறையாகத் திட்டமிட்டாலும் எதிர்பாராத தடங்கல்கள், சங்கடங்கள் நேரும். இப்போ நாங்கள் சென்ற சமயம் அடுத்தடுத்து முகூர்த்தநாள். தஞ்சை ஜில்லாக் கோயில்கள் மட்டுமின்றி ஓட்டல்களும் நிரம்பி வழியும். ஆகவே கிடைத்த இடத்தில் தங்கினோம் என்றாலும் முன்னால் தங்கி இருக்கோமே என்னும் எண்ணமும் தான் காரணம். நாங்களும் சிதம்பரத்திலோ, மாயவரத்திலோ தங்கிக் கொண்டு வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருக்கோம் பல முறை. எனக்கு நினைவில் இருந்து இது எத்தனை முறை என்ற கணக்குப் போட முடியலை! எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரி எதிர்பார்க்கவும் முடியாது!

   Delete
 15. உங்க பயண அனுபவத்தைப் பார்த்து எங்க எங்க தங்கினீங்க, என்ன சாப்பிட்டீங்க, எங்க என்ன பிரசாதம் கிடைச்சது என்று பார்க்கலாம்னு பார்த்தா ஒரே புலம்பல் மஹாத்மியமா இருக்கே.

  இடுகையைப் படித்தான் எங்க தங்கக் கூடாது, எங்க சாப்பிடக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம் போல் இருக்கே.

  முன்னமே இடுகை எழுதி இப்போ வெளியிட்டீங்களா இல்லை இடுகையே இப்போதுதான் எழுதினீங்களா?

  நான் கொஞ்சம் பிஸி. நிறைய தளங்களைப் படிக்கவில்லை, கருத்தும் இடவில்லை. இனித்தான் படிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, விலாவரியா எழுதுவதின் காரணமே நாங்கள் அனுபவித்தவற்றை மற்றவரும் அனுபவிக்க வேண்டாம் என்னும் எண்ணமே காரணம். எங்கே தங்க வேண்டாம் என்பதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. அதே போல் சாப்பாடும்! வைத்தீஸ்வரன் கோயிலில் சதாபிஷேகம் ஓட்டலுக்குள் இருக்கும் ரெஸ்டாரன்ட் தவிர்த்து வேறே எங்கேயும் சாப்பாடு நன்றாக இல்லை. சதாபிஷேகத்தில் அறை முன்பதிவு செய்ய ஒரு மாசம் முன்னாடிச் செய்யணும். ஒருவேளை நம்மால் போக முடியலை எனில்? அதை எல்லாம் யோசித்துத் தான் சில சமயங்கள் முன்பதிவு செய்வதில்லை.

   Delete
  2. நான் வேர்டில் எழுதி காபி, பேஸ்ட் பண்ணுவது என்பது புராணங்கள், இதிகாசங்கள் பத்தி எழுதுவது மட்டும் தான். ஏனெனில் பின்னால் அவற்றைத் தொகுத்துப் போட வசதியா இருக்கும். இதெல்லாம் அவ்வப்போது நேரிடையாக வலைப்பக்கத்தில் எழுதுவது தான்! திருத்தக் கூட நேரம் இருக்காது! அதனால் தான் எ.பி.களைச் சுட்டிக்காட்டிய பின்னர் திருத்த நேரிடுகிறது.

   Delete
 16. இந்தப் பயணங்கள் மேற் கொள்ள மிகுந்த தீவிரம் வேண்டும் கீதாமா.
  நாங்க போகும்போது பாண்டியன் ஹோட்டல் இருந்தது. மாயவரமா ,சீர்காழியா நினைவில்லை.
  எல்லா இடத்திலும் சுத்தம் இருந்தால் மட்டுமே தப்ப முடியும். உங்கள் ரங்க்ஸ் மாமா போல எனக்கும் பசி தாங்குவதிலை.

  கும்பகோணம் எப்படி மாறி இருக்கு என்பதை ஒரே ஒரு சாப்பாடு காட்டிக் கொடுத்தது.
  பழையகாலம் போலக் காப்பி முதற்கொண்டு கொண்டு போக வேண்டியதுதான்.
  தாத்தா கொண்டு போவார் சத்து மாவு முதற்கொண்டு.

  மூணு மாசம் அறுப்பும் போது கிராமத்து வீட்டில் தங்கி சுயம்பாகமாக சமையல்.
  இப்ப நினைத்தால் பிரமிப்பாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வல்லி, மாயவரத்தில் நல்ல ஓட்டல்கள், லாட்ஜ்கள் பல இருக்கின்றன. முதல்லே அப்படித் தான் சொன்னார். பின்னர் மாற்றி விட்டார். நம்ம நேரம்! வேறே என்னத்தைச் சொல்வது! :)))

   Delete
  2. கும்பகோணத்தில் ஒரு சில தங்குமிடங்கள் நன்றாக இருந்தாலும் சாப்பாடு, டிஃபன் என்பது கொஞ்சம் தகராறு தான். என் மாமனார், மாமியார் ஊரில் இருந்தவரை அறுவடை சமயம் பிரச்னை இல்லை. ஆனால் தினந்தோறும் ஆட்களுக்குச் சாப்பாடு போடணும். கொல்லையில் கோட்டை அடுப்பு மூட்டிச் சமைப்பாங்க! எங்களோடு வந்த பின்னர் மாமனார் தனியாகப் போய்ப் பக்கத்து வீட்டில் சாப்பாடுக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு அறுவடையைக் கவனிப்பார். அதெல்லாம் செலவு அதிகமாகப் போகவே எண்பதுகளில் நிலம், வீடு எல்லாம் விற்றாச்சு! தென்னந்தோப்புக்களை எல்லாம் முன்னரே வித்துட்டாங்க!

   Delete