எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 21, 2019

துபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி!

ஒரு வழியாக நான்கு மணி நேரப் பயணத்தின் பின்னர் துபாய் வந்து சேர்ந்தோம். அங்கே வெளியே வரும்போதே வீல் சேர் பற்றி விசாரித்ததில் ஏரோ பிரிட்ஜ் முடியும் இடத்தில் காத்திருப்பார்கள் எனச் சொல்லவே அங்கே வந்தோம். எங்களைப் போல் இன்னும் 10,20 நபர்கள். அனைவருமே யு.எஸ்ஸில் ஒவ்வொரு இடம் போக வேண்டியவர்கள். அவர்களில் சிலர் எங்களைப் போல் ஹூஸ்டன் செல்பவர்களும் இருந்தார்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்தவர் ஹூஸ்டன் செல்லும் எங்களை மட்டும் தனியாகப் பிரித்து வேறொருவருடன் அனுப்பினார். அங்கிருந்து இரண்டு மூன்று இடங்களில் மின் தூக்கி மூலம் பயணித்துப் பயணித்து வேறொரு டெர்மினலுக்கு வந்திருந்தோம்னு நினைக்கிறேன். சில இடங்களில் காத்திருக்கவும் நேர்ந்தது. துபாய் நேரப்படி காலை ஒன்பதே முக்காலுக்குத் தான் எங்கள் விமானம். அப்போது எட்டு மணி ஆகி இருந்தது. கடைசியில் துபாய் விமானப் பாதுகாப்புச் சோதனையை முடித்துக் கொடுத்தார்கள். அங்கே கழுத்துச் சங்கிலி, கைவளையல் எல்லாவற்றையும் கழட்டச் சொன்னார்கள். கழுத்துச் சங்கிலியைக் கழட்டிப் போட்டேன். ஆனால் கை வளையலைக் கழட்ட முடியவில்லை. அதைச் சொல்லவும் சரினு சொல்லிட்டாங்க. பாதுகாப்புச் சோதனை முடிந்து ஹூஸ்டன் விமானம் ஏறுவதற்குப் போக வேண்டிய நுழைவாயிலுக்கு பாட்டரி கார் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தாங்க. ஏற்கெனவே 2,3 இடங்களில் பாட்டரி கார் மூலம் வந்திருந்தோம். அதில் ஓர் இடத்தில் சென்னையில் பார்த்த உறவினரை மறுபடி பார்த்தோம். அவங்க சியாட்டில் போவதால் அதற்கான பாட்டரி காருக்குக் காத்திருந்தாங்க. அவங்களிடம் போயிட்டு வரேன்னு சொல்லிக் கொண்டே வந்தோம்.

ஹூஸ்டன் செல்ல பாட்டரி கார் ஏறவேண்டிய இடத்தில் இருந்தவர் ஏனோ தாமதம் ஆக்கிக் கொண்டிருந்தார். மணியும் எட்டரைக்கு மேல் ஆகவே நாங்களே போய் விசாரித்தோம். அங்கே இரண்டு பாட்டரி கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்ள அங்கிருந்த இன்னொரு ஊழியரும் அதை ஆமோதித்தார். அதற்குள்ளாக எங்களைப் போல் ஹூஸ்டன் செல்லவேண்டியவர்கள் அனைவரும் வந்து சேர எல்லோரையும் அரை மனசாக அந்த ஊழியர் அனுப்பி வைத்தார்.  ஒரு வழியாக நாங்கள் செல்லவேண்டிய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே யு.எஸ்.பாதுகாப்புச் சோதனை. நல்லவேளையாக அதிகம் சோதிக்கவில்லை. மடிக்கணினியைப் பிரிச்சு வைக்கச் சொல்லிட்டு, கைப்பையையும் முக்கிய சாமான்களை மட்டும் திறந்து பார்த்துவிட்டு ஸ்கானிங் எனப்படும் நுட்பமான ஊடுகதிர்ப் பரிசோதனையை முடித்துவிட்டு அனுப்பி விட்டார்கள். இதற்குள்ளாக மணி ஒன்பதே கால் ஆகி விமானம் கிளம்பும் நேரமும் வந்து உள்ளே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே எந்த வீல்சேரும் வரவில்லை. நடந்தே போகவேண்டி இருந்தது. நீளமான பாதை! விமானத்துக்குள் போகக் கொஞ்சம் உயரே வேறே ஏறணும். மூச்சு வாங்க ஏறிப் போனோம். சென்னையிலேயே இங்கே இந்த விமானத்துக்கும் போர்டிங் பாஸ் கொடுத்துவிட்டதால் இங்கேயும் ஓரத்து இருக்கைகள் இரண்டு. உள்ளே போய்ச் சாமானை வைத்தோம். சிறிது நேரத்தில் ஜன்னல் இருக்கைக்கும் ஆள் வந்தார். உள்ளே வந்ததில் கொஞ்சம் மூச்சு வாங்கியதால் நான் விமானப் பணிப்பெண்ணை அழைத்துக் குடிக்கக் குடிநீரும் ஜூஸ் ஏதேனும் கொடுக்கச் சொல்லிக் கேட்கவே அவர் இருவருக்கும் அதை எடுத்து வந்து கொடுத்தார். நடு இருக்கைக்கு ஆள் இல்லை. ஜன்னல் இருக்கைக்காரன் ஜம்மென்று நடுவில் உள்ள கைப்பிடியை எடுத்து விட்டுக்காலை நீட்டிக் கொண்டு இரண்டு இருக்கைக்கான தலையணை, கம்பளி எல்லாவற்றையும் எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.  ஆகவே விமானம் கிளம்பியதும் சிறிது நேரத்தில் தொலைக்காட்சியில் "ஊரி" படம் பார்க்க ஆரம்பித்தேன்.

URI - New poster.jpg

படம் யதார்த்தமாகவும் உண்மையைச் சொல்லுவதாகவும் அமைந்திருந்தது.  இதற்குப் பரிசுகள் கிடைத்தது அதிசயமே இல்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை, நிகழ்வுகள் நடக்கும் இடங்களின் அமைப்பு எல்லாம் அப்படியே அமைந்திருந்தது. நம் கண் முன்னர் வடகிழக்கு மாநிலங்களும், புது தில்லியும் வந்து போயின. பரேஷ் ராவலின் நடிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்தது எனில் பிரதமராக நடித்திருந்த ரஜித் கபூரும் அருமையாக நடித்திருந்தார். உடை, அலங்காரங்கள் அனைவருக்குமே நன்றாகப் பொருந்திப் போயிருந்தன. கருடாவைத் தயாரித்த இஷானாக நடித்திருந்த நபரும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தார். மொத்தத்தில் உண்மையை உள்ளபடி கூறிய படம். இதன் பின்னர் நான் பார்த்தது சஞ்சீவ் குமார்,ராக்கி நடித்த ஸ்ரீமான், ஸ்ரீமதி என்னும் மிகப் பழைய படம். ஏற்கெனவே சில முறை பார்த்திருந்தாலும் மறுபடி பார்த்தேன். படம் முன்னர் கவர்ந்த மாதிரி இப்போது கவரவில்லை.

சிறிது நேரத்தில்  உணவு வந்தது. அதே பொங்கல் ஆனால் இம்முறை கிச்சடி முறையில் மிளகாய்ப் பொடி போட்டு! காய்கள் ஏதும் போடவில்லை. தொட்டுக்க குஜராத்தி முறையில் இனிப்பாக ஏதோ கூட்டு. அந்தப் பிஞ்சுச் சோள சாலட் மாத்திரம் நன்றாக இருந்தது.  சாலட் ஒன்று கொடுத்தார்கள் பிஞ்சுச்சோளம் போட்டு. சாட் மாதிரி அருமையான ருசியுடன் இருந்தது. ஜவ்வரிசியில் ஏதோ இனிப்பு. ஜைனர்கள் ஜவ்வரிசி சேர்ப்பார்களா? தெரியலை! பழத்துண்டங்கள், வெண்ணெய், ஜாம் இலை. பின்னர் காஃபி. காஃபி மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் மற்ற விமான சேவை மாதிரி இல்லாமல் நன்றாக இருந்தது. இதற்கு முன்னர் விமானப் பயணங்களில் ராயல் நேபாளில் மட்டுமே அருமையான காஃபி கிடைத்தது. 2 முறை வாங்கிக் குடித்தோம். இந்தப்படம் சிங்கப்பூர்  விமானத்தில் ஜைன உணவு. இதில் தயிரெல்லாம் இருக்கிறது. ஆனால் எமிரேட்ஸில் எங்களுக்குத் தயிர் கொடுக்கவில்லை. பொதுவாக சைவ உணவோடு தயிர் கண்டிப்பாக இருக்கும். இவங்க ஏனோ கொடுக்கலை.

படத்துக்கு நன்றி கூகிளார்!

விமானத்தில் ஜைன உணவு க்கான பட முடிவு

மிக நீண்ட பயணம். ஐந்தாயிரம் மைலுக்கும் மேலே. அட்லான்டிக் கடல் வரவே ஆறு மணி நேரங்களுக்கும் மேல் ஆகி விட்டது.  நடுவில் கொஞ்சம் தூங்கிக் கொஞ்சம் விழித்து என இருந்தோம். அவ்வப்போது ஜூஸ், காஃபி, தேநீர், மற்றும் மற்றக் குடிபானங்கள் எனக் கேட்டுக் கேட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். நாங்கள் அவ்வப்போது ஜூஸ் வாங்கிக் குடித்தோம். வேறே உணவு ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீண்ட பதினைந்து மணி நேரப் பயணத்தின் பின்னர் ஹூஸ்டன் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. விமானத்தின் பைலட்டும் அதை உறுதி செய்தார். மாலை நான்கு மணி சுமாருக்கு ஹூஸ்டனில் விமானம் தரை இறங்கியது. மெதுவாக  விமானத்தை விட்டு வெளியே வந்தோம். விமானத்தில் இருந்து இறங்கும் இடத்திலேயே அதிகாரிகள் கையில் பட்டியலையும் நீண்ட வரிசையில் வீல் சேர்களையும் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.

முதலாக வெளிவந்த என்னைக் கிட்டத்தட்டக் கையைப் பிடித்து இழுத்து வீல் சேரில் அமர வைத்தார் ஓர் அதிகாரி . என் பெயரைக் கேட்டு உறுதியும் செய்து கொண்டார். நம்மவர் வரணும்னு சொன்னேன். அவர் என்னமோ கொஞ்சம் மெதுவாகத் தான் வந்தார். ஆகவே அந்த அதிகாரி இருவரையும் சேர்த்தே அனுப்புவோம், கவலை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு நம்ம ரங்க்ஸ் வந்ததும் அவரையும் பெயரைக் கேட்டு உறுதி செய்து கொண்டு வீல் சேரில் அமர வைத்து இருவரையும் வழி அனுப்பினார். வீல் சேர் எங்கும் நிற்காமல்  இமிகிரேஷனிலும் கஸ்டம்ஸிலும் மட்டும் நின்றது. வழக்கம்போல் இமிகிரேஷனில் எத்தனை மாதங்கள் எனக் கேட்டுவிட்டு ஆறு மாதம் என்றதும் மார்ச் எட்டாம் தேதிக்குக் கிளம்பத் தேதி குறிப்பிட்டு அனுப்பினார்கள். கஸ்டம்ஸிலும் சாமான்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்ததும் பையரும் விமான நிலைய வரவேற்பறைக்கூடத்தினுள் நுழைந்தார். அவருடன் அங்கேயே ஸ்டார் பக்ஸில் ஒரு லாட்டே காஃபி சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பி வந்தோம். குஞ்சுலு எங்களைப் பார்க்க மாட்டேன் என முகத்தை மூடிக் கொண்டது.

55 comments:

  1. துபாயில் அண்டர்க்ரௌண்டில் டெர்மினல் ஒன்றிலிருந்து டெர்மினல் மூன்றுக்கு நடந்து போயிருப்பீர்கள் மேலே ரன்வே...

    குஞ்சுலுவை கேட்டதாக சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, அன்டர்கிரவுன்டில் எல்லாம் போகலை. அப்படிப் போனதாகவும் சொல்லலை. அதிகம் நடக்கவும் இல்லை. லிஃப்டில் இருந்து வெளியேறியதும் கொஞ்சம் நடை, மறுபடி வேறொரு மின் தூக்கி! என இருந்தது. சுமார் அரைமணிக்குள்ளாக நாங்க போகவேண்டிய டெர்மினலுக்கு வந்துட்டோம்னு நினைக்கிறேன். லுஃப்தான்ஸாவில் போனாலும் ஃப்ராங்க்ஃபர்ட்டில் டெர்மினல் மாற இப்படித் தான் அழைத்துச் சென்று கடைசியில் பாட்டரி கார் மூலம் நுழைவாயிலுக்குக் கொண்டு விட்டார்கள். குஞ்சுலு கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.

      Delete
    2. துபாயிலிருந்து போவதால் வழி ஃப்ராங்க்ஃபர்டா அல்லது லுஃப்தான்ஸாவில் போனதால் அங்கு போனீர்களா ? ஆனால் வெளியில் போயிருக்க முடியாது இல்லையா ?

      இப்படி தருணங்களில் பத்து மணி நேரம் வெயிட்டிங் பிளைட்டில் போகணும். தங்குவதற்கு ரூம் கொடுப்பார்கள் செலவு இல்லாமல் ஒருநாள் சற்றேனும் வெளியே சுற்றி இருக்கலாம்.

      Delete
    3. வாங்க கில்லர்ஜி, லுஃப்தான்ஸாவில் போனால் தான் ஃப்ராங்க்ஃபர்ட்டில் மாறணும். அதில் சுமார் ஏழு, எட்டு மணி நேரப் பயணம் சென்னையில் இருந்து. அதன் பின்னர் அம்பேரிக்கா போகப் பத்து மணி நேரத்துக்கும் மேல் ஆகும். துபாயில் இருந்தும் கிட்டத்தட்ட அதே நேரம் தான். அதிக நேரமெல்லாம் காத்திருக்க வேண்டி இருக்காது. அதிக பட்சமாக நான்கு மணி நேரம் தான். ஆகவே வெளியே ஓட்டல்களில் எல்லாம் தங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. லுஃப்தான்ஸாவில் இரண்டே மணி நேரம் தான் காத்திருப்பு.

      Delete
  2. May be there is a restriction for dairy product in jain meal. It’s better to order as ‘Asian Hindu vegetarian meals’ rather than a Jain meal. Curd is available if it in the menu.
    Rajan

    ReplyDelete
    Replies
    1. Unknown, Welcome. Normally we used to choose the AVML. (Asian Vegetarian Meal) But it is very hot and spicy. It affects our stomach. So this time we choose Jain Meal. It is very much sadhvik, but no curd or milk items. We know the other meals have curd. The meal is ok and it won't hurt our stomach. Only thing we missed curd. that is all.

      Delete
  3. இமிகிரேஷனில் ஆறுமாதம் தங்க அனுமதி தந்தாலும் நீங்கள் விரும்பினால் மேலும் ஆறுமாதம் எக்ஸ்டன்ஷன் வாங்கி இருக்கலாம். வந்ததே வந்தீட்டீங்க எங்க நாட்டுல ஒரு வருஷம் தங்கிவிட்டு போங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆறுமாத எக்ஸ்டென்சன் அங்கேயே அப்படியே வாங்கி கொள்ளலாமா?

      Delete
    2. வாங்க தமிழரே, பதினைந்து வருடங்களாக வந்து, வந்து போய்க் கொண்டிருக்கோம். ஆறு மாசத்துக்கு மேலே தங்குவதில்லை. சொல்லப் போனால் ஆறு மாசம் முடியறதுக்குப் பத்துப் பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாசம் முன்னே கிளம்புகிறாப்போல் ஆகி விடும். :) பையருக்கும், பெண்ணுக்கும் கோபம் வரும். தங்கலைனு! இப்போக் கூடப் பெண் மே மாதம் வரை தங்கிப் போங்கனு தான் சொல்கிறாள். :)))))

      Delete
    3. ஆமாம் ஸ்ரீராம் இங்கேயே வாங்கி கொள்ளலாம்..... 4 வது மாத முடிவிலே அதற்காக அப்பளை செய்தால் அனுமதி கிடைக்கும்...... ஆனால் ஒன்று ஒரு வருஷத்திற்கு மேல் ஒரு நால் அதிகமாக தங்கினால் அடுத்து வரும் போது அனுமதி கிடைக்காது அதனால் ஒரு வருடம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பே கிளம்பிவிடுவது நல்லது.

      Delete
    4. உங்களது நிலமை புரிகிறது... பெற்றோர்களுக்கு இங்கே வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருப்பது என்பதே மிக அதிகம்.. நீங்கள் நாலைந்து மாதம் இருப்பதே மிக அதிசயம்... உங்களை மாதிரி இருப்பவர்களுக்கு இங்கே வந்து இருப்பது கையை காலை கட்டி போட்டு சிறையில் இருப்பது போலத்தான் அதாவது வீட்டுக்குள்ளே அரெஸ்ட் பண்னிய மாதிரிதான்.. ஆனால் என்ன பேரப் பிள்ளைகளுக்காக சில பாட்டி தாத்தாக்கள் இங்கே சில மாதம் அதிகமாக தங்கி செல்லுவார்கள் அவர்கள் இந்தியாவிற்கு சென்றாலும் மனம் எல்லாம் பேரப்பிள்ளைகள் மீதுதான் இருக்கும் இது ஒரு வகையான தவிப்புதான்

      Delete
    5. நாங்க தான் வந்து வந்து போகிறோமே! அதனால் ஆறு மாதங்களுக்கு மேல் தங்குவதில்லை.

      Delete
    6. க்ரீன் கார்ட் கூட வாங்கித்தரதாத் தான் சொன்னாங்க. வேண்டாம்னு பிடிவாதமாச் சொல்லிட்டோம். க்ரீன் கார்ட் வாங்கினால் ஒரு வருஷத்துக்கு ஒருதரமோ என்னமோ கட்டாயமா அமெரிக்கா வந்து ஆறு மாசம் முழுசாத்தங்கிட்டுப் போகணும்.

      Delete
  4. நீண்ட பயணம் தான். எமிரேட்ஸ் நன்றாகத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். டெர்மினல்3 ந்நன்றாக இருக்கும். முன்விபை. விட பயணிகள் அதிகரித்து விட்டார்கள். நல்ல சினிமா கிடைத்தது மகிழ்ச்சி. ஸ்விஸ் ஏர் மட்டம் சினிமா விஷயத்தில். சாக்லேட் கொடுத்த வண்ணம் இருப்பார்கள். தண்ணீர் படும் பாடு சொல்ல வேண்டாம். வைன் வந்து கொண்டே இருக்கும் அனைவரும் உறங்கி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இந்தப் பயணங்களில் 3 முறை துபாய் விமான நிலையம் வந்து வந்து சென்றது தான். உறவினர்கள் இருக்காங்க! அங்கே தங்கிப் போகும்படியும் சொல்லிக் கொண்டு தான் இருக்காங்க! ஆனால் துபாயைப் பார்க்கணும்னு ஆசை எல்லாம் வரதில்லை. விமான நிலைய டெர்மினல் பத்தி எல்லாம் விரிவாகத் தெரியாது.

      Delete
    2. /துபாயைப் பார்க்கணும்னு ஆசை எல்லாம் வரதில்லை.// - அட ஆண்டவா... அருமையான இடத்தை நீங்க பார்க்காவிட்டாலும் மாமாவாவது பார்க்கலாமே. எத்தனையோ நல்ல நல்ல இடங்கள் துபாய்ல இருக்கே.. கோவில் இருக்கு (ஏறுவது கஷ்டமோ? சிவன், முருகன், கிருஷ்ணன்). அருமையான க்ரீக்கை போட்டில் கடந்து பார்க்கலாம்...

      Delete
    3. நெல்லைத்தமிழரே, முக்கியமாய் மாமா தான் வர மாட்டேன் என்று சொல்கிறார். :)))) இத்தனைக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள்.

      Delete
  5. அந்தக் க்கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எங்கே போட்டீர்கள்?   அவர்கள் டப்பிலா?  உங்கள் பையிலா?!!!   
    உரிய இடத்துக்கு நேரத்துக்கு அனுப்ப அந்த ஊழியருக்கு ஏன் அரைமனசு?!!!

    ReplyDelete
    Replies
    1. அவங்க ஒரு ட்ரே கொடுப்பாங்க ஸ்ரீராம், பெல்ட், தோல் பொருட்கள் இருந்தால் அவற்றையும் கழட்டிப் போடணும். பெண்கள் நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றைக் கழட்டிப் போடணும். மடிக்கணினியோட மவுஸ் இருந்தால் அது உட்பட சார்ஜரோடு சேர்த்துத் தனி ட்ரேயில் போட்டுடணும்.

      Delete
  6. ஊரி என்றொரு படமா?   ஸ்ரீமான் ஸ்ரீமதியும் கேள்விப்பட்டதில்லை!   அமெரிக்காவில் வீல்சேர் உடனே கிடைத்தது பாராட்டத்தக்கது.   கீழே இறங்கும்போதே லிஸ்ட் வைத்துக்கொண்டு காத்திருந்து அமரவைப்பதும் பாராட்டவேண்டும்,  நம்மூரில் எல்லாம் எதிர்பார்க்க முடியாத செயல்.

    ReplyDelete
    Replies
    1. "ஊரி" யில் நடந்த தாக்குதல் குறித்தாவது தெரியுமா? அதுக்குத்தானே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திப் பழிவாங்கினாங்க. பேப்பரெல்லாம் படிக்கிற வழக்கம் உண்டா இல்லையா? இஃகி,இஃகி, சிறந்த படம், சிறந்த நடிகர்னு பல பரிசுகள் வாங்கினதே! அதுவானும் தெரியுமா?

      Delete
    2. ஹிஹிஹி...   பெயர் எல்லாம் மனசில் பதியவில்லை.   விருது விஷயங்கள் தெரியாது!

      Delete
    3. //விருது விஷயங்கள் தெரியாது!// !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  7. குஞ்சுலு இந்நேரம் உங்களிடம் பழகி ஒட்டிக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.  ஆரம்பத் தயக்கங்கள் விலகி இருக்கும் இந்நேரம்.

    ReplyDelete
    Replies
    1. குஞ்சுலுவுக்கு அதுவா வந்து விளையாடணும். நானோ மாமாவோ போய்த் தொட்டால் தட்டி விடும். அதுவா வந்து கொட்டம் அடிக்கும். அப்போ நாமும் விளையாடிக்கலாம்.

      Delete
    2. குழந்தைகளும்வளர்கிறார்களே அவர்கள் வளரும்போது நம் எதிர்பார்ப்புகள் பலவும் நிகழ்வதில்ல

      Delete
  8. வாழ்க நலம்...

    அப்புறமாக வருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க மெதுவா வாங்க துரை. அவசரமே இல்லை.

      Delete
  9. பயண அனுபவம், பேத்தியின் குறும்புகள் படிக்க ரசனை.
    பயணம் தான் கஷ்டம். வீட்டுக்கு போனால் சுகம்.

    ReplyDelete
    Replies
    1. பயணம் ரொம்பவே கஷ்டம் தான். ஆனால் குழந்தைகளைப் பார்க்கப் பயணம் செய்தே ஆக வேண்டி இருக்கு!

      Delete
  10. குஞுசுலுவுடன் இனிய பொழுதுகள் களித்திருங்கள்.பொழுது போவதே தெரியாது.

    ReplyDelete
  11. துபாய் வர ஆசை வந்ததில்லையா? உலகத்தின் மிகச் சிறந்த விஷயங்கள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றன! உலகத்தின் ஏதாவது ஒரு நாட்டில் ' உலகத்திலேயே ஒரு பெஸ்ட் " இருந்தால் அதை உடனேயே அதை விட சிறந்ததாக இங்கு கொண்டு வந்து விடுவார்கள்! அடுத்த முறை பயணம் செல்லும்போது துபாயில் இறங்கி, தங்கி இந்த நாட்டையும் பார்த்து ரசியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. துபாயில் நெருங்கிய உறவுகள் பலர் இருக்கிறார்கள். அழைக்கவும் அழைக்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ போக விருப்பம் இல்லை. இந்த முறைப் பயணமே கஷ்டமாக இருந்தது. அடுத்த முறை எப்படியோ? :)))))

      Delete
  12. இப்படித்தான் துபாய் மற்றும் அபுதாபியில் எல்லாம்.. இப்போது மும்பையிலும் கண்டேன்...

    வரிசையாகப் பெட்டிகளை வைத்துக்கொண்டு நம்மிடம் இருக்கும் உலோகம் சார்ந்த பொருட்கள் எல்லாவற்றையும் தனியாகப் போடச் சொல்லி....

    விமானம் மாற்றும்போது துபாய் லவுஞ்சிற்குள் நுழையும் போது ஒரு தரம்...
    அடுத்த விமானத்துக்கு மாறுவதற்கு லவுஞ்சை விட்டு வெளியேறும் முன் ஒரு தரம்

    அது மிகப் பெரிய சிரமம்...

    என்ன செய்வது ?.. அத்தனை கொடுமைக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றார்கள்...

    இந்தத் தடவை Cabin luggage ல் இருந்த Cappuccino packet களில் பத்து பாக்கெட்டுகளை வைத்து விட்டு கூடுதலாக இருந்தவைகளை அள்ளி வெளியே போட்டு விட்டான் கடன்காரப் பாவி... அது ஏதோ பாழாய்ப் போன சட்டமாம்... இத்தனைக்கும் 24 (10 gr) பாக்கெட்டுகள்..

    காள்... காள்... என்னவோ சொன்னான்...
    அந்தப் பயல்களிடம் விளக்கம் கேட்கவோ வியாக்யானம் செய்யவோ இயலாது..

    நல்லபடியாக சென்று சேர்ந்தவரைக்கும் மகிழ்ச்சி...

    (15 மணி நேரமா!?... யம்மாடி!..)

    ReplyDelete
    Replies
    1. நாங்க வெளிநாட்டுப் பயணம் ஆரம்பித்ததில் இருந்து இப்படித்தான் சோதனை செய்யறாங்க துரை. ஆகவே பழகிப் போச்சு. டூத் பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷாம்பூ போன்றவை இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஷிகாகோவில் இறங்கினால் காய்கள், கனிகள், விதைகள் இருக்கானு பார்ப்பாங்க.

      Delete
  13. நான் விமான பிரயாணத்தில் உள்ளே சிறிது அவ்வப்போது நடப்பேன். நீங்க அப்படி நடக்க வாய்ப்புள்ள ஓரத்தில்தான் சீட் கிடைச்சிருக்கு. ஆனா நடந்த மாதிரி தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்படி வேணா நினைச்சுக்கலாம் நெல்லையாரே! :))))

      Delete
    2. சீரியசான கேள்விக்கு என்ன பதில் தர்றீங்க? ஒரேயடியாக காலை தொங்கப்போட்டால் கொஞ்சம் நீர் கோத்துக்கொள்ளாதா? ஜன்னல் சீட் கிடைக்காவிட்டாலும் ஓரம் கிடைப்பதிலும் அட்வாண்டேஜ் உண்டு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    3. //ஆனா நடந்த மாதிரி தெரியலை.// இதற்குத்தான் பதில் கொடுத்தேன். நெல்லையாரே! :)

      Delete
  14. வணக்கம் சகோதரி

    பயணம் இனியதாக கடந்து சென்று தற்சமயம் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது சகோதரி. குழந்தை (பேத்தி) இப்போது நன்கு பழகி வருகிறாளா? தங்கள் பெண்ணின் குழந்தைகள் நன்கு பழகுவார்களா? பதினைந்து மணி நேரம் கடினம்தான். என் பையனும், ஆபீஸ் டிரெயினிங்காக ஷிகாகோ மூன்று தடவை மூன்று மாதங்கள் என சென்று வந்துள்ளார். என்னதான் வசதிகள் இருந்தாலும், ஒரு நாள் முழுவதும் விமான பயணம் என்பது கடினம்தான் என எனக்கு அப்போதெல்லாம் தோன்றும். ஆறு மாதங்கள் என்பது பறந்து விடும். பேத்தி, மற்றும் மகள்,மகன் குடும்பங்களுடன் நாட்களை சந்தோஷமாக கழியுங்கள். பயணப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, குழந்தை வருகிறாள். அவளாக வந்து கொட்டம் அடிப்பாள். சில சமயம் நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்பாள். குழந்தை தானே! சில சமயம் விளையாட்டில் சேர்த்துக் கொள்வாள். உண்மையில் இந்தப் பயணம் செய்யும் நேரம் தான் கடினம். ஏர் இந்தியா விமானச் சேவையில் மும்பை, தில்லியிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்பட்டாலும் அவை நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்க்டன், பாஸ்டன் போன்ற வட கிழக்கு நகரங்களுக்கு மட்டுமே. ஹூஸ்டனுக்கு இல்லை. ஏர் இந்தியாவில் உணவு தரமாக இருக்கும்.

      Delete
  15. நானும் இந்த பட்டரி காரில் போயிருக்கிறேனே எயார்போட்டில்... மகன் வயிற்றிலிருந்தபோது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, நீங்க வெள்ளைமாளிகை போய்த் தான் பார்த்தீங்க ட்ரம்ப் அங்கிளை. அங்கிள் எங்களைப் பார்க்க ஹூஸ்டனுக்கே வந்துட்டார்.

      Delete
    2. பாட்டரி கார் இப்போது இந்தியாவிலும் பரவலாகப் பல ரயி நிலையங்களில் செயல்படுகிறது. திருச்சியில் இதை நாங்கள் பயன்படுத்துவோம். ஸ்ரீரங்கம் கோயிலிலும் பயன்படுத்துவோம்.

      Delete
  16. தயிர் தராததுதான் இப்போ குறையா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... போற இடங்களிலெல்லாம் வீட்டுல இருப்பதைப்போலவே எதிர்பார்த்துக்கொண்டு:)..

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சைவ உணவில் என்ன என்ன தரணும் என ஒரு பட்டியலே இருக்கு. அதில் தயிரும் உண்டு. சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களில் எல்லாம் ஜைன உணவுக்குத் தயிர் தராங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே மட்டும் இல்லைனா எப்பூடி?

      வீட்டிலே என்றால் வத்தல்குழம்பு, ஜீரக ரசம் நு இல்லை சாப்பிடுவோம். அதையா கேட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  17. அது ஊரி யா? இல்ல உறி யா? கீசாக்கா..

    ReplyDelete
    Replies
    1. "ஊரி" என்பது ஜம்மு, காஷ்மீரில் உள்ள ஓர் நகரம் அதிரடி!

      Delete
  18. ////குஞ்சுலு எங்களைப் பார்க்க மாட்டேன் என முகத்தை மூடிக் கொண்டது.///
    விரலிடுக்கால் பார்க்கவில்லையோ:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அது ஓர் அழகு தான். அதையும் ரசிப்போமே!

      Delete
  19. டூயிஸ்பர்க்கில் இருந்து மகன் எனக்கு இப்படித்தான் வீல் சேர் அரேஞ்ச் பண்ணி இருந்தார். கொஞ்சம் தயக்கமா இருந்தாலும் க்யூ கட்டி நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது நிம்மதியா ஹாயா வந்து சேர்ந்தேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேனம்மை, நன்றாக நடக்க முடிந்தவர்கள் கூட வீல் சேர் கேட்கிறார்களே என நினைப்பேன். நாங்களே வீல் சேரில் போக ஆரம்பித்ததும் தான் புரிந்தது, எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும் என்பது. ஹூஸ்டனில் எங்கள் சாமான்கள் வரத் தான்நேரம் எடுத்தது. மற்றபடி சீக்கிரம் வந்து விட்டோம்.

      Delete
  20. நீண்ட பயணம்.. கொஞ்சம் அலுப்புதான்....

    ReplyDelete
  21. வாங்க வெங்கட், அரங்கத்துக்கு வந்தாச்சு போல!

    ReplyDelete