எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 18, 2019

உம்மாச்சி எல்லாம் வந்து பாருங்க!

ஜூலை மாதம் 28 ஆம் தேதி குலதெய்வம் கோயிலுக்குப் போனது குறித்துச் சொல்லி இருந்தேன். ஒன்றிரண்டு படங்கள் எடுத்தேன். அரிசிலாறை வண்டி ஓடும்போது எடுக்க முயற்சித்தால் வரலை எனக்கு! :( எடுத்தவரை படங்கள் இங்கே போட்டிருக்கேன்.

இதை இப்போப் போடறதா இல்லை. சமையல் பக்கம் போடச் சில குறிப்புக்களை எழுதிட்டு மேலும் தொடரும்போது என்ன ஆச்சுனே தெரியாமல் எழுதி வைச்சது அத்தனையும் அழிந்து விட்டது. ஆகவே மறுபடி எழுத மனம் இல்லை. அதோடு கணினியில் சார்ஜும் இல்லை. சார்ஜ் முடிவதற்குள் ஏதானும் போடலாம்னு இதைப் போட்டு இருக்கேன்.

முதலில் போனது பெருமாள் கோயிலுக்கு. மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு, அபிஷேஹம் எல்லாம் இருந்ததால் பெருமாளை தரிசனம் செய்து கொண்டு அங்கே போனோம். கீழே பெருமாள் காட்சி அளிக்கிறார்.
வேணுகோபால ஸ்வாமி. இவர் கர்பகிரஹத்திலே கண்ணுக்கே தெரியாமல் இருந்தார். அவரை எடுத்துக் கும்பாபிஷேஹம் போது பிரதிஷ்டை பண்ணியதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.

கீழே ஆஞ்சு, வெளிச்சமே இல்லை. ஆனால் முன்னர் வடைமாலை சார்த்தினப்போப் போட்டிருக்கேன்.


நுழையும்போது பெருமாளுக்கு நேரே காணப்படும் கருடாழ்வார். இன்னமும் விஷ்வக்சேனர், தும்பிக்கை ஆழ்வார் எல்லோரும் இருக்காங்க. விஷ்வக்சேனரும், தும்பிக்கை ஆழ்வாரும் ஒருத்தரே என்றும் சொல்கின்றனர்.

இந்த முறை எப்படியேனும் மாவிளக்கைப் படம் எடுக்கணும்னு நினைச்சேன். பூசாரி எடுக்கக் கூடாதுனு தான் சொன்னார். ஆனால் நான் பிரகாராம் சுற்ற வெளியே வந்தப்போ ஒரு மாதிரிக் கோணத்தில் அவசரமாக ஒரு க்ளிக்..


அபிஷேஹம் முடிந்து அம்மன் அலங்காரத்தில்


கருவிலி சிவன் கோயில்
ராஜகோபுரம் கிட்டப்பார்வையில்

சுவாமியை எடுக்க முடியலை. அம்மனை மட்டும் குருக்கள் வருவதற்குள் ஒரு க்ளிக்கோயிலுக்கு எதிரே இருக்கும் யமதீர்த்தம்60 comments:

 1. காலையில் கோபுர தரிசனம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! நன்றி.

   Delete
 2. எப்ப போட்டால் என்ன கீதாமா.
  பெருமாள் ,தாயார், அம்பாள் ஆஞ்சு படங்கள்
  எப்பொழுதும் வெல்கம்.

  மிக சுத்தமாக இருக்கிறது கோவிலும் சன்னிதிகளும்.
  உங்க மொபைல் அழகாகப் படம் எடுத்திருக்கிறது. மாவிளக்கு ஜோதி பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, உள்ளே படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டதாலே வெளியே இருந்து எடுத்தேன். :)))) பூசாரி நிவேதனம் எடுக்கப் போயிருந்தார். அதுக்குள்ளே அவசரமாக எடுத்த படம்.

   Delete
 3. படங்கள் எல்லாமே நன்றாய் இருக்கு.  ரகசியமாய் எடுத்திருக்கும் படங்கள் கூட நன்றாய் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹாஹா வ.வா.பி.ரி.

   Delete
 4. அப்போ தும்பிக்கை ஆழ்வார் என்பது பிள்ளையார் இல்லையா?  அல்லது பிள்ளையாருக்குதான் விஷ்வக்சேனர் என்று பெயரா?

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஒருத்தர் இருக்காங்க. வயதில் சின்னவங்க என்றாலும் இம்மாதிரி விஷயங்களில் பெரியவங்க. அவங்க கிட்டே கேட்டுச் சொல்றேன். அல்லது நெ.த. உங்க பாஸ். தி/கீதா, வல்லி, ஏகாந்தன் ஆகியோரைத் தான் கேட்கணும்.

   Delete
  2. ஸ்ரீராமுக்கும் பாருங்க இந்தக் கன்ஃப்யூஷன்...மீக்கும் வந்தது கீழ போட்டுருக்கேன்..

   அதானே ஸ்ரீராம் சொல்றதுதான் நானும் சொல்லிருக்கேன்..

   ஸ்ரீராமுக்கும் கண்டிப்பா தெரிஞ்சுருக்குமே!! பாஸ்!! பாஸ்!!!

   கீதா

   Delete
  3. முன்னர் ஒருதரம் எங்க ஊர்(பரவாக்கரை பெருமாள் கோயில்) பட்டாசாரியார் சொன்ன நினைவு. அதனால் சொன்னேன். எதுக்கும் வேறு ஒருத்தர் இருக்கார்.அவர் இதுக்கெல்லாம் சரியான பதில் சொல்லுவார். அவரைக் கேட்டுச் சொல்லிடறேன்.

   Delete
 5. கருவிலி சிவன் கோவிலில் மாமா முன்னே நடப்பது தெரிகிறது.  கோவில் சுத்தமாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கோயில் பொறுப்பு இன்னமும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் தான் இருக்கிறது. அறநிலையத்துறை அலுவலகம் பெயரளவுக்கு இயங்குகிறது. ஆகவே சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது.

   Delete
 6. கணினி சார்ஜ் போய்விட்டதால்தான் ஆலைக்கு காணோம் போலிருக்கே...   சார்ஜ்ஜில போடவில்லையோ....... 

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லை. உங்களுக்குக் காலை ஆறுமணி எனில் எங்களுக்கு மாலை/இரவு ஏழரை மணி. இது அடுத்த மாதம் வரை. அடுத்த மாதத்தில் இருந்து ஒரு மணி நேரம் பின்னால் போவோம். அப்போ உங்களுக்குக் காலை ஆறு எனில் எங்களுக்கு மாலை ஆறரை. அப்போ உங்க நேரத்துக்கு வர முடியும். இப்போ சாப்பாட்டைப் பொறுத்து வரேன். ஏழு மணிக்குள் சாப்பிட்டுவிட்டால் பின்னர் மற்ற வேலைகள் முடித்துக்கொண்டு கணினிக்கு வருவேன். தோசை, அடை எனில் கொஞ்சம் தாமதம் ஆகும். இன்னிக்கு பாலக் போட்டுக் கீரை அடை! வேகவும் நேரம் எடுத்தது. ஒவ்வொருத்தராய்த் தானே சாப்பிடணும்! :)))) நான் சாப்பிடும்போது ஏழே முக்கால் ஆகிவிட்டது. உங்க நேரம் ஆறரைக்குத் தான் வரமுடிந்தது. கணினி சார்ஜில் தான் இருக்கும். இரவு முழுவதும் சார்ஜ் செய்தாலும் காலை பார்த்தால் 99% அல்லது 98% தான் இருக்கும். அதே மொபைலில் சார்ஜ் சீக்கிரம் ஆவதோடு நிற்கவும் செய்கிறது. :))))))

   Delete
 7. உம்மாச்சியை பார்த்து விட்டேன்.
  எல்லாம் அழகாக இருக்கிறது.
  மாவிளக்கு படமும் பார்த்து விட்டேன்.
  கோபுர தரிசனம் செய்து விட்டேன்.
  இறைவன் தரிசனம் மனநிறைவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, நன்றி. படங்கள் போடுவதற்கு நிறைய இருந்தாலும் எல்லாமும் போடுவதில்லை. :))) இங்கே வந்து இன்னமும் படம் எடுக்கலை. மோதி நிகழ்ச்சிக்கு எடுத்தது தான்.

   Delete
 8. தெய்வ தரிசனம், இது திவ்ய தரிசனம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அட? கௌதமன் சார்! நீண்ட நாட்கள் கழித்து வரவு. நல்வரவு. கண் பரவாயில்லையா?

   Delete
 9. முதல் படட்த்ஹில் பெருமாள் கழுத்தில் இருக்கும் மாலை என்ன மாலை கீசாக்கா? செவ்வந்தி? அதை யூம் பண்ணி எடுத்திருக்கலாமெல்லோ..

  ஆஞ்சி தரிசனம் செய்து கொண்டேன், மிகப் பழைமைவாய்ந்த கோயில் எனத் தெரிகிறது நிலத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை பார்க்க.

  ReplyDelete
  Replies
  1. அது செயற்கை மாலைனு நினைக்கிறேன் அதிரடி, நாங்க ஸ்ரீரங்கத்திலிருந்து ஆண்டாள் மாலை வாங்கிச் சென்றோம். இது அலங்காரம் செய்யும் முன்னர் எடுத்த படம்.ரொம்பப் பழமை வாய்ந்தது இல்லை. சுமார் 500 வருடங்களுக்குள் கட்டப்பட்டது. கட்டியவங்க நம்ம ரங்க்ஸின் முன்னோர்கள். இந்தக் கோயிலையும், மாரியம்மன் கோயிலையும் கட்டிப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.சிவன் கோயில் வேறே குடும்பம்.

   Delete
 10. //விஷ்வக்சேனரும், தும்பிக்கை ஆழ்வாரும் ஒருத்தரே என்றும் சொல்கின்றனர்.//
  என்ன குழப்புறீங்க கீசாக்கா.. தும்பிக்கை ஆழ்வாரெனில்.. பிள்ளையார் என ஸ்ரீராம் சொன்னாரே..

  //பூசாரி எடுக்கக் கூடாதுனு தான் சொன்னார். ஆனால் நான் பிரகாராம் சுற்ற வெளியே வந்தப்போ ஒரு மாதிரிக் கோணத்தில் அவசரமாக ஒரு க்ளிக்..///

  ஆஆஆஆவ்வ் எலோரும் ஓடிவாங்கோ கீசாக்காவின் சாதனையைப் பாருங்கோ.. அவசரமாக படியை மட்டும் படம் பிடிச்ச அழகை ஹா ஹா ஹா ஹையோ.. இதைக் கேட்டிருந்தால் அவரே எடுங்கோ எனச் சொலியிருப்பார்ர்.. இதில பில்டப்பூ வேற. அவசரமான கிளிக் என ஹையோ ஹையோ கர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. பாவம் அதிரடி, ஒரு கண்ணாடி போட்டுக்கக் கூடாதோ? அல்லது பூதக்கண்ணாடியால் பார்க்கக் கூடாதோ? படிகளைத் தாண்டி உள்ளே மாவிளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிஞ்சிருக்கும் இல்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   பொதுவாக வைணவர்கள் பிள்ளையாரைக் கும்பிட மாட்டாங்க என்பார்கள். ஆனால் முதல் முதல் பிள்ளையார் பூஜை தான் செய்துட்டு மற்ற வேலைகள் ஆரம்பிக்கணும். அதனால் விஷ்வக்சேனருக்குச் செய்வாங்க, அவரையே தும்பிக்கையை மாட்டி விட்டு தும்பிக்கை ஆழ்வார்னு சொல்லுவாங்க எனச் சிலர் சொல்றாங்க. நான் இதைக் கட்டாயமாய் என் நண்பர் ஒருத்தர் கிட்டே கேட்டுச் சொல்றேன்.

   Delete
 11. அம்மனையும் யூம்ம் பண்ணியிருக்கலாம்.

  வாவ்வ் கருவிலி கோயில்... இம்முறைதான் யூப்பரா படம் எடுத்திருக்கிறா கீசாக்கா.. எடுத்தவிதம் ரொம்ப அழகாக இருக்குது.. கோபுரமும் அழகு.. கோயில் வழவும் சுத்தம்.

  அம்மன் அவசரக் கிளிக்கிலும் அழகாக இருக்கிறா.

  ReplyDelete
  Replies
  1. படம் எடுக்க அதுவும் திருட்டுத்தனமாக எடுக்கும் அவசரத்தில் ஜூம் பண்ணணும்னு எல்லாம் நினைவில் எங்கே வருது? நான் குருக்கள் வரதுக்குள்ளே அவசரமாக எடுத்தேன். உள்ளே அர்த்த மண்டபம் போகப் படிகள் ஏறணும். ஏற முடியாதுனு ஏறலை. அங்கே போனால் படம் எடுக்கக் கூடாது. இந்த அம்மனின் அழகினால் தான் அவளுக்கு சர்வாங்க சுந்தரி என்னும் பெயர். சர்வ அங்கங்களும் சுந்தரமாக அமைந்திருக்கிறதாம்.

   Delete
 12. ஏன் யம தீர்த்தம் எனப் பெயர் வந்ததோ? ஒருவேளை உயிர்ப்பலி எடுக்குமோ அங்கு.

  தீர்த்தச் சூழல் மிக அழகு தென்னை பனை என.

  நடுவில் இருக்கும் குட்டி மண்டபக் கோபுர உச்சியில் ஒருவர் இருக்கிறார்.. சிவன் போலவும் தெரியுதே? உங்களுக்கு தெரியுமோ கீசாக்கா?. பதிவு அழகு.. இம்முறை பந்தி பந்தியாக மட்டும் எழுதாமல் படத்தோடு எழுதியவிதம் என்னைப் புன்னகைக்க வக்கிறது.. கீப் இற் மேலே கீசாக்கா:).

  ReplyDelete
  Replies
  1. இந்த ஊரில் பிறந்தாலோ அல்லது இந்த ஊர் இறைவன், இறைவியைத் தரிசித்துத் திருக்குளத்தில் நீராடினாலோ அவர்கள் பின்னர் ஒரு முறை கருவில் பிறக்கமாட்டார்கள் என்பது ஐதிகம். அதனால் தான் ஊரின் பெயரும் கருவிலி என அமைந்துள்ளது என்பார்கள். தீர்த்தம் யம பயத்தைப் போக்கும் வல்லமை கொண்டது என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். இதன் உண்மையான காரணம் தற்போது யாருக்கும் தெரியவில்லை. இதற்கு பரணி தீர்த்தம் என்றொரு பெயரும் உண்டு என்பதாகக் கேள்விப் பட்டிருக்கேன்.

   Delete
  2. //நடுவில் இருக்கும் குட்டி மண்டபக் கோபுர உச்சியில் ஒருவர் இருக்கிறார்.. சிவன் போலவும் தெரியுதே?// krrrrrrrrrrrr அவர் சிவனே தான்!

   Delete
 13. நீங்கள் குல தெய்வமென்றால் எனக்கு கருவிலி சர்வாங்க சுந்தரிதான் நினைவுக்கு வரும்

  ReplyDelete
  Replies
  1. அதுவும் குலதெய்வக் கோயில் போலத்தான்.

   Delete
 14. கீதாக்கா என்னக்க குயப்பமா இருக்கே...
  தும்பிக்கை ஆழ்வார்னு எங்க ஊர்ல பிள்ளையார்னு சொல்லாதவங்க சொல்லுவாங்க...நீங்க வேற சொல்லிருக்கீங்களே..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கேட்டுச் சொல்றேன் தி/கீதா

   Delete
 15. படங்கள் எல்லாம் அழகாக வந்திருக்கு கீதாக்கா. மாமா நடக்கிறாரே வேக வேகமாய்!!!!!!!

  பரவால்லையே அக்கா சீக்ரெட்டா படம் எடுத்துட்டீங்களே!! சூப்பர்! அது சரி அந்தத் தீர்த்தம் பெயர் ஏன் யம தீர்த்தம்?!! யம பயம் போக்க வைக்கும் தீர்த்தமோ!!

  எல்லாமே நல்லா வந்திருக்கு கீதாக்கா படங்கள். கோபுரம் அழகு!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. யமதீர்த்தம் பெயர்க்காரணம் சரியாய்த் தெரியவில்லை. ஏற்கெனவே அதிரடிக்கும் சொல்லி இருக்கேன். இந்தக்கோயில் வெளியே ரகசியமா எல்லாம் படம் எடுக்கத் தேவை இல்லை. உள்ளே தான்! :)))))

   Delete
 16. அழகான அம்மனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம் கூடவே கோபுர தரிசனமும். எல்லாப் படங்களும் அழகாக இருக்கின்றன சகோதரி.

  முதலில் உம்மாச்சி என்றதும் புரியவில்லை அப்புறம் தெரிந்து கொண்டேன் புரிந்தும் கொண்டேன். நீங்களும் அடிக்கடி பதிவில் பயன்படுத்துவதும் நினைவுக்கு வந்துவிட்டது.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. உமா+மஹேஸ்வரனைத் தான் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் "உம்மாச்சி"னு சொல்லி அதே பழக்கம் ஆகிவிட்டது துளசிதரன். நீண்ட நாட்கள் கழித்து வருகை புரிந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 17. அக்கா அந்த வடைமாலை ஆஞ்சு இன்னும் கண்ணில் நிற்கிறார்...நீங்க முன்னே போட்டது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, வடை இல்லையா, நினைவில் நிற்கும் தான்!

   Delete
 18. வணக்கம் சகோதரி

  அழகான குலதெய்வ படங்கள். படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. வெள்ளிக் கிழமை அம்மன் தரிசனம் மன நிறைவை தந்தது. பெருமாள், ஆஞ்சநேயர், அம்பாள் படங்கள் தரிசித்துக் கொண்டேன். இந்த கருவிலி அம்பாள்தானே உயரமாக முன்பு ஒரு தடவை குலதெய்வ கோவில் பகிர்வில் போட்டிருந்தீர்கள். இதையும் பெரிதுபடுத்தி தரிசிக்க நினைத்தேன். முடியவில்லை. பாக்கி படங்களை பெரிதாக்கி ரசித்தேன்.

  கோபுர தரிசனம் கண்டு தரிசித்துக் கொண்டேன்.யம தீர்த்தத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமா? அந்த குளத்தின் அமைப்பும் நன்றாக உள்ளது. நிர்வாகத்தினர் நன்றாக பராமரித்து வருகிறார்கள்.

  மாவிளக்குமா படமும் அவசரத்தில் எடுத்தாலும், சிறப்பாக வந்துள்ளது. உள்ளே மூர்த்திகளை படம் எடுக்கும் போது நாம் வைத்த விளக்குமா படத்தை ஏன் எடுக்கத் தடை.? இருப்பினும் படம் எடுத்து எங்களையும் அதன் அருளை பெற வைத்து விட்டீர்கள்.. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. முதல்லே எனக்கும் பெரிசாக்க முடியலை கமலா. பின்னர் தனியாக ஒரு பக்கத்தில் திறந்தது. ஆனால் தெளிவாக வரலை. ஆடினாற்போல் கலங்கலாகத் தெரிந்தது. உள்ளே மூர்த்தியையும் நான் ரகசியமாகத் தான் எடுத்தேன். எல்லாம் அவசரத்தில். உள்ளே முன்னெல்லாம் எடுக்க ஒண்ணும் சொல்லலை. இப்போக் கூடாது என்கின்றனர்.அம்பாள் பீடமும் உயரம். அவளும் உயரம். அதனால் இந்த ஊர்ப் பெண்களே உயரமாக இருப்பார்கள் எனச் சொல்லுவார்கள். எனக்கு அப்படித் தெரியலை.

   Delete
 19. நான் பார்க்கலியே அந்த வடை மலையை ?? எங்கே எப்போ லிங்க் ப்ளீஸ் .படங்கள் அழகு கோபுரம் படம் லாங் ஷாட்டில் செம க்ளியர் ..இடம் சுத்தமா பராமரிக்கிறாங்க 

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா வடைமாலைப் படம் போடுகிறேன் ஏஞ்சல்!

   Delete
  2. ஏஞ்சல், திடீர்னு அந்த வடைமாலைப் பதிவைக் காணோம். வடைகளைப் பற்றி நெ.த. கொடுத்த கருத்துக்கள் கூட மனசில் இருக்கு. ஆனால் அந்தப் பதிவும் வடைமாலை சார்த்திய ஆஞ்சியும் எங்கே?

   Delete
 20. இதுக்குதான் அடக்கவொடுக்கம் கூட சேராதிங்கன்னேன் :) அதே போல் பூசாரிக்கு தெரியாம படம் எடுத்திருக்கிங்க :))

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி,இஃகி, நான் எங்கே சேர்ந்தேன்? நீங்க தான் அவங்களுக்கு "செக்" ஏன் இந்த மாசம் "செக்" கொடுக்கலையா உங்க தலைவி? :P:P:P

   Delete
 21. யமதீர்த்தம் பெயர் காரணம் ???அக்கா அப்டியே அந்த ஆஞ்சநேயர் வடையை நாம் சும்மா செய்து சாப்பிடலாமானும் சொல்லுங்க ?முடிஞ்சா உங்க ரெசிபியும் கொடுங்க :) ரொம்ப நாள் ஆசை 

  ReplyDelete
  Replies
  1. ஆஞ்சநேயர் வடை செய்முறை சொல்றேன். நெல்லையார் உடனே படம் போடணும் என்பார். என்றாலும் உங்களுக்காகப் போடுகிறேன். நிறைய நாட்கள் வைச்சுக்கலாம். எப்போ வேணாப்பண்ணிச் சாப்பிடலாம்.

   Delete
 22. ஒரு கணவர் தெய்வ நம்பிக்கையற்றவர் அவர் மனைவி தீவிர ஆஞ்சி பக்தை மலைக்கோவில் ஏற முடியா சூழல் . ஆனா மனைவியை சமாதானப்படுத்த இவர்  தனியே  வடைமாலை எடுத்திட்டு மலைக்கோவில் போவார் இஷ்டமில்லாம கோவிலுக்கு போகாம கார் ஜன்னல் வழியே தூக்கி வீசுவார் வீசிட்டு திருப்பி பார்த்தா ஒரு ரியல் ஆஞ்சி அந்த மாலையை பிடிச்சிருக்கு .இவர் ஷாக்காகி நிற்பார்ன்னு குமுதம் புக்கில்  ஸ்டோரி படிச்சேன் :) அது நினைவு வந்துச்சி 

  ReplyDelete
 23. படிச்ச நினைவு இருக்கு எனக்கும்.

  ReplyDelete
 24. ///சமையல் பக்கம் போடச் சில குறிப்புக்களை எழுதிட்டு மேலும் தொடரும்போது என்ன ஆச்சுனே தெரியாமல் எழுதி வைச்சது அத்தனையும் அழிந்து விட்டது. ஆகவே மறுபடி எழுத மனம் இல்லை.///

  பூசாஅரி சொன்னதை கேட்கலைன்னா இப்படிதான் ஆகுமாம்.... பூசாரி என் கனவில் வந்து சொல்லிண்டு போனார்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, பூசாரி தானே உங்கள் கனவில் வந்தார். மாரியம்மன் வரலை போலிருக்கே! மாரியம்மன் வந்தால் கேட்டுச் சொல்லுங்க! :))))))

   Delete
 25. பெருமாள்,அம்மன்,சிவன்,ஆஞ்சிஅனைவரையும் வணங்கினோம். எனக்கும் வடைமாலை சாத்திய ஆஞ்சி நினைவுக்கு வந்தார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, எனக்கும் அந்தப் படம் பதிவு எல்லாம் நினைவில் இருக்கு. கணினியில் உள்ளப் படங்கள் சேமிப்பில் பார்க்கிறேன்.பதிவைக் காணவே இல்லை. :( நன்றிங்க.

   Delete
 26. நான் நேற்று பின்னூட்டங்கள் போட்டமாதிரி நினைவு.

  படங்கள் அருமை. நீங்கபாட்டுக்கு போட்டோ எடுக்கிறேன் என்று கேமராவை எடுத்தால் மாமா சும்மா உங்களோட நின்றுகொண்டிருப்பாரா? அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.

  நானும் படங்கள் எடுத்துவிட்டு முன்னே சென்ற குழுவுடன் சேர்ந்துகொள்ள ஓடுவேன் (இல்லைனா சன்னிதியில் ரொம்பவும் பிந்தங்கிவிடுவோமே என்று)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே, ஊரில் இல்லைனு சொன்னதால் வரமுடியலைனு நினைச்சேன். மெதுவா வந்து போட்டாலும் பரவாயில்லை. காமிரா எடுத்துப் போகலை. காமிராவில் எடுத்த படங்களை இந்த மடிக்கணினியில் ஏற்றும்போது பிரச்னை வருது. அதுக்குப் பழைய மடிக்கணினி தான் சரி. மாமா எப்போவுமே தூரத்தில் போயிடுவார். அப்புறமாத் தான் நினைவு வந்தாப்போல் திரும்பிப் பார்ப்பார்.

   Delete
 27. பெருமாள் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி. கருவிலி சர்வாங்க சுந்தரியையும், மாரியம்மனையும் பார்க்கலையா?:))))))

   Delete
 28. திருக்கோயில் தரிசனம் கண்டு மகிழ்ச்சி...

  கருவிலி தரிசனம் என்றைக்கு வாய்க்குமோ!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, சீக்கிரமே கிடைக்கட்டும். பிரார்த்திக்கிறேன். போகும்போது சொல்லுங்க. பக்கத்தில் பரவாக்கரை, கோனேரிராஜபுரம் எல்லாஊர்க் கோயில்களும் பார்க்கலாம்/தரிசிக்கலாம்.

   Delete
 29. இனிய தரிசனம் ...

  ReplyDelete