எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 25, 2019

இம்புட்டுத்தான் இந்த வருஷம் தீபாவளிக்கு! :) :(


முள்ளுத்தேங்குழல்

தீபாவளி மருந்து சாமான்கள் வறுத்து வைச்சிருக்கேன்.


இதான் இந்த வருஷத்துக்கு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்வீட்டு. குலோப்ஜாமூன், கிட்ஸ் பாக்கெட்டில். 20 வரும்னு சொன்னாங்க! கரெக்டா 20 தான் வந்தது. அம்புட்டுத் தான்!

நாளைக்கு ஸ்வாமிநாராயணன் கோயிலில் ஏதோ வாங்கி வருவதாகப் பையர் சொல்லி இருக்கார். சொல்லியாச்சு வேண்டாம் நான் பண்ணறேன்னு. பண்ணக்கூடாதுனு அடம். தீபாவளிக்கு வீட்டில் எண்ணெய் வைக்கணும் என்பதால் இன்னிக்குக் கொஞ்சம் போல் எண்ணெய் வைத்துத் தேங்குழல் மட்டும் பிழிஞ்சேன். அப்புறாம் மாட்டுப்பொண்ணு கிட்ஸ் பாக்கெட் வாங்கிக் கொடுத்தாள். அதிலே குலோப் ஜாமூன் பண்ணியாச்சு. மருந்து சாஅமான்களை வறுத்து வைச்சிருக்கேன். அதை அரைச்சு மருந்து கிளறனும் அல்லது வெல்லம் சேர்த்துப் பொடிச்சு வைக்கணும். தீர்ந்தது தீபாவளி பக்ஷணம் பண்ணும் வேலை! :(

பீப்பாய் க்கான பட முடிவு

நம்பினால் நம்புங்க, இல்லாட்டிப் போங்க, இந்த மாதிரி பீர் பாரல் பீப்பாய்களில் தான் நான் 88 ஆம் ஆண்டு வரை பக்ஷணங்கள் பண்ணி வைச்சிருக்கேன். அதுக்கே மாமியார், மாமனார் இருவருக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும். கருவிலியில் இருந்தப்போ ஒவ்வொரு பக்ஷணத்துக்கும் இம்மாதிரி ஒரு டின். டின், டின்னாக பக்ஷணம் பண்ணிச் சாப்பிட்டோம். இப்போ? பக்ஷணமே பண்ணறதில்லை. அந்தக்  காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு. இப்போ இந்த மாதிரியான நிலைமைக்கு வந்துட்டோமேனு அழுவாங்க! அழுவாங்கன்னா லிடரலி (literally) அழுகை வந்துடும். :)))) எங்க வீட்டிலும் அப்பா நிறையப் பண்ணச் சொல்லுவார் என்றாலும் தீபாவளி கழிந்து சுமார் ஒரு வாரம் வரை பக்ஷணங்கள் வரும். அதிலே மிக்சர் மட்டும் கொஞ்சம் கூட நாட்கள் ஓடும். லாடு வகைகள் கொஞ்சம் கூட நாட்கள் வரும். ஆனால் இங்கேயோ எல்லாமே கல்யாணச் சீர் வைக்கறாப்போல் பண்ணியாகணும். அந்த மாதிரி வரும்போது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே எண்ணெய் வைக்க ஆரம்பிக்கணும். சாமான்கள் ஒரு மாசம் முன்னாடியே சேகரிக்கணும். இதுக்கு நாங்க முந்திய ஞாயிறிலிருந்தே எண்ணெய் வைக்கணும். அக்கம்பக்கம் அனைவரிடம் இருந்தும் உள்ள ரேஷன் கார்ட்களில் சர்க்கரையைப் பீராய்ந்து வாங்குவேன். எங்களுக்கு வேண்டாமா என்பவர்கள் உண்டே. ஆகவே 2 மாசம் முன்னாலிருந்தே தலையைப் பிய்த்துக்கொண்டு சாமான் சேகரிப்பேன். எங்க வீட்டில் எனக்கு வைச்சுக்கொடுக்கும் ஒவ்வொரு பைசாவையும் பத்திரமாகச் சேமித்து வைத்து இம்மாதிரி அதீத செலவுகளுக்குப் பணம் தேவைப்படும்போது போட்டுச் சமாளிப்பேன். பல சமயங்களிலும் என் அப்பா தீபாவளிக்கு எங்க நாலு பேருக்கும் துணி வாங்கிக்கக் கொடுக்கும் ஐநூறு ரூபாயையும் கூடப் போடும்படி இருக்கும். சந்தோஷமாப் போட்டுச் சமாளிச்சிருக்கேன். அப்போல்லாம் தீபாவளி என்றால் மனதில் எதிர்பார்ப்பும், சந்தோஷமும் இருக்கும். இத்தனை கஷ்டத்திலும் மன நிறைவோடு கொண்டாடினோம்.

ஆனால் இப்போ! எல்லாம் இருக்கு! ஆனால் ஒண்ணும் இல்லை. எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் ஒரு நாள்! அவ்வளவே! ஸ்ரீரங்கம், சென்னை போன்ற ஊர்களிலாவது அக்கம்பக்கம் பழகியவர்கள், சொந்தக்காரர்கள் என வருவாங்க, போவாங்க, பக்ஷணம் வரும், போகும். இங்கே! தீபாவளி மேளாவோடு சரி! :))))))) சென்னையில் இருந்தவரைக்கும் ஓரளவுக்கு பக்ஷணங்கள் ஆவலோடு பண்ணிக் கொண்டிருந்தேன். செலவும் ஆகிக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரீரங்கத்தில் அதுவும் குறைந்து விட்டது. இருந்தாலும்  ஸ்ரீரங்கத்திலாவது ஒரு தேன்குழலும், ஒரு மிக்சரும் பண்ணிடுவேன். ஒரு கேக் மற்றும் ஏதானும் ஒரு லாடு பண்ணுவேன். இங்கே பையர் பிடிவாதமாகப் பண்ணினே என்றால் நான் சாப்பிட மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார். இன்னிக்கு அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சாஸ்திரத்துக்கு! சாஸ்திரத்துக்கு எனில் நிஜம்மாவே சாஸ்திரத்துக்குப் பண்ணிய பக்ஷணங்கள் தான் இவை! நாளை ஸ்வாமிநாராயணன் கோயிலிலிருந்து பக்ஷணங்கள் வந்தால் படம் எடுத்துப் போடப் பார்க்கிறேன்.

81 comments:

 1. கீதாக்கா இனிய மாலை வணக்கம்.

  நானும் மருந்துக்குப் பொடி பண்ணி வைச்சுட்டேன். நாளைக்குத்தான் கிளறணும். ஸ்னாக்ஸ் ஸ்வீட் என்ன செய்யணும்னு இனிதான். அது எங்களுக்காகவும் இல்லை...

  வீட்டில் ட்ரெய்னேஜ் பிரச்சனை. முழுவதும் சரி செய்ய வேண்டும். மழை பெய்தால் ட்ரெய்னேஜ் அடைத்தால் தண்ணீர் எல்லாம் ஓடி வந்து சம்பில் விழுந்து கலக்குகிறது. எனவே அம்பேரிக்காவில் இருக்கும் ஓனருடன் பேசி சில கொட்டேஷன் பேசப்பட்டு இன்னும் முடிவு ஆகலை...ஸோ ஓரோரு ஆள் வந்து பார்த்து ஓரோரு அபிப்ராயம். அதைச் சரி செய்ய...ஒருவர் 60 ஆயிரம் கோட் செய்ய எனவே இப்படி பல கொட்டேஷன்...

  கரண்டும் படுத்துகிறது. அவ்வப்போது போய்விடுகிறது.

  வருகிறேன் மீண்டும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, நான் பொடியை அப்படியே வெல்லம் சேர்த்துத் தேன் விட்டுக்கிளறி வைக்கலாம்னு இஉர்க்கேன். இங்கே அத்தனை செலவு ஆகிறதில்லை. நாம சொந்த வீட்டில் இருந்தாலும் சரி, வாடகை வீட்டில் இருந்தாலும் சரி, இத்தகைய பிரச்னைகளை விரைவில் தீர்க்க முடிவதில்லை.

   Delete
 2. ஆனால் இப்போ! எல்லாம் இருக்கு! ஆனால் ஒண்ணும் இல்லை. எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் ஒரு நாள்!//

  //சென்னையில் இருந்தவரைக்கும் ஓரளவுக்கு பக்ஷணங்கள் ஆவலோடு பண்ணிக் கொண்டிருந்தேன். செலவும் ஆகிக் கொண்டிருந்தது. //

  அதே அதே கீதாக்கா..போன வருடம் இங்கு அப்போதுதான் வந்திருந்ததால் சும்மா ஒப்பேத்திவிட்டேன்...ஆனால் இந்த வருடம் இங்கு பங்களூரில் இப்போ செய்வதில் எனக்கு மனத்திருப்தி.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொண்ணு வீட்டில் கொஞ்சம் பக்ஷண ஆசை உண்டு. ஆனால் எங்களுக்கு நடுவில் போய் 2 நாட்கள் தங்கிப் பக்ஷணம் பண்ணிட்டுத் திரும்ப இங்கே வந்து தீபாவளி கொண்டாடணுமேனு நினைச்சுப் போகவில்லை. தீபாவளிக்காலை இங்கே முடிச்சுட்டு மத்தியானமா அங்கே போகலாம்னு எண்ணம். போனால் ஒரு மாதமாவது இருக்கலாம். கார்த்திகைக்கு இங்கே தான் விளக்கேற்ற வேண்டும். அப்போ வரணும்னு இருக்கோம்.

   Delete
 3. தீபாவளி பட்சணங்கள் செய்தாச்சா?    வெரிகுட்...    ஆனாலும் ஃபாஸ்ட் நீங்க...  அழகாக நல்ல நிறத்தில் இருக்கிறது இரண்டும்!

  ReplyDelete
  Replies
  1. நன்னி, நன்னி, ஸ்ரீராம். கீழே ஜேகே அண்ணாவிடம் கொஞ்சம் சப்தமாக உரக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கச் சொல்லுங்க!

   Delete
 4. என்ன, அந்த பேரல்  முழுக்க நிரப்புவீர்களா?   அதுவே குறைப்படுவார்களா?   என்ன பில்டப்பதிகமா இருக்கு?  நான் சின்னப்பையன்ங்கறதால என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுவதா?

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பழைய தீபாவளிப் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. எல்லாத்திலேயும் சொல்லி இருக்கேன். எங்க வீட்டிலே பக்ஷணத் தொழிற்சாலையே வைச்சு நடத்தினோம் என. இது ஒண்ணும் பில்ட் அப் இல்லை. இன்னமும் அந்த பீப்பாய் அம்பத்தூர் இந்தியன் வங்கி காலனி ராகவேந்திரர் கோயிலில் கொடுத்திருக்கோம். இந்தப் பக்கம் வந்தால் கேட்டுப் பாருங்க. இல்லைனா மாமாவைப் பார்க்கையில் கேளுங்க! இதை என் புக்ககத்து உறவினர்களும் படிக்கிறாங்க. ஓர்ப்படி கூடப் படிப்பார். ஆனால் அவங்கல்லாம் கருத்துச் சொல்லுவதில்லை. சொன்னால் நான் சொல்லுவதில் உள்ள உண்மை தெரியும். :))))))

   Delete
  2. மத்ததுக்குக் காலம்பர வரேன்.

   Delete
  3. ஶ்ரீராம்... நீங்க புகைப்பட நிபுணர்னு இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்... இனி அந்த நினைப்பை மாத்திக்க வேண்டியதுதான்.

   எதையும் குளோசப்ல படம் எடுத்தா பெரூசா தெரியும் என்பது மறந்துடுச்சா?

   நீங்க பீர் பேரல் என்றதும் ...40 திருடர்களும் படத்தில் பானுமதி மலைலேர்ந்து உரிட்டற பேரல் மாதிரின்னு நினைச்சுட்டீங்க போலிருக்கு.

   கீசா மேடமும் சீர் மைசூர்பாக் மாதிரி 40, பெரிய முள்ளுமுறுக்கு 60 என்று எண்ணிக்கையாச் சொன்னா படிக்கறவங்களுக்குப் புரியும்.

   நம்மை மாதிரி அப்பாவிகளிடம் பீர் பேரல் என்றால் என்ன கற்பனை பண்ணத் தோன்றும்?

   Delete
  4. க்ளோசப்ல எடுத்து பயம் காட்டியிருக்காங்கன்னு நானும் நெனச்சேன்.   அதுசரி, என்ன சொன்னீங்க?  புகைபபட நிபுணரா?  நானா?   ஹா...  ஹா...  ஹா.....

   Delete
  5. ஸ்ரீராம், நெ.த. இருவருக்கும் சேர்த்து! ஸ்ரீராம், உங்களோட கமென்டை மாமாவிடம் சொன்னேன். இதையே நம்பலைன்னா கருவிலியில் பண்ணினதைச் சொன்னால் என்ன சொல்லுவாரோ என்றார் மாமா! ஓரளவுக்கு நிறைய பக்ஷணங்கள் செய்யும் என்னோட அப்பா, அம்மாவே பார்த்துப் பிரமிச்சுப் போயிருக்காங்க. அதோடு இல்லாமல் தேன்குழல், ஓமப்பொடி, ரிப்பன் பகோடா(நாடாத் தேங்குழல் என்போம் நாங்க)எல்லாவற்றில் அளவும் சீருக்கு வைப்பதைப் போல் (இப்போதைய சீருக்கு வைக்கும் அளவு இல்லை, எங்க காலத்தில் இன்னும் பெரிசாக இருக்கும்.) பண்ணுவாங்க. உருண்டைகள், லட்டு(பூந்தி லட்டு)எல்லாம் கிரிக்கெட் பந்தை விடப் பெரிசாக இருக்கும். இரண்டு கைகளால் உருட்டுவாங்க மாமியார். எனக்கு வராது!

   Delete
  6. என் அப்பா வீட்டில் தான் எண்ணிக்கை. எண்ணி எடுத்து வைச்சுடுவார் அப்பா. பக்ஷணம் எல்லாம் அவர் கஸ்டடியில் தான். தினம் சாயந்திரம் ஒருநாள் தேன் குழல் என்றால் அடுத்த நாள் ஓமப்பொடி. அதுக்கடுத்தாப்போல் ரிப்பன். அதே போல் மிக்சர் ஒரு கரண்டி எனில் ஒரு கரண்டி தான்! மைசூர்ப்பாகு எல்லாம் பீரோவில் வைத்துப் பூட்டி இருப்பார். கொஞ்சம் பெரிய மைசூர்ப்பாகு வில்லை எனில் இரண்டாக நறுக்கி எங்களில் இருவருக்குக் கொடுப்பார். கொஞ்சம் பெரிதாக இருந்தால் அவர் வைச்சுப்பார். சில சமயங்களில் அண்ணாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் பெரிய பிள்ளை என. அம்மாவுக்கெல்லாம் கூட அவர் எடுத்து வைப்பது தான். நாங்களாக எதுவும் எடுத்துச் சாப்பிட முடியாது. :)))))) இங்கே மாமியார் வீட்டில் தலைகீழ். பக்ஷணம் தவிர்த்து எதுவும் செலவாகாது! :))))))

   Delete
 5. நாங்கள் எங்களுக்கு திருமணமான புதிதில் ஒரு ஆர்வக்கோளாறில் சம்படம் சம்படமாக விதம் விதமாக பட்சணங்கள் செய்து அடுக்கினோம்.    வரிசையாக வைத்து அழகு பார்த்தோம்.   அனைவருக்கும் கொடுக்கும்போது நாங்கள் சொன்ன அந்தந்த பட்சணங்களின் பெயரை சாப்பிட்டவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.  அதனால் என்ன...   எங்களுக்கு ஒரே சந்தோஷம்!!!

  ReplyDelete
  Replies
  1. சந்தடி சாக்குல பாஸ் படிக்க மாட்டாங்கன்னு வார்றீங்களே... தீபாவளிக்கு உங்களுக்கு பட்சணம் வேண்டாமா?

   Delete
  2. ஒரு தைரியம்தான்!  அவர் எங்கே இதை எல்லாம்படிக்கப் போகிறார்?

   Delete
  3. நான் கல்யாணம் ஆகி முதல் முதல் பக்ஷணம் என்று பண்ணினது எங்களோட தலை ஆடி அன்று போளி, ஆமவடை பண்ணியதும், கோகுலாஷ்டமிக்கு கைமுறுக்கு, தட்டை, சீடை, அப்பம், வடைனு பண்ணினதும் தான். அது எல்லாமே நன்றாக இருந்தது என்றாலும் கடலை எண்ணெயில் பண்ணியதால் அவருக்குப் பிடிக்கலை. எங்க வீட்டிலும் தேங்காய் எண்ணெய் தான் எனக்குப் பழக்கம். ஆனால் மாமா வாங்கிக்கொடுக்கலை. நானாகப் போய் வாங்கவெல்லாம் பயம் அப்போது. கல்யாணம் ஆகி இரண்டு மாதம் தானே! இருந்ததிலேயே பண்ணிட்டேன். அக்கம்பக்கம் எல்லோருக்கும் ஆச்சரியம், நல்லா இருக்குனும் சொன்னாங்க. அவங்களுக்கெல்லாம் கடலை எண்ணெய், ரிஃபைன்ட் ஆயில்) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்னு தான் பழக்கமாம்.

   Delete
 6. இப்பவும் பாஸ் எப்படியும் மாலாடுசெய்து விடுவார்.   ரிப்பனும், முள்ளுமுறுக்கும் செய்வார்.  எனக்கு மூட் இருந்தால் மைசூர் பாக் செய்வேன். நெல்லை போல எல்லாம் எனக்குப் பொறுமை (இப்போதெல்லாம்) இருப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் வீட்டிலும் எப்படியும் முள்ளுத்தேன்குழல் செய்துடுவாங்க. ஏதேனும் ஒரு லாடு. நான் சமயங்களில் சிறுதானிய லாடு கூடச் செய்துடுவேன். அதுக்கு வெல்லமும் போட்டுக்கலாம்.

   Delete
 7. நண்பர்கள் விதம் விதமாக பட்சணங்கள் செய்து அசத்துவார்.   ஆரோக்கிய சமையல் ஹேமா விதம் விதமாக செய்வார்.  ஆனால் இந்த வருடம் அவர் அவர் மகன் திருமணத்தில் பிசியாக இருக்கிறார்!  பெரும்பாலான நண்பர்கள் அதிரசம் விசேஷமாக செய்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம்... என் மனைவி திருமணம் ஆன புதிதில் துபாயில் அதிரசம் செய்தார். எண்ணெய் பிழியற ப்ராசஸ் பார்த்துட்டு இனி அதிரசம் வீட்டில் பண்ண வேண்டாம், வேண்டும்போது வெளில வாங்கிடலாம்னு சொல்லிட்டேன்.

   இப்போ எபிக்காவது அதிரசம் பண்ணலாமான்னு தோணுது. சாப்பிடறது யாரு?

   Delete
  2. நாங்கள் அதிரசம் செய்து பார்த்ததே இல்லை!

   Delete
  3. சிலர் இன்னமும் ஆர்வமாகச் செய்து வருகிறார்கள். எங்க குடியிருப்பிலே எங்க தளத்திலேயே ஒரு பெண்மணி நாலு காரம், நாலு இனிப்பு என்று செய்வார். எல்லாம் எங்களுக்கும் வரும். அதிரசம் எப்படி எண்ணெய் குடிக்கும், பிழிந்து எடுக்கிறார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கல்லாம் கொஞ்சம் நெய் கலந்து தான் செய்வோம். முழுக்க முழுக்க எண்ணெயில் செய்ததைச் சாப்பிட்டால் வயிற்றைப் பிரட்டும். நல்ல நெய் கலப்பது வழக்கம். ஆகவே குடிக்காது. அடியில் ஓர் பேப்பர் டவலைப் போட்டு வைத்து விட்டால் போதும். பின்னர் நாளாக ஆக மெத்தென்று இருக்கும் அதிரசம்.

   Delete
  4. ஒரு சில தெலுகு பிராமணர்களும் கேதாரகௌரி விரதம் இருந்தால் அதிரசம் கட்டாயம் செய்வார்கள். எங்களில் கூட இந்த விரதம் இருந்தால் கட்டாயம் அதிரசம் பண்ணுவாங்க. மற்றபடி எங்க வீடுகளில் எல்லாம் பண்ணுவதில்லை. எனக்கு இந்த விரதம் பற்றியே கல்யாணம் ஆகி வந்தப்புறமா ஆப்பீச்ச்சுப் போக ஆரம்பிச்சதிலே தான் தெரியும்! அது வரைக்கும்/அதுக்கு அப்புறமும் மீ சின்னக்குழந்தை! யூ நோ? :)))))))

   Delete
  5. எங்களுக்கு அப்பா சைடில் கேதாரகௌரி வ்ரதம் இருக்கு. அம்மா இருந்தவரை தவறாமல் நோன்பு செய்வார்கள். அதிரசமும் இன்னபிற பலகாரங்களும் பாத்திரங்களில் குவிச்சு வைப்பாங்க. எண்ணிக்கை நோன்பு நமக்கில்லைன்னு சொல்வாங்க. எங்க அம்மா சைடில் இந்த நோன்பு கிடையாது. வரலக்ஷ்மி வ்ரதம் மட்டுமே! எனக்கு மாமியார் வீட்டிலும் இது கிடையாது. வரலக்ஷ்மியும் கிடையாது..... ரொம்ப சுத்தம்..... நாங்க இங்கே தோழி வீட்டுக்குப் போய் வருவோம் வரலக்ஷ்மிக்கு. (ஜெயஸ்ரீ வீட்டுக்குத்தான் )

   Delete
 8. ஹலோ இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் உங்கள் பையர் சாப்பிடாட்டி என்ன நாங்கள் சாப்பிட ரெடியாகத்தானே இருக்கிறோம்...... அதனால செய்யாமல் இருந்திடாதீங்க செஞ்சு அனுப்புங்கள் நாங்கள் சாப்பிட ரெடி

  ReplyDelete
  Replies
  1. வாங்க தமிழரே, என்னடா இன்னும் காணோமேனு நினைச்சேன். எல்லாக் கருத்துக்களும் ஒளிஞ்சிட்டு இருந்திருக்கு! அதான் தாமதம்! :))))) ஹாஹாஹா,நியூ ஜெர்சியிலே இருந்து பறந்து வந்து எடுத்துக்குங்க!

   Delete
 9. உங்கள் பையருக்கு அங்கு நண்பர்கள் எல்லாம் இல்லையா? அல்லது அவர்களுக்கு எல்லாம் கடையில் வாங்கி கொடுத்திடுவாரா என்ன?

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. ஆனால் பக்ஷணங்கள் எல்லாம் கொடுத்து வாங்குவதாகத் தெரியலை. வீட்டுக்கு வரச்சே ஏதேனும் ஸ்வீட் வாங்கிட்டு வருவாங்க. இப்போக் குஞ்சுலு பிறந்தப்புறமா அதுக்கு ஏதேனும் வாங்கிட்டு வராங்க!

   Delete
 10. நானும் ரொம்ப இல்லை. எல்லாம் போதும் போ ன்னு ஆகி இருக்கு. இன்று ஸ்வாமி நாராயண் போயிட்டு அப்படியே வேறொரு பஞ்சாபி கடையில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கி வரணும்,

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி, பக்ஷணம் சாப்பிடவாவது வந்துட்டீங்களே. இங்கே எங்களுக்கு இன்னமும் அந்த அலுப்பு வரலைனாலும் சாப்பிடுவது குறைஞ்சு போச்சு என்பதால் கொஞ்சமாய்ப் பண்ணுகிறோம். இந்த வருஷம் அதுவும் இல்லை. பையர் இழுத்துவிட்டுக்காதே என்று தடா!

   Delete
 11. முள்ளு முறுக்கும் ஜாமூனும் அழகா வந்திருக்கு.

  நிறையபேர் பட்சணம் பண்ணக்கூடாதுன்னு சொல்லக் காரணம், பண்ணினால் சாப்பிட ஆசை வரும், அப்புறம் ஹெல்த் மெயின்டெயின் செய்வது கஷ்டம் என்பதால்.

  இப்போ 20 நாளைக் கடந்துட்டேன் இனிப்பு சாப்பிடாமல். இன்னும் 40 நாட்கள். ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே, பக்ஷணம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என இப்போது சொல்லுகின்றனர். ஆனால் என் புக்ககத்தில் மாமியார், மாமனார் சாப்பிட்ட பக்ஷணங்களால் அவங்க ஆரோக்கியம் ஒண்ணும் கெட்டுப் போகலை! நல்லாத் தான் இருந்தாங்க! எங்க பையர் என் உடல் நலனுக்காகச் சொல்லுகிறார். நிறைய வேலை செய்ய வேண்டாம், செய்தது எல்லாம் போதும் என்பார்.

   Delete
 12. தீபாவளி நினைப்பு எனக்கு சுத்தமா இல்லை. பல வருடங்கள் வெளில இருந்ததாலோ என்னவோ

  ReplyDelete
 13. உங்க நினைவுகளை படிக்கும் போது ஆசையா இருக்கு ...

  ஆன இங்கு இன்னும் மாறல..

  அம்மா கொஞ்சமா செய்வாங்க ..அண்ணிங்க செய்வாங்க ...

  அத்தை வீட்டில் கிராமம் என்பதால் அசோ அவ செஞ்சுட்டா ..அப்படி சொல்லியே இன்னும் சம்படம் சம்படமா நிறையுது ...கொஞ்சமா செய்ங்க ன்னு மட்டும் சொல்லுவோம் ..


  நானும் இங்கு 2 காரம் , 2 ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு போவோம் ஊருக்கு ...இந்த தடவையும் முறுக்கு , காரா செவ் , அல்வா , பாசி பருப்பு உருண்டை எல்லாம் ரெடி ஊருக்கு ...  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு. மாறாமல் இருப்பது சந்தோஷம் தானே! தீபாவளியை நிறைய பக்ஷணங்களோடும், உறவினர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் அனு. வாழ்த்துகள்.

   Delete
 14. எங்கள் வீட்டில் :
  நேற்று குளோப் ஜாமூன்...!
  இன்று முறுக்கு...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. வேலை மும்முரத்தில் இருந்து ஓய்வு கிடைத்ததா? உடல் நலம் பரவாயில்லையா? மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

   Delete
 15. >>> இப்போ.. எல்லாம் இருக்கு.. ஆனால் ஒண்ணும் இல்லை..
  எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் ஒரு நாள்! அவ்வளவே!..<<<

  இவ்வளவே!... இதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை...

  காலத்தை மாற்றி விட்டோம்... களிப்பினைத் தொலைத்து விட்டோம்!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, இந்த வருஷம் இங்கே குழந்தைகளோடு பண்டிகை கொண்டாடணும் என்பதற்காகவே செப்டெம்பரில் கிளம்பி வந்தோம். எல்லாப் பண்டிகைகளுக்கும் இங்கே இருக்கணும்னு நினைச்சோம். ஆனாலும் மனசு என்னமோ இந்தியாவில் தான் இருக்கு. இவங்க அங்கே வர முடிஞ்சா நல்லா இருக்குமேனு நினைக்கிறது. பண்டிகைக்கோலாகலம் என்றால் இந்தியாவில் தான்.

   Delete
 16. தீபாவளி பலகாரங்கள் அருமை.
  எண்ணெய் பண்டங்கள் சாப்பிட மாட்டோம் என்று அவர்கள் சொல்லும் போது நிறைய செய்து என்ன பயன்.
  உங்கள் உடல் நலத்திலும் மகன் அக்கறை படுகிறார்.

  பேத்தி முறுக்கு சாப்பிட்டால் நீங்கள் விரும்பி செய்யலாம்.

  நானும் பிஸ்கட் டின் பெரிதாக வருமே அதில் நிறைய தேன்குழல், தட்டை எல்லாம் செய்வேன். இரண்டு மூன்று ஸ்வீட் செய்வேன். தூக்குசட்டிகள், சம்புடங்கள் என்று பலகாரங்கள் நிரம்பி வழிந்த காலங்கள். நீங்கள் சொல்வது போல் பலகாரங்கள் வரும், போகும். குழந்தைகள் கொண்டு வீடு வீடாய் கொடுத்து வருவார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகள் கொண்டு வருவார்கள். இப்போது கொள்வோரும் இல்லை, கொடுப்போரும் இல்லை.

  அப்படியே கொடுத்தாலும் கடை பலகாரங்கள் வருகிறது.

  உடன்பிறந்தவர்கள் அவர்கள் செய்வதில் கொஞ்சம் கொடுத்து தீபாவளிக்கு அழைத்து போனார்கள்.
  நானும் ஒன்றும் செய்யவில்லை. தீபாவளி அன்று வடை , பாயசம் மட்டும் செய்ய எண்ணம்.
  லட்டும், ரிப்பன் பக்கோடா இரண்டும் பலகாரம் வீட்டில் செய்து விற்பவர்களிடம் வாங்கி விட்டேன். வீட்டுக்கு வருகிறவர்களுக்கு கொடுக்க.

  பண்டிகைகள் மிகவும் எதிர்பார்த்த காலங்கள் மறைந்து வருகிறது. மாமியார் இருந்தவரை ஏதாவது செய்து கொண்டு போவேன் தீபாவளி அங்கு என்பதால். இப்போது அத்தை, மாமா இல்லை. அவர் அவர்கள் வீட்டில் குழந்தைகள் வீட்டில் கொண்டாடுகிறார்கள்.

  நம்மஊரு பலகாரங்கள் என்று வெளி நாட்டில் நிறைய கிடைக்கிறது. அந்த அந்த ஊர் பெருமையை சொல்லி. காசு அதிகம், நாங்கள் வெளி நாட்டுக்கு அனுப்பினாலும் காசு அதிகம் தான்.

  அவர்கள் வரும் போது அவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

  தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, பேத்தி நான் ஊரிலிருந்து கொண்டு வந்த முறுக்கையும் சாப்பிட்டாள். நேற்றுச் செய்த முள்ளுத் தேன்குழலையும் சாப்பிடுகிறாள். அது தான் ஒரே சந்தோஷம். பையரும் சாப்பிட்டார். பக்ஷணம் நன்றாகவே கரகரனு வந்திருக்கு. இத்தனைக்கும் இங்கே கிடைக்கும் அரிசி மாவு தான். கடலை மாவுதான் ஊரிலிருந்து வரும்போதே பருப்பை வாங்கிக் காய வைத்து அரைத்து எடுத்து வந்தேன். சாஸ்திரத்துக்கு நீங்களும் எண்ணெய்ச் சட்டி வைத்து ஏதேனும் ஒன்றாவது பண்ணுங்க.

   Delete
 17. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் அனைத்துக் குடும்பத்த்னருக்கும்.
  தேங்குழலும், குலோப்ஜாமுனும் எதேஷ்டம்மா.

  ஒரு தீபாவளிக்கு சம்புடம் நிறைய லேகியம் செய்து
  சென்னைக்கு ஆஜிப்பாட்டி கையில் கொடுத்தது
  நினைவுக்கு வருகிறது.

  தேங்காய் பர்ஃபியும், மனங்கொம்பும், மிக்சரும்
  திரட்டிப்பாலும்,
  பாட்டியை அசத்திவிட்டன,.

  அந்த மாதிரி நாட்கள் இனி வருமா தெரியவில்லை.

  அங்கே பெண்வீட்டில் எப்பொழுதுமே எண்ணெய்க்கு
  ஆதரவு கிடையாது.

  நண்பர்களோடு கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இங்கே பையர் வீட்டிலேயும் வடை, பஜ்ஜி, போண்டாவெல்லாம் பண்ண முடியாது! தடா! மற்றபடி இப்போ தீபாவளி என்பதால் ஒன்றே ஒன்று மட்டும் பண்ண ஒத்துக்கொண்டார் பையர். என் மாமியார் பின்னாட்களில் நான் பக்ஷணம் கொஞ்சமாகச் செய்வதைப் பார்த்துச் சிரிப்பார். என்ன செய்ய முடியும்? வயிறு ஒத்துக்காதே!

   Delete
 18. முள்ளு தேன்குழல் மணப்பாறை முறுக்கு மாதிரி வெள்ளையாக இல்லாமல் ஏன் இப்படி  சிவந்து இருக்கிறது. குலாப் ஜாமுன் பொன்னிறம் இல்லாமல் கறுத்து போய் விட்டது. கைப்பக்குவம் எல்லாம் தடுமாறுது. Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஜெயக்குமார் சார்... நீங்க இப்படி எழுதுனீங்கன்னா, கீசா மேடம் ஒண்ணும் சொல்றதில்லை. நான் இந்த மாதிரி எழுதிட்டேன்னா, 'நெ.த வுக்கு பாராட்டவே மனசு வராது' என்று சொல்லிடறாங்க. உங்களுக்குள்ள லக் எனக்கு இல்லை போலிருக்கு.

   Delete
  2. நன்றி ஜேகே அண்ணா!

   Delete
  3. நெ.த. நீங்களும் சரி. ஜேகே அண்ணாவும் சரி அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டீங்க! ஆனால் நீங்க வயதில் சின்னவர் என்பதால் உங்களைக் கிண்டலடிக்கிறாப்போல் அவரைக் கிண்டல் அடிக்க முடியுமா? :))))))

   Delete
 19. என் மனைவிக்கும் உங்களைப் பொல் பட்சணங்கள் முன்புபோல் செய்ய முடிவதில்லை வயசாகிறதோன்னா

  ReplyDelete
  Replies
  1. பதிவை மறுபடி படிங்க ஜிஎம்பி ஐயா, முடியலைனு நான் சொல்லலை, பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டதாகத் தான் சொல்லி இருக்கேன். நன்றி.

   Delete
  2. பிள்ளைகளுக்குத்தெரியும்பெற்றோரின்வயதும் தள்ளாமையும்

   Delete
  3. நான் சொல்லித்தானே என் வயசோ முடியாமையோ பிள்ளைக்குத் தெரியப் போகிறது. உண்மையான காரணமே நான் நாள் கணக்கில் தொடர்ந்து பக்ஷணங்கள் எல்லாம் செய்தாச்சு, இனிமேலாவது குறைச்சுக்கோ என்பதே பிள்ளையின் கருத்து. பண்டிகைகள் வந்தாலே பிள்ளை சொல்லுவது அம்மாவை அலட்டிக்கச் சொல்லாதே, எளிமையாகப் பண்ணச் சொல்லு என்பது தான்! ஏனெனில் சின்ன வயசிலிருந்து கிட்டே இருந்து நான் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறார் எங்க பையர். அதனால் சொல்லுகிறார்.

   Delete
 20. வணக்கம் சகோதரி

  படசணங்கள் அழகாக இருக்கிறது. முள்ளு முறுக்கு பார்க்கவே அவ்வளவு அம்சமாக வந்துள்ளது. குலாப் ஜாமூனும் மிக அழகாக ஒரே மாதிரி வந்துள்ளது. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பொதுவாகவே கிருஷ்ண ஜெயந்தி. தீபாவளி என்றாலே படசணங்கள் நிறைய செய்வது அந்த காலத்திய வழக்கம். திருக்கார்த்திகைக்கு கார்த்திகை பொரி வடை, அப்பம் கூட ஓரிரு நாட்களில் காலியாகி மாதிரி செய்து விடுவோம். இதில் கார்த்திகைப் பொரி மட்டும் ஒரு பத்து நாட்களுக்கு மேலாக வரும். எங்கள் வீட்டில் பொரி உருண்டை பிடிக்கும் வழக்கம் இல்லை. கிளறி உதிரியாக நைவேத்யத்திற்கு வைத்து விடுவோம்.

  எங்கள் அம்மா வீட்டில், பட்சணங்கள் உங்கள் வீடு மாதிரிதான்..! அண்டா அண்டாவாக ஒரு மாதம் வைத்து சாப்பிடும்படி செய்வார்கள். என் புக்ககத்தில் அவ்வளவாக யாரும் படசணங்கள் விரும்பி சாப்பிடும் பழக்கம் இல்லையாகையால், எல்லாம் கொஞ்சம்தான்.நறுக்கு தீனி பிரியையான எனக்கு கையையும், வாயையும் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. ஆனால் நானும் கொஞ்சம் வருடங்களுக்கு அப்புறமாக விடாமல் என் குழந்தைகளுக்காக, தீபாவளிக்கு ஒரு பெரிய தூக்கு நிறைய மிக்ஸர், மைசூர் பாகு, லட்டு, அல்வா எனப் பண்ணுவேன். இந்த தடவை எங்களுக்கு ஒருவருட பண்டிகை கிடையாது. அதனால்( பேரன் பேத்தி) குழந்தைகளுக்கு மட்டும் ஏதேனும் வாங்கித் தர வேண்டும்.

  இது போல், நிறைய படசணங்கள் செய்து விஷேடங்களை கொண்டாடியதால், நமக்கும் கை துறுதுறுவென இருக்கும். உங்களுக்கு உங்கள் பையர் மூலமாக தடா வந்து விட்டதில் உள்ள வருத்தம் எனக்கும் புரிகிறது. காலங்காலமாய் செய்து வரும் நமக்கு இதெல்லாம் ஒரு சமையல் அனுபவங்கள் தானே...! பழக்கப்படாதவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

  அனைத்தும் நன்றாக உள்ளது. செய்யும் ஆசையையும், சாப்பிடும் ஆவலையும் உங்கள் படங்கள் உண்டாக்கி விட்டன.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, என் மாமியார் வீட்டில் கார்த்திகைப் பொரியும் ஒரு மாதத்துக்கும் மேல் வரும்படிப் பண்ணுவாங்க. பொரியெல்லாம் ஒரு கிலோ, 2கிலோவெல்லாம் போதாது! ஊரில் இருக்கையில் அவலை இடித்து அவல் பொரியை வீட்டிலேயே தயார் பண்ணுவாங்க. நெல் எப்போதும் இருக்கும் என்பதால் நெல் பொரியும் வீட்டிலேயே! கார்த்திகைக்குப் பொரி தயாரிப்பு மட்டும் நாலைந்து நாட்கள் நடக்கும். பெரிய அண்டாவில் தான் வெல்லப்பாகு வைப்பாங்க! தூக்கிக் கொட்ட என்னால் முடியாது. பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

   Delete
 21. வணக்கம் சகோதரி

  படசணங்கள் அழகாக இருக்கிறது. முள்ளு முறுக்கு பார்க்கவே அவ்வளவு அம்சமாக வந்துள்ளது. குலாப் ஜாமூனும் மிக அழகாக ஒரே மாதிரி வந்துள்ளது. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பொதுவாகவே கிருஷ்ண ஜெயந்தி. தீபாவளி என்றாலே படசணங்கள் நிறைய செய்வது அந்த காலத்திய வழக்கம். திருக்கார்த்திகைக்கு கார்த்திகை பொரி வடை, அப்பம் கூட ஓரிரு நாட்களில் காலியாகி மாதிரி செய்து விடுவோம். இதில் கார்த்திகைப் பொரி மட்டும் ஒரு பத்து நாட்களுக்கு மேலாக வரும். எங்கள் வீட்டில் பொரி உருண்டை பிடிக்கும் வழக்கம் இல்லை. கிளறி உதிரியாக நைவேத்யத்திற்கு வைத்து விடுவோம்.

  எங்கள் அம்மா வீட்டில், பட்சணங்கள் உங்கள் வீடு மாதிரிதான்..! அண்டா அண்டாவாக ஒரு மாதம் வைத்து சாப்பிடும்படி செய்வார்கள். என் புக்ககத்தில் அவ்வளவாக யாரும் படசணங்கள் விரும்பி சாப்பிடும் பழக்கம் இல்லையாகையால், எல்லாம் கொஞ்சம்தான்.நொறுக்குத் தீனி பிரியையான எனக்கு கையையும், வாயையும் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. ஆனால் நானும் கொஞ்சம் வருடங்களுக்கு அப்புறமாக விடாமல் என் குழந்தைகளுக்காக, தீபாவளிக்கு ஒரு பெரிய தூக்கு நிறைய மிக்ஸர், மைசூர் பாகு, லட்டு, அல்வா எனப் பண்ணுவேன். இந்த தடவை எங்களுக்கு ஒருவருட பண்டிகை கிடையாது. அதனால்( பேரன் பேத்தி) குழந்தைகளுக்கு மட்டும் ஏதேனும் வாங்கித் தர வேண்டும்.

  இது போல், நிறைய படசணங்கள் செய்து விஷேடங்களை கொண்டாடியதால், நமக்கும் கை துறுதுறுவென இருக்கும். உங்களுக்கு உங்கள் பையர் மூலமாக தடா வந்து விட்டதில் உள்ள வருத்தம் எனக்கும் புரிகிறது. காலங்காலமாய் செய்து வரும் நமக்கு இதெல்லாம் ஒரு சமையல் அனுபவங்கள் தானே...! பழக்கப்படாதவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

  அனைத்தும் நன்றாக உள்ளது. செய்யும் ஆசையையும், சாப்பிடும் ஆவலையும் உங்கள் படங்கள் உண்டாக்கி விட்டன.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் தீபாவளி பக்ஷணத்துக்கே நம்பலை என்பதால் தான் கார்த்திகைப் பொரி பத்தி ஒண்ணும் சொல்லலை. இப்போ நீங்க எழுதவும் சொன்னேன்.

   Delete
  2. கார்த்திகைப் பொரியை நாங்களும் உருண்டை பிடிக்க மாட்டோம் பிறந்த வீட்டுப் பழக்கம். அச்சானியம்னு சொல்லுவோம். ஆனால் மாமியார் வீட்டில் சுக்குப் போடாமல் எள்ளுப் போட்டு உருண்டையும் பிடிப்பாங்க. சில சமயங்களில் அதையே பருப்புத் தேங்காய் போலப் பிடித்து வைச்சுடுவாங்க. நான் பண்டிகைப் பலகாரங்களில் எள் சேர்ப்பது குறைவு. கிருஷ்ணன் பிறப்புக் கர்ச்சிக்காய், மற்றும் பிள்ளையார் சதுர்த்தி எள்ளுக் கொழுக்கட்டை தவிர்த்து. ஆனால் மாமியார் வீட்டில் எள்ளுக்கொழுக்கட்டை கிடையாது! ஆகவே எள் சேர்த்தே எதுவும் பண்டிகைகளுக்குப் பண்ணுவதில்லை. சுக்கு, ஏலக்காய் தான் பொரியில் வெல்லப் பாகில் சேர்ப்பேன். ஆனால் பருப்புத் தேங்காய் நல்லது தானே எனச் சில சமயங்களில் நானும் அவல் பொரியில் ஒரு பருப்புத் தேங்காய், நெல் பொரியில் ஒன்று எனப் பண்ணி வைச்சுடுவேன். போன வருஷத்து அவல் பொரியும் நெல் பொரியுமே இன்னமும் இருக்கு. இங்கே கொண்டு வந்திருக்கேன். இந்த வருஷம் பயனாகும் என்று.

   Delete
 22. //ஆனால் இப்போ! எல்லாம் இருக்கு! ஆனால் ஒண்ணும் இல்லை. எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் ஒரு நாள்!//

  ஹ்ம்ம் அதே அதே வெளி நாட்டில் எல்லா பண்டிகைகளுக்கும் அதேதான் .
  மகன் உங்களுக்கு கஷ்டம் தர வேண்டாம்னு நினைக்கிறார் :) 
  கிட்ஸ் :) உண்மையில் 20   தான்  எனக்கும் வந்துச்சி :)அவங்களுக்கு எப்படி தெரியுது ஹாஹா .ஆனா அது போதும்னு  தான் நினைக்கிறேன் ,நிறைய வந்தா என் கணவர் தானே சாப்டுடுவார் :) ஹீ ஹீ ஒரேயொரு கிட்ஸ் நினைவை பகிர்ந்தேயாகணும் ஜெர்மன் வந்த புதுசில் அது கிறிஸ்துமஸ் டைம் கிட்ஸ் உருண்டை செஞ்சு கெட்டுப்போகக்கூடாதுன்னு  இருக்கட்டும்னு பிரிட்ஜில் வச்சிட்டேன் :)  எல்லாம் சர்க்கரை க்ரிஸ்டலாகி உறைந்து  அது ஒரு காமெடி ..
  சந்தோஷமா கொண்டாடுங்க  தீபாவளியை  உங்கள் மகன் மகள் குடும்பத்தாரோடு .
  பட்சணம் செயலேன்னா என்ன அதுக்கு பதில் ஸ்வீட்ட்டோ ஸ்வீட்ட்டா பட்டு குஞ்சுலு மற்ற பேத்தி அப்பு எல்லாம் இருக்காங்க   ஹாப்பியா என்ஜாய் பண்ணுங்க 
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்  குடும்பத்தாருக்கும் இங்கே வருகைதரும் அனைவருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், கிட்ஸ் தான் முதல் முதலாக குலோப்ஜாமூன் பவுடர் கொண்டு வந்தாங்க. என் நினைவில் அது 1969 ஆம் வருடம் என நினைவு. அப்போத் தான் இதை வீட்டுக்கு வீடு வந்து அறிமுகம் செய்து ஒரு பாக்கெட் இலவசம் கொடுத்தாங்க. என் வாழ்நாளில் ஓட்டலில் தான் அதுக்கு முன்னர் 2,3 தரம் குலோப்ஜாமூன் சாப்பிட்டிருக்கேன். அந்த வருஷம் தீபாவளிக்கு அம்மா அந்தப் பாக்கெட் பவுடரில் குலோப் ஜாமூன் செய்தார். வெகு வருடங்கள் இப்படித்தான் குலோப்ஜாமூன் செய்யணும்னே நினைச்சிட்டு இருந்தேன் வடக்கே ராஜஸ்தானின் குலோப்ஜாமூன் சாப்பிடும் வரை. :)))))

   Delete
 23. இன்று கொஞ்ச நேரத்துக்கு முன் போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் தீபாவளிக்குதான் ரிலீஸ் செய்வீங்க போல!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.... இந்தத் தளத்துல மட்டறுத்தல் எடுத்துடலாம்னு நினைக்கறேன்.

   Delete
  2. நான் எவ்வளவு சீக்கிரம் வெளியிட்டாலும் நீங்க இரண்டு பேரும் இப்படித் தான் சொல்லுவீங்க. ஆகவே நோ பதில்!
   எனக்கு வர கன்னாபின்னா கருத்துகளுக்கு மட்டுறுத்தலை எடுத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கணும்.

   Delete
  3. யாரு உங்களுக்கு கன்னா பின்னான்னு கமெண்ட் போடப்போறாங்க? இங்க வர்றதுலாம் நண்பர்கள்தாம். அப்புறம் என்ன.

   நல்ல காலத்துலயே (அதாவது இந்தியாவில் இருக்கும்போதே), மத்யானம் கமெண்ட் போட்டால் மறுநாள் காலை வெளியிட வாய்ப்பு இருக்கு. இப்போ இருக்கறது பெரிய அம்பேரிக்கா. அதுனால மத்யானம் கமெண்ட் போட்டால் ரெண்டு நாளாகுது வெளியிட.

   Delete
  4. சொல்லப் போனால் இங்கே தான் உடனுக்குடன் எல்லாவற்றையும் பார்த்து பதிலும் சொல்லுகிறேன். ஆனாலும் இப்படிச் சொன்னால்? ஒரு பெண்ணாகிய நான் எப்போதும் கணினியே கதி என உட்கார்ந்துவிட்டால் குடும்பம் என்ன ஆவது? எனக்குக் குடும்பம் தான் முக்கியம். அதன் தேவைகள் நிறைவேறிய பின்னரே இங்கே வருவேன். ஆகவே நீங்கல்லாம் என்ன சொன்னாலும் என்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனக்கு ஓய்வு நேரம், என்னுடைய நேரம்னு கிடைச்சால் தான் கணினியே!

   Delete
  5. வாழ்த்துகள் கீசா மேடம்.... நீங்க சொல்வது சரிதான் (ஆனாலும், ஆண்கள்லாம், குடும்பத்தைக் கவனிக்காம கணிணியே கதின்னு உட்காருவதுபோல நீங்க சொல்றிங்க பாருங்க...அதிலும் மாமா, இவங்களையெல்லாம் பார்த்தப்பறமும்.... நீங்க..நீங்க... ஃபீமேல் சாவனிஸ்ட்தான் இஃகி இஃகி)

   Delete
 24. இப்போதெல்லாம் யார் இனிப்பு நிறைய செய்வதை விரும்புகிறார்கள்? 100 லாடு பிடித்ததெல்லாம் ஒரு காலம். தேன்குழல் சிவந்து விட்டதா? 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி. நீண்ட நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க. தேன்குழல் சிவக்கலை நேரில் பார்க்கையில். படத்தில் அப்படித் தெரிகிறது போலும். ஆனால் சிவப்பாக இருந்தால் எங்க புக்ககத்தினர் எல்லோருக்கும் பிடிக்கும்.

   Delete
  2. //தேன்குழல் சிவந்து விட்டதா? // - சிவந்தால்தான் நல்லா இருக்கும். எனக்கு அப்பளமே கொஞ்சம் சிவந்திருக்கணும்.

   Delete
 25. உங்கள் பட்சணங்களை பார்த்த ஆவலில்., என் கருத்து இரண்டு முறை வந்து விட்டது. ஹா.ஹா.ஹா. பிழை பொறுக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்ன கமலா? இரண்டு வெவ்வேறு முறையில் பதில்களைக் கொடுத்துடுவேன். பல சமயங்களில் இப்படி வரும். ஆனாலும் வெளியிடுவேன். சிலர் அவங்களாக நீக்குவாங்க.

   Delete
 26. என்ன கீசாக்கா இம்முறை முமுமுமுறுக்கோடு பேய்க்காட்டுறீங்க டீ..வாலியை:))..

  அதிலும் தேங்ங்ங்ங்குழல் எனப் போட்டிட்டீங்க ஆனா தேனைக் காணம்:))..

  சரி சரி இப்போ இதெல்லாம் முக்கியமில்லை... நீங்கள் மகன் மருமகள் முக்கியமாக குஞ்சுலுப் பேத்தியோடு இம்முறை கொண்டாடுவதுதானே மிகப் பெரிய மகிழ்ச்சி.

  புதுச்சாறி உடன் செல்பி போடுங்கோ:))..

  நான் சீனிஅரியதரம்/அதிரசம் செய்யப்போறேன்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. அதிரா, சங்கமித்திரையாக ஆனப்புறமா புத்திசாலித்தனம் ஜாஸ்தியாயிருக்காப்போல் இருக்கு. உண்மையில் குழந்தையோடு தீபாவளி கொண்டாடும் ஆசையில் தான் இங்கே வந்தோம். அதான் உச்சகட்ட மகிழ்ச்சி! அரியதரத்தைப் பார்த்து எடுங்க. அவசரப்படாதீங்க. உதவிக்கு உங்க கணவரைக் கூப்பிட்டுக்கோங்க! :)))))

   Delete
 27. குஞ்சுலுவோடு தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகட்டும்.

  படங்கள் ஸூப்பர் பழைய மாதிரி தீபாவளி கொண்டாட்டம் இல்லைதான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்க வீட்டிலும் தலை தீபாவளியோ? அதுவும் சில நாட்களில் பேரன், பேத்தி பிறக்கப் போகிறார்கள். மகிழ்வான தீபாவளியாக அமையட்டும். வாழ்த்துகள். பேரன் வந்து உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

   Delete
 28. //..இங்கே பையர் பிடிவாதமாகப் பண்ணினே என்றால் நான் சாப்பிட மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார்.//

  ஏன் இப்படிப் பையரை பயமுறுத்திவைத்திருக்கிறீர்கள்.. சாப்பிடும்படிப் பண்ணினால்தான் என்ன !

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, இது நல்லா இருக்கே! இஃகி,இஃகி, இஃகி! பையருக்கு அம்மா கஷ்டப்படுவது பிடிக்கலை. அதான். இப்போ இல்லை, அவர் விபரம் தெரிஞ்சதில் இருந்தே சொல்லுவார். ஆனால் அப்போல்லாம் அப்படி இருக்க முடியாத நிலை. இப்போப் பத்துப்பதினைந்து வருஷங்களாக நாங்க இருவர் மட்டும் தானே! அதனால் எல்லாம் போதும்னு இருங்க என்பார்.

   Delete
 29. இங்கும் முன்பு கலகலத்த தீபாவளி பட்சணங்கள் இல்லை எல்லாம் காலமாற்றம்.

  அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, எல்லோருக்குமே ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது! என்ன செய்ய முடியும்! :(

   Delete
 30. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 31. தீபாவளிப் பலகாரங்கள் படத்தைப் பார்த்ததும் வாயூறுதே

  இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete