எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 07, 2019

அம்பேரிக்காவில் கொண்டாடிய சரஸ்வதி பூஜை!

நாங்க எப்போ யு.எஸ். வந்தாலும் நவம்பருக்குள்ளே பயணச் சீட்டு விலை குறைவாக இருக்கும் நேரம் பார்த்து வருவதே வழக்கம். ஒரே ஒரு முறை ஏப்ரலில் கிளம்பி வரும்படி ஆனது. அப்போத் தான் அப்பு பிறந்தாள். அவளுக்காக வந்தோம். சென்ற முறை இங்கே கிளம்பி வரும்போது கூட டிசம்பரில் தான் வந்தோம். அதுவும் 15 தேதிக்குள். அதன் பின்னர் டிக்கெட் விலை கிடுகிடுவென ஏறிவிடும். பொங்கலுக்கு இங்கே இருக்கலாம்னு வந்தோம். ஆனால் மாமியாரின் இறப்பினால் அப்போப் பொங்கல் கொண்டாடவில்லை. சும்மா சாஸ்திரத்துக்குக் கொஞ்சம் பொங்கல் மட்டும் குழந்தை பிறந்த வருஷம், பண்டிகையைக் குறைக்கக் கூடாதுனு வைச்சேன். அதுக்கு முன்னால் எல்லாம் பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ணன் பிறப்புனு கொண்டாடி இருக்கோம். தீபாவளி, கார்த்திகை, பொங்கல் கொண்டாடி இருக்கோம். நவராத்திரி கொண்டாடியது இல்லை. நவராத்திரியை அங்கேயே முடிச்சுட்டு விஜயதசமி அன்றோ மறுநாளோ கிளம்புகிறாப்போல் வருவோம். ஆனால் இம்முறை குட்டிக் குஞ்சுலு இருப்பதால் நவராத்திரிக்கு இங்கே வரணும்னு ஆசை.

வந்தாச்சு! கொலுவும் வைச்சாச்சு. அது பாட்டுக்கு தினம் ஒரு பொம்மையைத் தூக்கிக் கொண்டு போய்விடும் என்பதால் உடையாத பொம்மைகளாக வைக்க வேண்டி இருந்தது. பொம்மைகளும் அதிகம் எல்லாம் வைக்கவில்லை. என்றாலும் தினம் அதுக்கு விளையாட இருக்கிற எல்லாப் பொம்மைகளையும் விட்டுட்டு இந்த் பொம்மைகளோடு தான் விளையாடுவேன் என அடம் பிடிக்கும். நம்ம ஊர் மாதிரி தினம் யாரும் வருவதும் இல்லை. அவரவர் வேலை அவரவருக்கு. வாட்சப்பிலே செய்தி கொடுத்துத் தேதியும் நேரமும் நிர்ணயம் செய்து கொண்டு சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலே அநேகமாக யார், யார் வீட்டுக்கெல்லாம் போகணுமோ அங்கெல்லாம் போய்விட்டு வந்துடறாங்க. நேத்திக்கு எங்க பொண்ணு கூப்பிட்டிருந்தானு போயிருந்தோம். சுமார் 50 பேர்களை அழைத்திருந்தாள். அவங்களுக்குச் சாப்பிட பாஸ்தா சாட், பொடி இட்லி, வெஜிடபிள் சாதம், (வெங்காயம், பூண்டு தவிர்த்து), தயிர் வடை, சேமியா பாயசம், ஜூஸ் வகைகள் எனச் சமைத்து வைத்திருந்தாள். படம் எடுக்கவில்லை. பெரும்பாலோருக்குப் பிடிக்காது என்பதால். சாப்பாடை மட்டும் எடுக்கலாம்னா குழந்தைங்க, பெரியவங்க என வந்து கொண்டே இருந்தாங்க. அதோடு பெண்ணுக்குமே பிடிக்காது! 



குட்டிக்கொலு




பூஜை நடக்கிறது!


சாதம், பருப்பு, பாயசம்


                                                           தீபாராதனை உம்மாச்சி பக்கத்திலே சிவப்புக்கலர் ரவிக்கைத் துணி பக்கமாத் தெரியுதா?
                                                     
பண்டிகையைக் குறைக்கக் கூடாதுனு சும்மா பேருக்குத் தான் கொலு! மருமகள் தயவிலே தினம் ஒரு சுண்டலும் சாப்பிட்டாச்சு. இன்னிக்கு சரஸ்வதி பூஜையையாவது நம்ம ஊரிலே பண்ணுகிறாப்போல் பண்ணலாம்னு நினைச்சோம். பழங்கள், வெற்றிலை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க! பூக்கள் கிடைப்பது தான் சந்தேகம். முன்னே வந்திருந்த சமயங்களிலே எல்லாம் வாக்கிங் போகையிலே வேலி ஓரங்களில் பூத்திருந்த அரளி, ரோஜாக்களைப் பறித்துக் கொண்டு வந்தோம். அந்தப் பூக்களைப்  பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ணன் பிறப்பு பூஜைகளுக்கு வைத்துக்கொண்டோம். ஹிஹி! ஆனால் பிள்ளை திட்டினார். அது மாதிரி இப்போச் செய்ய வேண்டாம்னு நினைச்சால் வால்மார்ட்டில் தான் பூக்கள் கிடைக்குமாம். அதுவும் பொக்கே மாதிரிப் போல! ரோஜாக்கள் தான் இருக்கும் என்றார்கள். அப்புறமா யோசிச்சுப் பொண்ணு வீட்டில் பூச்செடிகள் இருப்பதால் அங்கே பூக்களைப் பறித்துக் கொண்டு வரலாம்னு அங்கே இருந்து பூக்களைக் கொண்டு வந்தோம். ஆச்சு! இன்னிக்குக் காலம்பர சீக்கிரமே குளிச்சுச் சமைச்சுப் பாயசம், சாதம், பருப்பு நிவேதனத்துக்கு  வைத்து சரஸ்வதிக்குப் பூஜை செய்து புத்தகங்கள் வைத்துக் கும்பிட்டுக் குடைமிளகாய் சாம்பார், தக்காளி ரசம், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்குக்  கறியோடு மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிட்டாச்சு! இப்போத் தான் இதை உடனே சூடாகப் பதிவு போட்டுடலாம்னு வந்தேன்.

பையரும், மருமகளும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பதால் வடை, அதிரசம் என்றெல்லாம் பண்ணவில்லை.  ஊரிலே  அங்கேயே பண்ணிட்டு விநியோகம் தான் செய்வேன். ஆகையால் பண்டிகைக்குப் பாயசம் மட்டுமே செய்தேன். சரஸ்வதி பூஜையை முதல்முறையாக இந்த ஊரில் இப்படி எளிமையாகக் கொண்டாடியாச்சு! பூஜை தானே முக்கியம். வடையும் அதிரசமும் எப்போவும் இருக்கவே இருக்கு! நினைச்சால் பண்ணிச் சாப்பிட்டுக்கலாமே!

48 comments:

  1. ஹையா :) கீதாக்கா அம்பேரிக்கா போனதில் இருந்து லண்டன்காரங்களுக்கு உடனே பஃஸ்ட் பார்க்க வசதியா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! வாங்க ஏஞ்சல், நீண்ட நாட்கள்/மாதங்கள் பின்னர் முதல் வருகைக்கு மகிழ்ச்சியும், கருத்துக்கு நன்றியும்.

      Delete
  2. /அது பாட்டுக்கு தினம் ஒரு பொம்மையைத் தூக்கிக் கொண்டு போய்விடும் என்பதால் உடையாத பொம்மைகளாக வைக்க வேண்டி இருந்தது.//
    ஹாஹாஆ ..அதை காண கண் கோடி வேண்டும் :) யாருமே பார்க்கலைன்னு நினைச்சி தூக்குவாங்க :) எங்க வீட்ல  மகள் 2 வயசிருக்கும்போது மேஞ்சர் செட்டில் பொம்மைகளை இடம் மாத்தி வச்சிடுவா :) அது நினைவு வந்தது ..குழந்தை ஏசு இருக்கிற இடத்தில் ல் ஆட்டுக்குட்டி மேரி பக்கத்தில்  ராஜா இப்படி :)இருக்கட்டும்க்கா குஞ்சுளு விளையாடட்டும் அதை ரகசியமா வீடியோ பண்ணி வைங்க :) நான் போட்டோ எடுத்தேன் மகள் இப்படி ஒளிஞ்சி எடுக்கும்போது .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தினம் தினம் ஒரு பொம்மையைத் தூக்கிக் கொண்டு போயிடும். அதை எங்கோ போடுமோ தெரியாது. நவராத்திரி முடிஞ்சு தான் தேடிப் பார்க்கணும். வீட்டு மூலைகளில் இருந்தெல்லாம் கிடைக்கலாம்.

      Delete
  3. குட்டி கொலுவில் வாத்து ,சிம்பா எல்லாம் இருக்காங்க :) அழகா இருக்கு அதான் குஞ்சுலு ஆசைப்படறாளோ 

    எனக்கொரு டவுட் அங்கே ,இங்கேயும்தான் எப்படியும் ப்ளவுஸ் பிட் குடுத்தா தைக்க ஆள் கிடைக்காதே என்ன பண்ணுவாங்க ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதை எல்லாம் அது கொண்டு வந்து வைச்சிருக்கு! இஃகி,இஃகி! இங்கே எல்லாம் ப்ளவுஸ் பிட் எல்லாம் கொடுப்பதில்லை. சுவாமி விக்ரஹங்கள், ஒயிட் மெடல் வெற்றிலை, பாக்குத் தட்டு!, குங்குமச் செப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் இப்படிக் கொடுப்பாங்க! இந்த வருஷம் நாங்க இந்தியாவிலே இருந்து மஹாலக்ஷ்மி தாமரையில் உட்கார்ந்திருக்கிறாப்போல் விக்ரஹம் வாங்கிக் கொண்டு வந்தோம். அதைத் தவிரவும் மாங்காய்(குட்டி மாவடு) மாதிரிக் குங்குமச் செப்பு! அலங்காரங்களுடன்.

      Delete


  4. என்னதான் பண்டிகைகளை இங்கு கொண்டாடினாலும் அது எந்த மத பண்டிகையாக இருந்தாலும் சரி இந்தியாவில் கொண்டாடுவது மாதிரியான சந்தோஷமான பீலிங்க் இங்கு கிடைப்பது இல்லை இந்தஒ ரு விஷயத்தில்மட்டும் இந்தியாவை நான் மிஸ் பண்ணுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை தமிழரே! அதைத் தான் நான் பண்டிகை குறிப்பாக நவராத்திரி முடிந்ததும் கிளம்பி வருவோம் என்று மறைமுகமாகச் சொன்னேன். நவராத்திரி மட்டும் இல்லை. எந்தப் பண்டிகையும் இந்தியாவில் தான் கொண்டாடணும்.

      Delete
  5. பொம்மைகளை குழந்தை தூக்கிக்கொண்டு போவது செம சுவாரஸ்யம்.  பின்னாலயே போய் கெஞ்சி கூத்தாடி வாங்கவேண்டும்...      

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அது எங்கே கொண்டு போடுமோ தெரியலை. அப்புறமா அதோட பொம்மைகளை வாங்கி வைச்சிருக்கு. :))))) இதெல்லாம் அதோட பழைய பொம்மைகள். குட்டிப் பாப்பாவாக இருந்தப்போ வாங்கினவை!

      Delete
  6. பூக்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டமா அங்கே...     உங்கள் வீட்டிலேயே பால்கனியில் /மொட்டை மாடியில் சில பூச்செடிகள் வளர்க்க முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. அதான் பொண்ணு வீட்டிலே பறிச்சிட்டு வந்தோம்னு சொன்னேனே ஸ்ரீராம்! அதென்னமோ தெரியலை, இங்கே பூச்செடிகள் அவ்வளவு நன்றாக வருவதில்லை. 2011 ஆம் ஆண்டிலே வாசலிலேயே ஒற்றை ரோஜா பூத்துக் கொண்டிருந்தது. இப்போ அதெல்லாம் போய்விட்டது! தெருவில் இரண்டு பக்கமும் வேலிகளில் ரோஜா பூத்துக்கிடக்கும். ஆனால் பறிக்கக் கூடாது!

      Delete
    2. அபார்ட்மென்ட் என்னும் குடியிருப்பு வளாகங்களில் (இங்கெல்லாம் ஒரு வளாகத்தில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக்குடியிருப்புகள் இருக்கும்.)மொட்டை மாடி இருக்கோ என்னமோ தெரியலை. ஆனால் அங்கெல்லாம் பால்கனி உண்டு. புறாக்கள் வந்து எந்தச் செடி வைத்தாலும் வீணாக்கிவிடும். ஆகவே வாடகைக்கு இருந்த வீடுகளில் எல்லாம் வைக்கலை. ஆனால் இங்கே தனி வீடுகளுக்கு மொட்டை மாடி எல்லாம் கிடையாது. மாடி உண்டு. மாடியில் ஓர் இடத்தில் ஆட்டிக் எனப்படும் "சேந்தி" நம்ம ஊர்ப் பரண் இருக்கும். கீழே வீட்டுத் தோட்டம் சுமார் 2 கிரவுண்டுக்கு இருக்கும். செடிகள், மரங்கள் கட்டாயம் வைக்கணும். இல்லைனா கார்ப்பரேஷனில் இருந்து நோட்டீஸ் வந்துடும். அப்படி வைச்சதில் வந்த ஒரு சில மரங்கள் இருக்கு. செடிகளும் இருக்கு. ஆனால் பூக்கள் பூஜைக்கு எல்லாம் பயன்படுத்த முடியாது.

      Delete
  7. சனி ஞாயிறுகளில் மொத்தமாகக் கிளம்பி கொலுக்களை விசிட் செய்வது பற்றி வேறு சில இடங்களிலும் படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரைக்கும் அனுபவித்த கொலுவே குஜராத் ஜாம்நகரில் இருக்கும்போது தான்! பத்து நாட்களும் பிசியாக இருக்கும். சுண்டல் போணியும் ஆகும். கலெக்ஷனும் ஆகும்.

      Delete
  8. அன்பு கீதாமா, பாரம்பர்யத்தை விடாமல் இங்கேயும்
    கொலு வைத்தது அருமை. கொலுவில் பாப்பாவோட பொம்மைகள் நிறைய இருக்கின்றன. அதான் எடுத்துக் கொண்டு போறது.
    மாமா பூஜை செய்வதும் அருமை
    இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
    மகள் வீட்டு சிறப்பு விருந்தைப் பற்றி அறிய மிக சந்தோஷம்.
    அவளுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கொலு தனியாய் வீடு வாங்கிக்கொண்டு வந்ததில் இருந்து வைக்கிறாள் மாட்டுப் பொண்ணு. ஆனால் அப்போல்லாம் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால் ஜாஸ்தி யாரையும் கூப்பிட முடிஞ்சதில்லை. இப்போவும் குழந்தையோடு நேரம் சரியாகப் போகிறது. குஞ்சுலு பயங்கர விஷமம்! பாவம், அதைக் கவனிக்கவே சரியா இருக்கும். ஒரு விஷமத்தைச் சரி பண்ணிட்டு வருவதற்குள் இன்னொரு விஷமம் ஆரம்பிச்சிருக்கும். குழாயைத் திறந்து விட்டுத் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடிச்சுப் பிடிச்சு விடும். அதுவும் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டு எல்லா விஷமங்களும்! எல்லாவற்றையும் அதனதன் இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்து நட்ட நடுவில் போட்டுவிடும். :)))) அதோட பொம்மைகளை எல்லாம் இஷ்டத்துக்குத் தூக்கிப் போட்டிருக்கும். ஆனால் அதிசயம் என்னன்னா எந்த பொம்மை எங்கே இருக்குனு சரியாத் தெரிஞ்சு வைச்சிருக்கும். நினைவாக அங்கே போய் எடுத்துக் கொண்டு வரும்.

      Delete
    2. நீங்க ரசித்து எழுதியிருப்பதைப் பார்க்கும்போது என் பெண், பையன் செய்தவைகள் நினைவுக்கு வருது. அது ஒரு சந்தோஷமான அனுபவம்.

      Delete
    3. சின்னதாகக் குட்டியாக இருந்து கொண்டு இங்கே எல்லோரையும் வேலை வாங்குகிறது! ஒரு குழந்தை மட்டும் வீட்டில் இருந்தால் அதான் சொர்க்கம்!

      Delete
  9. மதுரைத்தமிழர் சொல்வது போல் இந்தியாவில் கொண்டாடுவது போல் மகிழ்ச்சி எங்கும் கிடைக்காது.

    என்ன செய்வது சிலரது வாழ்க்கை சூழல் மாறிவிடுகிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இது பண்டிகை கொண்டாடுவதோடு மட்டும் இல்லை. இன்னும் பல விஷயங்களில் இந்தியாவே சிறப்பு!

      Delete
  10. குட்டிக் கொலு அருமை.
    இந்தியாவில் கொண்டாடுவது போல் இல்லையென்றாலும் குழந்தைகளுடன் பேத்திகளுடன் கொண்டாடும் பண்டிகை மகிழ்ச்சி தான். பேத்தியின் குறும்புகள் படிக்க ஆனந்தம்.
    சார் செய்யும் பூஜை சிறப்பு.


    பொக்கே மாதிரிப் போல இருக்கும் பூக்கள்தான் கிடைக்கும், சின்ன மஞ்சள் சிவந்தி பூக்கள் கிடைக்கும், பேர் தெரியாத அழகான மலர் கொத்துக்களை கொண்டு வருவார்கள் கொலு பார்க்க வருபவர்கள். அதை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சாமிக்கு முன் வைப்பார்கள். அல்லது பூஜாடிகளில் அப்படி கொலு படி அருகில் வைப்பார்கள். விலையை கேட்டால் நமக்கு வாங்க தோணாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஒவ்வொருத்தருக்கும் மஞ்சள், குங்குமம் கொடுக்கையில் அதுக்கும் கொடுக்கணும்னு சொல்லும். இல்லைனா தானே எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொள்ளும். குழந்தை விளையாடுவதைப் பார்க்கும் ஆனந்தம் தான்! அதுக்காகத் தானே இங்கே வந்ததே! மகள் வீட்டில் ஏழு, எட்டு பொக்கேக்கள் வந்திருந்தன. நானும் விலையைத் தான் நினைத்துக்கொண்டேன்.

      Delete
  11. சின்னதோ, பெரியதோ எப்படியிருந்தாலும் கொலு அழகாகத்தான் இருக்கும். குட்டி குஞ்சுலுவின் விஷமங்கள் ரசிக்கக்கூடியவைதான். 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிம்மா!

      Delete
  12. டிசம்பரில் தான் வந்தோம். அதுவும் 15 தேதிக்குள். அதன் பின்னர் டிக்கெட் விலை கிடுகிடுவென ஏறிவிடும். //

    அது முதலில் ஆகஸ்ட் செப்டெம்பர் ஃபாஸ் சீசன் வகுப்புகள் அப்புறம் ஜனுவரியில் அடுத்த வின்டர் சீசன் வகுப்புகள் என்று அங்கு தொடங்குவதால் இருக்கும் என்று தோன்றுகிறது கீதாக்கா...இல்லையோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கே எல்லாம் கோடை விடுமுறை ஜூலை, ஆகஸ்ட்டில் வருவதால் செப்டெம்பர் வரை பயணச் சீட்டு விலை அதிகமாக இருக்கும். அதோடு டிசம்பர் மாதமும் இந்தியாவுக்கு வருபவர்கள் அதிகம்! அப்போவும் நீங்க சொல்றாப்போல் சிலருக்கு விடுமுறை கிடைக்கும். அதனாலும் ஜனவரி வரை விலை அதிகம் இருக்கும்.

      Delete
  13. கொலு சின்னதா இருந்தால் என்ன கொலு கொலுதான். அதுவும் இப்படிக் குட்டிக் குஞ்சுலு எடுத்துக் கொண்டே போவது எல்லாம் ஹா ஹா ஹா ரசித்தேன் நினைத்துப் பார்த்துக் கொண்டு...

    ஆமாம் அங்கெல்லாம் வார இறுதி நாட்களில் ஒரே நாள் ஒரு வீட்டில் நிறையப் பேர் கெட்டுகெதர் போலத்தான் கூடுறாங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும், மாமாவும் இந்தியாவில் இருந்திருந்தால் குட்டிக்குஞ்சுலுவுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேஷம் போட்டுக் கூட்டிக் கொண்டு போகலாம்னு பேசிப்போம். இங்கே எல்லாம் அப்படி இல்லை! ஆனால் ரொம்பவே க்ரான்டாக விலை உயர்ந்த உடைகளை உடுத்திக்கொண்டு வருகிறார்கள்.

      Delete
  14. குட்டிக் குஞ்சுலுதான் டாப்!!! இந்தப் பதிவில்...

    பின்ன இப்படியானவை எல்லாம் இந்த வயசில்தானே எஞ்சாய் செய்யமுடியும் குஞ்சுலுவும் சரி நாமும் சரி. பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டே இருக்கலாம்...ரசித்தேன் ரசித்தேன்...க்யூட் க்யூட்

    கீதா

    ReplyDelete
  15. ராமர் பட்டாபிஷேகப் படம் இல்லாத முதல் இடுகை. பாராட்டுகள்.

    சரஸ்வதி பூஜை.. குழந்தையின் விஷமம் - ரசிக்கச் செய்தது.

    மாமா வாசிப்பது என்ன ஸ்லோகம் என்பதுதான் ஜூம் பண்ணினாலும் தெரியலை. இது போட்டோகிராபரின் மிஸ்டேக்தான். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. சரஸ்வதி படத்தின் முன்னே அமர்ந்து கொண்டு ஸ்லோகமா படிப்பார்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சரஸ்வதிக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் பார்த்து அஷ்டோத்திர நாமாவளி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      Delete
  16. சிம்பிளாகவேனும் கொண்டாடிட்டீங்களே கீதாக்கா...அதுவே நல்ல விஷயம் நீங்க சொல்லிருக்காப்ல பூஜைதானே முக்கியம்...

    இங்கும் எண்ணெய்ப் பதார்த்தங்கள் செய்யலை இங்கு பங்களூரில். அதுவும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் (மிகவும் நலிந்த குழந்தைகள்) அவங்க அத்தை வீட்டுக்குப் போயிருந்ததால் - அத்தை வீடுனா ஊரெல்லாம் இல்லை ஒரு 5,6 பஸ் ஸ்டாப் தள்ளி.....போயிருந்ததால் நானும் செய்யவில்லை. மகனும் இங்கில்லை...சென்னை என்றால் உறவுகள் என்று பகிர்ந்துவிடுவேன். ..எனவே பிரார்த்தனைகளுடன் சரி...

    மகளின் மெனு அட்டகாசம்!!! முந்தைய நாளில் இருந்தே வேலைகள் மும்முரமாக இருந்திருக்கும்.

    ப்ளவுஸ் பிட் தெரிகிறதே படத்தில்...

    படங்கள் நன்றாக வந்திருக்கு அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த ப்ளவுஸ் பிட் சரஸ்வதிக்குச் சார்த்திய வஸ்திரம். வஸ்திரம் சாத்தணுமே! நான் புதுப்புடைவை கூட வைப்பேன். இப்போவும் புடைவை இருந்தது. ஆனால் அதோட ப்ளவுஸ் பிட்டை எல்லாம் இந்தியாவிலேயே விட்டுட்டு வந்துட்டேன். :) அதனால் ரவிக்கைத்துணி மட்டும். ஆமாம், முதல் நாளில் இருந்தே வேலை செய்திருக்கணும். எல்லாம் நன்றாக இருந்தது. சுமார் 50 பேருக்குக் குறையாமல் குழந்தைகள் உள்பட வந்திருந்தனர். மத்தியானம் 3 மணியில் இருந்தே வர ஆரம்பித்துவிட்டனர். பொடி இட்லி நாங்க ஒரு தரம் கும்பகோணம் போயிட்டுத் திரும்பும்போது ஏதோ ஓர் பாலாஜி பவனில் மாப்பிள்ளை ஆர்டர் பண்ணிச் சாப்பிடறப்போ ஒரே ஒரு துண்டு மட்டும் சாப்பிட்டோம் காரமாக இருந்தது. இதில் காரம் இல்லை. ஆனால் அதே சமயம் எண்ணெயாகவும் இல்லை. எப்படினு ஒரு முறை அங்கே போறச்சே பார்க்கணும். இங்கே இந்தியாவில் நல்லெண்ணெயில் போட்டு வதக்குவதால் எண்ணெய்ப்பசையோடு இருக்கும்.

      Delete
  17. அம்பேரிக்காவில் சரஸ்வதி! அவருக்கு ஹெச்1பி, பச்சக்கார்டு, மஞ்சக்கார்டெல்லாம் தேவையில்ல. கொண்டாடிட்டீங்க!
    அது சரி, இப்பவாவது அந்தக் கொழந்த கேட்ட பொம்மயக் கொடுத்தீங்களா, இல்லயா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா அதுக்கு பொம்மையை நாங்க கொடுக்கணுமா ஏகாந்தன்? நீங்க வேறே! அதுவே எடுத்துக் கொண்டு போய்விடும். அது கொண்டு போனது போக மிச்சம் தானே கொலுவுக்கே!

      Delete
  18. வணக்கம் சகோதரி

    குட்டி கொலு நன்றாக உள்ளது. சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது குறித்து சந்தோஷம். பேத்தியின் விஷமங்கள் ரசிக்க வைத்தன. நான் தாமதமாக தங்கள் கொலுவுக்கு வந்திருப்பதால், சுண்டல் கிடைக்காது என தெரியும்.. ஹா.ஹா.ஹா ஆனாலும் அழகாய் இருக்கும் குட்டி கொலு வை ரசித்தேன். கூடவே குட்டி குஞ்சலுவின் விஷமங்களையும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சரஸ்வதி பூஜை அன்று கடலைப்பருப்புச் சுண்டல் தான். எதிர்பாராமல் இரு பெண்கள் ஒரு கன்யாக்குழந்தை! வந்தார்கள். வெற்றிலை, பாக்குக் கொடுத்தோம். திருப்தியாக இருந்தது. வரவுக்கும் கொலுவை ரசித்ததுக்கும், குழந்தையின் விஷமங்களை ரசித்ததுக்கும் மிக்க நன்றி.

      Delete
  19. நவராத்திரி விழா குறும்பு பேத்தியுடன் குதூகலமாக சிறப்புற்றது என சொல்லவும் வேண்டுமா இனித்திடட்டும் நேரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி! குழந்தையின் குறும்புகளுக்குக் கேட்கவா வேணும்?

      Delete
  20. ஆஆஆஆஆஅ இது என் கண்ணுக்கு எப்பூடித் தெரியாமல் போச்சூ.. என் செக் சொல்லித்தான் பார்த்தேன், ஆனா உடன் வர முடியாமல் போச்ச்ச்ச்:))... புக்கையைப் பார்க்கும்போது கீசாக்காதான் பொங்கியதுபோல தெரிகிறதே:)..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அதிரடி, இந்த நெல்லைத் தமிழர் மாதிரி நீங்களும் ஒரே அவசரம்! அதான் எதுவும் கண்களில் சரியாப்படறதே இல்லை. "கல்பத்ரயம்" என்னும் பூஜா விதான புத்தகத்தை அவர் ஸ்லோக புத்தகம் என்கிறார். நீங்க என்னடான்னா பதிவே கண்களில் படலை என்கிறீர்கள்! இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  21. குட்டிக்கொலு அழகு.. கொஞ்சுலுவுக்காக எல்லாம் பிளாஸ்ரிக் கொலுக்கள் போல இருக்கே ஹா ஹா ஹா. பூஜை செய்வது மாமாதானே..

    வீட்டுப்பூஜை என்பது மொத்தமாக மூன்று தெய்வங்களுக்குமானதுதானே.. ஏன் சரஸ்வதி படம் மட்டுமே இருக்கு?..

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, மண் பொம்மைகள் ஒன்றிரண்டு வைத்துப் பார்த்தால் அது தூக்கிக் கொண்டு போய் விடுகிறது. விளையாட்டாகக் கீழே போட்டுவிட்டால் பொம்மையும் போயிடும். அதோடு சின்னச் சின்னத் துகள்கள் குழந்தை காலில் குத்திவிட்டால் என்ன செய்யறது! கூடியவரை ஆபத்து இல்லாத பொம்மைகளையே வைத்திருக்கோம். குழந்தைக்கு விபரம் தெரிஞ்சதும் நன்றாகக் கொலு வைக்கலாம்.

      Delete
  22. கீசாக்கா உங்கள் மகளும் அங்குதான் இருக்கிறார்களோ.. அப்போ நீங்களும் அங்கு செட்டில் ஆகிட வேண்டியதுதானே.. ஸ்பொன்சர் செய்யலாம் தானே உங்கள் இருவருக்கும்.

    அது மகளின் வீட்டுக் கொலுவோ அப்போ?

    ReplyDelete
    Replies
    1. கவரிமா, அதிரடி, மகள் தான் கல்யாணம் ஆனதுமே வந்துவிட்டாள். இரண்டு பேத்திகளும் இங்கே பிறந்தவங்க தான். பையர் அதுக்கப்புறமாப் படிப்பதற்காக வந்தார். ஹூஸ்டனிலேயே படிச்சு இங்கே செட்டில் ஆகி விட்டார். மகள் பல ஊர்கள் சுற்றி இருக்கிறாள். வடக்கே மினியாபோலிஸ், பாஸ்டன், ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா, டெனிசி என இருந்துவிட்டு இப்போ இங்கே ஹூஸ்டன் வந்து செட்டில் ஆகி இருக்காங்க. கொலு மகள் வீட்டில் வைப்பது வழக்கம் இல்லையாம். நவராத்திரிப் பத்து நாட்களில் ஒரு நாள் அனைவரையும் அழைத்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்குக் கொடுத்துச் சாப்பாடு, பரிசுப் பொருட்கள் எனத் தருவாள். அது மாதிரி போன ஞாயிறு அன்று அழைத்திருந்தாள். கொலு இங்கே நம்ம வீட்டில் தான்.

      Delete
    2. இங்கே கொஞ்ச நாட்கள் இருப்பதே போர் அடிக்குது! குழந்தைங்க இருப்பதால் கொஞ்சம் பொழுது போகும். இங்கே செட்டில் ஆகும் எண்ணம் எல்லாம் இல்லை. க்ரீன் கார்ட் வாங்கித் தரேன்னு தான் சொன்னாங்க! இரண்டு பேருமே! எங்களுக்கு இஷ்டம் இல்லை. இந்தியா, இந்தியா தான்!

      Delete