கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து ஜனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். ரெயில் வண்டியின் வேகம், பஸ்ஸின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.
இன்றும் அன்றும்
இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?
அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.
கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும் ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.
ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.
அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.
போஜனக் கிரமம்
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.
கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.
நலங்கு முதலியன
காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.
நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.
விநோத நிகழ்ச்சிதான்
எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.
எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.
அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.
சிதம்பர உடையார் வருகை
விபவ வருஷம் ஆனி மாதம் 4-ம் தேதி (16-6-1868) என் விவாகம் நடந்தது. அன்று இரவு மறவனத்தம் சிதம்பர உடையார் குதிரை மீதேறி வந்து சேர்ந்தார். அவர் விவாகத்துக்கு முதல் நாளே வந்திருப்பார். அவர் தந்தையாருக்கு அன்று திதியாகையால் அதைச் செய்துவிட்டு விவாக தினமாகிய மறுநாட் காலையிலே புறப்பட்டு இரவு மாளாபுரம் வந்தார். வந்தவுடனே என் தந்தையாரைக்கண்டு தாம் முன்பே வாக்களித்திருந்தபடி ஐம்பது ரூபாய் அளித்தார். தக்க சமயத்தில் அவர் செய்த உபகாரத்தைப் பெற்று என் தந்தையார் மிக்க நன்றி பாராட்டினார்.
அவர் குதிரையின்மீது ஏறிவந்து இறங்கியபோது அவர் ஒரு பெரிய செல்வரென்பதைக் கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் அறிந்துகொண்டனர். அவர் கலகலவென்று பணத்தை எடுத்துக்கொடுத்தபோது எல்லாரும் ஆச்சரியமுற்றனர். என் தந்தையார் மிக்க செல்வாக்குடையவரென்ற எண்ணம் அவர்களுக்கு அப்போது உண்டாயிற்று. அரியிலூர் முதலிய இடங்களிலிருந்தும் சில வேளாளச் செல்வர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரங்கள் நடைபெற்றன. எந்தையாரிடம் அவர்கள் காட்டிய மரியாதையைக் கண்ட என் மாமனாரும் அவரைச் சார்ந்தவர்களும், “நல்ல இடத்தில்தான் நாம் சம்பந்தம் செய்திருக்கிறோம். பெரிய மனுஷர்களெல்லாம் இவருக்குப் பழக்கமாக இருக்கிறார்கள். நம் மாப்பிள்ளைக்குக் குறைவு ஒன்றும் இல்லை” என்ற தைரியத்தை அடைந்தார்கள்.
ஆஆ நான்தான் firstttttt :)))))))
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இங்கயுமோ.. கீசாக்காஆஆஆஆஅ ஜொள்ளிட்டேன்ன் இது நல்லதுக்கில்ல:)).. இதுக்கு மேலயும் இந்த உசிறு:) இந்த உடம்பில இருக்குமென்று நம்புறீங்களோ:)).. விடுங்கோ மீ காசிக்குப் போகப்போறேன்ன்ன்ன்:))
Deleteஹாஹாஹா, ஏஞ்சல் நீங்க தான் ஃபர்ஷ்டோ ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! அதிரடி அருந்ததியாரே, நீங்களும் முந்திக்கொண்டு வரதுக்கென்ன? தேம்ஸை விட்டுட்டு இப்போ கங்கையைப் பிடிச்சுட்டீங்க போல! வாங்க காசிக்கு, உங்களை கங்கையில் பிடிச்சுத் தள்ளிடறேன். :)))))))
Deleteவாசிக்க அருமையா இருக்கு .அந்த காலத்துக்கே அழைத்துப்போன உணர்வு .
ReplyDeleteஆமாம் ஏஞ்சல், நானும் இதைப் படிக்கையில் காலத்தை மறந்த உணர்வே ஏற்பட்டது.
Deleteவருஷா வருஷம் நீங்க தமிழ்த்தாத்தாவையும் மகாகவியையும் வாழ்த்த மறப்பதில்லை .எங்களுக்கும் நினைவூட்டியதற்கு நன்றீஸ்
ReplyDeleteவாங்க ஏஞ்சல், பாராட்டுக்கு நன்றி. தமிழ், தமிழ்னு சொல்லிட்டு அது இன்னமும் உயிர்வாழக் காரணமானவரைப் பற்றிச் சொல்லலைனா எப்படி? இப்போதைய தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு இந்தச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி எல்லாம் தெரியாது; புரியாது. அதனால் தாத்தா பற்றியும் தெரிஞ்சுக்கும் ஆர்வம் இல்லை.
Deleteமஹாகவி நம்ம உணர்வோடு கலந்தவன் ஆச்சே!
Deleteஅடடே... இப்போதான் வந்தா மாதிரி இருந்தது!
ReplyDeleteஏப்ரலில் நினைவுநாளுக்குக் கடைசியா வந்திருக்கும். பிறந்த நாள் ஃபெப்ரவரியில் வருது இல்லையா?
Deleteநானும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கறேன். சுவையான சம்பவங்கள் மூலம் பகிர்ந்திருப்பது சிறப்பு.
ReplyDeleteஆவ்வ்வ்வ் பலனை எதிர்பார்த்தே வாழ்த்துச் சொல்றார் ஸ்ரீராம் கர்ர்ர்ர்:)).. அவருக்கு ஒரு வேட்டி அல்லது குடை வாங்கிக்குடுத்து ஆஜீர்வாடம் வாங்கிக்கொள்கிறென் எனச்ஜொள்ள மனம் வரல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
Deleteநன்றி ஸ்ரீராம், தாத்தாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும். அருந்ததியார் பட்டுவேட்டி, பட்டுச் சட்டை அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா வந்துடறதாலே இந்திய விலாசத்துக்கே அனுப்பி வைங்க அருந்ததியாரே!
Deleteஅந்தக்கால வழக்கங்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன. எவ்வளவு வழக்கங்களை நாம் மாற்றி விட்டோம்? இப்போது மாதிரி நினைத்த நேரத்துக்கு உள்ளே சென்று இலை போடச்சொல்ல முடியாது... இந்த விஷயத்தில் இப்போது இன்னும் மோசம்!
ReplyDeleteஎன்னைக்கு நினைத்தாலும் நினைத்த டிபனை நாம் சாப்பிடறோம். முந்தைய காலத்தில் எப்பவானும் டிபன் கிடைக்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை
Deleteஎங்க காலத்தில் அப்போதெல்லாம் இந்தக் கல்யாணப் பந்திகளில் முதலில் அமர்த்தி வைக்கும் நபர்கள் சரியானபடி இல்லை எனில் சண்டையே வரும். கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் போய்விடுவார்கள். வருந்தி வருந்தி அழைத்தாலும் சிலர் வரமாட்டார்கள். அதே போல் தஞ்சைப்பக்கம் சம்பந்திகளுக்கு எனச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நபர்களைக் கணக்குப் பண்ணித் தனியாக எண்ணிக்கை சரியாக இருக்கும்படி இலை போடவேண்டும். சின்னக் குழந்தையாக இருந்தாலும் நுனி இலைதான்! நுனி கிழிந்தெல்லாம் இருக்கக் கூடாது. பெரியவங்க இலையின் அளவே இருக்கணும். இது எல்லாம் தெரியாமல் என் கல்யாணத்தில் அந்தப் பந்தியில் எல்லோரையும் உட்காரச் சொல்லி என் மாமாக்கள் சொல்லிவிட ஒரே அமர்க்களம்! அப்புறமா எப்படியோ சமாதானம் ஆனது. கூட்டத்தைப் பார்த்துவிட்டு நம்மவர் கேட்ட கேள்வி இருக்கே! சித்திரைத் திருநாளுக்கு வந்தவங்க எல்லாம் அப்படியே தங்கிட்டாங்களா? என்று கேட்டார்! :))))))))
Deleteகுளங்களிலும் வாய்க்கால்களிலும் தண்ணீர் இருந்தது... உண்மையில் காணற்கரிய காட்சி.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், உண்மைதான்!
Deleteவீட்டுக்கு வீடு தாம்பூலம், அட்சதை அரிசி வைத்து வருவார்கள். அப்போதுதான் அவர்கள் வந்து வாழ்த்தவும், சாப்பிடவும் வருவார்கள். அந்தக்கால வழக்கம் இப்போது மறைந்து வருகிறது.
ReplyDeleteகல்யாணத்தை ஆடம்பரமாய் செய்து விட்டு கடனாளி ஆவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நலுங்கு , ஊர்வலம் எல்லாம் அருமை. முன்பு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், மறு நாள் இரவு மாப்பிள்ளை, பெண் இருவரும் ஊர்வலமாக வரும் பழக்கமும் இருந்தது சில இடங்களில். பெண் அழைப்பு உண்டு.
திறந்த கார், சாரட் வண்டிகளில் வருவார்கள். மாப்பிள்ளை பெண் தெரியும். இப்போது மூடிய காரில் அலங்காரம் செய்து வருகிறார்கள் மாப்பிள்ளை, பெண்ணைப் பார்க்க முடியவில்லை.
பகிர்வு அருமை.
தமிழ் தத்தாவிற்கு வணக்கங்கள்.
வாங்க கோமதி, இப்போது வெகு அரிதாகச் சில உறவினர்கள் பத்திரிகை வைத்து அழைக்கையில் அக்ஷதையுடன் வருகின்றனர். இப்போல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கு முன்னால் ஆணும், பெண்ணுமாக ஆடிக்கொண்டு வருவதும், (வடநாட்டு வழக்கம்) மெஹந்தி நாள் என ஒரு நாள் ஏற்பாடு செய்வதும், ரிசப்ஷனின் போது பல்வேறு ஸ்டால்களோடு குழந்தைகளை மகிழ்விக்கும் மாஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சியும் தான் ரொம்பவே பிரபலம். பஞ்சு மிட்டாய் ஸ்டால். மிக்கி, மினி மவுஸ் உடைகளில் வந்து குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது இவைதான் கல்யாணங்களின் முக்கிய அம்சங்கள்.
Deleteசுவாரஸ்யம்...
ReplyDeleteதமிழ் தாத்தா பற்றி படித்து இன்னும் பல செய்திகள் அறிந்துக் கொள்ள வேண்டும்....
நன்றி அனுப்ரேம், இணையத்தில் நிறையக் கிடைக்கிறதே! நான் சொன்ன மரபு விக்கியிலும் பார்க்கலாம் உ.வே.சா. என்னும் தலைப்பில்
Deleteநன்னாளில் தேடி எடுத்துப் பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteநிறைய அரிய விடயங்கள் அறிந்தேன் சகோ.
ReplyDeleteபடிப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
முதல்ல தாத்தாவை 378 ஆம் சட்டப்படி உள்ளே போடோணும்.. ஏன் தெரியுமோ குழந்தைத் திருமணம் புரிஞ்சமைக்காக:))..
ReplyDeleteஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:)).. ஆரவது கொடிபிடிச்சால்ல் பீஸ்ஸ்ஸ் கீசாக்கா சேவ் மீ.. நான் உண்மையைத் தானே ஜொன்னேன்ன்:)) ஹா ஹா ஹா..
ஹாஹா என் அம்மாவுக்குத் திருமணத்தின் போது 13 வயசு தான்! அப்பாவுக்கு 25 வயது! :)))) என் கல்யாணமும் சீக்கிரம் தான். பத்தொன்பது வயது. நம்ம ரேவதிக்குப் பதினேழு வயது தான்! (வல்லிம்மா) இஃகி,இஃகி,இஃகி, இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?
Delete13 வயசென்பது கொடுமை எல்லோ.. அந்த வயதில் எனக்கு ஒண்ணுமே தெரியாதே.. ஏன் கிட்டத்தட்ட 15-16 வரை எனக்கு ஒண்ணுமே தெரியாமல், மந்திரத்தாலயே மாங்காய் கிடைக்கிறது என நம்பிக்கொண்டிருந்தேன் தெரியுமோ ஹையோ ஹையோ..
Deleteவேடிக்கை என்னன்னா என் அப்பா எனக்கும் 13 வயதிலேயே கல்யாணம் பண்ண பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஜாதகம் எடுத்துக்கொண்டு என் தாத்தாவிடம் (அம்மாவோட அப்பா) என் கடைசி மாமாவுக்கு நிச்சயம் செய்துடணும்னு ஏற்பாடுகள் பண்ணிக்கொண்டு எங்க யாரிடமும் சொல்லாமல் போயிருக்கார். தாத்தா ஜோசியத்தில் நிபுணர். இப்போக் கல்யாணம் நடக்காது என்றும் சொல்லிவிட்டு என் கல்யாணத்தின் போது தான் இருக்க மாட்டேன் என்றும் சொல்லிவிட்டு அப்பாவைக் கடுமையாகக் கடிந்து கொண்டு திருப்பி அனுப்பி விட்டார். இது எனக்கும் அம்மா, மற்றவங்களுக்கும் ரொம்ப நாட்கள் கழிச்சுத் தான் தெரியும்.
Deleteதாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அவரின் ஆசிகள் அனைவருக்கும் எப்பவும் கிடைக்கும்.. நல்லோர் அமைத்துவிட்டுச் சென்ற பாதைகளாலும், அவர்களின் நல்ல உள்ளத்தாலுமே நாம் இன்று கொஞ்சமாவது நல்வழிப்படுத்தப்பட்டு வாழ்கிறோம்.
ReplyDeleteஅதுசரி கொபி பண்ணிப் போடலாம் என ட்றை பண்ணினேன் முடியல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்போ கீசாக்கா லொக் போட்டவ?:).. எதுக்கு இந்த வம்பு???
ஹாஹாஹா, அருந்ததியாரே, இப்படித் தான் ஆடிக்கொரு பதிவு, அமாவாசைக்கொரு பதிவுனு வந்தால் எதுவுமே தெரியாமல் போயிடும். அது ஆச்சு சுமார் ஒரு மாதத்துக்குள்ளாக இருக்கும்.
Deleteஇது மீள் பதிவோ கீசாக்கா? இவ்ளோ தூரம் நீங்க பொறுமையாக இருந்து ரைப் பண்ணினனீங்கள் என்றால் அதை அஞ்சு நம்ப மாட்டா என்றேன்:)).. என்னைச் சொல்லல்லே:))..
ReplyDeleteஉண்மைதான், அக்காலக் கல்யாணங்கள், அந்த ஊரே மகிழ்ச்சியில் கொண்டாடும், கோயில் திருவிழாப்போல இருக்கும்.. அதிலும்.. அம்மாவின் பாட்டி காலத் திருமணங்கள்.. அதிகாலையிலோ, மிட் நைட்டிலோ எனவோதானாம் நடக்கும், குதிரை வண்டிலில் தம்பதிகள் ஊர்வலம் ரோட்டாலே வருமாம், எல்லா வீட்டினரும் வாழ்த்துவார்களாம்...
அம்மா-அப்பாவுடையது, ஊர் முழுக்க பாட்டு ஸ்பீக்கரில் ஒலிச்சதாம்... அதுவும் பெரிய கொண்டாட்டம்தான்.. பின்பு எங்கள் ஆன்ரி ஆட்களுடையது[நாம் சிறியவர்கள்] ஊரில் நிகழ்தமையால ஹோலில் திருமணம் எனினும்... வீடு உறவினர்கள், மற்றும் சமையல் எனக் களை கட்டியிருந்தது.. அங்காங்கே வெற்றலைத் தட்டத்தை நிரப்பி பாக்கு சுண்ணாம்பு சேர்த்து கொண்டுபோய் வைப்பது எனக்கு வேலையாகக் கொடுக்கப்பட்ட காலம் அது... ..இப்பொழுது, உடுப்பு நடப்பாக, வேர்வை படாமல் வெளிக்கிட்டு ஏசிக் காரில் ஹோலுக்குப் போவது, நெருங்கிய உறவெனில் ஒரு 5 மணி நேரம் இருக்க வேண்டி வரும், இல்லை எனில் 2 மணி நேரத்தில் சாப்பிட்டுப்போட்டு வீடு வந்து சேருவது...
உண்மைதான் நீங்க சொல்லியிருப்பதைப்போல, அக்காலத்தில் பல திருமணங்கள் நடத்தலாம் இக்கால ஒரு திருமணத்துக்குப் பதில்...
அக்காவின் மகனுக்குத்திருமணம் வருகிறது.. பெண்ணுக்கு பொம்பிளை மேக்கப் ஒரு நாளைக்கு மட்டும் 4000 டொலர்களாம் புக் பண்ணியிருக்கிறார்களாம் பெண் வீட்டினர்.. என்ன பண்ணுவது பிள்ளைகள் விரும்பிக் கேட்கும்போது பெற்றோர் மறுக்க முடியாது.. பிள்ளைகளின் முடிவுதான் முடிவு..
முன்பெனில் பெற்றோர் சொல்வது, செய்வதுதானே சட்டம், மணமகளுக்கு வெட்கப்பட மட்டுமே உரிமை இருந்தது.
திருமணச் செலவுகள் பலதும் வீண் டாம்பீகம் என்பது என் எண்ணம்.
Deleteஅதுக்கு பதில் அந்தப் பணத்தை அவல்களுக்கே கொடுத்திடலாம், இல்லை ஏழைகளுக்கு உணவிடலாம். ஆனால் இது பலரின் ஆசையைப் பொருத்தது அல்லவா?
எனக்குத் தெரிஞ்சு இது மீள்பதிவெல்லாம் இல்லை அருந்ததியாரே! ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கலாம். ஆனால் இத்தனை விரிவாகச் சொல்லி இருக்க மாட்டேன். உ.வே.சா.வின் எழுத்துக்களைத் தட்டச்சித் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தபோது அங்கே இருந்த தளமான "மரபு விக்கி"யில் வலை ஏற்றிக் கொண்டிருந்தேன். "நளபாகம்" என்னும் தலைப்பில் சமையல் குறிப்புக்களையும் அங்கே பார்க்கலாம். இன்னும் நிறையத் தட்டச்சிச் சேர்த்துக் கொண்டிருந்தேன். கடந்த 2,3 வருடங்களாகக் குழுமங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டேன். சொந்தமாகவும் சேர்த்துக் கொண்டிருந்தேன். பிறருக்காகவும் தட்டச்சிச் சேர்த்திருக்கேன். அது ஒரு காலம் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது இப்போது.
Deleteதிருமணச் செலவுகளைக் குறைக்கச் சொல்லி உறவினர் பலரிடமும் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் சொல்லுவதை நிறுத்திவிட்டேன். அவரவர் விருப்பம். கடனை அடைக்கவேண்டியதும் அவங்க பொறுப்பு!
Deleteஉண்மைதான் திருமணச் செலவென்பது வீணானது என்றே நமக்கும் தோணும் ஆனா உண்மையில் இக்காலத்தில் ஆண் பிள்ளைகள்தான் அடக்க ஒடுக்கமாகவும் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்படும் நடக்கிறார்கள் [முக்கியமாக வெளிநாடுகளில்], பெண் பிள்ளைகளைக் கொன்றோல் பண்ணுவதுதான் கஸ்டமாக இருக்கு. பெண் விரும்பி.. அதுதான் எனக்கு வேண்டும் எனக் கேட்டால் என்ன பண்ண முடியும்...
Deleteஇந்தக் காலத்துப் பெண்கள் அவங்க சொல்வது தான். மாறாக ஏதும் சொல்ல முடியாது. உறவினர் ஒருத்தர் கல்யாணத்தில் பெண்ணுக்குப் புடைவை கட்டிவிடத் தனியாக ஆள் போட்டிருந்தனர். ஒரு தரம்புடைவை கட்டிவிட 150 ரூ. இது பத்து வருடங்கள் முன்னால்.
Deleteநீங்க ரெண்டு பேரும் எழுதியிருக்கறதைப் பார்த்தால் இக்காலப் பெண்கள் அடம் பிடிப்பவர்கள், பெற்றோருக்கு செலவு இழுத்துவிடுவார்கள் ஆனால் ஆண்கள் தங்கமானவர்கள் என்று சொல்றீங்களே..
Deleteஅது சரி.. பெரியவங்க சொன்னா உண்மையாத்தான் இருக்கும். க்கும். க்கும்
உங்க பெண்ணையும் மனைவியையும் வைச்சே மற்றவர்களை எடை போடாதீங்க நெல்லைத் தமிழரே, சில விஷயங்களைப் பொதுவில் பகிர முடியாது என்பதால் விரித்துச் சொல்லவில்லை. மற்றபடி பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவே யோசித்துத் தான் தேர்வு செய்கின்றனர். பிடிக்கலைனா மாற்றவும் தயார்!
Deleteஇருந்தாலும் உவே தாத்தா என்னை விட இளையவர்தான் கீசாக்கா:))
ReplyDeleteஆஆஆஆ அது தெரியாதா அருந்ததிப் பாட்டி? பெயரிலிருந்தே புரிஞ்சு போச்சே! :)))))
Deleteநிறையப் பேச வருது ஆனா கொப்பி பண்ணிப்போட்டு பேச முடியாமையால, முடியாமல் போகுது..
ReplyDeleteஇதெல்லாம் சொன்னா கீசா மேடத்துக்குப் புரியறதில்லை.
Deleteசில திருடர்களுக்காக வீட்டை இழுத்துப் பூட்டியிருக்கார்.
அருந்ததியாரே, இது வரைக்கும் இந்தப் பதினைந்து வருடங்களில் எத்தனை பதிவுகள், தொடர்கள், சமையல் குறிப்புகள்னு களவாடப்பட்டு அவங்க பெயரிலே போட்டிருக்காங்கனு தெரியுமா? பிள்ளையார் பற்றித் தேடித்தேடிக் குறிப்புக்கள் சேகரித்து எழுதினேன் மழலைகள் என்னும் குழுமத்தில். அப்படியே வரிக்கு வரி எழுத்துமாறாமல் காப்பி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்போதிலிருந்தே பல நண்பர்கள் சொல்லியும் எதுவும் செய்யாமல் தான் இருந்தேன். இப்போ சமீபத்தில் நடந்ததைப் பற்றி மாமாவிடம் சொன்னதும் அவருக்கும் கோபம்! இதுக்கு எதாவது முதலில் செய்/கண்டுபிடினு சொன்னார். சரினு மூடிட்டேன். நெல்லைக்கும் இதே பதில் தான்.
Deleteசரி சரி இனியாவது களவு நிக்குதோ இல்லை வரிக்கு வரி பார்த்தெழுதுகிறார்களோ எனக் கவனியுங்கோ... ஆனாலும் நான் நினைச்சால் இதைக் கொப்பி பண்ணுவேன் தெரியுமோ?:)).. இனிமேல் பண்ணிக் காட்டுறேன் ஹா ஹா ஹா..:))
Deletegrrrrrrrrrrrrrrrrrrrr
Deleteபக்கத்தில் இருந்து பார்த்தது போன்ற நடை! அருமை
ReplyDeleteவிஸ்வநாதன்
அது தாத்தாவின் சொந்தநடை விஸ்வா! :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. தமிழ் தாத்தாவுக்கு என் பணிவான வணக்கங்கள்.
ஒரு வருடம் அதற்குள் ஓடி விட்டதே.. இப்போதுதான் தங்கள் பதிவில் தாத்தாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி படித்ததாக நினைவுக்கு வருகிறது.
இந்த பதிவும் அமர்க்களம். அந்த கால திருமணங்களை பற்றியும் அதன் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பற்றியும் கண் முன்னே தவழ விட்டு விட்டீர்கள்.படிக்கும் போது அந்த காலத்திற்கு சென்று விட்டேன். மிக மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா, இது தமிழ்த்தாத்தாவே சுயமாய் எழுதிய "என் கதை" என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அதைத் தட்டச்சியதோடு என் வேலை முடிந்து விட்டது. பாராட்டுகளுக்கு எல்லாம் நான் தகுதியானவளும் அல்ல. தாத்தா எழுதி இருக்கும் முறையில் அனைவருக்கும் இதில் சுவாரசியம் தெரிகிறது.
Deleteஎங்கள் திருமணத்தில் கூட வைதிகம் தான் முக்கியமாக இருந்தது. பின்னர் வந்த காலங்களில் மாறி விட்டது.
Deleteபடித,த்தை மீண்டும் படித்து ரசித்தேன்.
ReplyDeleteசமூக ஒற்றுமையை இந்தமாதிரி அனுபவப் புத்தகங்களில் படித்தும், ஈயிரம் ஆண்டுகளாக அடக்குமுறை பல்லவியைப் பாடுபவர்களை எண்ணிச் சிரிப்பு வருகிறது.
அடக்குமுறைனு எல்லாம் எதுவும் இல்லை நெல்லைத் தமிழரே! பார்க்கப் போனால் எல்லோரும் கூடி ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதோடு ஐயரவர்களின் ஆசான் மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் என்பதையும் மறக்காமல் இருந்தாலே போதுமானது.
Deleteஅன்பு கீதாமா, காலண்டரில் தேதி கிழிக்கும் போதே உங்களை நினைத்துக் கொண்டேன்.
ReplyDeleteஎத்தனை அருமையான விஷயங்களை நம் தமிழ்த் தாத்தா ஆவணப்படுத்தி இருக்கிறார்.
நல்ல வழக்கங்களையெல்லாம் விட்டு விட்டோமே.
இந்தப் பதிவை சுமார் பத்து நாட்கள் முன்னரே ஷெட்யூல் செய்து வைத்துவிட்டேன் ரேவதி. இந்திய நேரப்படி வெளியாகும் வண்ணம் செய்திருந்தேன். பின்னர் மறந்துடும் என்பதால்! படித்து ரசித்தமைக்கு நன்றி.
Deleteமனம் நிறை வாழ்த்துகள் நம் தாத்தாவுக்கு,அவருடைய ஆசிகள்
ReplyDeleteநமக்கு எப்போதும் வேண்டும்.
நன்றி வல்லி. தாத்தாவின் ஆசிகள் நம் அனைவருக்குமே கிடைக்கும்.
Deleteஅருமையான எழுத்து. அருமையான அனுபவம். எங்கு எப்படி கேட்டாலும் திகட்டாத கதைகள் இவை. அந்தக் காலம் அந்தக் காலம் தான்.
ReplyDeleteஆனால் 1868??? இடிக்கிறதே?
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்த்தாத்தா பிறந்த வருடம் 1855 ஆம் வருடம். பதினான்காம் வயதில் திருமணம். அந்தக் காலங்களில் கர்ப்பகாலத்தையும் சேர்த்துக் கணக்கிட்டு வரும் முறை இருந்ததால் பதினான்காம் வயது என 1868 ஆம் ஆண்டைச் சொல்கிறார். இப்போதும் கூட உபநயனம் செய்கையில் பல குடும்பங்களில் கர்ப்பகாலத்தையும் சேர்த்துக் கணக்கிடும் முறை உண்டு.
Deleteநல்ல பகிர்வு. அவரது பிறந்த நாளில் பகிர்வினை படிக்கத் தந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.
நன்றி வெங்கட்!
Deleteஅருமையான பகிர்வு! //இக்காலத்தில்செலவுகளுக்கு புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவு வகைகளில் இப்போது நடைபெறும் செலவுகளைக் கொண்டு அந்தக் காலத்தில் பல திருமணங்களை நடத்தி விடலாம்// இவற்றை நாமும் இப்போது சொல்கிறோம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என் பெரிய அக்காவின் பெண்ணுக்கு 1999 இல் திருமணம் நடந்தது. அப்போது கூட இப்போதிருக்கும் ஆடம்பர செலவுகள் பல கிடையாது.
ReplyDeleteஎங்க வீட்டில் பெண், பிள்ளை கல்யாணங்களில் ஆடம்பரச் செலவைத் தவிர்த்தோம்.
Deleteஅந்தக் கால திருமணங்களில் பூரிக்காசு, அல்லது பூரி தக்ஷணை என்பதை பற்றி என் அம்மா சொல்லியிருக்கிறார், போரிக் காசான நான்கு அணாவை கொடுக்காவிட்டால் அது பெரிய சண்டையாகிவிடுமாம்.
ReplyDeleteபூரி தக்ஷிணை என்பது வேறே! கல்யாணம், உபநயனம், சஷ்டி அப்தபூர்த்தி, பீமரத சாந்தி போன்றவற்றில் இவற்றைப் பண்ணி வைக்க வரும் குடும்பப் புரோகிதர் கூடவே சில வைதிகர்களையும் அழைத்து வருவார். அவை ஒரு குறிப்பிட்ட மந்திரம் இத்தனை ஆவர்த்தி சொல்லணும் என்பதற்கு ஏற்ப இருக்கும். அந்தப் புரோகிதர்களுக்கும் தக்ஷிணை தர வேண்டும். ஒரு சிலருக்கு மந்திரங்கள் தெரியவில்லை என்றாலும் தக்ஷிணைக்காகவே வந்து எல்லாவற்றிற்கும், "ததாஸ்து!" என மற்றவரோடு சேர்ந்து சொல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களையும் ஒதுக்காது குறைந்த பக்ஷமாகவாவது தரவேண்டும். முன்னெல்லாம் நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் என்றெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் வெள்ளிக்காசுகள். ஆகவே மதிப்பு இருந்தது. நீங்க சொல்லுவது விசேஷம் முடிந்தவுடனே தம்பதிகளாக உறவினர்களுக்குக் கொடுக்கும் பல தாம்பூலம். இதுவும் முன்னெல்லாம் ஒரு ரூபாய் தான் கொடுத்து வந்தார்கள். இப்போதெல்லாம் 5 ரூ, 10 ரூ எனக் கொடுக்கின்றனர். இது தான் யாரேனும் உறவினருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டால் கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் கூடப் போய்விடுவார்கள். அது ஒரு காலம். இப்போதெல்லாம் பலதாம்பூலம் என்பது விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் தம்பதிகளிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறோம்.
DeleteValuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home
ReplyDeleteகல்யான வைபவ வர்ணனைகள் பிரமிக்க வைக்கின்றன...
ReplyDeleteதெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளுடன் இனிய பதிவு...
At first I thought its your story
ReplyDelete... then seeimg 1868'nu paathathum sutharichutten ;). Thooka kalakkam sorry. Nice article maami
தமிழ் தாத்தா பிறந்த நாளில் பல சுவாரசியங்கள்.
ReplyDelete