சும்மாவானும் பார்வையாளர் கணக்கை 800க்கும் மேல் காட்டுகிறது. சும்மா உள உளாக்கட்டிக்குனு நினைக்கிறேன். ஏனெனில் 8 பேர் கருத்துச் சொன்னால் அதிகம்னு இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ப்ளாகருக்கு இந்தப்பொய்யெல்லாம் எதுக்கு? எதுக்குனு கேட்கிறேன். அதே போல் முழு நேரப் பார்வையாளர்களும் கிட்டத்தட்ட ஏழரை லட்சம்னும் சொல்கிறது. 75000 நபர்கள் இருக்குமோ என்னமோ! எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லுது பாருங்க! விஷமக்காரக் குஞ்சுலுவை மட்டும் 700 பேர்களுக்கு மேல் பார்த்திருக்காங்களாம். 70 ஆக இருக்கும்னு ஒரு சைபரை எடுத்துவிட்டுக் கணக்குப் போட்டுக் கொண்டேன். இப்போ நாம அடுத்த வேலையைப் பார்ப்போமா? ஒரு வழியா இந்த வலைப்பக்கத்தில் ரைட் க்ளிக்கைச் செயல்பட முடியாமல் நண்பர் ஒருத்தர் மூலம் தடுத்துவிட்டேன். சாப்பாடுப் பதிவுகளுக்கும் பண்ணித்தரேன்னு சொல்லி இருக்கார். அவர் ரொம்பவே வேலை மும்முரத்தில் இருப்பவர். ஆதலால் நேரம் கிடைக்கிறச்சே அதையும் பண்ணிடுவார்.
இப்போ நாம் விளக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து பார்ப்போமா?
இப்போ நாம் விளக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து பார்ப்போமா?
வழி நெடுக இரண்டு பக்கங்களிலும் விதம் விதமான அலங்கரிப்புகள். அவற்றைப் படம் எடுக்க நேரம் எடுப்பதோடு நம்மால் எல்லாவற்றையும் ஒரு சேரப் பார்க்கவும் முடியவில்லை. அதைத் தவிரவும் புல்வெளிகளில் ஆங்காங்கே சிற்பங்களைப் போன்ற விளக்கு அலங்காரங்கள். நம்ம ஊரில் ஆடி மாதம் அம்மனை விளக்குகளால் அலங்கரித்துக் கட் அவுட் போல் வைப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி காலம் பிள்ளையார் வருவார். அது போல் இங்கே சான்டா மற்றும் அவர் வண்டி, கலைமான்கள், கன்னி மேரி, ஏசு ஆகியோரை இம்மாதிரி விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள். புல்வெளியில் இருட்டில் போகக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஏதேனும் பூச்சி, பொட்டு இருக்கலாம் என்பதோடு "ரகூன்" எனப்படும் ஒரு வகை நாய் இருக்கும் எனவும் அது கடித்தாலோ, தோலில் பட்டாலோ தொழுநோய் வரும் எனவும் சொல்கின்றனர். இங்கே பையர் வீட்டில் அதிகம் முயல்கள் தான் பார்த்திருக்கேன். அவற்றையும் இப்போ அதிகம் பார்க்க முடியலை. என்றாலும் இருட்டில் எதுக்குப் போகணும் என நினைத்துச் சாலை வழியேவே சென்றோம்.
எங்களைத் தாண்டிக்கொண்டு பாட்டரி கார்கள் சென்றன. இந்த வசதி இருப்பதே அப்போத் தான் தெரியும். முதலிலேயே தெரிந்திருந்தால் அதிலேயே போய்ப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் ஆட்களோடு வண்டி நிறைந்து சென்றதால் நாங்கள் அழைத்துச் செல்லக் கூப்பிடவில்லை. மெல்ல மெல்லச் சென்றோம்.
படங்கள் அழகாகவே இருக்கிறது.
ReplyDeleteகூகுளாரும் மனிதர்களோடு பழகியதால் பொய் பேசுகிறாரோ...?
(ரகூன்) நாய்களை பொது இடங்களில் எப்படி உள்ளே அனுமதிக்கின்றார்கள் ?
வாங்க கில்லர்ஜி,முதல் வருகைக்கு நன்றி. ரகூன் நாய்களை அனுமதிப்பதில்லை. அவை கொஞ்சம் காட்டுப் பிரதேசம் தான். கடற்கழியை ஒட்டிய காட்டுப் பகுதி! நடந்து சுற்றிப்பார்க்க, அங்கே இருக்கும் ஸ்டீமர் மற்றும் சின்னக் கப்பலில் போக என பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. என்றாலும் சில, பல சமயங்கள் விலங்குகள் வழி தப்பி வருமே!
Deleteபார்வையாளர்கள் எண்ணிக்கைக்கும், பின்னூட்டம் எண்ணிக்கைக்கும் எப்போதுதான் சம்பந்தம் இருந்திருக்கிறது? படிப்பவர்கள் எல்லாம் பின்னூட்டம் இட்டால் என்ன ஆவது!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரியே. பதில் சொல்லவே நேரம் எடுக்கும். சும்மா மாசம் ஒரு தரம் இப்படிச் சோதித்துப் பார்ப்பேன். அது போல் இன்று.
Deleteபடிச்சவங்க எல்லாம் பின்னூட்டம் இட்டால் “நன்றி” அல்லது “தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி-ஹா ஹா யாரோ நினைவுக்கு வருகிறார்கள் “ என்று காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்
Deleteஅப்படியாவது அந்த யாரோ உங்கள் நினைவுக்கு வருகிறார்களே நெல்லைத் தமிழன். :))) அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது!
Deleteஹாஹாஹா!
Deleteவெங்கட்ஜி... நான் ரெகுலரா போகும் தளங்களை நினைவில் வைத்திருப்பேன். கடந்த ஒரு மாதங்களுக்கு மேல், எல்லாத் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை.
Deleteஇருந்தாலும் படிக்கிறவர்கள் தங்கள் எழுத்துக்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதே சந்தோஷம் தரும் இல்லையா?
ரைட் க்ளிக் செயல்படமுடியாமல் செய்வது முதலில் சாப்பிட வாங்க பக்கத்தில்தான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதைதான் நிறைய காபி அடிக்க வாய்ப்பு.
ReplyDeleteஆமாம், ஸ்ரீராம், அவரும் உடனே செய்திருப்பார்தான். நான் தான் தேவையான விபரங்களைச் சரியாக் கொடுக்கலை. கவனிக்கலை. இன்னிக்குக் காலையில் கணினியை எடுக்க முடியலை. அதனால் உடனே பார்க்கலை.
Deleteவிளக்கு அலங்காரங்கள் நன்றாகவே இருந்திருக்கும்போல. நாட்டியமாடுவது போல அந்த மரம், யாரோ அமர்ந்திருப்பது போல ஒன்று... ஆம், நம்மூர் அம்மன் பண்டிகை விளக்கு அலங்காரங்களும் நினைவுக்கு வருகின்றன!
ReplyDeleteஉண்மையாகவே நன்றாக இருந்தன ஸ்ரீராம். சில இடங்களில் வீடியோவாக எடுக்க முயற்சித்தேன். ஆனால் சரியாக வந்திருக்கானு சோதித்துப் பார்த்துட்டுத் தான் பதிவில் போடணும்.
Delete"ரகூன்" கடித்தால் தொழுநோயா... பயமுறுத்துகிறார்களே....
ReplyDeleteஎனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது ஸ்ரீராம், பிள்ளை, மாட்டுப்பெண் இருவருமே சொல்லுவார்கள்.
Deleteபெரியவங்க வாழ்த்தும்போது சஹஸ்ர என்று சேர்த்து வாழ்த்துவது எழுதுவது மங்கலமான வழக்கம் என்று படித்திருக்கிறேன். அதனால் தசரதனின் 60 மனைவியர் அறுபதினாயிரம் என்றும் எழுதப்பட்டதாகவும் படித்த நினைவு.
ReplyDeleteகூகுளார் அந்த அளவிற்குப் போகாமல் சத்த்தோடு நிறுத்திக்கொண்டாரோ?
தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியரும் இல்லை, அறுபது மனைவிகளும் இல்லை. இதை எல்லாம் நம்பும் அளவுக்கா ராமாயணம் படித்திருக்கீங்க? வால்மீகியையும் கம்பனையும் மறுபடி போய்ப்படிங்க! அல்லது நான் எழுதி உள்ள "கதை கதையாம் காரணமாம்," ராமாயணத் தொடரில் பாருங்க!
Deleteபடங்கள் அருமை
ReplyDeleteநன்றி.
Deleteஉணவுப் பதிவுக்கு காப்பி பேஸ்ட் தடுக்காதீங்க. நான் டக்குனு காப்பி பேஸ்ட் பண்ணி நோட்டில் தயார் பண்ணி செய்ய பல தளங்கள் இடைஞ்சலாக இருப்பதை உணர்கிறேன். அடுத்தவங்க எடுத்துக்கிட்டா என்ன கொறஞ்சுடப் போகுது?
ReplyDeleteஅது சரி! அனக்கேயும் காப்பி,பேஸ்ட் பண்ண முடியாமப் பண்ணியாச்சு!
Deleteரசனையான படங்கள்.
ReplyDeleteநன்றி.
Deleteநாங்கள் சென்ற பல இடங்களிலும் வண்டியுடன் சென்று பார்த்து விட்டு வந்தோம்.
ReplyDeleteசிகாகோ குளிரில் வெளியே இறங்க முடியாது.
நீங்கள் எடுத்திருக்கும் எல்லாப் படங்களும் அருமையாக இருக்கின்றன.
அமெரிக்காவே காட்டை அழித்து வீடுகள் கட்டிய இடம் தானே. ராகூன்ஸ் மகள் வீட்டுக்குப் பின் வீட்டுக்கு வரும்.
முயல்கள், மர நாய்கள் வீட்டுக்கு முன்புறம் burrows வைத்திருக்கும்.
ரொம்ப சாமர்த்தியம்.
விசிட்டர்ஸ் கணக்குப் பொய்க்கணக்கு என்று தான்
தெரிந்துவிட்டதே.
சித்திரகுப்தன் கணக்குதான்.
ரைட் க்ளிக் கட்டுப்பாடு நன்மைக்கே.
வாங்க வல்லி, இங்கே காரில் செல்ல முடியாது. அவங்களே நடத்தும் பாட்டரி காரில் போகலாம் என்பதே எங்களுக்குத் தாமதமாய்த் தான் தெரிந்தது. சிகாகோவில் காற்றே பிய்ச்சுக்கும். குளிர்னா கேட்கவா வேணும்?
Deleteபடங்கள் நன்று.
ReplyDeleteபக்கப் பார்வைகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் சம்பந்தம் இல்லை கீதாம்மா... நீங்கள் உங்கள் பதிவுகளை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் இந்த பக்கப் பார்வைகள் எண்ணிக்கை கூடும்! அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
ஆமாம், வெங்கட், அது தெரியும், சும்மாவானும் கூகிளாரின் பொய்யைச் சுட்டிக் காட்டத்தான் இதைச் சொன்னேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அருமை. முதலிரண்டு படங்களிலும் அலங்கார விளக்குகள் கண்களை கவர்கிறது. மிகவும் நன்றாக படங்கள் எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.
நாய் பற்றிய விபரங்களும், கூகுள் பற்றிய செய்திகளும் தெரிந்து கொண்டேன். விஷயங்கள் ஆச்சரியமாக உள்ளது. காப்பி பேஸ்ட் செய்ய தடை செய்தது பதிவுகளை திருடிக் கொள்பவர்களுக்கு சரியான பாடம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. படங்கள் இன்னமும் இருக்கின்றன. மத்தியானமாப் பார்க்கணும்.
Deleteபடங்கள் நன்றாக வந்து இருக்கிறது.
ReplyDeleteகாப்பி, பேஸ்ட் செய்ய முடியாமல் செய்து விட்டீர்கள்.
நாங்களும் மகன் ஊருக்கு சென்று இருந்த சமயம் விள்ககு அலங்காரம் வனவிலங்கு பூங்காவில் நடந்ததை பதிவு போட்டு இருந்தேன். சான்டாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.
குளிர்காலத்தில் அவர்களுக்கு இது போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்ந்து இருப்பது நல்லதுதான் குளிர் தெரியாது.
நன்றி கோமதி. எல்லாப் படங்களும் எடுக்க முடியாமல் கால் வலி அதிகம் ஆகி விட்டது. குளிர் காற்று வேறே! தலையோடு கால் மூடிக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே நின்று நின்று தான் நகர்ந்தோம். இத்தனைக்கும் வடகிழக்கு மாநிலங்கள் (நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன்,) போலக் குளிர் இருந்தாலோ சிகாகோ மாதிரி இருந்தாலோ தாங்க முடியுமானு சந்தேகமே. எங்க உடல்நிலையை மனதில் வைத்துத் தான் கடவுள் பிள்ளை, பெண் இருவரையும் இங்கே வைச்சிருக்கார் போலனு நினைப்போம். பெண்ணாவது மெம்பிஸில் இருந்தாள். பனிமழை பெய்யும்.
Delete