நெல்லைத் தமிழர் மற்றும் இன்னும் சில உறவினர்கள் எனக்கு calcaneal spur எனப்படும் குதிகால் வலி என நினைக்கின்றனர். அது இல்லை. அதெல்லாம் ஏற்கெனவே வந்து விட்டுப் போய்விட்டது. இது முழுக்க முழுக்க நரம்புகளைச் சார்ந்தது. கணுவைச் சுற்றி வலி. கட்டை விரலில் இருந்து குதிகால் வரை வலி பரவுகிறது. பாதம் மட்டும் வீங்கிக் கொள்கிறது. காலைத் தூக்கி வைத்து நடக்கவே முடியலை. நடக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதிலும் இன்று காலையிலிருந்து என்னால் நகர்வதே சிரமமாகப் போய் விட்டது. மத்தியானமாய் மருத்துவரைப் பார்க்கப் போவதாக இருந்தோம். ஆனால் போகவில்லை. கால் இருக்கும் இந்த நிலையில் லிஃப்ட் வரை நடந்து கீழே போய்ப் பின்னர் அங்கே படிகளில் இறங்கி ஆட்டோவில் ஏறி மருத்துவரைப் பார்க்கப் போகணும். அவர் அங்கே மாடியில் இருப்பார். எனக்காகக் கீழே வரேன்னு சொல்லி இருந்தாலும் வாசலில் இருந்து அந்த மாடிப்படி வரை நடக்கணும். ஆகவே மருத்துவரிடம் என்னால் வர முடியாதுனு காலையிலே கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.
அவரே வரேன்னு சொல்லிட்டு வந்து பார்த்துட்டும் போயிட்டார். மருந்துகளும் கொடுத்திருக்கார். இது முழுக்க முழுக்க ரத்தநாளங்களின் பிரச்னை என்றும் சொன்னார். சர்க்கரையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் முக்கியமாக அசுத்த ரத்தம், சுத்த ரத்தம் மேலும் கீழும் பிரயாணம் பண்ணுகையில் அசுத்த ரத்தம் வெளிவராமல் ரத்த நாளங்களில் அடைத்துக் கொண்டிருக்கிறதாய்ச் சொன்னார். அதுக்குத் தான் மருந்துகள் கொடுத்திருக்கார். விரைவில் சரியாகணும் என வேண்டிக் கொண்டிருக்கேன். இன்னிக்குக் காலம்பரக் காஃபி போட்டதோடு சரி. மற்ற எந்த வேலையும் செய்ய முடியலை. எப்படியோ சமாளித்துக் கொண்டு குளித்துவிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறமா உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியலை. எப்போச் சரியாகும்னு கவலையாயும் பயமாகவும் இருக்கு. இம்மாதிரி இத்தனை நாட்கள் தொடர்ந்து இருந்ததில்லை. இதற்கு என்றே எத்தனையோ அலோபதி/ஆயுர்வேதம் என மருந்துகள் சாப்பிட்டாச்சு. எல்லாவற்றுக்கும் கட்டுப்படாமல் இப்போது கொஞ்சம் வீரியமுள்ள ஆயுர்வேத மருந்தே எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. மற்ற மருந்துகளை நிறுத்தச் சொல்லி இருக்காங்க. பார்ப்போம், எப்படி இருக்குமோ என்று.
இம்முறை காவிரியில் தண்ணீர் வந்ததில் இருந்து மொட்டை மாடிக்குப் போகவே இல்லை. தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் எனக்கோ வீட்டுக்குள்ளேயே நடக்க முடியாதப்போ மொட்டை மாடிக்கு எங்கேருந்து போறது! நெல்லைத் தமிழர் காவிரியைப் படம் பிடித்துப் போடுவதற்காகவாவது/ அதுக்காகவாவது எனக்குச் சரியாகணும்னு பிரார்த்தனை பண்ணுவதாக எழுதி இருக்கார். அதைப் படித்ததும் கண்ணீரே வந்து விட்டது. ரேவதியும் அடிக்கடி தொலைபேசியில், வாட்சப் செய்தியில் அப்போதைய நிலவரம் கேட்டுக் கொண்டிருக்காங்க. எங்க பெண்/பையருக்கு இந்த மாதிரி விஷயம் முழுக்கவும் தெரியாது. பையரிடம் போன வாரம் பேசும்போது சொன்னோம். அதுவும் அவர் என் முகத்தைப் பார்த்துட்டுக் கேட்டதால். ஆனால் இந்த அளவுக்கு மோசம்னு சொல்லலை. பெண் இன்னும் உடம்பு சரியாகாமல் இருப்பதால் அவளிடம் எதுவுமே சொல்லலை. சரியான பின்னால் சொல்லிக்கலாம்னு இருக்கோம். விரைவில் சரியாகணும்னு வேண்டிக் கொண்டே இருக்கேன்.
ரொம்பவே சிரமப்படுறீங்க. மருதுவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்க்கணுமோன்னு தோணுது[உங்களுக்குத் தெரியாததல்ல]. தகவல் கொடுத்தா ஆம்புலன்ஸ் அனுப்பி அழைத்துப் போகிற மருத்துவமனையெல்லாம் இருக்கே. முடியும்னா சேர்ந்துடுங்களேன். தொந்தரவு அதிகமாயிடக்கூடாது இல்லையா?
ReplyDeleteமுழுக்கக் குணமான பிறகு வீடு திரும்பலாம்.
வாங்க பரமசிவம். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி, மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேரும் அளவுக்கெல்லாம் இல்லைனு மருத்துவரே சொல்லிட்டார். ஆகவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கேன். விரைவில் குணமாகும் என்னும் நம்பிக்கையுடன். உங்கள் யோசனைக்கு நன்றி.
Deletehttps://www.mayoclinic.org/diseases-conditions/deep-vein-thrombosis/diagnosis-treatment/drc-20352563#:~:text=DVT%20is%20most%20commonly%20treated,an%20injection%20under%20the%20skin.
ReplyDeleteவாங்க ஜேகே அண்ணா. பல மாதங்கள் கழித்து வருகை தந்ததுக்கும் ஆலோசனைக்கும் நன்றி. நீங்க சொல்லும் வைத்தியம் தான் சென்னையில் இருந்தப்போப் பண்ணிக் கொண்டேன். அதோடு அந்த சாக்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டாலோ, காலுக்குச் செருப்புப் போட்டுக்கொண்டாலோ எனக்கு சௌகரியமாக இல்லை. சாக்ஸ் போட்டுக்கொண்டால் கால் முழுவதும் வீக்கம் வருகிறது. செருப்புப் போட்டுக் கொண்டால் நடக்கையில் எப்போது வழுக்குமோ என்று கவலை/பயம்.
Deleteஇன்றைய நிலவரம் படித்து வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteகவலைபடாமல் இருங்கள்.
தூரத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம் என்று நினைப்பது சரிதான். அவர்கள் மனது வருத்தப்படுவார்கள். மகள் இன்னும் பூரண நலம் பெறவில்லையா?
இறைவன் அருளால் எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
எனக்கும் இடது கால் கணுவை சுற்றி வலி பாதத்தின் மேல் புறம் குத்தல் கைகளில் வலி இருந்தது கொஞ்சம் நாள் அலோபதி, கொஞ்சநாள் ஹோமியோபதி சாப்பிட்டேன். அப்புறம் எல்லா இரத்த பரிசோதனையும் செய்தேன், புரோட்டின் அதிகம் இருப்பதால் பருப்பு வகைகள் குறைத்துக் கொள்ள சொன்னார். அப்புறம் நான் கற்றுக் கொண்ட கால் உடற்பயிற்சி செய்தேன். அதில் இது மாதிரி ரத்த நாளங்களில் அடைப்பு, கணுக்கால் வீக்கம் , கீழ்வாதம், முழங்கால் வலி , குடைச்சல், நரம்பு வலி குணமாகும்.
https://www.youtube.com/watch?v=m4wGr278TD4
இதில் எளிமையான உடற்பயிற்சிகள் இருக்கிறது. உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள்
விரைவில் நலம்பெற்று மாடி ஏறி காவிரி ஆடிபெருக்கு சமயம் ஓடி வருவதை படம்எடுத்து பதிவு போடுங்கள்.
சரியாகி விடுவோம் என்று நம்புங்கள். தினம் நலமாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு எழுந்து கொள்ளுங்கள்.
நம்மால் முடிந்தவைகளை செய்வோம், அப்புறம் இறைவன் துணை இருப்பான்.
வாங்க கோமதி, என் தம்பி, தம்பி மனைவி ஆகியோரும் எளிமையான உடற் பயிற்சிகளை சிபாரிசு செய்தார்கள். உடம்பு கொஞ்சம் நகரும் சக்தி பெறட்டும். பின்னர் முயற்சி செய்யணும். சரியாகிவிடும் என்னும் நம்பிக்கை முழுக்க முழுக்க இருக்கிறது. எல்லாம் அந்த ஆண்டவன் கருணை தான்.
Deleteபெண்ணுக்குச் சாப்பாடு கொஞ்சம் மாற்றினால் பிரச்னை வருகிறது. ஆகவே கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய உணவு எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கு. நல்லவேளையாகக் காய்கள் சாப்பிடலாம் என்பதால் சூப், பச்சைக்காய்கள் வேக வைத்து சாலட் என எடுத்துக்கறா.
Deleteஎன்ன இப்படிச் சொல்லி இருக்கின்றீர்கள் அக்கா?.. மிகவும் வருத்தமாக இருக்கின்றது.. தங்களுக்குக் கஷ்டத்தைத் தரும் இந்த வலி விரைவில் தீர்வதற்கு வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteபிரார்த்தனைகளுக்கு நன்றி துரை! வலி குறையத்தான் நானும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கேன்.
Deleteநாங்கள் ப்ரார்த்தித்துக்கொள்கிறோம் கீசா மேடம்.... விரைவில் உங்களுக்கு இந்த கால் பிரச்சனை சரியாகணும்.
ReplyDeleteநாம எப்போதுமே காலைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை. எனக்கு முதல் முதலில் கால் வலி வந்தபோதுதான் காலின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. அந்தச் சமயத்தில், கோவில் பிரகாரங்களில் வெறும் காலுடன் நடக்கணும் என்பதால் கோவிலுக்கே போகக்கூடாது என்று மருத்துவர் சொன்னார். 1 வருடத்துக்கு மேல் நான் ரொம்பவே மனவேதனை அடைந்தேன் (நான்லாம் 2 மணி நேரம்லாம் ஜிம்ல இருப்பேன் இல்லைனா ஒரு நாளைக்கு 18 கிலோ மீட்டர்லாம் நடப்பேன்) அதனால் என்னால் பிரச்சனையின் தீவிரம் புரிகிறது.
விரைவில் சரியாகிவிடும். கலகலப்பான, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும் கீசா மேடத்தை விரைவில் இணையத்தில் சந்திக்கணும்.
வாங்க நெல்லை! பிரார்த்தனைகளுக்கு நன்றி. எனக்குச் சின்ன வயசில் இருந்தே இடக்காலில் அடிக்கடி வீக்கம் வரும். முன்னெல்லாம் கறுப்பாய்த் தார் போன்றிருக்கும் ஒரு திரவ மருந்தைக் காலில் தடவிக்கச் சொல்லிக் கொடுப்பாங்க. பெயர் மறந்துட்டேன். இப்போது ஒரு மாத்திரை கொடுத்திருக்காங்க. அதை நீரில் ஊற வைத்துக் காலில் வலி உள்ள இடங்களில் பூசிக்கொள்ளணும். அந்த மாத்திரை ஊற 2 நாட்கள் ஆகிவிடுகின்றன. எனக்கு வீட்டுக்குள் நடந்தாலே போதும்னு தோன்றுகிறது. மற்றபடி "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஐ எப்போ வேணாச் சொல்லுவேனே! இதோ இப்போவும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete// கறுப்பாய்த் தார் போன்றிருக்கும் ஒரு திரவ மருந்தைக் காலில் தடவிக்கச் சொல்லிக் கொடுப்பாங்க. பெயர் மறந்துட்டேன். //
DeleteIG paint? Ichthamal glycerine.
அல்லது பிண்டத் தைலம்?
Deleteமீள் வருகைக்கு நன்றி ஶ்ரீராம். ஆமாம் இச்தமால் கிளிசரின் தான். எங்க சித்தப்பாவும் மருத்துவர் என்பதால் அவர் ஒரு பாட்டிலிலே விட்டுக் கொடுத்துடுவார். பிண்டத்தைலம் பற்றி எல்லாம் சின்ன வயசில் தெரியாது.
Deleteகவலையாய் இருக்கிறது கீதா அக்கா... மிகவும் கவலையாய் இருக்கிறது. சரியான மருத்துவரைப் பார்க்கவில்லையா? வேறெதுவும் ரத்த சோதனைகள் செய்ய வேண்டுமா? சீக்கிரம் சரியாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteமருத்துவர் சரியானவர் தான். என்ன ஒரு பிரச்னை என்றால் இந்த லாக்டவுனில் பேருந்துகளும் ஓடாததால் மருந்துகள் இங்கே வந்து சேரத்தாமதம் ஆகிவிட்டது. அது தான் பிரச்னையே! இத்தனை தொந்திரவுக்கும் காரணம் மருந்துகளே இல்லாமல் சுமார் 20 நாட்களைக் கடத்த வேண்டி வந்தது என்பது தான். ஆனால் மாமா இத்தனை வருஷமாக மருந்துகளைச் சாப்பிட்டும் உனக்குக் குணம் ஆகவே இல்லையே! மருந்து இருந்தால் தான் வண்டி ஓடுகிறது என்கிறார். இன்னிக்கு அதிகம் வீங்கலை. போகப் போகச் சரியாகும்னு நம்புவோம்.
Deleteஇன்று எப்படி இருக்கிறது? I G Paint இப்போதும் கடைகளில் கிடைக்கும். வாங்கிப் போட்டுக் கொள்ளலாமே..
Deleteதகவலுக்கு நன்றி ஶ்ரீராம், மருத்துவரையும் கேட்டுக்கிறேன். இன்னிக்கு சாயங்காலமா பார்க்க வருகிறார். இன்று கொஞ்சம் மோசம். எல்லாமே மாமா செய்யும்படி ஆகிவிட்டது. அவருக்கும் அதீத வேலையில் தலை சுற்றல் வந்து விட்டது. இந்த மாதிரி அடுத்தடுத்து வேலை எல்லாம் அவருக்குப் பழக்கமே இல்லை. :( சமையலுக்கு மட்டுமாவது ஆள் கிடைப்பாங்களா என்று பார்க்கிறோம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய உங்கள் பதிவை படிக்கவே மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. ஏன் இப்படி சோதனையாக வலியும், வீக்கமும் இருந்து கொண்டே உள்ளது.?நீங்கள் டாக்டர் சொன்னதாக சொன்ன விபரங்கள் படிக்கவே கவலையளிக்கின்றன. அந்த அசுத்த ரத்தங்கள் எப்படி மாறி சுத்த ரத்தமாகும். அதற்குதான் மாத்திரை தந்திருக்கின்றாரா..? அதை நிறுத்தி விட்டு மறுபடியும் வீரியமுள்ள ஆயுர்வேத மருந்தை ஏன் சிபாரிசு செய்கிறார்கள். உங்கள் கால் வலி பரிபூரணமாக, சீக்கிரமாக குணமாக நானும் ஆண்டவனை பிரார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் குழந்தைகளிடம் உங்கள் வலி பற்றி பகிர்ந்து கொண்டால் உங்கள் மனதுக்கு சற்று ஆறுதலாக நன்றாக இருக்கும். ஆனால், அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது இது தெரிந்தால் மனது வருத்தப்படுவார்கள். என்னவோ.. உங்கள் நல்ல நேரங்கள் விரைவில் வந்து உங்கள் கால் வலிகளை சொஸ்தமாக்க வேண்டும் என நான் தினமும் இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் குணமாகி விடும்.கவலைப்படாதீர்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை எல்லாம் யூரின் மூலம் வெளியே கொண்டு வர மருந்து கொடுத்து நேற்றிரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை யூரின்! ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. அதனால் தான் காலை காஃபி குடித்ததும் மறுபடி போய்ப் படுத்துட்டேன். எட்டரைக்குத் தான் எழுந்து கொண்டேன். ஏற்கெனவே ஆயுர்வேத மருந்துகள் தான் கால் வலிக்கு எடுத்துக்கொள்கிறேன் பலன் இருக்கத்தான் செய்தது. நடுவில் மருந்துகள் கிடைக்காமல் வந்த பிரச்னை. அப்போத் தான் எங்க குடும்ப மருத்துவர் சொல்லி இருந்த ஆங்கில மருத்துவ மாத்திரையை வரவழைத்தேன். இந்த முறை அதுக்கும் அசைந்து கொடுக்கலை. இனி சரியாகும் என நம்புகிறேன்.
Deleteஅன்பின் கீதாமா,
ReplyDeleteகேட்கவே வருத்தமாக இருக்கு.
எதற்கு இத்தனை சோதனை.
காலில் கால்ஸ்பர்,
கால்சியம் படியும் போது வரும். அதற்கு
நான் குதிகால் உயர்ந்த செருப்பு போட்டு
ஒரு வருடம் சமாளித்தேன்.
நீங்கள் சொல்லும்போது இது Bad circulation issue
என்றே தோன்றியது. கண்டிப்பாக ஓய்வெடுத்தால் மட்டுமே
குறையும்.
சீக்கிரம் கால்வலி குறையட்டும்.
ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே
என்று மன சஞ்சலமாக இருக்கிறது.
பகவான் நல்ல படியாகக் குணம் அடைய
வைக்க வேண்டும். நன்றாக இருங்கள் அம்மா.
டாக்டர் வந்தது நிம்மதி.
வாங்க வல்லி, யார் வந்து என்ன செய்ய முடியும்? நாங்க எங்க சொந்தங்களிடமே சொல்லவில்லை. தம்பிக்கு மட்டும் மருந்தெல்லாம் வாங்கி அனுப்புவதால் விஷயம் தெரியும். மற்ற யாரிடமும் சொல்லிக்கலை. இது பிலட் சர்குலேஷன் சரியானதும் குறைந்து விடும் என்கிறார்கள். பார்ப்போம். நல்லதே நினைப்போம்.
Deleteநலம் பெற வேண்டுகிறேன் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநேற்று உங்கள் பதிவை படித்ததிலிருந்து மனதே சரியில்லை. இன்று கால்வலி எப்படி உள்ளது.? நேற்று ஆங்கில மருத்துவர் தந்த மருந்துகளை சாப்பிட்டதும் சற்று குணம் தெரிகிறதா? இன்று காலை எ பியிலும் உங்களை காணாததால் மனதுக்கு இன்னமும் கஸ்டமாக இருந்தது. உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை தொடர்பு கொள்ள வழியில்லாததால், உங்கள் பதில்களை கண்டால்தான் மனது சமாதானமாகும். உங்கள் கால்வலி விரைவில் குணமாக இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். ஓய்வு எடுத்துக் கொண்டு உடம்பை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நேற்று வந்தவரும் ஆங்கில மருத்துவர் இல்லை கமலா. ஆயுர்வேத/சித்த மருத்துவர் தான். அவருக்குத் தான் என் உடல் நிலை பற்றி நன்கு தெரியும். கொஞ்சம் வலி குறைந்திருக்கு. போகப் போகச் சரியாகும் என நம்புகிறேன். ராத்திரி சரியாத் தூங்காததால் எ.பி.க்கு வரலை. அதான் காரணம். உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஉங்கள் பிரச்சனைகள் விரைவில் விலகட்டும். எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteகால்வலி என்று இல்லை எந்த உடல் நலக் கோளாறும் வேதனை தருவதே. தற்போது எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் நல்ல பலன் தரட்டும். கவனமாக இருங்கள்.
நன்றி வெங்கட்.
Deleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteகேட்கவே கஷ்டமா இருக்கு மாமி, விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள். தொலைவில் உள்ள பிள்ளைகளுக்கு கேட்டா கஷ்டமா தான் இருக்கும். Take care ❣️
ReplyDeleteசரியாயிடும் ஏடிஎம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. பிள்ளைகளுக்குத் தெரிந்தால் கவலைப்படுவாங்க. யாராலும் இப்போ வரவும் முடியாது.
Deleteமருந்துகள் நல்ல பலன் கொடுக்கட்டும்.நலம் பெற வேண்டுகிறேன். அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஉங்கள் ரத்தத்தில் யூரியாவின் அளவு மிகுதியாக இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதித்தார்களா? அப்படி இருந்தால், "கவுட்" என்ற ஒரு பிரச்சினை காலில் வர வாய்ப்பு உண்டு (https://www.mayoclinic.org/diseases-conditions/gout/symptoms-causes/syc-20372897). உங்கள் கால் வலி பூரணமாய் குணமாக பள்ளி கொண்ட பெருமான் கிருபை புரியட்டும்.
ReplyDeleteவாங்க சூரியா, 3 மாதம் முன்னர் பார்த்தப்போ எதுவும் கோளாறு இல்லை. அதுக்கப்புறமா லாக்டவுன் என்பதால் யாருமே கூப்பிடக் கூட முடியலை. அவங்களே வராதீங்கனு சொன்னாங்க. இனித் தான் மீண்டும் பரிசோதனை செய்துக்கணும். வீட்டிலேயே சர்க்கரை மட்டும் ரான்டமாகப் பார்த்துப்போம்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, தங்கள் கால் வலி சரியாகி, உடல் நலம் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன். வருத்தமாக இருக்கிறது. சீக்கிரம் சரியாகிவிடும். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா.
ReplyDeleteவாங்க வானம்பாடி. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.
Deleteதூங்குவதற்கு முன் கால்களைஉயர வைக்க பழகுங்கள் அரை அடி உயரம் போதுமானது தலையணை காலுக்கு கீழ் வைக்காமல் இருந்தால் நலம் நேரம் நீங்கள் முடிவு செய்யலாம் வலி என்று தெரிந்த உடன் இறக்கி விடவும் உயரம் எவ்வளவு அதிகமோ அவ்வளவு ரத்த ஓட்டம் பெருக வாய்ப்பு உண்டு
ReplyDeleteவிஸ்வநாதன்
நன்றி விஸ்வா. முதல் முதல் 2000/2002 ஆம் ஆண்டுகளில் இந்தப் பிரச்னை ஆரம்பித்த போதில் இருந்து கால்களுக்கு உயரமாகத் தலையணை வைத்துக் கொண்டு தான் படுக்கிறேன். நீங்கள் சொல்லி இருக்காப்போல் காலுக்குக் கீழ் வைப்பதில்லை. அப்படி வைத்தால் வலி அதிகம் ஆகிறது. ஆகவே கால் பாதங்கள் மட்டும் உயரமாக இருக்கும்படி வைத்துக் கொண்டே படுப்பேன்.
Deleteஅன்பு கீதா!
ReplyDeleteஇரண்டு நாட்களாக வலைப்பக்கம் வர முடியாததால் உங்கள் பதிவை இப்போது தான் பார்க்க முடிந்தது. படித்ததும் மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நடக்க முடியாத வலி வருவது எவ்வளவு கொடுமை என்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் முழுமையாக புரியும். நானும் பிப்ரவரி முழுவதும் நடக்க முடியாமல் டாய்லட் சீட்டில் உட்கார முடியாமல் இன்னொரு பக்கம் படுக்க முடியாமல் வலியால் மிகவும் துவண்டு போனேன். சர்க்கரை மிகப்பெரிய காரணம். என் வலி கெண்டைக்காலில் திடீரென்று ஏற்பட்ட மறு கணமே நடக்க முடியாமல் போனது. பாதம் வீங்கியிருந்ததால் இதய மருத்துவர், சிறுநீரக மருத்துவருடன் யூரியா, கிரியாட்டினின் என்று அனைத்து டெஸ்ட், ஸ்கான்கள் என்று பண்ண வேண்டியிருந்தது. இலேசான வரிகோஸ் பிரச்சினை என்றாலும் இந்த கெட்ட ரத்தம், நல்ல ரத்தம் பிரச்சினை வரும். எனக்குமே அது இருக்கிறது.
' ஒரே மருத்துவம் தான். கொஞ்சம்கூட ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாது. கெண்டைக்காலுக்கு மூன்று தடவைகள் ஐஸ் ஒத்தடம், சுடு ஒத்தடம் என்று மாறி மாறி கொடுக்க வேண்டும்.நடக்கும் போதும் பிற்பாடு நடக்க முடிகிறபோதும் முழங்கால் வரையுள்ள compressed stockings போட்டிருக்க வேண்டும் ' என்று டாக்டர் சொன்னார். தொடர்ந்து நான்கு தடவைகள் வலிக்கான ஸ்ப்ரே செய்து கொள்ளச் சொன்னார். அணு அணுவாக முன்னேறி நான்கு மாதங்கள் கழித்து இப்போது தான் நடக்கவும் வேலைகள் செய்யவும் உடற்பயிற்சிகள் செய்யவும் முடிகிறது. இந்த ஸ்ப்ரே நம் ஊரில் கிடைக்கிரது. பெயர் RELISPRAY. முடக்கத்தான் தைலமும் பலன் கொடுக்கும்.
நீங்களும் கொஞ்சம்கூட காலக்ளுக்கு வேலை கொடுக்காமல் ரெஸ்ட் எடுக்கணும். அப்போது தான் உங்களுக்கு கொஞ்ச கொஞ்சமாக வலி குறையும்.
இது போக, யதேச்சையாக FOOD AREA TAMIL நிறுவனர் ஜப்பார் பாய் தன் கால்வலிக்கு எடுத்துக்கொண்ட சிகிச்சை பற்றிக்கொடுத்த வீடியோ பார்க்க நேர்ந்தது. அவர் வலி சரியானதைப்பற்றி தெரிவித்திருக்கிறார். நானும் ஊருக்கு வரும்போது அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன். முடிந்தால் காரிலேயே அங்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இதோ, அந்த வீடியோ லிங்க்!
https://www.youtube.com/watch?v=crfphVgSNfg
நல்லவேளையாக எனக்குச் சர்க்கரை காரணம் இல்லை மனோ! கொஞ்சம் அதிகமாய் இருந்தாலும் அளவுடன் இருக்கிறது. பயப்படும்படி இல்லை. ஒத்தடம் கொடுத்ததுமே எனக்கு அந்த இடம் கன்னிப் போய் விட்டது. ஆகவே ஒத்தடம் கொடுப்பதை நிறுத்திட்டேன். சாக்ஸ் போட்டுக் கொண்டாலும் பிரச்னை. கால்களே வீங்கி விடுகின்றன. வெரிகோஸ் வெயினின் தொந்திரவும் அதிகம். முடக்கத்தான் தைலம் கிடைத்தால் கட்டாயமாய் வாங்கித் தடவிக்கிறேன். ஸ்ப்ரே இங்கே கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன். வைத்தியர் படுத்தே தான் இருக்கச் சொல்கிறார். இன்னிக்குக் கொஞ்சம் நடந்தேன். :) இதையே ஒரு செய்தியாகச் சொல்ல வேண்டி ஆகி விட்டது.உங்கள் ஆலோசனைகளுக்கும் அன்பான அறிவுரைக்கும் நன்றி. ஜப்பார் ஐயாவின் யூ ட்யூப் கட்டாயமாய்ப் பார்க்கிறேன்.
Deleteஎல்லோருக்கும் இந்த வலி/வேதனை இருந்து கொண்டு இருக்கிறது. கோமதி, கமலா, மனோ போன்றோருக்கும் இருக்கு! ஆனால் நான் தான் புலம்பி விட்டேன் போல! தாங்கிக் கொண்டு இருக்கும் அவர்களின் மனோபலத்தை எனக்கும் வேண்டிக்கிறேன். அவர்களின் வலியும் குறைந்து அனைவரும் நலமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன். அடிக்கடி வாட்சப், தொலைபேசி மூலம் நலம் விசாரிக்கும் ரேவதிக்கு எங்கள் நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் கால்வலி தற்சமயம் எப்படி உள்ளது? பதிவின் கருத்தில் உங்கள் வலியின் விபரங்கள் பற்றியும், கருத்தில் சகோதரி மனோ சாமிநாதன் அவர்கள் விபரமாக அவர் பட்ட வலிகளின் வேதனைகளையும், அதற்கு மருத்துவ வழிமுறைகளை கூறியதை பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன். கால் வலிகளுக்குத்தான் எத்தனை காரணங்கள்... .ஊரில் என் மன்னியும் கொஞ்ச வருடங்களாக இந்த கால் பாதம் வீங்கி, அதற்கு பல மருத்துவம், மருந்துகள் என எடுத்துக் கொள்கிறார்.
எனக்கு கால் பாதங்களில் கடுமையான வலிகள் இல்லை. நிறைய நடந்தால்,நாள் முழுக்க நின்றால்தான் வரும். ஆனால் முன்பு என் பேத்தியுடன் மளிகைக்கடை படிகளில் வழுக்கி விழுந்து கால் பாதம் வீங்கி அதுவே தானாக குணமானதிலிருந்து அதன் பிறகு அடுத்த காலும் சொல்லி வைத்தாற் போல், பாரபட்சமின்றி அடிபட, இப்போதுதான் ஒரு வருடத்திற்கும் மேலாக இருகால் பாதங்கள், விரல்கள் என மடக்க முடியாதபடி ஒருமாதிரி, பாரமாக,மதமதப்பாக மரத்து போன மாதிரி, தினசரி எப்போதும் உணர்கிறேன். அது என்னவோ... மற்றபடி இடது முழங்கால் வலி, முழங்காலுக்கு மேலாக வலி என இருக்கிறது. இதெல்லாம் சுகராக இருக்குமெனவும், மருத்துவரிடம் செல்லும்படியும் எங்கள் மன்னி வலியுறுத்தி கூறிக் கொண்டேயிருக்கிறார்.
உங்கள் வலிகள் எப்படி கடுமையாக இருக்குமெனவும், அதை நீங்களும் வெளிக்காட்டாமல் சமையல், வீடு சுத்தம் செய்வது மற்ற வீட்டு வேலைகள் என எவ்வளவு வேலைகள் செய்து வருகிறீர்கள் என்பதை நானும் அறிவேன். இருவருக்கு என்றாலும், அந்த வேலைகளும் வேலைகள்தானே.. நீங்களும் எவ்வளவு நாட்கள் மனோ பலத்துடன் சமாளித்து வருகிறீர்கள் எனவும் தெரியும். இப்போது சில நாட்களாகத்தானே வெளியில் ஒரு மாமியிடம் உணவு தயார் செய்து வர சொல்லியுள்ளீர்கள். அவர்களையே கொஞ்ச நாட்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டு, மாத்திரை மருந்து சாப்பிட்டு மருத்துவர் சொல்கிறபடி நன்கு ஓய்வு எடுங்கள். விரைவில் உங்கள் கால் வலிகள் பரிபூரணமாக குணமடைந்து எப்போதும் போல் இயல்பாக இருக்க நானும் இறைவனை மனமாற வேண்டிக் கொள்கிறேன்.இன்று நீங்கள் கொஞ்சம் நடந்தீர்கள் என்பதை மகிழ்வாக உள்ளது. நல்லதே நடக்கும்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலா, தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். 3 நாட்களாக அதிகம் எழுந்திருக்கவில்லை. வலி கொஞ்சம் குறைந்தாலும் இடக்காலில் இன்னமும் பூரணமாய் வலி குறையவில்லை. மருத்துவர் சொன்னபடி மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். ஒரு மாதமாக வெளிச்சாப்பாடு! அதுவும் ஒத்துக்கவில்லை. என்ன செய்வது! வேறே வழி இல்லை. இப்போக் கொஞ்சம் நடந்துட்டு வந்திருக்கேன். :))) அதுவே பெரிய வித்தையாக ஆகி விடுகிறது.
Deleteஅன்புள்ள கீதா!
ReplyDeleteஇப்போது எப்படி இருக்கிறது கால் வலி? எடுத்துக்கொண்ட மருந்துகளும் சிகிச்சை முறைகளும் ஓரளவாவது வலியைக் குறைத்திருக்கிறதா? கொஞ்சமாகவாவது வலி இல்லாமல் நடக்க முடிகிறதா? கணவர் அருகே இருக்கும்போது நம்மைப்போன்றவர்களால் சிறிதாவது வேலைகள், கொஞ்சமாக சமையல் என்று இல்லாமல் இருக்க முடியாது தான்! ஆனாலும் உடல் சிரமங்களை அறவே குறைத்து ஓய்வு எடுத்தால் தான் பின்னால் நன்றாக நடக்க முடியும். உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.
மீள் வருகைக்கு நன்றி மனோ. வலக்காலில் வலி குறைந்தாலும் இடக்காலில் இன்னமும் குறையவில்லை. நடக்கும்போது ஊன்றுகையில் வலி தெரிகிறது. இத்தனை அமர்க்களத்தில் முந்தாநாள் என் தம்பி, மனைவி, பெரிய பையர் கஞ்சனூர் வந்துட்டு இங்கேயும் வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அவங்க வரவு ஏற்கெனவே தெரியும் என்பதால் சாப்பாடுக்குச் சொல்லி வைத்திருந்தோம். என்றாலும் அவ்வப்போது கொஞ்சம் நடக்கத் தான் வேண்டி இருக்கு. கஞ்சிக்கு அரைக்க, காஃபி, தேநீர் போட என்று ஏதானும் செய்யத் தான் வேண்டி இருக்கு. என்றாலும் இரண்டு நாட்களாகப் படுக்கையில் படுத்தே கழித்திருக்கேன். காலை ஒன்றரை மணி நேரம் நடந்து வேலைகள், மாலை ஒன்றரை மணி நேரம் நடந்து வேலைகள்! பின்னர் படுக்கை! உணவு வரும்போது எழுந்து வந்து உணவு சாப்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்த பின்னால் படுத்துடுவேன். கொஞ்சம் பரவாயில்லை.
Deleteசீக்கிரமே பழையபடி சுறுசுறுன்னு எழுந்து நடக்கணும்னு வேண்டிக்கறேன்.
Deleteநன்றி ஶ்ரீராம். வலி இல்லாமல் நடந்தாலே போதும்னு இருக்கு! :(
Deleteரொம்ப வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி அப்பாதுரை
Deleteஇப்பொழுது உடல்நிலை பரவாயில்லையா.. என் பிரார்த்தனைகள் ? இது வெரிக்கோசிஸ் மாதிரியா ?
ReplyDeleteவாங்க எல்கே. வெரிகோஸ் ப்ரச்னையும் இருக்கு என்றாலும் இது வேறே மாதிரி நரம்புப் பிரச்னை. ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் அசுத்த ரத்தம் சுத்திகரிக்கப்பட்டுக் கழிவுகள் வெளியே வராமல் வீக்கம், வலி. இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. எழுந்து உட்கார்ந்திருக்கேன்.
Deleteநீங்கள் 12ம் தேதி போட்டிருக்கும் பதிவை நான் இன்றுதான் பார்க்கிறேன். கால் வலி பற்றி எ.பி.யில் பார்த்தாலும், அது இவ்வளவு சீரியஸ் என்பது இப்போதுதான் தெரிகிறது. ஆளுக்கு ஒரு ஆலோசனையும், மருத்துவமும் கூறுவார்கள். என் பங்கிற்கு நான் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவரை பரிந்துரைக்கிறேன். ஆன் லைனிலேயே நீங்கள் ஆலோசனை பெறலாம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteவாங்க பானுமதி, பொதுவாகவே நீங்க அதிகம் என் வலைப்பக்கம் வருவது இல்லை. உங்களுக்கு இருக்கும் மும்முரமான வேலைப் பளுவில் நீங்க வருவதே பெரிய விஷயம். தாமதம் ஆனால் என்ன? வந்தது சந்தோஷம். ஶ்ரீவர்மா பற்றி நானும் அறிவேன். இப்போ எடுத்துக்கொள்வதும் சித்தா/ஆயுர்வேத மருந்துகள் தான். விரைவில் குணமடையும் என்னும் நம்பிக்கையுடன் இருக்கேன். காலை வேளைகளில் வலித்தொந்திரவு குறைகிறது. மாலை ஆனால் அதிகம் ஆகிறது. இது இப்போதைய நிலை.
Delete