ஆண்டறிக்கை என்பது அவ்வளவு ஒன்றும் எளிதாகத் தயாரிக்க முடியும் ஒன்று இல்லை. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த ஆண்டறிக்கை நிறுவனத்தின் அத்தியாவசியமான தகவல்களை வைத்துத் தயாரிக்கப்படும் ஓர் முக்கிய ஆவணம் ஆகும். பங்குதாரர்களுக்கம்பெனியில் வரவு, செலவுகள் பற்றி மட்டுமில்லாமல் நிறுவனம் செயல்படும் விதம், தொழிலாளர்களின் பங்கு, தொழில் துறையின் தற்போதைய போக்கு, முன்னர் இருந்த விதம், இப்போது மாறுதல்கள் தேவைப்பட்டால் அவற்றை எவ்வகையில் நடைமுறைப்படுத்துவது, இவற்றோடு நிறுவனத்தின் நிதி நிலைமை, வரவு,செலவுக் கணக்குகள், வரவாக இருந்தால் லாபம் எவ்வளவு, அதில் முதலீடுகள் செய்யப்படுமா? தொழிலாளர்களுக்குப் பங்கு உண்டா என்பதில் இருந்து ஆரம்பித்து செலவு எனில் அதை ஈடு கட்டுவது எப்படி, லாபத்தைக் கொண்டு வரும் மாற்று வழி என்ன? அதனால் லாபம் நிச்சயமாய்க் கிடைக்குமா என்பதிலிருந்து நிர்வாகத்தின் நடைமுறைகள், நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனைகள், அவர்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சலுகைகள், போனஸ் அளிப்பதெனில் எத்தனை சதவிகிதம் அதற்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது, தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் சேர்த்துக் கொடுக்கப்படும் சலுகைகள், அவர்களுக்கான மருத்துவ உதவி, குழந்தைகள் நலன் என அனைத்துக்கும் சேர்த்து ஓர் திட்டம் போட்டு அதை முதலில் திட்ட அறிக்கையாகக் கொடுப்பார்கள்.
பின்னர் அந்த வருஷம் அந்தத் திட்டத்தின்படியே வரவு செலவிலிருந்து எல்லாவிதமான நிறுவனத்தின் வேலைகளும் நடந்தனவா என்பதற்கு அந்த நிதி ஆண்டு முடிவில் ஓர் அறிக்கை அளிப்பார்கள். அதில் தாங்கள் செய்த செலவு மட்டுமில்லாமல் ஆக்கபூர்வமாகச் செலவுகள் செய்யப்பட்டனவா? அதில் தவறு நேர்ந்திருக்கிறதா? முதலீடுகள் லாபத்தைக் கொடுத்தனவா? தவறு நேர்ந்திருந்தால் எதனால் நேர்ந்தது? அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டம் என்ன? அவற்றை ஈடு செய்வது எப்படினு ஆரம்பிச்சுத் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கும்படி லாபம் வரவில்லை எனில் அதை எப்படி ஈடு செய்வது? அவர்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது வரை எல்லாவற்றையும் யோசித்துத் தயாரிக்க வேண்டிய ஒன்று. சும்மாவானும் ஆண்டறிக்கை என எதை வேண்டுமானாலும் வாசித்துவிட முடியாது. சிறுகதை எழுதுவதற்கும் ஆண்டறிக்கை தயாரிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. சிறுகதை கேள்விப்பட்ட ஒன்றை அல்லது கற்பனையில் ஒன்றை வைத்துக் கொண்டு சம்பவங்கள், சம்பாஷணைகள், கதாபாத்திரங்கள் எனக்கூட்டியோ, குறைத்தோ வைத்துக் கொண்டு தர்க்கரீதியாக ஒத்துக்கொள்ளும்படி எழுதி விடலாம். சொல்லப் போனால் எல்லோராலும் எழுத முடியாது தான். கற்பனை வளம் வேண்டும்
ஆனால் ஆண்டறிக்கை உண்மை நிலவரங்களையே தெரிவிக்க வேண்டும். புள்ளி விபரங்கள் தவறாகக் காட்டப்படக் கூடாது. வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட திட்ட அறிக்கையுடன் வருட முடிவின் காட்டப்படும் ஆண்டறிக்கை ஒத்துப் போக வேண்டும். செலவு கூடி இருந்தால் காரணம் சரியாக இருக்க வேண்டும். லாபத்தையும் குறைக்காமல் காட்டி ஆகவேண்டும். திட்ட அறிக்கை தணிக்கைக்கு உட்படாது. ஆண்டறிக்கை தணிக்கைக்கு உட்படும். ஆகவே மிகவும் யோசித்துச் சரியானபடி வரவு, செலவுகள், மற்றச் செலவுகள், முதலீடுகள், வியாபாரங்கள் நடந்திருக்கின்றனவா என்பது பற்றி அந்த அந்தக் குறிப்பிட்ட துறையின் நிர்வாகிகள் சரியான புள்ளி விபரங்களை அளித்தாலே தலைமை நிர்வாகியால் உண்மையான ஆண்டறிக்கையைத் தயார் செய்ய முடியும். இதற்குக் கடுமையான உழைப்புத் தேவை. மூளைக்கும் வேலை அதிகம். அலுவலகத்தின் கலாசாரங்களும் இதன் மூலம் தெரிவிக்கப்படுவதால் அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
முக்கியமாய் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தொடர்பு கொள்ளும் நிறுவனங்களுடன் சரியான உறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவற்றில் அபாயங்கள் இருக்குமானால் அது குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும் என்பதோடு அபாயங்களைக் கண்டறியும் ஆற்றலும் வேண்டும். ஆண்டு அறிக்கையின் உள்ளடக்கமோ அல்லது அதன் தொனியோ நிறுவனத்தைக் குறித்த அத்தியாவசியமான தடயங்களை நமக்குக் கொடுக்கும். அதன் மூலம் நாம் சரியான நிறுவனத்தில் தான் முதலீடு செய்திருக்கோமா என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் நம் முதலீடு இங்கேயே தொடரலாமா வேண்டாமா என்பது குறித்தும் முடிவு செய்து கொள்ளலாம். ஆகவே ஆண்டறிக்கையை வாசிப்பதோ/எழுதுவதோ எளிது அல்ல. கடினமான ஒரு விஷயம்.
என்ன திடீரென்று ஆண்டறிக்கை பற்றிய விளக்கம்?
ReplyDeleteஹிஹிஹிஹி, ஆண்டறிக்கை தயார் செய்வது எளிதுனு சிலர் நினைப்பதால்! :))))))
Deleteகடினமான விஷயம் தான். பல ஆண்டறிக்கைகள் உண்மை நிலையைச் சொல்வதில்லை என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
ReplyDeleteவாங்க வெங்கட், நீங்க சொல்லுவதும் உண்மையே! :)
Deleteஎன்னாச்சு உங்களுக்கு? மாமா வைத்திருக்கும் ஷேர் விலை குறைந்துவிட்டதா?
ReplyDeleteஹிஹிஹி, ஷேர் மார்க்கெட் பக்கமெல்லாம் தலைவைச்சுப் படுத்தது கூட இல்லை. இரண்டு பேருக்குமே அது பிடிக்காத ஒன்று. ஆகவே விலை குறைந்தாலும் சரி, விலை ஏறினாலும் சரி, கவலை இல்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல தெளிவான பதிவு. இப்படி எழுத உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். ஒரு கம்பெனியின் அத்தனை விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்கள் கூட இப்படிதான் ஆண்டறிக்கை எழுத வேண்டுமென சொல்லித்தர முடியாது. அவ்வளவு சிறப்பாக விஷயங்கள் கிரஹித்து தந்துள்ளீர்கள். ஒரு சந்தேகம். சத்தமில்லாமல் ஏதாவது ஒரு நிறுவனம் ஆரம்பிக்க போகிறீர்களா? வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. பாராட்டுக்கு நன்றி. நிறுவனம் எல்லாம் சின்ன வயசிலேயே ஆரம்பிக்காமல் இப்போதா ஆரம்பிப்பேன்! அந்த அளவுக்கு வசதியோ வாய்ப்போ இல்லை. ஒரு சிலர் ஆண்டறிக்கை தயார் செய்வது எளிது என்பது போல் சொன்னதால் இதைப் பதிவிட்டேன். அவ்வளவே! :))))
Deleteஆண்டறிக்கை தயார் செய்வது மிகவும் கஷ்டம்தான்.
ReplyDeleteஉண்மை கோமதி. இதில் பல விஷயங்களையும் இன்னமும் சொல்லாமல் விட்டிருக்கேன். முழுதும் எழுதினால் புரியும், ஆண்டறிக்கை என்பது எளிதானது அல்ல என்பது.
Deleteஆண்டறிக்கை என்றதும் சார்டரட் அக்கௌண்டண்ட் தினத்தைப் பற்றிய
ReplyDeleteபதிவு என்று நினைத்தேன்:)
கொக்குக்கு ஒண்ணே மதி!!!
இந்த அறிக்கை செய்து முடிப்பது எவ்வளவு
கடினம் என்று எல்லாத்துறையில் இருந்தவர்களிடமும் பார்த்திருக்கிறேன்.
மிக நல்ல பதிவு. நன்றி மா.
ஹா,ஹா, வல்லி! அது தற்செயலாக அமைந்திருக்கு! மற்றபடி ஆண்டறிக்கை என்பது என்னமோ அல்வா சாப்பிடறாப்பொல் என்று நினைப்பவர்களுக்காக எழுதின பதிவு இது. :)))))
Deleteநான் ஆண்டாளின் கோரிக்கை என்று நினைத்தேன்....
ReplyDeleteஹாஹாஹா கில்லர்ஜி! நல்ல நினைப்பு போங்க!:))))
Deleteகீசாக்கா நலம்தானே? எதுக்கு இப்போ திடீரென ஆண்டறிக்கை தயாரிக்கிறீங்க??:)).. மோடி அங்கிளுக்கு செக் ஆகிட்டீங்களோ?:))).. நோஓஓஓஓஓஒ நான் தான் அவருக்கு செக்:)), விரும்பினால் நான் றிசைன் பண்ணினால் நீங்கள் ஜொயின் ஆகுங்கோ அதுக்கு மீ ரெகமெண்ட் பண்ணி விடுறேன்:))
ReplyDeleteவாங்க அதிரடி, தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பதில் சொல்லறதுக்கு முதல்லே மன்னிக்கவும். உடல்நலம் சரியில்லை. இந்தப் பதிவு ஆண்டறிக்கை தயார் செய்வது எனில் என்னமோ ரொம்பவே எளிதானது என நினைப்பவர்களுக்காகப் போட்டது. நான் மோதி அங்கிளுக்கெல்லாம் "செக்" இல்லை. நீங்களே இருந்துக்கோங்க.
Delete