எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 03, 2022

 பாதிப் பதிவுகளில் விட்டுட்டுப்போயிட்டேன்னு யாரானும் கேட்டிருப்பாங்களோனு நினைச்சேன். யாரும் கவனிச்சுக்கலைனாலும் கொஞ்சம் வருத்தமும் கூட! அட இம்புட்டுத்தானா நம்ம பவுசு என்று! :)))))))) ஒரு வாரமாய் உடம்பை ஆட்டி வைத்து விட்டது. அதோடு கொலுவுக்கு வரவங்க போறவங்கனு! எப்படியோ சமாளிச்சாலும் நான்கைந்து நாட்கள் ரொம்ப முடியலை. வியாழனன்று வேறே வேலையை முடிக்கக்கணினிக்கு வந்தப்போ எ.பி. பார்த்த நினைவு அரைகுறையாய். இன்னிக்குத் தான் எழுந்து நடமாடறேன். காலங்கார்த்தாலே கண் விழிச்சதில் இருந்து இன்றைய கூத்து உடம்பெல்லாம் ராஷஸ் வந்து ஒரே அரிப்பு. காது மடல் கூட அரிப்பு எடுக்கிறது. ஏதோ ஒண்ணு உடம்பைப் படுத்தணும்னு இருக்குப் போல. ஜாதக விசேஷம். எழுதணும்னு நினைச்சு உட்கார்ந்தால் கூட முடியலை.

30 comments:

  1. உடல்நலம் கவனம் பதிவு பிறகு எழுதலாம்.

    ReplyDelete
  2. எல்லாம் சரியாயிடும்..கவலைப்படாதீர்கள்.

    வந்தால் தொடர்ந்து வருவது நிறைய பின்னூட்டங்கள் எழுதுவது, வரலைனா, தொடர்ந்து வராமலிருப்பது என்பதெல்லாம் எங்களுக்குப் புதுசா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, முடிஞ்சப்போ வரலாம்னு தான். நான் தினம் இரண்டு பதிவுகள், மூன்று பதிவுகள் எழுதிய காலகட்டத்தில் நீங்கல்லாம் வலை உலகிலேயே இல்லை. இப்போ வந்து முடியாதப்போ மிரட்டறீங்க? இஃகி,இஃகி,இஃகி

      Delete
  3. நீங்க, கீதா ரங்கன், வல்லிம்மா, அப்புறம் பல வருடங்களுக்கு முன்னால் பின்னூட்டங்கள் எழுதும் வழக்கமுடைய பானுமதி ராமகிருஷ்ணா....இல்லை இல்லை பானுமதி வெங்கடேச்வரன் என்று பலரும் பல நேரங்களில் காணாமல்போயிடறீங்க. என்ன பண்ணுவது?

    ReplyDelete
    Replies
    1. பானுமதிக்குக் கருத்துகள் சரியாய்ப் போய்ச் சேரவில்லை என்பதால் கடுப்பாகி விட்டதாகச் சொன்னார் வல்லிக்கும் இன்னும் உடம்பு சரியாகலை. கீதா ரங்கன் கௌதமன் இருக்கும் ஏரியாவுக்கு மாறிப் போவதாகச் சொன்னார்.

      Delete
  4. நான் நினைத்தேன், உடல் நலமாக இருந்தால் எப்படியும் பதிவு போட்டு விடுவீர்கள்.
    உடல் நலம் சரியில்லை மற்றும் கொலு வைத்து இருப்பார்கள் வேலை சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.
    விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    எனக்கும் கால்வலி , முட்டி வலி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொல்லிட்டீங்க கோமதி, இப்போவும் எழுத வந்தால் வேறே பிரச்னை. :( இப்போதைக்கு இந்தப் பதிவுகளைத் தொடர முடியாத சூழ்நிலை. :( என் சித்தி பையர் (தம்பி) திடீரெனக் காலை இறந்து விட்டாராம். தகவல் வந்தது. எனக்கு மட்டும் தீட்டு. அதோடு நாங்கல்லாம் சின்ன வயசில் ஒண்ணாய் விளையாடினவங்க. :(

      Delete
    2. என்னைப் பொறுத்தவரை கால்வலி/முழங்கால் வலிக்கு ஆர்த்தோஹெர்ப் எண்ணெய் மற்றும்மாத்திரைகள் பலன் அளித்து வருகின்றன. என் சொந்த அனுபவம். என் கணவரும் எடுத்துக்கொண்டு பலன் இருப்பதாகச் சொன்னார். நாங்க பொதுவா விளம்பரத்தைப் பார்த்துட்டு வாங்குவது இல்லை. ஆனால் சென்ற வருஷம் எனக்குப் பார்த்த அலோபதி மருத்துவர் இதைத் தான் சிபாரிசு செய்தார் இரண்டையும் பயன்படுத்தச் சொல்லி.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    அடாடா... உடம்புக்கு ரொம்ப முடியல்லையா சகோதரி. நீங்கள் பதிவுலகத்திற்கு இரண்டு. நாட்களாக வராததற்கு காரணம் உங்களுக்கு ஏதேனும் வேலைகளில் பழு அதிகமாக இருக்குமென்று நினைத்தேன். அன்றே ஒருநாள் வேலை செய்யும் பெண் வரவில்லை என எ. பியில் நீங்கள் சொல்லியிருப்பதையும் படித்தேன். அவர்கள்தான் மேலும் வராமல் உங்களுக்கு அதிக வேலைகள் தினமும் வந்துள்ளதோ என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். அதனால்தான் நீங்கள் மேலும் நவராத்திரி பதிவுகள் எழுத கூட நேரம் வாய்க்கவில்லை எனவும் சமாதானம் செய்து கொண்டேன். இப்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் வருத்தமாக உள்ளது. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். பதிவுகள் கூட உடல்நிலை குணமானதும் பிறகு எழுதலாம். . தாங்கள் கொலுவும் வைத்திருப்பதால் நவராத்திரி அம்பிகை தங்களுக்கு நலங்களையே அதிகம் தருவாள். கவலை வேண்டாம். தாங்கள் பூரண குணமடைந்து எப்போதும் போல் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏.

    அன்புடன்.
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. முந்தாநாள் எப்படியானும் பதிவு போட நினைச்சுத்தான் வந்தேன். அரிப்புத்தாங்காமல் இரண்டு கைகளின் மணிக்கட்டும் வீங்கி விட்டது. அதுக்கு மேல் உட்காரக் கூடாதுனு கணினியை முடிட்டேன். சேமிப்பில் ட்ராஃப்ட் மோடில் போட்ட நினைவு. ஆனால் பப்ளிஷ ஆகி நிறையக் கருத்துகளும் வந்திருக்கின்றன. :))))))

      Delete
  6. எப்போதுமே உடம்பை படுத்துகிறது உங்களுக்கு நான் தான் வயசானவா உங்களுக்கு சரியாக ஆக வேண்டும் ஆசீர்வாதங்கள் அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, சின்ன வயசிலேயே அடிக்கடிஉடம்பு முடியாமல் படுத்துப்பேன். அதுவும் தீபாவளி சமயம் என்றால் அம்மா வேண்டிண்டே இருப்பா, எனக்கு ஜூரம் ஒண்ணும் வந்துடக் கூடாதே என்று.

      Delete
  7. சமீப காலமாகவே உங்கள் உடம்பு ரொம்பப் படுத்துகிறது.  கால் வலியெல்லாம் தேவலாமா என்று கேட்பதற்குள் இந்த கஷ்டங்களை சொல்கிறீர்கள்.  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கால்வலியெல்லாம் தேவலை. மாத்திரையை மாற்றி வீரியம் உள்ளதை வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சதும் சரியாச்சு இது என் இடும்பைகூர் என் வயிறு.

      Delete
  8. ஊர் முழுவதுக் ஒருவகை ஜுரம் பரவிக் கொண்டிருக்கிறது.  தொண்டைவலி, ஜுரம், இருமல் பயங்கர உடம்பு வலி என்று படுத்துகிறது.  ஞாயிறு முதல் நானும் அதில் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதான் நல்லது/பொல்லாதது எதுக்கும் சென்னை செல்வதில்லை. :(

      Delete
  9. ஒரு தலைப்பு கூட இல்லாமல் கார்டில் நாலுவரி எழுதி போஸ்ட் செய்தது போல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.  உங்கள் சிரமம் புரிகிறது.  எனக்கும் கழுத்து தொகைப்ட்டை, முதுகு ஆகிய இடங்களில் அரிப்பு இருக்கிறது.  சொரிந்து சொரிந்து அந்த இடம்பூராவும் சொரசொரவென ஆகி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. haahaahaaahaahaa just read my comment in the last. :))))))

      Delete
  10. வணக்கம் சகோதரி

    நலமா? இப்போது எப்படியிருக்கிறீர்கள்.? மருத்துவரிடம் சென்றீர்களா ? மருந்து சாப்பிட்டதில் சற்று குணமாகி உள்ளதா? நதங்களுக்கு உடல் படுத்தல் இல்லாமல், விரைவில் பூரண குணமாக இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை கமலா. மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். நாளைக்கு மாதாந்திரச் செக்கப்புக்குப் போகணும்

      Delete
  11. எல்லா பண்டிகையும் சம்பிரதாயப்படி செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டு செய்வது. அப்புறம் காய் குடையுது, கால் குடையுது என்று அங்கலாய்க்க வேண்டியது. இதே வழக்கமாகி போய்விட்டது.
    தெரியாமலா அன்று சொன்னார்கள் 

    "நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை" என்று. 

    நானறிந்த ஆன்மீகம் · பின்தொடர்
    Jayakumar பதில் அளித்துள்ளார்29 ஜூலை, 2021

    அனைவராலும் எல்லா காலத்தில் சில மரபு சார்ந்த வழக்கம் பின்பற்றி நடக்க முடியாமல் போகலாம். அது போன்ற நிலையில் மன உறுத்தல் ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர்கள் அவர்களின் மன ஆறுதல் பெற அந்த சொலவடை பயன்படுத்தி வந்தனர். என் தந்தையாரும் இது போன்ற சில நேரங்களில் சொல்லி இருக்கிறார். நானும் தற்போது முடியாது என நினைக்கும் போது இந்த முதுமொழியை நினைத்துக் கொள்வது உண்டு.
    இந்த ஜெயக்குமார் நான் இல்லை.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பொதுவாவே நான் ரொம்ப ஆரோக்கியமெல்லாம் இல்லை. உடம்பு படுத்தும். ஆனாலும் என் சக்திக்கு மீறி வேலை செய்ததில் இப்போது நரம்புகள் மிகப் பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கண் மருத்துவர் கூட என்னைப் பரிசோதிக்கையில் மிகவும் பலவீனமாக இருக்கீங்க. முடிஞ்சவரை ஓய்வில் இருங்க என்றார். அது என்னமோ நடப்பதில்லை. மற்றபடி சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் இப்போல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே இல்லை மாமியார்/மாமனாரோடு போயாச்சு. மேலும் கடந்த பத்து வருஷங்களாக நாம் இருவர்/நமக்கு இருவர் வாழ்க்கை தானே! அதில் அதிகம் வேலை என்பதெல்லாம் இல்லை. உடல் பலவீனம் சரியாகவில்லை. :( சாப்பாடெல்லாம் ஒழுங்காய்ச் சாப்பிட முடிவதில்லை. முக்கியமான காரணம் அது தான் கர்நாடாகாவின் ஒரு கோயிலில் வயதான பட்டாசாரியார் தன் முதுமையையும் மீறிப் பெருமாளுக்குச் சேவை செய்து சித்தி அடைந்தார். அதை எல்லாம்பார்க்கையில் நானெல்லாம் ஜுஜுபி.

      Delete
  12. ஆஆஆஆஆஆ திடீரெனக் கீசாக்காவுக்கு என்ன ஆச்சு? ஏதோ அலர்ஜி உணவு சாப்பிட்டு விட்டீங்கள்போலும், சிலவகை உணவுகளால் அலர்ஜி வந்தால், கண்ணைத் திறக்க விடாமல் மயக்கம் மயக்கமா வரும்.. சில நாட்களில் சரியாகிடும்,. நிறையத் தண்ணி குடிச்சுக்கொண்டே இருந்தால் எல்லாம் வெளியில் போய் விடும், ஒரு அலர்ஜி ரப்லெட் போடலாமே...

    விரைவில விஜயதசமிப் போஸ்ட்டை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, அலர்ஜி தான். எனக்கு அடிக்கடி வரும். இது காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுடுச்சு! :( உடம்பெல்லாம் தடித்துச் சிவந்து வீங்கிக் கொண்டு கொஞ்சம் மயக்கமும் வந்தது தான். அலர்ஜி மாத்திரை போட்டுக் கொண்டேன். நேற்றுத் தான் முழுக்கக் குணம் ஆச்சு. 7-1022 வியாழன் அன்று. நேற்று மருத்துவரிடமும் போயிட்டு வந்தோம்.

      Delete
  13. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நேத்து ரொம்பவே பிடுங்கல் தாங்காமல் கணினியை மூடிட்டு இதை சேமிச்சு இல்லையோ வைச்சேன். யார் வெளியிட்டது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன கூத்து ப்ளாகர் மாமா?

    ReplyDelete
  14. நலம் பெற மீண்டும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் மீண்டும் நன்றி கில்லர்ஜி!

      Delete
  15. நலம்பெற்று இருப்பீர்கள் என நம்புகின்றோம். ஓய்வாக இருங்கள்..

    ReplyDelete