எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 12, 2023

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பட விமரிசனம்! இல்லை! படக்கதை!

 பிஎஸ் என் எல் ஃபைபர் நெட் போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. அதிலே பிஎஸ் என் எல் சினிமா+ இலவசமாகக் கொடுத்திருக்காங்க. இதுக்கு முன்னாடி டிஸ்னி ஹாட் ஸ்டார் கொடுத்தும் அதைப் போய்ப் பார்க்கவில்லை. ஜியோவில் ஜியோ சினிமா கொடுத்திருந்தாங்க. ஆனால் அதிலே படங்களே சரியாப் பார்க்க முடியலை.ஹே! சினாமிகா! பார்த்தேன். பிடிக்கலை. அப்புறமாக் காஷ்மீரி ஃபைல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்தேன். மறுபடி ராம் சேதுவோ, ராகெட்ரியோ பார்க்கலாம்னா பைசா கேட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்துட்டேன். இதுக்குள்ளே தான் கண் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்து கணினியைத் தொடாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்புறமா ஒரு நாள் பிஎஸ் என் எல் சினிமா+ ஐத் தூண்டித்துருவுகையில் ஆர்.ஆர்.ஆர். படம் இருந்தது. ஆஸ்கார் படமாச்சேனு அதைப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். முதல் மூன்று நிகழ்வுகளையும் பார்த்துட்டேன். பின்னர் சில நாட்கள் பார்க்க முடியலை. அப்புறமா மறுபடி மறுபடி முயன்றால் படமே வரலை. என்னனு புரியலை.


ஆனால் மற்றப்படங்கள் வந்தன. அதில் அயோத்தி,அகிலன் இதெல்லாமும் இருந்தது. அயோத்தி புதுசு என்பதோடு அதுக்குப் பைசா கொடுக்கணுமோனு சந்தேகம். அதோடு படம் விமரிசனம் படிச்சதில் எனக்குப் பிடிக்கவும் இல்லை. பிராமணர்களை மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கெட்டவங்களாக் காட்டிட்டு மற்றவர்களை ரொம்ப நல்லவர்களாகக் காட்டி இருக்காங்க என்று 2,3 விமரிசனங்கள் பார்த்ததும் படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு. அகிலன் பார்க்க ஆரம்பித்தால் ரொம்ப போராக இருந்தது. அதான் ஆர்.ஆர்.ஆரும் வரலையேனு நினைச்சப்போ இந்த ஹிந்திப் படம் கண்களில் பட்டது. 

கஞூஸ் மகின்சோச் என்னும் படம். நடிகர்கள் எல்லாருமே புதியவர்கள். ஆனால் கதைச் சுருக்கம் நன்றாக இருக்கவே நாலைந்து நாட்களாகப் பார்த்தேன். ஒரேயடியாக உட்கார முடியறதில்லை. இன்னிக்குப் பார்த்து முடிச்சுட்டேன். ஜம்னா ப்ரசாத் பான்டே என்னும் இளைஞன் சரியான கருமி. முடிஞ்சு போன டூத் பேஸ்டைக் கூடக் குழவியால் நசுக்கி மிச்சம் மீதி இருக்கானு பார்ப்பான். அவனுக்கு அப்பா, அம்மா, மனைவி, ஒரு பிள்ளை இருந்தார்கள். இவன் ரகசியமாகப் பணம் சேர்த்து வந்தது ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ளவங்களுக்குத் தெரிந்து போக, அப்போத் தான் அவன் சொல்கிறான் தன் பெற்றோரின் சார்தாம் யாத்திரைக்காகப் பணம் சேர்த்து வருவதாக. எதிர்பாரா மகிழ்ச்சி அடைந்த பெற்றோரும் யாத்திரைக்குத் தயார் ஆக ஜம்னா ப்ரசாதும் அவர்களை அனுப்பி வைக்கிறான்.

அவங்க யாத்திரைக்குச் செல்லும்போது சந்தோஷமாகவே செல்கின்றனர். ஆனால் அவங்க போன அந்தச் சமயம் தான் கேதார்நாத்தில் மேகம் வெடித்து வெள்ளம் வந்திருந்தது. முதலில் பிள்ளையோடு தொடர்பில் இருக்கும் பெற்றோர் பின்னர் தொடர்பு அறுந்து விடுகிறது. மனம் உடைந்த ஜம்னா ப்ரசாத் ரிஷிகேஷ், ஹரித்வார் இங்கெல்லாம் போய் ஒவ்வொரு முகாமாகத் தன் பெற்றோரைத் தேடுகிறான்.  கிடைக்கவே இல்லை. பின்னர் சொந்த ஊரான லக்னோவிற்குத் திரும்பும் அவனுக்கு அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அளிப்பதைக் கேட்டு அதற்கு விண்ணப்பிக்கிறான். அவனுக்குப் பதினான்கு லஷம் கிடைக்கும் எனவும் அதில் மேலதிகாரிகளுக்கும் தனக்குமாக நான்கு லக்ஷத்தைப் பிடித்துக் கொண்டு மீதி பத்து லக்ஷம் தருவதாக அந்த அரசு அதிகார் சதுர்வேதி சொல்ல அரை மனதாக ஜம்னா ப்ரசாத் சம்மதிக்கிறான். 

பத்து லக்ஷத்தை வாங்கி வீட்டிற்குத் தாய்க்குப் பிடித்த நீல நிறத்தில் பெயின்டிங், செய்து பறவைகளுக்கான ஓர் இல்லம் தந்தை விருப்பத்தின்படி அமைத்து பெற்றோரின் பெயரில் பூங்காவில் அமர இரண்டு கல்லால் ஆன பெஞ்சுகள் போட்டுப் பிள்ளையைத் தன் பெற்றோர் விருப்பப்படி ஆங்கில முறைக் கல்வியில் சேர்த்து மனைவி ஆசைப்பட்ட ஆப்பிஎ ஐஃபோன் அவளுக்கு வாங்கிக் கொடுத்து என எல்லாவற்றையும் செலவு செய்து விடுகிறான்.

ஒரு நாள் இரவு அவர்கள் அனைவரும் வெளியே போய்த் திரும்புகையில் கழிவறையை யாரோ பயன்படுத்தும் சப்தம் கேட்டுக் கோபமடைந்த ஜம்னா ப்ரசாத் இந்த ஆங்கில முறையிலான கழிவறை கட்டியதில் இருந்து இந்த வளாகத்தில் இருப்பவங்க இங்கே தான் வந்து தொந்திரவு செய்யறாங்க எனக் கூறிக்கொண்டே கழிவறையை நோக்கிப் போகிறான். அதற்குள் கழிவறை/குளியலறையில் திறந்து வெளியே வருவது அவன் தாயும், தந்தையும். முதலில் பேயோ/பிசாசோ எனப் பயப்படும் ஜம்னா பின்னர் தெளிவடைகிறான். அவனுக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அவன் பெற்றோர் உயிருடன் இருப்பதால் வாங்கிய நிவாரணத் தொகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறான்? இதான் கதையே! மீதியை வெள்ளி இல்லாக் கணினித் திரையில் காணுங்கள்.


ட்ட்ட்டங்க்!

7 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படத்தின் பெயர்கள் நான் இதுவரை கேள்விபடாதது. நீங்கள் பார்த்த படத்தின் கதை நன்றாக உள்ளது. கதையில் இதைதான் நானும் எதிர்பார்த்தேன். முடிவை பார்க்க ஆவலாக உள்ளது. அதையும் ஒரு வரியில் நீங்கள் சொல்லியிருக்கலாம். எப்போது பார்ப்பேனோ.. இதை பார்க்கும் சேனல் வசதிகள் எங்கள் வீட்டில் உள்ளதாவெனவும் அறியேன். கேட்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  2. ஹே சினாமிகா எனக்கு மிகவும் பிடித்திருந்ததது.  பாடல்களும் நன்றாய் இருந்தன.

    ReplyDelete
  3. பொதுவாக பல்வகை OTT க்கள் இருக்கின்றன.  அவற்றில் பார்க்கக் கூடிய படங்கள் நிறையவே உண்டு.  தி கிரேட் இந்தியன் கிச்சன், அப்புறம் எனக்கே பெயர் மறந்து போகும் அளவு பாடங்கள்.  நேற்று நாய் வீடு திரும்பும் படம் மூன்றாவது முறையாக பார்த்தேன்!

    ReplyDelete

  4. நீங்கள் சொல்லி இருக்கும் படம் புதுசு. அப்படி ஒரு பெயரில் படம் பார்த்த நினைவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் அரசாங்கத்தில் வாங்கிய காசை யார் திரும்பக் காட்டுகிறார்கள்!

    ReplyDelete
  5. இப்பொதெல்லாம் எந்த வித சினிமாக்களும் மனதைக் கவர்வதில்லை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. இந்தப் பதிவை எப்படி மிஸ் செய்திருக்கிறேன்....

    இருங்க வாசித்துவிட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
  7. கண் நலம் இப்போதும் தேவலாமா அக்கா?

    அக்கா எனக்கும் ஏர் டெல் ஏதோ அவங்க கொடுக்கும் தளத்தில் நம் நம்பரை பதிவு செய்தால் இலவசமாகப் படங்கள் பார்க்கலாம்னு சொல்லுது ஆனால் இதுவரை செய்யவில்லை. செய்ய வேண்டியது வீட்டுத் தலைவ்ராச்சே.

    இந்தப் படத்தையும் குறித்துக் கொண்டேன். படங்கள் பார்ப்பது மிகக் குறைவு. இலவசமாகக் கிடைத்தால் பார்க்கலாம் பணம் கட்டச் சொன்னால் ஹிஹிஹிஹி...ஸ்ரீராம் அவர் பதிவில் குறிப்பிட்டவற்றையுமே நான் குறித்துக் கொண்டேனே தவிர பார்க்கவில்லை. நேரம் சரியாக இருக்கு.

    பதிவுகள் பார்த்து பதில் சொல்லிச் சென்று வீட்டு வேலைகள், எனக்கான உடற்பயிற்சிகள் நடைப்பயிற்சி என்று நேரம் சரியா போய்விடுவதால் பதிவுகள் எழுதுவதும் கடினமாக இருக்கு. நிறைய பெண்டிங்க் கதைகள் இருக்கு முடிக்கப்ப்டாமல். பாவம் ஸ்ரீராமும் கேட்டு க் கேட்டு அவருக்குப் போரடிச்சிருக்கும் இனி கீதாவிடம் கேட்கவே மாட்டேன்னு கூட நினைச்சிருப்பார்!!! கேக்காம கதை வந்தா வரட்டும்னு!!!! ஹாஹாஹாஹா..

    கீதா

    ReplyDelete