எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 21, 2023

மாறி வருவது உலகமா? மனிதர்களா?

 விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ  500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி இருக்கணும். அதைப் பார்க்கணும். ஆனால் பெரிய அளவில் இதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது எனக்கு அதிசயமாகவே இருக்கு. எரிவாயு விலை கூடிக் கொண்டே போவதற்கும் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கொஞ்சம் கத்துவதோடு சரி. பொதுமக்களிடமிருந்து ஏன் எதிர்ப்பே காணோம்? 

இக்காலத்துப் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதே புரியலை. சமீபத்தில் கேள்விப் பட்ட செய்திகளில் இருந்து பெண்கள் திருமணத்துக்கு முன்னரே எக்கச்சக்கமாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். கணவனாக வரப் போகிறவன் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தான் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தால் உடனே எடுத்துப் பேசணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். அதோடு இல்லாமல் தனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார் மாமியார் கூடவே இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்களின் பெற்றோர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் கணவனுடன் பேசுவதில் இருந்து எல்லாமும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவங்க ஆலோசனைகளைக் கேட்டுத்தான் தன் குடும்பத்தில் எல்லாமும் செய்வார்கள். இதில் மாமியார், மாமனார் வெளி ஆட்கள். அவங்க தலையிடக் கூடாது.

இவங்களுக்கு எல்லாம் கூடப் பிறந்த ஆண் சகோதரர் இருந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் இதே போல் நிபந்தனைகள் விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பெண்களாகவே இருக்காங்க. அவங்களுக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை என்பதால் எதிலும் தான், தனது என்னும் நினைப்பே முன்னால் நிற்கிறது. கணவனும் ஓர் மனிதன் அவனுக்கும் பெற்றோர் உண்டு; பாசம் இருக்கும் என்பதோடு பெற்றோரைப் பார்த்துக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைப்பே வரதில்லை.

இந்தப் பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததோ அல்லது யாரேனும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருந்து அவங்களுக்குச் செய்ததோ அவங்க வாழ்க்கை மூலம் இதெல்லாம் தெரிந்து கொண்டார்கள் என்பதோ இல்லை. அப்படி இருக்கையில் அவங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் நிச்சயம் ஆகும்போதே மாமனார்/மாமியார் வேண்டாதவங்க என்னும் எண்ணம் உண்டாகிறது? அவங்களைப் பார்த்துப் பழகி அவங்க குணம் பிடிக்கலைன்னா ஒத்துக்கலாம். பார்ப்பதே இவங்க நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தான். அப்போவே இவங்களால் எப்படி இம்மாதிரி எல்லாம் முடிவுக்கு வர முடியுது? பெண்கள் தங்களுடைய விட்டுக்கொடுத்தல், அனுசரித்துப் போதல் இதை எல்லாம் கடைப்பிடிப்பதே இப்போதெல்லாம் அவமானம் என நினைக்கின்றனர். 

இன்னொருவர் சொல்லி இருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட இவங்க எல்லாம் அந்தக் குழந்தையை முழு மனதோடு பராமரிப்பதும் இல்லை என்பதே! பெரும்பாலான பெண்கள் மொபைல் மோகத்திலும் டிக்டாக்கிலும், ஸ்ம்யூல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அதைச் சமூகத் தளங்களில் வெளியிடுவதிலும் உள்ள ஆர்வத்தை வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் காட்டுவதே இல்லை. முக்கியமாக அவங்க இன்னொரு மொபைல் வாங்கிக் குழந்தைக்கும் அதைப் பார்க்கப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். குழந்தை அழுதால் போதும் மொபைலை ஆன் பண்ணிக் குழந்தை கையில் கொடுத்துவிட்டு இவங்க தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இது நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டில் அவர் மருமகள் செய்வது என மனம் நொந்து போய்ச் சொல்லி இருந்தார்.

அதோடு மொபைல் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்குச் சூடு அதிகம் ஆகிக் கண்களை அவை பாதிக்கும் அவலமும் ஏற்படுகிறது. முகநூலில் ஒரு நண்பரின் பேத்திக் காலை எழுந்ததும் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுக் குழந்தையால் பத்து மணி வரை கண்களைத் திறக்க முடியலை எனவும் பின்னர் மருத்துவரிடம்போனதில் அவர் சோதனை செய்துவிட்டு மொபைல் அதிகம் பார்ப்பதால் ஏற்பட்ட விளைவு எனவும் மொபைல் பார்ப்பதைக் குறைக்குமாறும் அறிவுரை சொல்லி இருக்கார்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் பெண்கள் பெரும்பாலும் சமைப்பதே இல்லை எனவும் ஸ்விகி, ஜொமோட்டோ மூலமே உணவுப் பண்டங்களை வாங்கிக்கறாங்க என்பதும் தெரிய வருகிறது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் உடல் பருமன் ஆகிவிடுகிறது என்பதோடு பத்து வயதுக்குள் பூப்பும் அடைந்து விடுகின்றனர். எவ்வளவு தொல்லை இது என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  நாங்க இந்த ஸ்விகி, ஜொமோட்டோவுக்கே போவதில்லை. வெளியில் வாங்குவது என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் உணவு தான் எங்களுக்கு ஒத்துக்கும். எனக்கு முடியலைனா அங்கே போய் வாங்கி வருவோம். அதிலும் பெரும்பாலும் இட்லிதான்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும், படித்தும் அனுப்வரீதியாக அனுபவங்கள் அடைந்தும் வருவதால் இனி வரப்போகும் சமுதாயம் எத்தகையதொரு நிலைமையில் இருக்கும் என்பதை எண்ணினால் மனம் சஞ்சலம் அடைகிறது. என்ன ஒண்ணு! இதை எல்லாம் பார்க்க  நாங்கல்லாம் இருக்க மாட்டோம். 

38 comments:

  1. விலைவாசி உயர்வு பயமுறுத்துகிறதுதான்.  எரிவாயு உருளை விலை ஏறிக்கொண்டே போகிறது.  உண்மையிலேயே அதற்கு குரல் கொடுப்போர் இப்போது யாரும் இல்லை.  ரயில் கட்டணங்களும் உயர்கின்றன.  வந்தே பாரத்தை விடுங்கள்.  சாதா ரயில் கட்டணமே சத்தமில்லாமல் உயர்கிறது.  தேர்தலுக்குள் மத்திய அரசு சில காரியங்களை சட்டுபுட்டென்று செய்கிறது போல..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம், விலைவாசி உயர்வு மலைக்க வைக்கிறது. ஆனால் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாமோ? என்னமோ போங்க! மக்கள் போராட்டங்களில் எல்லாம் உடனடியாகக் காவல்துறை, ஐபி, சிபிஐ என வந்துடாது.

      Delete
  2. நேற்று சென்னையில் சேனைக்கிழங்கு கிலோ நூறு ரூபாய் என்று பார்த்தபோது நம்பவே முடியவில்லை. பீன்ஸ் கால் கிலோ நாற்பது ரூபாய். சில சமயங்களில் ஏரியாவுக்கு தக்கவாறு விலை வைக்கிறார்கள். அது வேறு...

    ReplyDelete
    Replies
    1. சேனைக்கிழங்கு கிலோ நூறு ரூபாயா? கடவுளே! ஏன் இப்படி? இங்கே அதிக பட்சமாகக் கிலோ 40ரூபாய்க்குள் தான் இருக்கு. இன்னமும் இரண்டு வாழைக்காய் 10 ரூபாய்க்கும் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. கத்திரிக்காய் எல்லாம் கிலோ 15 அல்லது 20 ரூபாய்க்குள் தான். பாலும் 50 ரூபாயில் ஒரு லிட்டர் கிடைக்கிறது.

      Delete
    2. சேம்பு கிலோ 100, சேனை 80....எல்லாமே கிலோ 60 மேலதான். நூல்கோல் மட்டும் 40ன்னு இருந்தது. ஆனால் கடைக்குக் கடை வித்தியாசப்படுகிறது. நான் பார்த்து பார்த்துதான் வாங்குகிறேன் கீதாக்கா..

      கீதா

      Delete
    3. இங்கே அதிக பக்ஷமாகக் கிலோ 50 ரூ. அதிலும் சில குறிப்பிட்ட காய்கள் மட்டும்.

      Delete
  3. திருமண வரன் பார்ப்பது பற்றி பேசினால் ஒரே புலம்பலாய்தான் இருக்கும்.  அவ்வளவு விஷயம் இருக்கிறது புலம்ப..  ச்சே...   பேச....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நானுமே சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல நினைத்துப் பிரச்னை ஆகிவிடுமோனு விட்டுட்டேன். :( எங்க தம்பி பையருக்கும் இன்னமும் பெண் கிடைக்கவில்லை. :(

      Delete
  4. ஒரே ஊரில் வேலை பார்பபது பிடிக்காதாம்.  ஒவ்வொரு ஆறு மாதமும் டென்ட் தூக்கிக் கொண்டே இருக்கவே வேண்டுமாம் ஒரு பெண்ணுக்கு.  பெங்களூரு, புனே, மும்பை, சென்னை என்று மாற்றி மாற்றி வேலை பார்க்க வேண்டுமாம்!

    ReplyDelete
    Replies
    1. சுத்தம்! இங்கே உள்ள பெண்களோ நேர்மாறாகத் திருச்சி, கரூர் இந்தச் சுற்று வட்டாரத்துக்குள் தான் இருக்கணும் என்கின்றனர். பெரும்பாலும் பல பெண்களும் மாமனார்/மாமியாரை வைச்சுக்கவோ அவங்களோடு ஒன்றாய்க் குடித்தனம் இருக்கவோ சம்மதிப்பதில்லை.

      Delete
  5. இந்த சம்பவங்கள் தங்களது நண்பர் வீட்டில் மட்டுமல்ல... தமிழகத்தில் 90 விழுக்காடு குடும்பங்களில் நிகழ்வது...

    எல்லோரும் ஒற்றைப் பிள்ளையோடு போதும் என்ற முடிவே இந்த இழிவான நிலைக்கு காரணம் .

    சீனாக்காரனின் திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கட்டப்படும் வீடுகளில் சமையலறை இருக்காதாம்.

    காரணம் நமது உணவை அவனே தீர்மானிப்பானாம்.

    ஒரு அழைப்பு கொடுத்தால் மறுநொடி வீடு தேடி பார்சல் வரும்.

    விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் கூடமாட்டார்கள்.

    சாதி, மதப்பிரச்சனை என்றால் உடனே ஆயுதங்களோடு கூடுவோம்.

    மனிதன் மாற்றி விட்டான்

    ReplyDelete
    Replies
    1. கடவுளே! சீன உணவு எனில் பல்லிகளும், கரப்பான்களுமா? கில்லர்ஜி! நீங்க சொல்லுவது சரி தான். பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகாமல் தவிக்கின்றனர். அது எந்த ஜாதி/மதமானாலும் சரி. மனிதன் தான் சுயநலத்துக்காகத் தானும் மாறி எல்லோரையும் மாற்றியும் வருகிறான்.

      Delete
  6. இன்றைய சூழலுக்கு நல்ல பதிவு....

    மாமனார் மாமியார் தங்களுடன் இருக்கக் கூடாது என்பது ஒருபுறம்..

    இருக்கவே கூடாது என்பது மறுபுற்ம்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தம்பி. ஆனால் அவங்க இல்லாமல் தனக்குக் கணவன் எங்கிருந்து வருவான் என்பதை அவங்க சிந்திக்கணுமே!

      Delete
  7. பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கூட்டுக் குடும்பம்..

    அதனை முற்றாகவே அழித்து விட்டது நவீன கல்வி முறை..

    ReplyDelete
    Replies
    1. கணவன், மனைவி, குழந்தையோடு சேர்ந்திருந்தாலே இப்போல்லாம் கூட்டுக் குடும்பம் தானே! :(

      Delete
  8. விலைவாசி உயர்வை எப்படி எதிர்க்க முடியும். எதிர்த்தால் IT CBI ED என்று வரிசையாக வருவார்களே!. சும்மா இருப்பதே சுகம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அது எல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தானே. மக்கள் தாராளமாய் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். மத்திய, மாநில அரசுகள் அப்போத் தான் கொஞ்சமானும் கவனிச்சு ஏதானும் செய்ய முயற்சி செய்யும்.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. விலைவாசிகள் விஷம் போல் ஏறி விட்டன என்பது உண்மைதான். ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் அதே போல் வாங்கி அதனுடன் நாமும் ஏறிச் சென்றுதான் அலைய வேண்டி நிலை. இப்படி நானும் அடிக்கடி புலம்பிக் கொள்வேன். எதை வாங்குவது எதை வாங்காமல் விடுவது என்ற நிலை மட்டுந்தான் இன்னமும் விளங்கவில்லை.

    இந்தக் காலப் பெண்களின் நிலை பற்றிய கருத்தும் உண்மைதான். அது அப்போது அந்தக் காலத்தில் இலைமறைவு காயாக இருந்தது. இப்போது இலைகளே இல்லாத காய்களாக கண்களுக்குத் தெரிகிறது. எதையும் சகித்துக் கொள்ளும் சக்தியை ஆண்டவன் அனைவருக்கும் தர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.வேறுவழி.? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கமலா! நமக்கெல்லாம் இம்மாதிரியான அவலங்களை எதிர்கொள்ளும் மனோபலம் வேண்டும். அதைத் தான் பிரார்த்தித்துப் பெற வேண்டும்.

      Delete
  10. உண்மையை அப்படியே நிதர்சனமாக எழுதியிருக்கிறீர்கள்!
    15 வருடங்களுக்கு முன் என் மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தபோதே இத்தகைய விளைவுகளை நிறைய சந்தித்தேன். அதுவும் கல்யாணத்துக்கு தயாராக நிற்கும் பெண்கள் போட்ட நிபந்தனைகள் எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கின! இதற்கு பெரிய முக்கிய காரணம் அவர்களது தாயாரின் வளர்ப்பு தான்!
    எங்கள் உறவுக்கார பெண் ஒருத்தர், அவருக்கும் திருமணமாகியிருந்திருக்கவில்லை அப்போது, அவர் சொன்னது:
    : நான் சமைத்தால் வருகிறவர் பாத்திரங்களைக் கழுவிப்போட தயாராக இருக்கணும். நான் துணி துவைத்தால் அவர் காயப்போட வேண்டும். நான் வெளியில் போனால் அவர் வீட்டை பார்த்துக்கணும்" ...இப்படி நிறைய நிபந்தனைகள்!
    20 வருடங்களுக்கு முன்பேயே அமெரிக்காவிலிருந்து என் சமையல் பிளாகிற்கு பெண்கள் எழுதிக்கேட்டார்கள் " எப்படி சாதம் வடிப்பது?" என்று! உண்மையிலேயே இதற்கு என்ன பதில் எழுதுவது என்று குழம்பிப்போனேன்.
    இப்போது வீட்டிலிருக்கும் 104 வயது அம்மாவை பார்த்துக்கொள்ள home careலிருந்து பெண்கள் வருகிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க, காப்பாற்ற இந்த பெண்கள் வருகிறார்கள். அவர்களும் வீட்டிற்கு திரும்பச் செல்லும்போது கடையில் இட்லி மாவு தான் வாங்கிச் செல்லுகிறார்கள். மாவரைக்க அவர்கள் கஷ்டப்பட தயாராக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! தொலைக்காட்சியில் ஓர் விளம்பரம் கூட இப்படித்தானே வருது! நான் சமைச்சால் நீ உதவி செய்தால், நீ பாத்திரங்களைத் தேய்த்தால் நானும் போனால் போகுது என உதவுவேன். என்றே ஒரு விளம்பரம் விம் ட்ராப்ஸுக்கு வருதே! அதான் உங்க சிநேகிதியும் எதிர்பார்க்கிறாங்க போல! இந்த இட்லிமாவு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இத்தனைக்கும் என் கணவர் முடியாமல் அரைக்க வேண்டாம், நான் மாவு வாங்கி வரேன்னு தான் சொல்லுவார். அதெல்லாம் எந்தத் தண்ணியில் பண்ணி இருப்பாங்களோனு நான் திட்டவட்டமாக மறுத்துடுவேன். 2 அல்லது 2 1/2 ஆழாக்குப் போட்டு அரைப்பேன். அதுவே நாலைந்து நாட்களுக்கும் மேல் வரும்.

      Delete
  11. மாறி வருகிறது மனித மனம்.
    குழந்தைகள் தொந்திரவு செய்யாமல் இருக்க முன்பு மொபைல் போனை கையில் கொடுத்து விட்டார்கள், இப்போது எந்த நேரமும் செல்லோடு இருக்கிறது குழந்தை என்றால் என்ன செய்வது!
    முன்பு என் குழந்தைக்கு நிறைய தெரிகிறது செல்லை பற்றி என்று பெருமையாக வேறு சொல்லி சொல்லி குழந்தைகள் அதிலே முழுகி விட்டார்கள்.

    ஒரு காலத்தில் மாமியார் கொடுமை பெண்களுக்கு என்றார்கள். இப்போது அவர்கள் முறை போல . அன்றும் நல்ல மருமகள், நல்ல மாமியார் இருந்தார்கள், இன்றும் நல்ல மருமகள், மாமியார் இருக்கிறார்கள். இப்போதும் இரட்டை பாரம் சுமக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.

    முன் காலத்தில் மண்மகன் வீட்டார் சட்ட திட்டம் போட்டார்கள், இப்போது பெண் வீட்டார் சட்ட திட்டம் போடுகிறார்கள்.
    அந்த காலத்திலும் சட்ட திட்டம் செய்யாத மாமனார் , மாமியார் இருந்தார்கள்.
    இன்றும் இருக்கிறார்கள்.

    இருபக்கவீட்டையும் பார்த்து கொள்ளும் நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் பெற்றோர்களை, மனைவியின் பெற்றோர்களை பார்த்து கொள்ளும் பிள்ளைகளும் உண்டு.

    மனித மனம் மாறும்.

    எல்லா காலங்களிலும் நல்லது , கெட்டதுகள், நல்லவர்கள், கெட்டவர்கள் உண்டு.
    நாம் வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவது இல்லை. நாம் இருக்கும் காலம் வரை எல்லோர் நன்மைக்கும் கடவுளை வணங்கி கொண்டு பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், குழந்தை அழாமல் இருக்கவெனக் கொடுத்தது போய் இப்போ இதற்காகவே குழந்தைகள் அழுது அடம் பிடித்துக் கொண்டிருக்காங்க. எப்படியேனும் இந்த மோசமான பழக்கத்தை விட்டுக் குழந்தைகள் வெளியே வரணும். மனிதன் ஒரேயடியாக மாறி விட்டான் என்னும்போது கலக்கமாக இருக்கிறது.இன்னொரு பக்கம் நல்ல பிள்ளைகள்/பெண்கள், மாப்பிள்ளைகள்/மருமகன்கள், பேரன், பேத்திகள் எனப் பார்க்கும்போது நம்பிக்கையும் பிறக்கிறது.

      Delete
  12. திருமணத்திற்கு பெண்கள் போடும் நிபந்தனைகள் குறித்து நீங்கள் எழுதியிருப்பது எல்லாம் 100% உண்மை. பெண்களின் நிபந்தனைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பதில்லை என்பது வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றும்.

      Delete
  13. உண்மைதான்!. பெண்கள் போடும் கண்டிஷன்களை பெற்றோர்களும் கண்டிப்பதில்லை என்பதுதான் வருத்தம்.

    ReplyDelete
  14. கீதாக்கா நீங்க சொல்வது அத்தனையும் டிட்டோ! அது சரி பெண்ணைப் பெத்தவங்க அதைக் கண்டிக்க வேண்டாமோ? இல்லையா?

    எங்க வீட்டு மாடில உள்ளவங்க பெரும்பாலும் வெளியில்தான் ஆர்டர். ஸ்விக்கி சொமாட்டோ. அலல்து ஒரு ஆண் சமையல்காரர் வருகிறார் அவர் வந்து சமைத்துவிட்டுப் போகிறார். ஹிந்திவாலா அவ்னக எனவே வருபவரும் ஹிந்தி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றும். எழுபதுகளிலேயே மும்பை, புனே, தில்லி போன்ற பெரிய நகரங்களில் காலை அலுவலகம் செல்லும்போது மாவைக் கொடுத்துட்டுப் போனால் மாலை திரும்பி வரும்போது சப்பாத்திகளோ/ஃபுல்கா ரொட்டிகளோ வாங்கிக்கலாம். வீட்டுக்கு வந்து சப்ஜி மட்டுமோ தாலோ குக்கரில் வைத்துவிட்டால் இரவுக்கு உணவு தயார். இப்போதெல்லாம் எங்க சொந்தக்காரங்க பலரின் வீடுகளில் மாலை மராத்தி/குஜராத்தி உணவு தயாரிப்போர் வந்து ரொட்டி, தால், சப்ஜி செய்து வைத்துவிட்டுப் போகின்றனர். சாதம் வேணுமெனில் அதுவும் செய்து வைக்கிறார்கள். இதற்கு மாசம் 5000 ரூபாய் தான். எனக்குக் கண் அறுவை சிகிச்சை நடந்தப்போத் தெரிந்த மாமியிடம் தினசரி சமைக்க வரமுடியுமானு கேட்டதுக்குக் காலை எட்டுமணிக்கு வந்துக் காலை உணவும், கையோடு சமையலும் பண்ணி வைச்சுடுவாங்களாம். சமைக்கிறதில் பண்ணும் குழம்பையே காலை உணவுக்குத் தொட்டுக்கவும் வைச்சுக்கணுமாம். தனியாகச் சட்னி, துவையல் அரைக்க மாட்டாங்களாம். இரவு உணவுக்கு வந்து செய்யணும் எனில் தனியாக 3000 ரூ கொடுக்கணுமாம். காலை ஒரு மணி நேரம் செய்யும் சமையலுக்கு மாசம் பத்தாயிரமாம். அரைத்துக் கரைத்து எதுவும் பண்ண மாட்டாங்களாம். தோசை, இட்லி எனில் நாம அரைச்ஷு வைக்கணுமாம் அல்லது மாவு வாங்கி வைக்கணுமாம். நானே சமைக்கிறேன்னு சொல்லிட்டேன். அந்தப் பதின் மூன்றாயிரம் ரூபாயில் மளிகை சாமான், பால், எண்ணெய், காய்கள் எல்லாம் அடங்கிப் பணமும் மிச்சம் ஆகும் எனக்கு.

      Delete
  15. அக்கா முன்ன அதாவது 24,25 வருஷத்துக்கு முன்ன சொல்றேன் இப்படிக் கண்டிஷன் பொடலைனாலும்....ஒரு விஷயத்துல சில பெண்கள் ...தங்க பெற்றோர் சொன்னது மட்டுமே கேட்போம், அதுதான் சரின்னு ....உண்டு...இதை விரிவாக நான் சொல்லவில்லை..

    இப்போது இந்த டிக் டாக் இன்னும் என்னென்னவோ குழந்தைகள் செய்வதை வீடியோஎ எடுத்து போடுறாங்க பாருங்க எரிச்சலா வரும். அதுவும் குழந்தை கண்டதை பேசுவதையும் அம்மா அப்பா பேசுவது போலவும் பேசுவதை எடுத்துப் போடறாங்க பாருங்க....அதுவும் பெருமையா.....பிடிப்பதில்லை. இப்பல்லாம் ஊடகங்கள் வந்தாலும் வந்தது எல்லாத்தையும் எடுத்து போடறாங்க...நின்னா வீடியோ உக்காந்தா வீடியோ...சாப்பிட்டா வீயோன்னு.....அசிங்கமா இருக்கு

    மனிதர்கள்தான் மாறுகிறார்கள். உலகம் மாறவில்லை!!!!!! அது தன்னைத்தானே சுத்திட்டு சூரியனையும் ஒழுங்கா சுத்திவருது!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கணவன் இருப்பதைப் பொறுத்துப் பெண்கள் அப்பா/அம்மா அல்லது வேறு வழியில்லாமல் மாமியார்/மாமனாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க.. எங்க வீட்டில் உறவுக்காரப் பெண்களெல்லாம் கணவன் வீட்டுக் குலதெய்வத்தைக் கூட வணங்க மாட்டாங்க. அங்கே சமைக்கும் வாடிக்கையான சமையலையும் தூக்கிப் போட்டுவிட்டு அவங்களுக்கு என்ன பழக்கமோ என்ன பிடிக்குமோ அதைத் தான் சமைப்பாங்க. காய்கள் கூட அவங்களுக்குப் பிடிக்காத காய்னா வாங்க மாட்டாங்க.

      Delete
  16. பெற்றோர் வளர்ப்பு முறை நன்றாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. yesssssssssu! ஆனால் பெற்றோர்கள்?

      Delete
  17. இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும் போது இருவருமே வீட்டு வேலையைப் பங்கிட்டுக் கொள்வது நல்லதுதான்...ஆனால் புரிதலோடு, அன்போடு. கண்டிஷனாக இல்லாமல்...

    கீதா

    ReplyDelete
  18. விலைவாசி எகிறுது கீதாக்கா....கஷ்டமாகத்தான் இருக்கு...அதுவும் எரிவாயு விலை, காய்கறி விலைகள் கன்னாபின்னான்னு...

    கீதா

    ReplyDelete
  19. ஆமாம், மக்கள் பொங்கி எழுந்தால் தான்.

    ReplyDelete
  20. இந்தப் பதிவுக்கு வந்திருக்கிறேன். அடுத்த இரண்டு பதிவுகளுக்கு ஆப்சென்ட்!!

    ReplyDelete