எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 05, 2025

சாப்பாட்டைப் பழிக்க வேண்டாம்!

தலைப்பிலே சொல்லி இருக்கேனே தவிர அதைக் கடைப்பிடிப்பதில்லை!:(

சாப்பாடு மறுபடியும் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் கால்கள் படுத்தும் பாட்டில் தான்,. நின்று கொண்டு எதுவும் செய்ய முடிவதில்லை.. ஆனால் வாங்கும் சாப்பாடு நல்லா இருக்கானு கேட்டால் ஏதோ இருக்கு, அவ்வளவு தான்,. இதே காடரர் ஒரு வருஷம் முன்னாடி வரை நன்றாகவே கொடுத்தார். என்ன பிரச்னைன்னா தினம் மிஞ்சிப் போயிடும். அதை யாரிடம் கொடுப்பது என்பது ஒரு பிரச்னை. வீட்டு வேலை செய்யும் பெண்மணி காலையிலேயே வந்துட்டுப் போயிடுவாங்க. ஆகவே இதைக் கொடுக்கனு தனியா ஆள் தேட வேண்டி இருக்கும். நடுவில் மாமா குழம்பு, ரசம் சாப்பிடாததால் எதுவும் வாங்கவில்லை. இப்போ ஒரு வருஷம் கழிச்சுக் கொடுக்கையில் அந்தப் பெண்மணி ஆயிரம் கண்டிஷன்கள். வீடு வேறே மாத்திட்டாங்களாம். இங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் போயிட்டாங்க. அதோடு இப்போச் சாப்பாடு செய்து முடிக்கவே பத்து மணி ஆகிவிடுகிறதாம். அங்கெல்லாம் கொடுத்துட்டு இங்கே வர பதினோரு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறமா முடிஞ்சால் பத்தே முக்காலுக்குக் கொடுக்கச் சொல்றேன் நு அரை மனசோடு சொல்லி இருக்காங்க.

முன்னாலும் சாப்பாட்டில் காரம் இருந்தது, நாங்க சுட்டிக் காட்டினதோடு எங்களுக்கு ஒத்துக்கலைனும் சொன்னோம். குறைச்சுண்டாங்க. ஆனால் இப்போ அப்படி எல்லாம் சமரசம் செய்துக்கத் தயாரா இல்லை என்பதோடு, வேணும்னா வாங்கிக்கோங்க என்னும் நினைப்புத் தான். வாடிக்கையாளர்கள் நிறையச் சேர்ந்திருப்பாங்க போல. காய்கறியும் முன்னைப் போல் எல்லாம் பண்ணுவதில்லை. கறி கொஞ்சம் பரவாயில்லை ரகம். கூட்டில் காய்களே தெரியாது. காயை நறுக்கிப் பாத்திரத்தில் போட்டுக் கூட்டுக்கு அரைச்சு விடும் விழுதை நிறைய மாவு கரைச்சு அதோடு விட்டுக் குக்கரில் வைச்சுடறாங்க. காய் என்னமோ வெந்திருக்கும். ஆனால் அந்த விழுதில் தேடிக் கண்டு பிடிக்கணும். கரண்டியால் அரிச்சால் விழுது தான் வருது. கூட்டும் சில சமயம் காரமாக இருக்கும். ரசம் புளிப்பாக இருப்பதோடு உப்புச் சேர்த்தால் காரம் தனித்துத் தெரியும். சாம்பார் என்னிக்குமே காரம் தான்,. அதையும் மீறிக்கொண்டு மாவு கரைச்சு விட்டிருப்பாங்க. தான் என்ன என்பது வாசனையில் தான் தெரியும். முன்னெல்லாம் கூட்டில் காய்கள் நன்கு தெரியும் என்பதோடு அரைச்சு விடுவதும் நிதானமாக இருக்கும். இப்போ சமையலுக்கு, விநியோகத்துக்குனு ஆட்கள் வேறே போட்டுட்டாங்க. ஆகவே எல்லாம் கமர்ஷியல் தான்,

சாம்பாரைத் தவிர்த்து வேறே எதுவும் இந்தக் காடரிங் காரங்க பண்ண மாட்டாங்க போல. மோர்க்குழம்புனாலே பயம்மா இருக்கும். மோர் அவ்வளவு புளிப்பாக இருக்கும். அவியல் கூட இப்போல்லாம் தயிர் இல்லாமல் புளிச்ச மோரில் மாவு கரைச்சு விட்டுப் பண்ணிடறாங்க. மொத்தத்தில் ஒரிஜினாலிடி என்பதே இருப்பதில்லை. ஆனால் பாருங்க இதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் காஞ்சி முனிவர் தளத்தில் இருந்து சாப்பாட்டைப் பழிக்காதீங்கனு ஒரு பதிவு வந்திருப்பதைப் பகிர்ந்திருக்காங்க. படிக்கையில் மனசுக்குக் க்ஷ்டமாத் தான் இருக்கு. நாம் இவ்வளவு மோசமாக விமரிசிக்கிறோமே என்றெல்லாம் தோன்றியது. ரங்க்ஸிடம் சொன்னால் நான் எப்போவோ படிச்சுட்டேன் என்றார்.

பேசாமல் வீட்டிலேயே சமைச்சுடலாமானு தோணினா அப்போன்னு பார்த்துக் கால் தகராறு பண்ணும். ஒரு அடி எடுத்து வைப்பது கஷ்டமாக இருக்கும். வீட்டில் சமையல் ஆளை வைத்துச் சமையல் செய்வதிலும் பல  கஷ்டங்கள்
இருக்கின்றன. முதலாவது செலவு. சாமான்கள், காய்கள் எல்லாம் வாங்கணும். பொடிகள் எல்லாம் தயாரா வைச்சுக்கணும். நிச்சயமாச் செலவு கூடத் தான் ஆகும். அதுவே காடரர் கிட்டே வாங்கினால் ஒரு நாளைக்கு சாம்பார், ரசம், கறி,கூட்டுக்கு 100 ரூபாயும், சர்வீஸ் சார்ஜ் பத்து ரூபாயுமாக 110 ரூ தான் ஆகிறது. ஆனா வீட்டிலே விதம் விதமாப் பண்ணிக்கலாம், நல்ல சமையல் ஆளாக இருந்தால். இவங்க ரசம் கூட மாத்த மாட்டாங்க. எலுமிச்சை ரசம் வைக்கச் சொல்லி ஒரு நாள் கேட்டதுக்கு அதெல்லாம் கட்டுபடி ஆகாதுனு சொல்லிட்டாங்க. தினம் ஒரே ரசம் தான். நேத்து ரசத்தையே இன்னிக்குச் சுட வைச்சுச் சாப்பிடறாப்போல் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சாம்பார் தான், அவங்களுக்கு அதான் கட்டுபடி ஆகும்போல.

என்னடா இது, பதிவுகளே புலம்பலாக வருதே, இதுக்கு எழுதாமல் இருந்தப்போவே தேவலைனு தோணும். எனக்கே தோணுது. ஆனால் என்ன பண்ண? சுத்திச் சுத்தி மனசு இப்போ இதில் தான் பதிஞ்சு கிடக்கு. மெல்ல மெல்ல வெளியே கொண்டு வரப் பார்க்கிறேன்.  இதிலே பெஸ்ட்னு சொல்லக் கூடியது எங்க வீட்டுக் காஃபி தான். நல்ல பால், காஃபி பவுடரும் நல்ல கொட்டையை வறுத்து அரைச்சுத் தயார் பண்ணுவது. சிக்கரியே இல்லை. ஆகவே காஃபி டிகாக்ஷன் போடும்போதே வாசனை ஊரைத் தூக்கும். என் மாமனார் இருந்தவரை சொல்லிக் கொண்டே இருப்பார். காஃபிக்கு வெந்நீர் போடும்போதே வாசனை வந்துடுறாப்போல் இருக்கு என்பார். அதே பவுடரில் மத்தவங்க போட்டால் அம்புட்டு வாசனை வராது. இஃகி,இஃகி,இஃகி. அதே போல் இட்லி, தோசைக்கு அரைக்கும்போதும், அடைக்கு அரைக்கும்போதும் அம்பத்தூரில் ஐம்பது அடி தள்ளி இருக்கும் எதிர் வீடு வரை வாசனை மூக்கைத் துளைக்கும். அவங்கல்லாம் நீ என்னதான்  ரகசியமாப் பண்ணினாலும் உன் கை மணம் காட்டிக் கொடுத்துடும் என்பாங்க. இப்போ இந்த நிமிஷம் ஒரு மாமியிடம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன். இதான் இப்போதைய நிலைமை.

No comments:

Post a Comment