எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 02, 2025

பல்லைப் பிடுங்கிய கதை!

 குட்டிக்குஞ்சுலு வந்து ஒரு வாரம் ஆச்சு,. இதோ வெள்ளிக்கிழமை கிளம்பிடும். பெரிய மாதக் காலண்டரில் அது இங்கே இருந்து கிளம்பும் நாளையும், சென்னையிலிருந்து கிளம்பும் நாளையும் கொட்டை எழுத்தில் எழுதி வைச்சிருக்கு. இந்த முறை வண்டி இல்லாததால் அதுக்கு அவ அப்பாவோட எங்கேயும் போக முடியலை. வண்டியை நம்ம ரங்க்ஸ் வித்துட்டார். அது வாங்கி 20 வருஷத்துக்கும் மேல் ஆச்சு. பையர் எப்போவானும் வரச்சே எடுக்கறது தான். ஆனால் குஞ்சுலுவுக்கு அதில் போவது என்றால் சாப்பாடு கூட வேண்டாம். இந்த முறை ஏமாற்றமாகிப் போச்சு அதுக்கு. பள்ளியில் சேர்ந்த முதல் வாரமே ஸ்டார் ஆஃப் தெ வீக் விருது வாங்கிக் கொண்டு வந்தது. ரொம்ப ஓஹோனு படிக்காட்டியும் படிக்கிறது. ஆனால் வீட்டுக்கு வந்ததும் பள்ளிப் புத்தகங்களையே தொடமாட்டேன் என்கிறது. அதான் ஸ்கூலில் படிச்சுட்டேனே என்கிறது. அவங்க பாட்டியைப் போல இருக்குமோ?இஃகி,இஃகி, ஆனால் பாட்டி வீட்டுக்கு வந்ததும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கலைமகள்னு படிப்பா. இது அப்படி எல்லாம்படிக்கிறதே இல்லை. எங்க அப்பா ஸ்கூலுக்கே வந்து எச்.எம்மிடம் என்னைப் பற்றிப் புகார் சொல்லி அடிக்கச் சொல்லிட்டுப் போவார். அவங்களும் அடிக்கையில் எல்லாம் கல்கி, குமுதம் மட்டும் படிக்கத் தெரியுமானு அடிப்பாங்க. இத்தனைக்கும் முதல் 3 ராங்கிற்குள் தான் சுத்துவேன்.

ஆஹா, ஓஹோ நு எல்லாம்                                                                                                                        விருச்சிக ராசிக்குப் போடறாங்க. ஆனால் எனக்கென்னமோ ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. காலில் கல்லைப் போட்டுக் கொண்ட பின்னர் சில நாட்கள் அப்படியே போயிடும்னு நினைச்சால் திடீர்னு ரங்க்ஸுக்குப் பல்வலினு போன மருத்துவர் கிட்டே என்னோட பல்லையும் காட்ட, அவர் ஒரு பல் உடைஞ்சிருக்குனு சொல்லி அதை எடுத்துட்டேன் என்றார். சரி,இத்தோடு விடும்னு நினைச்சால் வெள்ளிக்கிழமை அன்றிலிருந்து விடாமல் ப்ல் வலி. இது என்னடா சோதனைனு நினைச்சேன். ஏற்கெனவே ரங்க்ஸுக்குப் பல்வலி வந்தால் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் இருக்க அதைப் போட்டுக் கொண்டு படுத்தேன். தூக்கமா? நல்ல நாளிலேயே வராது. உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதுனு சமாதானம் செய்துக்கணும். இன்னிக்குத் தூக்கம் வராததோடு வலப்பக்கம் கன்னம் வீங்கி உதடுகள் எல்லாம் கோணிக்கொண்டு ஒரு சின்ன ஆப்பிள் அளவுக்குக் கன்னம் வீங்கித் தொங்க ஆரம்பிச்சது. பையர் பயந்து போய் விட்டார்.

மருத்துவர்கள் யாருமே அப்போது இல்லை. நான் போய்க் கொண்டிருந்த மருத்துவரை அழைத்தால் அவர் நாளைக்குப் பார்த்துக்கலாம். மெடிகல் கடையில் சொல்லி வலியைக் குறைக்கும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்குங்கனு சொல்லிட்டார். வேறே வழி? பையர் போய் வாங்கி வர அதைப் போட்டுக் கொண்டு தூங்கினேன். காலை எழுந்ததும் மருத்துவரிடம் பேசி எத்தனை மணிக்கு வரணும்னு கேட்டால் அவர் வராதீங்க. உங்களுக்கு இங்கெல்லாம் வருவது கஷ்டம் என்கிறார். தனியாய் வரணும்னு சொல்றார் போலனு நினைச்சுப் பையர் வந்திருப்பதால் அவரோடு வரேன்னு சொல்லிட்டேன். ஏற்கெனவே 12 மணிக்கு மேல் தான் இருப்பேன்னு சொல்லி இருப்பதால் சாப்பாடு வந்தது சொல்லிட்டுக் கிளம்பினேன். ரங்க்ஸுக்கு ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி, அதிகம் வீட்டுக்குள்ளேயே அலைய வேண்டாம்னு சொல்லிப் படுக்கச் சொல்லிட்டுக் கிளம்பினோம். ஆட்டோ பெரிய ஆட்டோ வந்தது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற முடியலை.  அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சின்ன ஸ்டூல் வைச்சிருந்ததால் அதை எடுத்துப் போட்டார், ஒரு மாதிரி ஏறிட்டேன்

ஒரு காலை வைச்சு ஏறிட்டேன். இன்னொரு காலை எடுக்கும் முன்னர் அதுவும் தொந்திரவு கொடுக்கும் இடக்கால். ஸ்டூல் ஆட ஆரம்பிச்சுடுத்து. உடனேயே கத்த ஆரம்பிக்கப் பையர் ஒரு பக்கமும் ஆட்டோ ஓட்டுநர் இன்னொரு பக்கமும் பிடித்துக்கொண்டு உள்ளே தள்ளினார்கள். ஒரு மாதிரியா உட்கார்ந்துட்டேன். தில்லை நகர் நோக்கி ஆட்டோ சென்றது. மருத்துவமனையின் விலாசத்தை வைத்துக் கண்டுபிடித்துக் கொண்டு கீழே இறங்கலாம்னு பார்த்தால் ஒரே அதிர்ச்சி. மருத்துவர், மருத்துவமனை எல்லாம் சரி. ஆனால் என்னால் அங்கே போக முடியாதே! என்ன செய்யப் போறேன்?

22 comments:

  1. அடடா... 30-40 படிகள் ஏறும்படியாக கிளினிக் வைத்திருக்கிறாரா அந்த டாக்டர்?

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சரியாச் சொல்லிட்டீங்க நெல்லை. அதிலும் ஒரு இடத்தில் லான்டிங் படி அது குறுகலாக வளைந்து இருந்தது. அந்த இடத்தில் ஒரு காலை வைச்சாலே விழுந்துடுவேன். :)

      Delete
  2. ஆனால் உங்கள் அனுபவங்களையெல்லாம் படிக்கும்போது, நமக்கு என்ன செய்துகொள்ளவேண்டும் என்ற யோசனை மனதில் சுழல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் யாருக்கும் வர வேண்டாம், சொல்லப் போனால் என் அப்பா, மாமியார் எல்லோருமே 80 வயது வரை நன்றாக நடந்து கொண்டிருந்தார்கள், அப்பாவுக்குக் கண் கொஞ்சம் தெரியாது என்றாலும் சமாளித்துக் கொண்டு அவங்களோட மூணாவது மெயின் ரோடில் இருந்து இரண்டாவது மெயின் ரோடில் இருந்த எங்க வீட்டுக்குப் பேசிண்டே (தானாகவே) வந்துடுவார். மாமியார் 93 வயசு வரைக்கும் கீழே உட்கார்ந்து சாப்பிடுவார். காஃபிக்குச் சர்க்கரை எல்லாம் கரண்டியால் போட்டுப்பார். உட்கார்ந்த வண்ணமே காய் நறுக்குவது, கொழுக்கட்டைச் சொப்புப் பண்ணுவதுனு செய்வார். எல்லாத்தையும் விட தினம் வாசல் தெளிச்சுக் கோலம் போடுவது அவர் தான். யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதை எல்லாம் பார்க்கிறச்சே மாமாவுக்கு உடம்புப் படுத்தல் ஜாஸ்தி.

      Delete
    2. நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் நெல்லை.

      Delete
  3. யாத்திரைக்குப் போனபோது, சில பல வயதானவர்களும் வந்திருந்தார்கள். பஸ்ஸில் ஏறுவது, நிறைய நடப்பது, லக்கேஜை மாடிப்படி ஏறி அறைக்குக் கொண்டு செல்வது (சில இடங்களில் லிஃப்ட் இருக்காது) என்றெல்லாம் கஷ்டப்பட்டார்கள். ஆனா பாருங்க, நம்ம மனசு, நம்ம லக்கேஜை எப்படிக் கொண்டுபோவது, மனைவியைத் தூக்கவிடாமல் நாமே எப்படி கொண்டுசெல்வது என்று நம்மைப்பற்றி மாத்திரமே சிந்திக்கவைக்கிறது. அதுபோல தரிசனம், கோயில் உலா போன்றவையும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க அப்போ எல்லாம் கஷ்டப்படலை நெல்லை. இரண்டு சல்வார் செட், நான்கே நான்கு புடைவைகள் தினசரி தோய்த்துக் காய வைக்கிறாப்போல் அதற்கேற்ற உள்ளாடைகள் தான் இருக்கும். அவரும் 2 பெர்முடாஸ், 2 டீ ஷர்ட், 2 எட்டு முழம் வேட்டி, நான்கு துண்டுகள், உள்ளாடைகள் இவை தான். ஆகவே தூக்க முடியும். பொதுவாக எங்கே போனாலும் ஒரு சிலரைப் போல சாமான்கள் வாங்கிச் சேர்ப்பதில்லை. எனவே சூட்கேஸ் தூக்கறாப்போலவே வைச்சுப்போம்.

      Delete
    2. நம்ம மனசு நம்மைப் பற்றிச் சிந்திக்காமல்வேறே யார் சிந்திப்பாங்க? எப்படியும் நம் வேலைகளை நாம் தானே பார்த்துக்கணும்?

      Delete
  4. வணக்கம் சகோதரி

    ஓ.. தங்கள் பேத்தி வந்திருக்கிறாளா. ? நல்லது சந்தோஷம். உங்களுக்கு நல்ல பொழுது போயிருக்கும் . அவளின் சேட்டைகள். விஷமங்கள் உங்கள் உடம்பின் கவலைகளை சற்று தூரதள்ளி வைத்திருக்கும். ஆனால், அவர்கள் வந்திருக்கும் சமயத்திலும் பல் வலி வர வேண்டுமா? பல் வலி கொடுமையான ஒன்று. நான் அடிக்கடி அனுபவித்து வருகிறேன். அதை கடப்பது கஸ்டம். இப்போது தங்கள் கால்வலி எப்படி உள்ளது? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

    /அதுக்கு. பள்ளியில் சேர்ந்த முதல் வாரமே ஸ்டார் ஆஃப் தெ வீக் விருது வாங்கிக் கொண்டு வந்தது. ரொம்ப ஓஹோனு படிக்காட்டியும் படிக்கிறது. /

    நல்லது.. குழந்தை நன்கு படிப்பது அறிந்து மகிழ்கிறேன். தங்கள் பேத்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    தாங்கள் போகும் நேரம் மருத்துவர் அங்கில்லையா? இல்லை அந்த மருத்துவமனை உயரமான படிக்கட்டுகளுடன் காணப்பட்டதா? அதனால்தான் நீங்கள் எப்படி அதில் ஏறிச் செல்வதென்ற கவலை கொண்டீர்களா ? நல்லபடியாக பல்லுக்கு வைத்தியம் நடந்ததா? எப்படித்தான் உடனே மருத்துவரிடம் செல்கிறீர்களோ? இப போது சற்று குணமாகி உள்ளதா? சீக்கிரமே குணமாக வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இந்தப் பல்வலி முதலில் போன பல் மருத்துவரின் அஜாக்கிரதையால் வந்திருக்கு. நல்லவேளையாகப் பையர் பிடிவாதமாக வேறே மருத்துவர்னு தேடிக் கண்டு பிடிச்சார். எனக்கும் மனசில் நெருடல் இருந்ததால் ஓக்கேனு சொல்லிட்டேன். மருத்துவரெல்லாம் அங்கே தான் இருந்தார். ஆனால் படிகள் சுமார் 30க்குக் குறையாது என்பதோடு இரண்டு லான்டிங், இரண்டிலும் குறுகலான படியை ஏறிக் கடக்க வேண்டும். ஒரு வாரம் கழிச்சு இன்னிக்கு வலி, வீக்கம் குறைந்து தட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டேன் கமலா. உங்கள் ஆதரவான பதில்களுக்கு மிக்க நன்றி. குஞ்சுலுவுக்கு விஷமம் எல்லாம் குறைந்து விட்டது, இன்னமும் சாப்பிடப் படுத்தல் குறையவில்லை.

      Delete
  5. அடடே...  பேத்தி வருகையா...  என்ஜாய்...   ஸ்டார் ஆஃப் தி வீக்கா?  பலே...  பலே...  பாட்டி மாதிரி பல்கலையிலும் வித்தகியாய்  இருந்தால் படிப்பில் முதல் ஆளாய் இருக்கணும்னு அவசியமா என்ன!

    ReplyDelete
    Replies
    1. பேத்தி நாளைக்குக் கிளம்பிடறா. இனி வந்தால் ஜூலை, ஆகஸ்டில் பெரிய லீவின் போது தான். குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதே இங்கே தோஹாவில் ஒரு பெரிய வேலையாக இருந்தது, குழந்தைக்கும் அவ அம்மாவுக்கும் முதலில் கொடுத்தது டூரிஸ்ட் விசா தான். கத்தார் வந்து சேர்ந்ததும் பையரின் வொர்க் விசாவை வைத்து அவங்களுக்குக் குடும்ப விசாவுக்கு விண்ணப்பித்து வரப் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. பள்ளிகளில் கத்தார் ஐடி(விசா எண்) இருந்தால் தான் பள்ளிக்கு வரலாஅம்னு சொல்லிட்டாங்க. பின்னர் அது வந்து குழந்தை பள்ளிக்குப் போகும்போது ஒரு மாசம் ஆகி விட்டது. நல்லவேளையாக மூணாவது கிரேடிலேயே சேர்த்துண்டாங்க. ஒரு சிலர் பிரிட்டிஷ் கரிகுலம்னா மூணாவது கிடைக்காது, மறுபடி ரெண்டாவ்து படிக்கணும்னு சொன்னாங்க. இந்த்ப் பிரச்னைகள் எல்லாம் தீரவே உம்மாச்சியை வேண்டிக் கொண்டிருந்தோம்.

      Delete
  6. அங்கே போக முடியாதா?  ஏன்?  

    வாசலிலேயே படிகள் வரவேற்கின்றனவா?

    பலபடிகள் வைத்து பல் ஆஸ்பத்திரி கட்டி இருக்கிறார்களா?

    ReplyDelete
  7. நான் கூட பல்லைக் காட்டணும்...     ஹிஹிஹி...   அலுப்பா இருக்கு..  பத்து ஸிட்டிங் போடுவாங்க...  ரூட் கெனால் ஒண்ணுல, க்ளீனிங் ஒண்ணுல, ஒண்ணை அடியோடு பிடுங்கனும்னு லிஸ்ட் தருவாங்க...  ஒன்றுள ஓட்டை அடைக்கணும், சிமெண்ட் பூசணும்பாங்க...  கூசுது...  வேற வழியும் இல்லை..  எப்போ போகணுமோ...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மருத்துவர் ரூட் கானல், பிடுங்குதல்னு இரண்டு ஆப்ஷன் கொடுத்தாங்க. நான் பிடுங்கவே சொல்லிட்டேன். க்ளீனிங் எல்லாம் இப்போ வேண்டாம் மிஷின் போடுவதால் உங்களுக்குத் தாங்காதுனு சொல்லிட்டார். கடைசியா க்ளீனிங் பண்ணிண்டது அம்பத்தூரில் இருக்கும்போது. அப்புறமா இங்கே வந்தப்புறமா ஒரு தரம் போனேன்.

      Delete
  8. ஆட்டோவில் ஏறுவதே அமர்க்களமாய் இருந்தால் எப்படி?  அதற்கு தீர்வுதான் என்ன?  எவ்வளவு நாள் இப்படியே வைத்துக் கொண்டிருப்பது?

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு நாளெல்லாம் இல்லை. எத்தனை வருஷம் ஸ்ரீராம்! பல வருஷங்களாகின்றன. நானும் போயிண்டும் வந்துண்டும் தான் இருக்கேன். வாகன் ஆர் காரில் ஏறப் பிரச்னை இருக்காது. எங்கள் ஆஸ்தான டிரைவரின் கார் நல்லா பெரிசாவே இருக்கும் என்பதால் அதில் பயணம் போகையில் சிரமம் தெரியாது. இப்போ 3 வாருஷங்கள் ஆகின்ற்ன. வெளியே கிளம்பி.

      Delete
  9. ஹை குட்டிக்குஞ்சுலு!!!!

    கீதா அக்கா உங்களுக்கு Oasis! நாட்கள் இல்லையா! இப்ப....

    குஞ்சுலு நன்றாகப் படிக்கும் அக்கா. அதன் திறமை என்னவென்று தெரிந்துவிட்டால் அதில் குழந்தையை கொண்டுவந்துவிடலாம். இப்ப வைச்சு ஒன்னும் நாம் சொல்ல முடியாதே. சமத்து அது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குஞ்சுலுவுக்கு வரைவதில் தான் அதிகம் விருப்பம். இப்போக் கூட இன்னிக்குக் குளத்தில் பூப் பூத்திருப்பதையும் மீன் நீந்துவதையும் படமா வரைஞ்சிருக்கு. முடிந்தால் படம் எடுக்கணும்.

      Delete
  10. ஹாஹாஹா விருச்சிகராசிக்கு ஆஹா ஒஹோ ப்ரொடக்ஷன்ஸ்!! போன முறையே கருத்துல சொல்லியிருந்த் நினைவு! ஆனா நீங்க சொன்னதேதான். அதெல்லாம் இன்னுமில்லை...

    ஓ தில்லநகர் க்ளினிக் மாடில இருக்கோ? படிகள் ஏறணுமோ? நீங்க கொக்கி போட்டிருப்பது பதில் இதுதான்னு தெரிகிறது.

    வேற மருத்துவர் இல்லையா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வேறே மருத்துவரிடம் தான் போனோம். என்றாலும் பல் எடுக்கறதுக்குள்ளே ரொம்பக் கஷ்டப்பட்டேன். :(

      Delete