இன்னமும் கொஞ்சமானும் உயிர்ப்புடன் வைத்திருப்பது இம்மாதிரியான மஹான்கள் பிறந்த மண்ணில் பிறந்திருக்கோம் என்னும் ஆறுதலே. மற்றபடி நடப்பது யாவும் நல்லதாய் இல்லை. ஆனால் பெரும்பான்மை தூங்கிக் கொண்டிருக்கிறது. தட்டி எழுப்ப யார் வரணுமே தெரியலை, புரியலை. வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் நினைக்கவே கவலை தருவதாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது. இறை நம்பிக்கை ஒன்றே இப்போது காப்பாற்றி வருகிறது. என்னுடைய இந்தக் காலத் தலைமுறை மக்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளிலோ அல்லது குறைந்த பக்ஷமாக ஐந்தாறு ஆண்டுகளிலேயோ முற்றிலும் அழிந்து விடும். அத்தோடு வருங்கால இளம் சமுதாயத்திற்கு உண்மையை எடுத்துச் சொல்லவோ நல்லனவற்றையும் நீதி, நேர்மை பற்றியும் கூறவோ, பெரியோர்கள் இருப்பது அரிது. அப்படி இருக்கையில் நம் பாரம்பரியமும், கலாசாரமும் மெல்ல மெல்ல அழிந்தே போய் விடுமே என்னும் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி மக்களைக் காப்பது ஆண்டவன் பொறுப்பு என மனதைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தாலும் முடியவில்லை. இன்னொரு பாரதி வருவானா அல்லது வந்தாலும் மக்கள் அவனையும் அவன் எண்ணங்களையும் மதிப்பார்களா?