இது யாருனு தெரியுது இல்லையா? எப்போ எடுத்ததுனு யாரானும் யூகம் செய்யுங்க. இப்படி இருந்த நான் தான் இப்போ இப்படி ஆயிட்டேன். :(
இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒண்ணொண்ணாப் போடறேன். கூட இருக்கிறவங்க யார்னு புரியுதா/ ம்ஹூம் புரிஞ்சிருக்காது.
இப்போதைய மனோ நிலை எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு எல்லாவற்றிலும் ஒரு கலக்கமாக, கவலை தருவதாக இருக்கிறது. அதனால் இப்படிக் கொஞ்சம் மனசை மாற்ற முயற்சி செய்யறேன். ஆச்சு இன்னும் அதிகம் போனால் 20 நாட்கள் தான் இந்தியா வாசம். எப்போக் கிளம்புவோம்னு எனக்கே தெரியாது.

நீங்கள் மாமா உங்கள் பெண்... இன்னொரு பெண்மணி யார் என்று தெரியவில்லை!
ReplyDeleteஎன்ன போங்க. மாமா இல்லைனாலும் அவரோட உயரம் நினைவில் இருக்கவேண்டாமா? இங்கே என் அருகே நிற்பவர் உயரமாவா இருக்கார்? அதோடு ஜாடை தெரிய வேண்டாமோ? நான், என் அண்ணா, மன்னி, எங்க பெண். அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது இருக்கும். ஒன்பது முடியலைனு நினைவு. ஒல்லியா இருப்பா. அண்ணாவின் இவ்வளவு அடர்த்தியான கிராப்புத் தலையைப் பார்த்துட்டு இப்போப் பார்த்தால்! :(
Deleteஎன் தம்பி கல்யாண ரிசப்க்ஷனில் எடுத்தது இது. எல்லாம் முடிஞ்சு உள்ளே சாப்பிடப் போனால் சாப்பாடே இல்லை.
Deleteஓ.. அப்படியா? மன்னிக்கவும். FaceBook கில் எனக்கு முன்னர் பதில் சொல்லிக் கொண்டிருப்பரே அவரா?
Deleteநோ கலக்கம் எங்கிருந்தாலும் இணையத்தால் இணைவோம்,. தொடர்பில் இருப்போம். அஞ்சேல்.
ReplyDeleteகொஞ்சம் முன்னரே யோசித்திருக்கலாம். நீங்கள் கிளம்புவதற்குள் ஒருமுறை பார்த்து விடலாம் என்று விரும்புகிறேன்... எங்கே...
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநீங்கள் பகிர்ந்த புகைப்படத்தில் உங்கள் ஜாடை தெரிந்தது. அருகிலிருப்பவர் மாமா இல்லை எனவும் புரிந்தது. இது இரண்டையும் பார்த்தவுடன் கண்டு பிடித்து விட்டேன். மற்றபடி அது உங்கள் அண்ணா, மன்னி, எனவும் உங்கள் அருகில் உங்கள் மகள் எனவும் உங்கள் கருத்தில் தெரிந்து கொண்டேன்.பழைய நினைவுகள் என்றுமே மனதுக்கு ஆறுதலை தருபவை.
மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்தாலும் உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவை விட்டு அதுவும் நாம் வாழ்ந்த இடத்தை, ,பழகிய வீட்டை விட்டுப் பிரியும் போது மனதுக்கு ஒரு மாதிரிதான் இருக்கும். எனினும், உங்கள் மகன் அருகில் இருப்பதை நல்லதாக நினையுங்கள்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல் இணையத்தில் நாம் எவராலும் பிரிக்க முடியாதபடி, இணைந்திருப்போம். எழுத்து என்ற கயிறு நம் நட்புறவை எப்போதும் பலமாகவும், பாலமாகவும் இணைத்திருக்கும். எப்போதும் நாங்கள் உங்களை நினைத்தபடி இருப்போம்.. கவலைப்பட வேண்டாம் சகோதரி பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்களும் உங்கள் முன்னால உங்கள் பெண்ணும்னு நினைக்கிறேன். மற்ற இருவர் யாருன்னு தெரியலை. மாமா ஜாடை இல்லை, உயரமும் அவருக்கு ரொம்ப அதிகம்.
ReplyDeleteகலக்கம் கவலைக்கு ஏன் இடம் கொடுக்கணும். எவ்வளவு ஆன்மீக விஷயங்கள் படித்திருக்கிறீர்கள். ஏன் ரொம்பவே யோசனையா இருக்கணும்? எல்லாம் நல்லாத்தான் நடக்கும். நீங்கள் விஷயம் தெரிந்தவர். கவலைப்பட வேண்டாம்.
ReplyDeleteஇணையத்தில் இருப்பதால் எல்லோரும் ஓரளவு இணைந்திருக்கிறோம். இருக்கவே இருக்கு பிளாக் வேலைகள்.
ReplyDeleteஉங்களை நன்கு தெரிகிறது.
ReplyDeleteமற்றவர்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
கவலை படாதீர்கள் கவலை பட்டால் உடல் பாதிப்பு அடையும்.
இறைவன் விட்டவழி என்று இருங்கள்.
நாம் இணையம் மூலம் தொடர்பில் இருப்போம்.
மகன், மகள் பொறுப்பு அவர்கள் உங்களை நன்கு பார்த்து கொள்வார்கள்.
சார் வழி துணையாக என்றும் இருப்பார்கள்.
இடமிருந்து வலம் முதலில் இருப்பது நீங்கள். எப்படியிருந்த நான்.. என்று நீங்கள் க்ளுகொடுத்த பிறகும் கண்டுபிடிக்காவிட்டால் எப்படி? நீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் பட்டுப் புடவை டிசைன் 70களின் துவக்கத்தில் ஃபேஷன்.
ReplyDeleteஎங்கே இருந்தால் என்ன என்று என்னால் முழு மனதோடு சொல்ல முடியவில்லை. சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப் போல வருமா? என்றுதான் பாடத் தோன்றுகிறது. என்ன செய்ய முடியும்? மாற்ற முடியாதவைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ReplyDeleteO God! give me the courage to change what I can
give me also the strength accept gracefully what I can not change
Also bless me the wisdom to understand the difference between these two.