வேதாவின் பதிவுகளுக்கான விமரிசனத்தைத் தனியாக எழுதிக் கொண்டால், பின்னால் எடிட், செய்யறதுக்கும், (இது வரை என் பதிவுலக வரலாற்றிலேயே நான் செய்யாதது), பிழை திருத்தவும் வசதியாக இருக்கும் என்று, நோட்பாட் ஓபன் பண்ணி எழுத ஆரம்பிச்சேன். கொழுப்பு, எனக்குத் தான் வேறே யாருக்கு?வொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே "ஸேவ்" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம்? முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ! இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி? இப்படி எல்லாம் கூட ஆச்சரியமா நடக்குமா எல்லாருக்குமே?
மற்றப் பத்திகள் எல்லாம் சரியாக வந்திருந்தன. இது என்ன பேராச்சரியம் என்று வியந்து கொண்டே, சரி, நம்ம ப்ளாகில் ட்ராப்டாகப் போட்டு வச்சுக்கலாம், அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே! மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ! ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, "ஸேவ்" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது! வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி! அரைகுறையாய். என்னத்தைச் சொல்ல? நான் அனுப்பற மெயில் எதுவும் இத்தனை வேகமாப் போனதில்லை. இது மின்னல் வேகத்தில் போய்ச் சேர்ந்துடுச்சு!
இந்த ப்ளாக்கரும் இப்படித்தான் சதி பண்ணும், சரியா பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்தில், could not connect to blogger.com. publishing and saving may fail அப்படினு பயமுறுத்திட்டே இருக்கும். சரினு முயற்சி செய்து தான் பார்க்கலாமேனு பப்ளிஷ் அழுத்தினால் ஒண்ணு, பப்ளிஷ் ஆகும், அல்லது மொத்தமும் காணாமல் போகும், காக்கா கொண்டு போயிடும். அதனால் எப்பவுமே நான் பப்ளிஷ் செய்யறதுக்கு முன்னாலே அதை ஒரு ஜி3 பண்ணிக் கொண்டே தான் பப்ளிஷ் செய்யறதுனு வச்சிருக்கேன், இல்லாட்டி மறுபடி, மறுபடி, எழுதினதையே எழுதறாப்பலே ஆகிறதோட இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வந்து தொலைக்கும். அது சரி, இது எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? எல்லாருக்கும் இப்படி நடக்கும்கிறீங்க?
ஒருவேளை ஜி3 மறுபடியும் என் கிட்டே கோவிச்சுக்கிட்டாங்களோ? :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா? இப்படியா பழி வாங்கறது? :P உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை! ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா?? இப்போ விமரிசனம் பத்தின ஒரு விமரிசனம்.
மத்ததெல்லாம் கூட வேதாவை அவ்வளவு டிஸ்டர்ப் செய்யலை. கடைசி இரண்டு "கவிட்டுரை"க்கும் நான் கொடுத்திருக்கும் விமரிசனம், அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதின கவிட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்,
"நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்."
இவை அவரை மிகவும் தொந்திரவு செய்ததாய் உணர்ந்தேன். என்னைப் பொறுத்த வரை காதல் என்ற உணர்ச்சிக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சக தோழிகள் மூலம் அறிந்து புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் ஒரு பார்வை, ஒரு சின்னப் புன்னகை, ஒரு அதிர்ச்சி, ஓரத்து விழி நீர் இவற்றின் மூலமாய் சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். மற்றவர்கள் மாதிரி பீர் பாட்டிலும் கையுமாய், தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரியாமல் இம்மாதிரியான ஒரு நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு பிரியவும் பிரியாமல், தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது? ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.
என்றாலும் இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அது என்னனு புரியலை. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு. ஆனால் நேற்று வேதா சொல்லும்போதே சந்தேகமாத் தான் இருந்தது. 10-00 மணிக்கெல்லாம் முடியாதேன்னு. இப்போத் தான் வர முடிந்தது. அந்த கவிட்டுரையின் விமரிசனத்துக்கு யார் யாருக்கு என்ன கேட்கணுமோ இங்கே வந்து சொல்லுங்க, கேட்டுக்கறேன். மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label வேதாவின் பதிவுகள் பத்தின விமரிசனம். Show all posts
Showing posts with label வேதாவின் பதிவுகள் பத்தின விமரிசனம். Show all posts
Monday, November 19, 2007
Subscribe to:
Posts (Atom)