எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 27, 2007

சண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி

"வளர்சிதைப் பருவம்" என்று தற்காலத்தில் சொல்லப் படும் பருவ வயது இளைஞர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப் பட மாட்டார்கள் எனச் சொல்லப் பட்டது. வேலை போகாது எனவும் விசாரணை நடக்காது எனவும் உறுதி அளிக்கப் பட்டது. ஆனாலும் "பஹாதூர்" என்னும் கப்பல் பணிய மறுத்து விடாமல் போராடியது. ஆங்கிலத் துருப்புக்களுக்குச் சகலவித வசதிகளும் இருந்தன. ஒவ்வொரு கப்பலாகக் கைப்பற்றிய ஆங்கிலப் படை மாலைக்குள் கராச்சியில் புரட்சியை ஒடுக்கியது. பம்பாயிலோ போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளூர் காங்கிரஸின் ஆதரவையும், போலீஸின் ஆதரவையும் பெற்ற புரட்சி நீடிக்க ஆரம்பித்தது. ஜின்னாவும் காந்தியும் தனித்தனியாகப் புரட்சியை தாங்கள் ஆதரிக்கவில்லை என அறிவிப்புச் செய்தனர், ஆங்கிலேய அரசின் மறைமுகமான வேண்டுகோளின் பேரில். நேருவிடம் தனக்கு இருந்த செல்வாக்கை அப்போது இருந்த வைஸ்ராய் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லலாம். எதற்கும் அடங்க மறுத்த வீரர்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அரசியல் தலைவர் ஒருவர்தான் தேவை என்று அரசால் உணரப் பட்டது. மிதவாதியும் இல்லாமல், தீவிரவாதியும் இல்லாமல் எப்போது நிதானத்தைக் கைப்பிடிக்கும் சர்தார் படேல் அதற்கு எனத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் படேல் பம்பாய் வந்தார். எம்.எஸ்.கானுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இங்கும் பல உறுதிமொழிகள் அளிக்கப் பட்டன. யாருக்கும் வேலை போகாது, அவர்கள் கோரிக்கைகள் நிறைவெற்றப் படும், விசாரணை ஏதும் நடக்காது, யாரும் கைது செய்யப் பட மாட்டார்கள் எனப் பல உறுதிமொழிகள். எல்லாவற்றையும் விட முக்கியமான கோரிக்கையான "இந்திய தேசீய ராணுவப் படை வீரர்கள்" கைது பற்றியும் சுபாஷ் பற்றியும் கவனித்து ஆவன செய்வதாகவும் சொல்லப் பட்டது. ஒரு மோசமான அரசியல் சூழ்நிலை உருவாகி பிரிட்டிஷார் தானாகப் போகும் முன்னர் விரட்டி அடிக்கப் படும் சூழ்நிலை உருவாகி வந்தது தடுக்கப் பட்டது, சர்தார் படேலின் சாமர்த்தியமான அணுகுமுறையால்.

ஆங்கில அரசு மிகவும் கவலையும் பயமும் அடைந்தது. இந்தப் புரட்சியின் அடிநாதமான சுபாஷின் வீரதீர சாகசங்களை மக்கள் மறக்கவில்லை என்பதையும், அவரின் இந்திய தேசீய ராணுவத்தின் பால் மக்களுக்கு இருந்து வந்த அனுதாபத்தையும் நன்றாக மனதில் குறித்து வைத்துக் கொண்டது. இதன் விளைவு? இன்று வரை அந்த வீரர்கள் யாரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதிக்கப் படவில்லை. பம்பாய்ப் புரட்சியில் கலந்து கொண்ட மாலுமிகளுக்கும், சிப்பாய்களுக்கும் வேலை போனதோடல்லாமல், தேசத் துரோகி என்ற பட்டமும் கிடைத்தது. இந்திய தேசீய ராணுவத்தின் பெரும் நிதி போன இடம் தெரியாமல் போனது. இதன் பின்னர் உள்ள அரசியல் என்ன? யோசியுங்கள்!

8 comments:

  1. மக்கள் யோசிச்சு இருந்தா என்னிக்கோ நல்லது நடந்து இருக்குமே.

    இருந்தாலும் நீங்க சொல்லிடீங்க, சரி, யோசிக்கறோம்!

    ReplyDelete
  2. //இன்று வரை அந்த வீரர்கள் யாரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதிக்கப் படவில்லை.//

    மெய்யாலுமா? INA ல இருந்தவர்கள் எல்லாம் தியாகிகள் என்று அங்கீகாரம் இல்லையா?

    ReplyDelete
  3. பிரிட்ஷார் உண்மையிலேயே பயந்த முதல் இந்திய
    சுதந்திரப் போரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
    அதைச் சரியான 'பார்வை'யில் பதிவு செய்தமைக்கும்
    நன்றி.
    ஜீவி

    ReplyDelete
  4. நிறைய விடயங்கள் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. ஏன் இப்படி,
    சரியில்லாத தலைமையை ஆதரித்திருக்கிறோம் என்பது இன்னும் புரியாத
    சிக்கல். அந்த இளைஞர்களுக்காக மனம் மிகவும் வருத்தம் அடைகிறது.
    மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
    கீதாமா.
    மீண்டும் நேரம் கிடைத்தால் பழையபடி சரித்திரத்தைத்
    தொடருங்கள். படிக்க நான் தயார். நன்றிமா. அத்தனையையும் படித்து மனம் பாரம்
    அடைகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. முந்தைய பதிவுகளை விட்டுட்டீங்களோ? கில்லர்ஜி தொடர்ச்சியாக இல்லைனு சொல்லி இருந்தார். அது நடுவில் சில, பல மொக்கைகள் வந்ததால்! :)))))

      Delete