எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 07, 2007

சும்மா "ஜாலி"யா ஒரு பதிவு!

இந்தத் தியாகராஜன் சொன்னதை வச்சு நேத்து மீனாட்சி கோவிலுக்குப் போனபோது புத்தகம் ஜெயமோகனுதும், சீனி.விஸ்வநாதனோடதும் படிக்கக் கேட்டால், ஹிஹிஹினு சொல்லிட்டாங்க. வேறே வழியே இல்லாமல் மற்றப்புத்தகங்களோட அரை மனசா வந்தேன். என்ன ஒரு செளகரியம்னால் மெம்பிஸில் நான் ப்ளாக் திறக்கறதுன்னால் எனக்கு நானே ஒரு "ஷொட்டு"க் கொடுத்துக்கணும். அப்படியும் சில சமயம் இந்த செக்யூரிட்டி பக்கத்திலேயே ஒட்டிட்டு வந்து கண்காணிக்கும். சமாச்சார் போட்டு இந்தியச் செய்திகள் படிக்காட்டி என்னோட மறுபாதிக்கு ஜென்மம் சாபல்யம் ஆகாது. அதில் அங்கே ஹிந்து பார்த்தாலே செக்யூரிட்டி வந்து மிரட்டும். இங்கே அதெல்லாம் இல்லை. குமுதம்.காமில் போய்ப் பதிவு செய்து எல்லாப் புத்தகங்களையும் படிச்சாச்சு! ஆனால் இந்த தமிழா.காமிற்குப் போய் இ-கலப்பை கேட்டால் மட்டும் டாலரில் பணம் வேணும்னு பிடிவாதமா இருக்கு. சரி இப்போதைக்கு இந்த "ஜஃப்னா"வோடயே திருப்திப் பட்டுக்கலாம்னு இருந்துட்டேன். இதிலே நான் பதிவு போடறதைப் பார்த்துப் பொறாமைப் பட்டு யாருமே வரதில்லை. எல்லாம் வயித்தெரிச்சல்தான், வேறே என்ன? அன்னிக்குக் கூடப் பாருங்க, கைப்புள்ளை, வேலை மெனக்கெட்டுக் கூப்பிட்டுப் பேசி விட்டுப் பின்னர் "டுபுக்கு"வின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துட்டு வந்துட்டார். நான், என்னனு கேட்டேனா? அதுக்கப்புறம் ஆளே காணோம்!

இந்த அபி அப்பா ஒண்ணு, வேலை மெனக்கெட்டு நான் பாட்டுக்குக் காபியோட சேர்ந்து கடமை ஆற்றும்போது கூப்பிட்டு "கீதாம்மா, புதுப் பதிவு போடறேன்"னு சொன்னதும், அப்பாடா, இப்போவாவது முதல் பின்னூட்டத்துக்கு முந்திக்கலாம்னு பார்த்தால், மனுஷனுக்குக் கழுகுக் கண். பின்னாலேயே வந்து இன்னும் 20 நிமிஷம் ஆகும்னு மிரட்டல். என்னத்தைச் செய்யறது? நம்ம பதிவு போட்டால் பின்னூட்டம் போடக் கூட ஆளே வரதில்லை. அப்படியும், பெருந்தன்மையோடும், தாயுள்ளத்தோடும், அவங்களுக்குப் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தால், இப்படியா ஒருத்தர் வந்து மிரட்டுவார்? நறநறநற, கைப்புள்ள, நீங்க கேட்டாப்பல நறநற போட்டாச்சு! இது இல்லாத பதிவும் ஒரு பதிவான்னு கேட்டீங்களே? :P

இந்த தி.ரா.ச. சார் பாருங்க, எப்போப் பார்த்தாலும் பிசி, பிசினு சொல்லிட்டு, அம்பியோட பதிவு, கண்ணபிரானோட பதிவு, வல்லி சிம்ஹனோட பதிவுனு பின்னூட்டம் போட்டுட்டு இருப்பார். அதான் எல்லார் மேலேயும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், இந்தியா வந்ததும்னு முடிவு செஞ்சிருக்கேன். அம்பி தான் தி.ரா.ச. சார் சொன்னாப்பல கொஞ்சம் பயம். வந்து பின்னூட்டம் போட்டுடறார். ஆனாலும் சரித்திரம் எழுதினால் வரதில்லை! பிடிக்காத பாடம், புரியாத பாடம், அதனால். கார்த்திக்குக்கு சினிமா பார்க்கவே நேரம் இல்லை. வேதா(ள்), எப்போக் கேட்டாலும் பிசிங்கறாங்க. புலி எங்கே பதுங்கி இருக்குனு தெரியலை, டெல்லி போயிட்டு திரும்ப சூடான் போகப் போறேனு சொல்லிட்டு எங்கே வேட்டைக்கு போயிருக்கோ அல்லது பதுங்கி இருக்கோ தெரியலை! மணிப்ரகாஷ் கல்யாணம் செய்துக்க இந்தியா போயிருக்காராம். க்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவே இல்லை! இப்படி உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அக்ஞாதவாசம் செய்யறாங்களா? யார் மண்டையை உருட்டறதுன்னு ஒண்ணும் புரியலை. போர்க்கொடியும் மத்தவங்களும் யூனியன் எல்லாம் மெயிலில் ரொம்ப பிசி. ச்யாம் எல்லாம் இங்கே வர வழியை மறந்து போயாச்சு! டிடி அக்காவும் சரி, எஸ்கேஎம் அக்காவும் சரி மறந்தே போயிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... இந்த எஸ்கேஎம், பாருங்க, இங்கே இருக்கும்போது மணிக்கணக்காக் கூப்பிட்டுப் பேசுவாங்க, இப்போ மெயில் கொடுத்தால் பதிலே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ கண்ண பிரான் வ.வா.சங்கத்துக்கு எழுதிட்டாரான்னு பார்க்கப் போனால் அங்கேயும் ஒண்ணும் காணோம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., யாருமே கிடைக்கலையே?

19 comments:

 1. // "சும்மா "ஜாலி"யா ஒரு பதிவு!"//

  அப்போ நீங்க எழுதினது இல்லையா? :))

  ReplyDelete
 2. சரியாப் போச்சு இ.கொ. இருக்கிறது பத்தாதுன்னு நீங்க வேறேயா? உ.கு. எல்லாம் கொடுத்துட்டு! இந்த வாரமே யார் மூஞ்சிலே முழிச்சேனோ தெரியலை, அங்கே என்னடான்னா குமரனும், மெளலியும் சேர்ந்து பட்டம், கொடுத்து சந்தோஷப் பட்டுக்கறாங்க இப்போ "எரிகிற நெருப்பில் நீங்க வேறே பெட்ரோல்"? நறநறநறநற :P

  ReplyDelete
 3. இது ஜாலியான பதிவு போல் தெர்லியே?
  ஒரே நறநறநற...பதிவாருக்கு?
  சாந்தம்..சாந்தம் கீதா!
  நானிருக்கேன் அப்பபோ வந்து எட்டிப்பார்க்க. சேரியா?

  ReplyDelete
 4. நானானி, என் இதயத்தை ஒரு பெரிய அட்டாக்கில் இருந்து காப்பாஆஆஅற்றிய தெய்வமே, எல்லாம் சரி, ஆனால் கடைசியில் அந்தச் "சேரி" தான் மனதைக் கலக்குதே! எ.பி. தானே? வேறே ஒண்ணும் உ.கு. இல்லையே?

  ReplyDelete
 5. பரவாயில்ல.. ஒன்னுமே இல்லாததுக்கு கொஞ்சமாவது தமிழ் புத்தகம் கிடைக்குதே!
  ஹூஸ்டன் மீனாட்சி கோயில் மட்டும்தான் கோயில் மாதிரி கண்ணுக்கு தெரியுது! பிட்ஸ்பர்க் எப்படினு தெரியல.

  ReplyDelete
 6. geetha paati, ella postum padichuttu thaan irukken! just that m not commenting :-( yen nu ketta badhil theriyaadhu!

  ReplyDelete
 7. skm paavam ingerndhu indiala poi kashta patutu iruppanga.. ponnu paiyan padippu, mamiyar mamanar nathanar machinar ellaraiyum paarpangla illai ungalukku mail anupitu irupangla? neengale sollunga :-)

  ReplyDelete
 8. எங்களை திட்டுவதுன்னா உங்களுக்கு ஜாலியா! நடத்துங்க நடத்துங்க! கொதஸ் இது கீதாம்மாவுக்கு ஜாலியான பதிவாம்!:-)

  ReplyDelete
 9. கீதா....!சேரியா=சரியா? குடிசைப்பகுதி எல்லாம் இல்லை.
  எங்கூர்ப் பக்கம் இப்படித்தான் சொல்வாக!
  அது சேரி...இந்த எ.பி. என்றால் என்ன? உ.கு. என்றால் என்ன?
  ப்ளாக்கர் பாஷையா? எனக்கும் சொல்லிக்கொடுங்களேன். சேரியா?

  ReplyDelete
 10. geetha madam..
  unga post eduvume blog union la varathu illa. .adu thaan enaku theriyala neenga eppa padivu podareenganu.. inime parunga eppavum attendance undu

  ReplyDelete
 11. \\இப்படி உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அக்ஞாதவாசம் செய்யறாங்களா? யார் மண்டையை உருட்டறதுன்னு ஒண்ணும் புரியலை\\

  :-)))))

  ReplyDelete
 12. ஏதுடாப்பா நம்மள வம்பிழுக்கல்லையேன்னு நினைத்தேன்.....பின்னூட்டத்தில் தாக்கிட்டீங்க.....

  ஆமா, அதென்ன சும்மா ஒரு பதிவு, இந்த பதிவில் ("எண்ணங்கள்")முக்கால்வாசி அதுதானே

  ReplyDelete
 13. வாங்க தஞ்சாவூராரே, உங்க பதிவை எட்டிப் பார்த்துட்டேன், எல்லாமே "திண்ணை"யில் வந்ததுன்னு போட்டிருக்கீங்க, நீங்க இங்கே வந்ததே எனக்குப் பெரிய கெளரவம். நீங்க இருக்கும் மிஸ்ஸிஸிப்பிப் பிரதேசத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லையாக்கும்? கோவில் லைப்ரரியில் தேடிப் பார்க்கவும். இங்கே ஹூஸ்டனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் எல்லாப் புத்தகங்களுமே கிடைக்கிறது! அந்த வகையில் உங்களைப் போல் நானும் ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மியாய்த் தான் படிப்பேன்.

  ReplyDelete
 14. போர்க்கொடி, அதான், பார்க்கிறேனே தினம் தினம் வீட்டில் ரங்குவை சமைக்க விட்டுட்டு ப்ளாக் யூனியனுக்கு நீங்க மெயில் அனுப்பிட்டு இருக்கும் கொடுமையை! நான் மாமியாரா இல்லாமல் போயிட்டேனேன்னு இருக்கு எனக்கு! :P

  ReplyDelete
 15. அபி அப்பா,என்ன அநியாயம், இது எல்லாம் ஒரு திட்டா? அப்படின்னா வாழ்த்தறது எப்படி? சேச்சே, நல்லதுக்குக் காலமே இல்லை! :P

  @நானானி, சேரி, சேரி, ஹிஹிஹி, உங்களோட மொழியில் சொன்னேன். முதலிலேயே புரிஞ்சுது, இருந்தாலும் சும்மாக் கலாய்த்தேன், இதுக்கு அர்த்தம் தெரியுமா? இருங்க இன்னிக்கு வகுப்பிலே இரண்டு மட்டும் சொல்லறேன்.
  எ.பி. = எழுத்துப் பிழை
  உ.கு. =உள் குத்து!
  இப்போப் புரியுதா? ஹி.ஹிஹி, நான் வி.வி.சி.

  ReplyDelete
 16. டிடி, அதானே எனக்கும் புரியலை, இது ப்ளாக்கர் செய்ஞ்ச சதியா? இல்லை, உங்களோட கூட்டுச் சதியான்னு நானும் திகைச்சுப் போயிருக்கேன், அம்பியோட மொக்கைப் பதிவுக்கெல்லாம் ஒரு வாரமாவது விளம்பரம் கொடுத்த்த்த்த்த்த்துதுதுதுதுட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏ இருக்கும்போது என்னுடைய பொன்னால் பொறிக்கப் படவேண்டிய எழுத்துக்களை உதாசீனம் செய்வது நியாயமா? தர்மாவா? சீச்சீ, இது ஏதோ சினிமாப் பேரில்லை? தர்மமா?

  @கோபிநாத், உங்களை மறக்கலை. வேலை மெனக்கெட்டு ஃபோட்டோ போட மெயிலினீங்களே, அதனாலே ஒரு சின்ன நன்றி அறிதல். விட்டுட்டேன். ஆனால் திரும்பவும் மாட்டிக்கலாம். :P

  @ஹிஹிஹி, மதுரையம்பதி, புகழ்ச்சி அணியில், உங்களோடதும், குமரனோடதும், வஞ்சப் புகழ்ச்சி அணின்னு எனக்குப் புரியாதா என்ன? நறநறநறநற :P

  ReplyDelete
 17. இவ்வளவு பேர் வரல்லைன்னு வருத்தப்படேளே, சிஷ்யன் மணிப்பயலையும் காணோம்ன்னு கொஞ்ஜமாவது வருத்தப்பட்டேளா.சரி போகட்டும். நானும் ரொம்ப பிசிதான். ஆனால் பொற்கொடி சொன்னது மாதிரி உங்க போஸ்ட்டெல்லாம் படிச்சுன்டுதான் இருக்கேன்.

  ReplyDelete
 18. thalaivi enna thaan pasiya cheche busya irunthaalum padichukitu thaan iruken enna panrathu namma computer marupadiyum paduthukichu :( onlinela pona kaiya odaipen apdinu en thambi meratiyum comment poda vanthuten :)

  ReplyDelete
 19. சகோதரி,
  உங்கள் இந்த பதிவைப்பார்த்து (முதல் இரண்டையும் சேர்த்து)நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள். என்னுடைய வெள்ளிக்கிமை விடுமுறையின் அரை மணி நேரமும், இந்த நாலு வரியை ப்ரயாசத்துடன் (இப்பொழுதுதான் கற்றுக்கொள்கிறேன் எ-கலப்பை)எழுத தேவைப்பட்ட 20 நிமிடமும் என்னை சிரிக்க வைத்த இந்த பதிவிற்கு சமர்பணம். - வாசி.

  ReplyDelete