எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 12, 2007

தனிக்குடித்தனம் எங்கே நடத்தறது?

ஹூஸ்டனில் இருந்த பழைய அபார்ட்மென்டின் ஒரு பகுதியை இங்கே போட்டிருக்கேன். மிச்சத்தில் எல்லாம் அடியேனுடைய திருமுகம் இருப்பதால் யாரும் பயந்துக்க வேணாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் போடவில்லை.

-புது அபார்மென்ட் படம் இன்னும் எடுக்கலை. எடுத்தால் போடறேன். படம் தான் போட வந்துடுச்சே! :D இது லிவிங் ரூம் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையின் பகுதி. இந்தப் பெரிய அறையைத் தான் தடுத்து ஒரு பக்கம் நுழைந்த உடனேயே சமையல் அறை, சாப்பிடும் இடம் எனப் பிரித்து இருப்பார்கள். அந்த 8க்கு 8 சமையல் அறையில் ஒரு பக்கம் அடுப்பும், அதைச் சார்ந்த சமைக்கும் இடமும் 2 அடிக்கு மேல் ஆக்கிரமித்து விடும். இன்னொரு பக்கம் பாத்திரம் கழுவும் தொட்டி முற்றம் எனப்படும் இடம் இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டு இருக்கும். இது எல்லாத்துக்கும் மேலே தான் நான் குறிப்பிட்ட அலமாரிகள் இருக்கும். அதில் முதல் தட்டில் எனக்கு அடிக்கடி வேண்டிய மளிகைப் பொருட்களை நான் எடுக்கிறாப்பல வைத்துக் கொள்வேன்.

ஆனால் என்னோட மறுபாதி இருக்காரே, க்ர்ர்ர்ர்ர்., அவர் ஒழித்துச் சுத்தம் செய்கிறேன், பேர்வழின்னு எல்லாத்தையும் எடுத்து அவர் கைக்கு எட்டறாப்பல வச்சுடுவார். இது தெரியாத அப்பாவியான நான் நேத்து வச்ச பொருள் இன்னிக்குக் காணோமேன்னு, பேந்தப் பேந்த முழிச்சுட்டு, அப்புறம் அவரைக் கூப்பிட்டு எங்கேன்னு தெரியுமான்னு கேட்டால், மனுஷன் பதிலே பேசாமல் வந்து எடுத்துக் கொடுப்பார். அத்தோட விட்டதா? அவர் மளிகைப் பொருட்கள் எடுக்கும் இடத்தின் கீழே உள்ள கவுன்டரில் ரைஸ் குக்கர் வச்சிருப்பேன். சாதம் ஆகி இருக்கும். அது ப்ளகைப் பிடுங்கலைனால் சாதம் அடியிலே போய்ப் பிடிக்கும். மிக்சியில் ஏதாவது அரைச்சுட்டு இருந்திருப்பேன். அது பாதியில் நிற்கும்.

இந்தப் பக்கம் மின் அடுப்பில் ஏதாவது இருக்கும். அந்தக் குறுகிய இடத்தில் அதைக் கிளறி விடறேன் பேர்வழின்னு சுட்டுக் கொண்டு அலறுவேன். ஆனால் அவருக்கு இது
மாதிரி நான் சுட்டுக்கிறது, கத்தறது எல்லாம் பழக்கம் ஆயிடுச்சுங்கிறதாலே மும்முரமா மறுபடி ஒரு முறை சாமான்களை வரிசைப் படுத்தி வைக்கிறதாய் நினைச்சுக் கலைத்துக் கொண்டிருப்பார்.


குறைந்த பட்சம் அரை மணி நேரம் அங்கேயே மும்முரமாய் வேலை செய்து கொண்டிருப்பார். நான் காலை 9 மணிக்கு சமைக்க வரதுக்கு முன்னாலே இது எல்லாம் முடிச்சுக்குங்கனு எத்தனை முறை சொல்லிட்டேன். கேட்கிறதே இல்லை! :P உடனேயே ஒரு பாரத யுத்தம் ஆரம்பிக்கும். நல்லவேளையா ஆடியன்ஸ் யாரும் கிடையாது இங்கே! :D சரி, இதான் போச்சு, காயாவது நறுக்கிக் கொடுக்கிறேன், தனியாக் கஷ்டப் படவேண்டாம்னு சொல்றாரேன்னு நினைச்சு சரினு சொல்லுவேன். அப்போ மறுபடியும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும்.

நான் அவியலுக்கு மட்டும் மெல்லிதாய் நீளமாய்க் காய்கள் நறுக்குவேன். இவர் எல்லாத்தையும் அப்படியே நறுக்குவார். வதக்கல், பொரியல் என்றால் மெல்லிதாய் வட்டமாய் நறுக்கச் சொன்னால் கனம் கனமாய் நறுக்கி வைப்பார். அது வதங்கவும் செய்யாது, பொரிக்கவும் முடியாது. இந்த லட்சணத்தில் சொல்லிக்கிறார்: நான் யு.எஸ். வந்து ஒரு கல்யாணத்துக்குக் காய் நறுக்கிற அளவு தேர்ந்து விட்டேனாக்கும்னு ஒரே பெருமை! அதை விடப் பெருமை, சாமான்கள் எல்லாம் அடுக்கி அலமாரியைச் சுத்தம் செய்வது என்று எல்லாவிதத்திலும் எனக்குக் கை கொடுக்கிறாராம். என்னத்தைச் சொல்றது. இப்படியாக நான் தனி ராஜ்யம் நடத்தி வந்த சமையல் அறையில் என்னோட அதிகாரத்தை மெல்ல மெல்லப் பிடுங்கி விட்டார். எல்லாம் ஹெட் லெட்டர். :P

18 comments:

 1. இதுதான்ய்யா ஆப்பு - நா தெலுங்கு ராஜசேகர் நடிக்கும் புது பட பேரை சொல்லறேன் மேடம். வேற எந்த உள்குத்தமும் இல்லை

  ReplyDelete
 2. மணிப்பயல், கடவுளே, கடவுளே, உள்குத்தம் எல்லாம் ஒண்ணும் இல்லை. உள் குத்து! ம்ம்ம்ம்., உங்களுக்கு இன்னும் ட்யூஷன் நிறைய எடுக்கணும் போலிருக்கே! ஹிஹிஹி "ஆப்பு"னு புரிஞ்சுட்டிருக்கிற நீங்க தான் உண்மைத் தொண்டர்!

  ReplyDelete
 3. Geetha, paavam avar.
  ippadiya drill vangaRathu.:)

  inga singam ellaam seyyaREnu sollittu, neeye seythudu. unakkuththaan sariyaa varumnuttup poyiduvaar.:((

  ReplyDelete
 4. டிரில்லாவது வல்லி, இப்போ மனுஷனை சமையல் அறையில் இருந்து வெளியே அனுப்ப முடியுமான்னு என்னோட கவலை! :)))) போதாத குறைக்கு இது ஏன் இவ்வளவு செய்யறே, இது ஏன் திறந்து வச்சிருக்கேனு கேட்டு மூட வேண்டியதைத் திறந்தும், திறக்க வேண்டியதை மூடியும் ஒரே களேபரம்! :))))))))))

  ReplyDelete
 5. \\எல்லாம் அடியேனுடைய திருமுகம் இருப்பதால் யாரும் பயந்துக்க வேணாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் போடவில்லை. \\

  ம்..இன்னும் எத்தனை நாள் தான் ஒரே பல்லவியோ போங்க ;(


  \\என்னத்தைச் சொல்றது. இப்படியாக நான் தனி ராஜ்யம் நடத்தி வந்த சமையல் அறையில் என்னோட அதிகாரத்தை மெல்ல மெல்லப் பிடுங்கி விட்டார். எல்லாம் ஹெட் லெட்டர். :P \\

  அப்ப இனி நல்ல சாப்பாடு கிடைக்கும் ;-))

  ReplyDelete
 6. //நேத்து வச்ச பொருள் இன்னிக்குக் காணோமேன்னு, பேந்தப் பேந்த முழிச்சுட்டு, அப்புறம் அவரைக் கூப்பிட்டு எங்கேன்னு தெரியுமான்னு கேட்டால், மனுஷன் பதிலே பேசாமல் வந்து எடுத்துக் கொடுப்பார். //

  ஹா ஹா ஹா. :-))
  (சிறிது கற்பனை பண்ணிப்பார்த்தேன்.)

  ReplyDelete
 7. உள்குத்து கூட சரியா தெரியாத அளவுக்கு அப்பாவிங்க நா

  ReplyDelete
 8. இதுதான் சான்ஸ்ன்னு நீங்க வெளில வந்துடுங்க.முன்னாடி நா சொன்ன மாதிரி சொற்பொழ்வு, உபன்யாஸம்னு போயிடலாம்.

  ReplyDelete
 9. ஏன் என் கமெண்டைவெளியிடாம நிறுத்தி வைச்சிருக்கீங்க?....

  ReplyDelete
 10. கொஞ்ச நாளைக்கு அவரையே சமைக்க சொல்லிட்டு நீங்க உதவி செய்றேன் பேர்வழின்னு இதே மாதிரி பண்ணுங்க, அவரு தொல்லை தாங்காம எஸ்கேப் ஆகிவாரு :)

  ReplyDelete
 11. மேடம், நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளையும் பார்க்கிறேன்.. என்னுடைய விரும்பி படிக்கும் பதிவுகள் பட்டியலில் இருந்தெல்லாம் எடுக்கலைங்க மேடம்..

  ReplyDelete
 12. தனிகுடித்தனமா? நமக்கு அவுட் ஆஃப் டாப்பிக் மாதிரி தெரியுதே.. இருந்தாலும் படிக்கிறேன் :)

  ReplyDelete
 13. தனிகுடித்தனமா? நமக்கு அவுட் ஆஃப் டாப்பிக் மாதிரி தெரியுதே.. இருந்தாலும் படிக்கிறேன் :)

  ReplyDelete
 14. //இப்படியாக நான் தனி ராஜ்யம் நடத்தி வந்த சமையல் அறையில் என்னோட அதிகாரத்தை மெல்ல மெல்லப் பிடுங்கி விட்டார்//

  அவரை குறை சொல்லாதீங்க மேடம்.. நீங்களும் பதிலுக்கு ஏதாவது செஞ்சிருப்பீங்க தானே..

  ஹிஹிஹி.. இருந்தாலும் இது எனக்கு அவுட் ஆஃப் டாப்பிக் தான் :)

  ReplyDelete
 15. வாய்க்காலுக்கு (அம்பிக்கு) இறைத்த நீர் வழியோடி புல்லுக்கும்(சாருக்கும்) ஆங்கே புசியுமாம்

  ReplyDelete
 16. @கோபிநாத், கவலையே படாதீங்க, மறுபடியும் படம் போடத் தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டது, இந்த் ப்ளாக்கர், அது எங்கேயாவது என்னோட முகத்துக்குப் பதிலா வேறே யாரையாவது போட்டுட்டா என்ன செய்யறது? அதான் கொஞ்சம் யோசனை! :P

  இது போன பதிவின் பின்னூட்டத்துக்குப் பதில்:
  அபி அப்பா இதுக்கெல்லாம் வர மாட்டார். அந்த டாபிக் பேச ஆரம்பிச்சாலே, வரேன், சமைக்கணும்னு சொல்லிட்டு ஓடிடுவார்! ஹாஹாஹ, அவ்வளவு பயமுறுத்தி வச்சிருக்கேன்!

  @காட்டாறு, கற்பனை வெள்ளம் உங்களுக்கு அதிகமாவே பொங்குதுன்னு பார்த்தேன்! :P

  ReplyDelete
 17. @மணிப்பய, நீங்களா அப்பாவி? ம்ம்ம்ம், நீங்க சொல்றதும் நல்ல யோசனையாத் தான் இருக்கு! :P பார்க்கலாம். :D

  @மதுரையம்பதி, இது ஒண்ணுதான் வந்திருக்கு. இதைத் தவிர மாசக்கணக்கா 2 பின்னூட்டம் ஒட்டிட்டு இருக்கு, அது வெளியே வந்தே நான் பார்த்ததில்லை! வேறே எதிலே கொடுத்தீங்க? :D

  @வாங்க, வாங்க, வேதா(ள்), என்ன ஒரு பருப்பு உணர்ச்சி, சீச்சீ, பொறுப்பு உணர்ச்சி, தலைவியான நான் இல்லாத போது, நீங்க ப்ளாக்கர் மீட்டிங்கில் கலந்துக்கிற வேகத்தையும், அங்கே போண்டோ, போண்டோவா சாப்பிட்டுத் தள்ளும் வேகமும் அதிசயிச்சுப் போயிட்டேன்!, நல்ல களப் பணி ஆற்றி வருகிறீர்கள்!

  ReplyDelete
 18. @கார்த்திக், என்னத்தைச் சொல்றது? இப்படியே சொல்லிட்டு நீங்களும் ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள்னு வரீங்க, கரெக்டா அமாவாசைக்கு வந்தீங்க, அப்புறம் இன்னிக்குத் தான் வந்திருக்கீங்க, வர வர உங்களைப் பார்க்கவே முடியலை, என்ன இருந்தாலும் முதன் முதல் எனக்காகத் தோரணம், வரவேற்பு வளையம் கட்டி எல்லாம் வச்சீங்களேன்னு பார்க்க வேண்டி இருக்கு! :P

  என்ன சாரி, திடீர்னு எங்க நினைப்பு எல்லாம் வந்திருக்கு? ம்ம்ம்ம்., அம்பிக்கு இறைத்த நீராவது? அதெல்லாம் இல்லை, அம்பிக்கு ஒண்ணும் கொடுக்கப் போறதில்லை! நீங்க வேறே ஏதாவது சொல்லாதீங்க, அம்பி ஃபோனிலேயே டிமான்ட், மொய் வேணும்னு, நான் ஒண்ணும் கொடுக்கப் போறதில்லை, தண்ணீர் உள்பட! :P

  ReplyDelete