எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 10, 2007

பல்/(மும்)முனைத் தாக்குதலில் தலைவி! எச்சரிக்கை!

ஒரு வாரமாவே எனக்கு நேரம் சரியில்லை, எல்லாம் ஹெட் லெட்டர். முந்தாநாள் பாருங்க, இந்த அபி அப்பா கிட்டே சரபர் படம் எடுங்கன்னு சொல்லிட்டுக் காபி ஆத்தப் போனேன். என்ன, தலையும், புரியலை, வாலும் புரியலையா? அது ஒண்ணுமில்லை, அமெரிக்கா வந்ததிலே இருந்து நான் காலையிலே களப்பணி ஆற்ற உட்கார்ந்து விடுவதைத் தெரிந்து கொண்டு, தொண்டர்கள், தங்கள் வேண்டுகோளுடனும், மனுக்களுடனும் எனக்கு மெயிலிக் கொண்டிருப்பார்கள், அல்லது கூகிளில் "சாட்"டிக் கொண்டிருப்பார்கள். நானும் காபி ஆற்றும் நேரம் முடிஞ்சு போச்சுன்னா கொஞ்சம் நிம்மதியா உட்கார்ந்து கடமை ஆற்றுவேன், கூடவே அப்போ அப்போ களப்பணியும். அப்போ முந்தாநாள் மாட்டிக் கொண்ட அபி அப்பாவிடம் வேலை மெனக்கெட்டு லிங்க் கொடுத்து, சரபர் படம் எடுத்து என்னோட ப்ளாகில் போடச் சொல்ல நினைத்து, லிங்க் மட்டும் கொடுத்து, படத்தை எடுங்க, வரேன்னு சொல்லிட்டு, என்னோட மறுபாதிக்குக் காபி ஆத்தப் போனேனா? அவசரக் குடுக்கை! நானில்லை, அபி அப்பாதான், படத்தை எடுத்து அதை மெயில் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கார். என்ன அவசரம்னு கேட்டதுக்கு, இதோ ஆணி பிடுங்கிட்டு வரேன்னு போனவர்தான், இன்னிக்குத்தான் வந்தார், கூடவே கைப்புள்ளைக்கும், வேலை இல்லா வெட்டிக்கும் தகவல் கொடுத்துட்டு!

மனுஷனுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்னு தெரியலை, இன்னிக்கு ஒரு பக்கம் கைப்புள்ள, அம்பி நம்பர் கொடுங்க, மெயில் அட்ரஸ் கொடுங்கனு அம்பியின் இணைபிரியா நண்பனாக மாறப் போறேன், அவரோட அனுபவம் ஒரு மாதம் அதிகம் ஆனதால் பூரிக்கட்டை அடி வாங்கறதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டார்னு கேள்விப்பட்டேன்னு தொணதொணப்பு, நானும் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஒரே ஆர்வம்! அடுத்த மாசம் தனிக்குடித்தனம் வைக்கப் போறார் போலே! :P இன்னொரு பக்கம் அபி அப்பா, ஏதோ கேட்கிறார். நடுவிலே இந்த வேலை இல்லா வெட்டி, வந்து இவர் எங்கே இருந்து வந்தார்? யாரு அனுப்பிச்சாங்கனு புரியலை, ராம், ராம், ஒரே ஊரா இருந்துட்டு இப்படி என்னைப் பழி வாங்கலாமா? தமிழா அது? என்ன மொழியிலே எழுதறார்னே புரியலை, அறுத்துத் தள்ளிட்டார். இந்த லட்சணத்திலே மதுரை ப்ளாகிலே வேறே எழுத ஆரம்பிச்சிருக்கார். யாரு படிக்கிறது? எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு புரியலை! :P இது யார் செய்த சதி? எதிர்க்கட்சிகளா? அம்பியா? நேத்திக்கு வேலை மெனக்கெட்டு அம்பியோட பேசினதுக்கு இதுவா பரிசு? சேச்சே நட்புக்குத் துரோகம் செய்யலாமா? இப்படி மும்முனைத் தாக்குதல் நடக்கும்போதே அபி அப்பாவுக்கும், கைப்புள்ளக்கும் மெசெஞ்சர் வேலை வேறே பார்க்க வேண்டி வந்துடுச்சு. இவர் மெயில் ஐடியை அவருக்கும், அவர் ஐடியை இவருக்கும் கொடுத்ததும் அடுத்த நிமிஷம் இரண்டு பேருமே ஆளே காணோம். என்ன அநியாயம், ஒண்ணுமே புரியலையே? யார் செய்த சதி இது? அபி அப்பா, கைப்புள்ள உங்களுக்கே இது நல்லா இருக்கா? ஒரு அப்பாவியை இப்படியாப் பழி வாங்கறது?

இதெல்லாம் பத்தாதுன்னு இந்த வேலை இல்லா வெட்டியோட தொந்திரவு வேறே. தமிழ்னு சொல்லிட்டு வேறே ஏதோ மொழியில் பயமுறுத்தல், அறுவை, பின்னூட்டம் போடுவேன்னு மிரட்டல் எல்லாம். நான் எங்கே இருக்கேன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு பூகோளம் தெரியும்னு காட்டிட்டு ஒரு அலட்டல்! :P நான் எழுதற பதிவு ஒண்ணும் நல்லா இல்லைனு விமரிசனம். ஆன்மீகம், சமையல் தவிர வேறே எழுதவே மாட்டீங்களா பெண்கள் அப்படின்னு ஒட்டுமொத்தமாப் பெண்குலத்தை ஒரு தாக்கு! பெண்குலமே திரண்டு எழுக! வேலை இல்லா வெட்டியைப் பழி வாங்குங்க! தோள் கொடுப்பீர் தொண்டர்களே! இந்தச் சமயம் பார்த்துக் கண்ணபிரான் வேறே சைகிள் காப்பிலே சான்ட்ரோ ஓட்டாதீங்கனு கவுண்டர் மூலமா மெசேஜ் கொடுத்து மிரட்டல்! அம்பிக்குக் கவுண்டரோட ஆதரவு இருக்குனு மறைமுகமாச் சொல்லிக் காட்டறார். இந்தக் கவுண்டமணி, செந்தில் காமெடி சினிமாவிலே கூட நான் ரசிக்க மாட்டேனே! :P கடவுளே, நான் யார் முகத்திலே விழிச்சேன்! ஒண்ணுமே புரியலியே! மொத்தத்தில் இந்த வாரமே நம்மது இல்லைங்க!

18 comments:

 1. //நான் எழுதற பதிவு ஒண்ணும் நல்லா இல்லைனு விமரிசனம். //

  ஹஹா உண்மையை சத்தமா சொன்ன வெட்டி வாழ்க! வாழ்க! :)

  சும்மா தானே இருக்கீங்க அங்கே, ஒழுங்கா இந்த மெசஞ்சர் வேலையாவது பாருங்க. :p

  ReplyDelete
 2. ஆகா!, இப்படி பொலம்ப ஆரம்பிச்சுட்டிங்களே........

  நண்பர்களே இப்ப புரிஞ்சுதா, கீதாம்மா பொலம்பலும் பதிவா வந்து நம்மைத்தாக்கும் எனவே தயவுசெய்து அவரை சீண்டாதீர்கள்.....

  ReplyDelete
 3. பாத்துட்டே இருங்க...சேம் பிளட் அப்படின்னு நிறைய பேரு வருவாங்க.... அப்புறம்..விளம்பரம் பண்ணும் போது..சரியா செய்ய வேன்டாமா.."TBCD" அப்படி சொன்னாவே யாருக்கும் புரியாது..இதுல நீங்க..வேலை வெட்டி அப்படின்னு சொன்னா...புரியும்மா..?


  //* இந்த வேலை இல்லா வெட்டி, வந்து இவர் எங்கே இருந்து வந்தார்? யாரு அனுப்பிச்சாங்கனு புரியலை, ராம், ராம், ஒரே ஊரா இருந்துட்டு இப்படி என்னைப் பழி வாங்கலாமா? தமிழா அது? என்ன மொழியிலே எழுதறார்னே புரியலை, அறுத்துத் தள்ளிட்டார். இந்த லட்சணத்திலே மதுரை ப்ளாகிலே வேறே எழுத ஆரம்பிச்சிருக்கார். யாரு படிக்கிறது? எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு புரியலை! :P *//

  இத தான் ஆப்பு வைக்க போறேன்னு சொன்னீங்களா.. அய்யொ..! அம்மா !! பயமா இருக்கே..!!
  இதுக்கு நீங்க சமையல் குறிப்பே எழுதலாம்...

  //*இந்த வேலை இல்லா வெட்டியோட தொந்திரவு வேறே. தமிழ்னு சொல்லிட்டு வேறே ஏதோ மொழியில் பயமுறுத்தல், அறுவை, பின்னூட்டம் போடுவேன்னு மிரட்டல் எல்லாம். நான் எங்கே இருக்கேன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு பூகோளம் தெரியும்னு காட்டிட்டு ஒரு அலட்டல்! :P நான் எழுதற பதிவு ஒண்ணும் நல்லா இல்லைனு விமரிசனம். ஆன்மீகம், சமையல் தவிர வேறே எழுதவே மாட்டீங்களா பெண்கள் அப்படின்னு ஒட்டுமொத்தமாப் பெண்குலத்தை ஒரு தாக்கு! பெண்குலமே திரண்டு எழுக! வேலை இல்லா வெட்டியைப் பழி வாங்குங்க! தோள் கொடுப்பீர் தொண்டர்களே!*//

  ReplyDelete
 4. @அம்பி, இந்த வெட்டிக்கு ஒழுங்கா ஒரு பதில் கூட எழுதத் தெரியலை. இதுக்கு உங்க சப்போர்ட் வேறே! போய் பூரிக்கட்டைக்குப் பாலிஷ் போட்டு வைங்க, அடி வாங்கும்போது வலிக்காமல் இருக்கும்! :P

  @மதுரை, இது ஒண்ணும் புலம்பல் இல்லையே! க்ர்ர்ர்ர்ர்ர்., கொஞ்சம் சத்தமா யோசிச்சிருக்கேனாக்கும்! :P

  இந்தப் பின்னூட்டத்துக்குப் பதிலே ஒழுங்கா எழுத வரலை, இதிலே சேம் ப்ளட்னு சொல்லி ஆள் வேறே பிடிக்கிறீங்களா, அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க, அதுவும் அபி அப்பா, கைப்புள்ள எல்லாம் உண்மைத் தொண்டர்கள்! கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள்! அவங்களை எல்லாம் எதிர்பார்க்கவேண்டாம். :P

  ReplyDelete
 5. நான் சேம் பிளட்ன்னு சொன்னது..மத்தவங்களும் ..நான் அறுத்து தள்ளிட்டேன் அப்படின்னு சொல்லுவாங்க...அதுக்கு...
  அப்பால..என்ன உங்க கேள்வி..நான் பதில் சொல்ல...உங்க பலமான ரோசனை எல்லாம் எனக்கு புரியாது..அதுவும் இல்லாம நீங்க..பத்தி...பத்தியா பிரிச்சு எழுதுவீங்க அப்படின்னு பார்த்தா..பக்கத்துக்கு பக்கம் பிரிச்சு எழுதுறீங்க..படிக்கிறவங்கள கொஞ்சம் நினைச்சு பாருங்க...
  எனக்காக உங்க கேள்விய ஒரு தரம்..பிரிச்சு சொல்லுங்க...பதில் சொல்லிடலாம்..அப்பறம் உங்களுக்கு ஒரு கடுதாசி போட்டேனே..படிச்சீங்களா....


  //* அம்பி சைட்...
  ஹஹா உண்மையை சத்தமா சொன்ன வெட்டி வாழ்க! வாழ்க! :)*//

  அம்பி..நீங்க தங்க கம்பி...


  //*மதுரையம்பதி சைட்...
  கீதாம்மா பொலம்பலும் பதிவா வந்து நம்மைத்தாக்கும் *//
  உன்மை.!! உன்மை.!!

  ReplyDelete
 6. அட, அட, வெட்டி, பதிவு வேறேயா இந்த லட்சணத்திலே? லிங்க் வேறே கொடுத்து மிரட்டறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 7. அழகா தலை சுத்த வச்சிட்டீங்க. ;-)

  ReplyDelete
 8. \\கடவுளே, நான் யார் முகத்திலே விழிச்சேன்! ஒண்ணுமே புரியலியே! மொத்தத்தில் இந்த வாரமே நம்மது இல்லைங்க! \\

  ஆமாம் தலைவி இந்த பதிவை படிச்சவுடன் எனக்கும் அப்படி தான் தோணுது ;)

  ReplyDelete
 9. காட்டாறு, வாங்க, வாங்க, பேருக்கேத்தபடி வேகமா வந்திருக்கீங்க, இப்படி எல்லாம் சொல்லியாவது மனசை ஆத்திக்கலாம்னு தான்., :))))))) வேறே என்ன செய்யறது? இன்னும் சுத்தல் மிச்சம், மீதி எல்லாம் சொன்னால் உங்க தலை சுத்தல் கொஞ்சம் குறையுமோன்னு நினைக்கிறேன், எப்படி வசதி? :P

  @கோபிநாத், ஆஹா, ஆஹா உண்மைத் தொண்டரான உங்களை விட்டுட்டுத் தன்னை "நாயகன் கமல், சகலவல்லவன் கமல், சிவாஜி ரஜினி" என்றெல்லாம் நினைச்சுட்டு இருக்கும் அபி அப்பாவை நம்பியது தப்புத் தான், இதோ வரேன், உங்க உதவியை நாடி, அப்புறம் நீங்களும் காணாமல் போயிடுவீங்கன்னு தாராளமாச் சொல்லலாம். :))))))))))

  ReplyDelete
 10. சொக்கா...........!
  கீதாம்மாவை இப்படி தனியா பொலம்ப
  வச்சிட்டியே..!

  நறநறநற...ஒன்னுமில்ல குறுக்கும்நெடுக்கும் நடக்கும் போது கேட்கும் காலடி மண் நொறுங்கும்
  சத்தம்!
  இப்படி புலம்பலைக்கூட பதியலாம் போல!

  ReplyDelete
 11. தலைவி! இப்படி தலைப்பு வச்சா நீங்க ஏதோ தாக்குதலுக்கு உள்ளானது போல மத்தவங்க நெனச்சுபாங்களே! இது உங்களுக்கே நல்லா இருக்கா! ஆக்சுவலி தொண்டர்களே! நான், கைப்ஸ், வெட்டி நாங்க தான் தலைவியால் தாக்குதலுக்கு உள்ளானோம்! என்ன கொடுமை சரவணா!:-))

  ReplyDelete
 12. அட நீங்க வேற உங்களுக்கு ஒரு நன்றி சொல்லி எழுதிருக்கேன்... மிரட்டுறீங்க அப்படின்னு சொல்லுறீங்க..

  //*அட, அட, வெட்டி, பதிவு வேறேயா இந்த லட்சணத்திலே? லிங்க் வேறே கொடுத்து மிரட்டறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *//

  ReplyDelete
 13. @நானானி,"no same side goal". இதுக்குப் பேரு "loud thinking" அதனாலே நறநறநற எல்லாம் வேண்டாம். அதுக்கும், க்ர்ர்ர்ர்ர்ர்ர்-க்கும் காபிரைட் வாங்கிட்டேன். :P

  ReplyDelete
 14. @அபி அப்பா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., நறநறநறநறநறநற

  @abcdefgh, இதுவா நன்றி தெரிவிக்கும் லட்சணம்? நறநறநறநறநறநற

  என்ன தான் லிங்க் எல்லாம் கொடுத்து ஆள் பிடிச்சாலும் யாரும் வர மாட்டாங்க உங்க பதிவுக்கு! :P

  ReplyDelete
 15. Geetha , nijamaave oNNum puriyalai.

  inga thamizh veRa maaththith theriyaRathu.

  Neengathaan ozhungaa ellaar numbarum koduppeenga.
  adhaan ellaarum ungaLaik kekkiRAnga:))

  ReplyDelete
 16. அப்படியா... நன்றி இப்படி சொல்லமாட்டாங்களா...சரி..எப்படி நன்றி சொல்லுறதுன்னு நான் தெரிஞ்சிக்கிறமாதிரி... எனக்கு ஒரு நன்றி சொல்லி ஒரு பதிவு போடுங்க..

  வரவங்க..வரட்டும்..நான் என்ன கூகிள் ஆட் சென்ஸ் போட்டு ஆள் திரட்டுறேனா என்ன..?

  ஆனா, நான் எழுதுறத..யாராலும் (கவனிக்க..யாராலும்)தடுக்க முடியாது.......

  யாராலும யாராலும யாராலும...(வெற ஒன்னும் இல்ல எக்கோ...)

  //*@abcdefgh, இதுவா நன்றி தெரிவிக்கும் லட்சணம்? நறநறநறநறநறநற

  என்ன தான் லிங்க் எல்லாம் கொடுத்து ஆள் பிடிச்சாலும் யாரும் வர மாட்டாங்க உங்க பதிவுக்கு! :P*//

  ReplyDelete
 17. என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே?

  //இந்த வேலை இல்லா வெட்டியோட தொந்திரவு வேறே//
  எக்கச்சக்க ஆணிகளுக்கு நடுவிலிருக்கும் என்னை இத்தன தடவை வேலை இல்லா வெட்டினு சொல்லிட்டீங்களே தலைவி :-(

  ReplyDelete
 18. ஹிஹிஹி, வல்லி, நிஜமாவே ரொம்பவே "அப்பாவி"யா இருக்கீங்களே! போகட்டும், தமிழ் நல்லாத் தெரியும் போது திருப்பிப் படிச்சுட்டுத் திருப்பிப்பின்னூட்டம் கொடுங்க, ஹிட் லிஸ்ட் எகிறத் தான்!

  வேலை இல்லா வெட்டி, உங்களாலே "வேலை உள்ள ஒரு நல்ல வெட்டி"யோட மனம் எப்படிப் புண்பட்டுடுச்சுன்னு பாருங்க! முதலிலே பேரை மாத்தித் தொலைங்க சார், பாவம் அந்த "வெட்டிப் பயல்" ரொம்ப நல்ல வெட்டி! :)))))

  @வெட்டிப்பயல், ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மாஆஅ (சுமா)வானும் உங்களை வச்சுக் காமெடி, கீமெடி பண்ணுவேனா? :P

  ReplyDelete