எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 29, 2007

அனுபவம் புதுமை! 1



இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது?
22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம் போய், கிராமத்தில் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பின் வரிசையாக ஸ்வாமிமலை, அங்கிருந்து மதுரை போகும் வழியில் அழகர் கோயில்,பழமுதிர்சோலை, அங்கே நாவல்பழம் மூலம் ஒளவைக்குப் போதித்த முருகனைப் பார்க்கணும், இந்த சிபி ஏன் இன்னும் "குமாரகாவியம்" எழுதலைன்னு கேட்கணும்! திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியைப் பார்த்து விட்டுப் பின் திருச்செந்தூர் போய் தரிசனம் முடித்துப் பின்னர் பழனி போய் தண்டாயுதபாணியைப் பார்த்துவிட்டுப் பின்னர், திரும்ப மதுரைக்கு அருகே இருக்கும் என் அப்பாவின் சொந்த ஊரான மேல்மங்கலம் போகவேண்டும் என்ற முடிவு!

சனிக்கிழமை காலையில் 11 மணி வாக்கில் கிளம்பினோம். இங்கிருந்து அம்பத்தூரைத் தாண்டி பைபாஸில் போகவே நேரம் பிடித்தது. சாலையும் மோசம், போக்குவரத்தும் மோசம். ஒரு வழியாக பைபாஸைப் பிடித்துத் திண்டிவனம் வரை கொஞ்சம் பரவாயில்லை, சாலைகள், ஏனெனில் அங்கே எல்லாம் சுங்கம் வசூலிக்கும் சாலைகள், நல்லாவே இருந்தது, பிரயாணம், கும்பகோணம் செல்லும் சாலைப் பக்கம் திரும்பும் வரை! அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது? ஒண்ணுமே புரியலையே? ஒரே குழப்பம். வேறு வழியில்லாமல் அதையே எடுத்துக் கொண்டோம்.

8 comments:

  1. // இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது///
    சாம்பு மாமா ,நம்ம போட்ட திட்டம் கீதா அக்காவுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்து. எஸ்கேப்....

    ReplyDelete
  2. // வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம்,///

    எப்படி கெடைக்குன்னேன்.. அது எப்படி கெடைக்கும்?
    முன்னாலேயே லாட்ஜிக்கு சொல்லி வைச்சிங்க சரி.,. அத ஏன் அம்பியண்ணாவுக்கும் முன்னாடியே பெருமையா சொல்லிக்கிட்டீங்க?.. பின்ன எப்படி இடம் கிடைக்கும்..?:P

    ReplyDelete
  3. நம்பர் 1. பதி சதி?
    இன்னும் எவ்வளவு சதி வருமோ!

    ReplyDelete
  4. \\இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது? \\

    எல்லாம் அனுபவத்தின் பலன் தலைவி ;))

    ReplyDelete
  5. the roads you talk between madras and kumbakonam. how many times i would travelled on those roads. esp the travelling after sethiyathopu is fun. any night bus leaving from madras will arrive those area around early morning and then sleep is gone but it is fun. esp when you get alloted the last seat of the most best luxury bus of our thiruvaluvar transportation. As it dawns over the kolladam watching the river flowing when it is neither dark nor bright is an wonderful moments of the travel. you will be half asleep half awake. good nostaligia now on reading your post.

    ReplyDelete
  6. ம்ம்ம்ம் - மதுரைக்கு வரதேப் பத்தி ஒரு வார்த்தெ ஒரு வார்த்தெ சொல்லி இருந்தா இங்க இருந்த படியே எல்லா ஏற்பாடும் பண்ணி இருப்பம்ல. இப்டியா மாடி ஏறி இறங்கி கஷ்டப்படுறது....ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. // drowsy medicines...//

    இதை எடுத்துக்கிட்டும் இவ்வளோ கவனிச்சா.......

    முழிச்சிருந்தா எப்படி இருந்துருக்கும்?

    ஆரம்பம் அருமை.

    ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?

    ReplyDelete
  8. கீதா,
    இத்தனை ஊருக்கும் ம.பா மருந்து கொடுத்தே கூட்டிண்டு போனாரா:))
    இல்லாவிட்டால் இட்லி சட்டினி பிரச்சினை வரும்னா??

    மூன்றாவது மாடியா!!கடவுளே.!!
    அடுத்த கட்டம் எழுதவும்.

    ReplyDelete