எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 03, 2007

"பொதிகை"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்பு நிகழ்ச்சி!

சற்று முன்னர் "பொதிகை"த் தொலைக்காட்சி, திரு எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இசைக்கச்சேரியை ஒளிபரப்புச் செய்தது. இரு கைகளும் இல்லாத அவர் பாடியது மற்ற சங்கீத வித்வான்களுக்குச் சற்றும் குறைவானது அல்ல. அதுவும் "திருச்செந்தூரில் சிவகுமாரன்" பாட்டு மனத்தை மிகவே உருக்கியது. பக்கவாத்தியமாக எம்.ஏ. கிருஷ்ணசாமி, வயலின், உமையாள்புரம் மாலி, மிருதங்கம், டி.எஸ்.கார்த்திக், கடம். இவர்களும் பிரபலம் ஆனவர்களே. மிகவும் அனுபவித்து, வாய்ப்பாடகருடன் ஒத்துழைத்து வாசித்தனர். பாராட்டப் படவேண்டிய ஒன்று. பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் இன்று "ஊனமுற்றோர் தினம்" என்பதால் மட்டுமே இன்று மட்டும் அவரைக் கூப்பிட்டுக் கெளரவித்துப் பாடச் செய்து மற்ற தினங்களில் கூப்பிடாமல் இருப்பது முறையல்ல. பெரிய சங்கீத சபாக்களும் இவரைக் கூப்பிட்டுப் பாடச் சந்தர்ப்பம் கொடுத்துக் கெளரவிக்க வேண்டும். அவரின் தன்னம்பிக்கையும், பாடும் முறையும், அனுபவித்துப் பாடியதும் வியக்க வைத்த ஒன்று. மற்றத் தொலைக்காட்சிகள் சந்தர்ப்பம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொதிகை தொடர்ந்து அவரை ஆதரிக்கவேண்டும் என்பதோடு சென்னையில் உள்ள பிரபல சபாக்களும் இவரை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கவில்லை என்றால் நம் மன ஊனத்தைக் காட்டியவர்கள் ஆவோம். அனைத்து ஊனமுற்றவர்களையும், அவர்களிடம் இருக்கும் தனித்திறமையை ஊக்குவிப்பதின் மூலம் அவர்களை இந்தச் சமூகத்தில் அவர்களும் சாதாரண, சராசரி மனிதர்களைப் போல் வாழ முடியும் என்று அவர்களை நிரூபிக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஊனமுற்றோர் அனைவருக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திப்போம்!

9 comments:

 1. நல்ல பதிவு... எல்லோரும் உணர்ந்து ஆதரிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. நல்ல முயற்சி

  இந்த ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதில் வேற வார்த்தை ஏதும் பயன்படுத்தலாமா?

  ReplyDelete
 3. நல்ல பதிவு, தங்கள் ஆணையை எல்லா சபாக்களும் மதிக்க வேண்டும்.

  //திருச்செந்தூரில் சிவகுமாரன்" பாட்டு மனத்தை மிகவே உருக்கியது//

  என்ன ராகம்?னு கொஞ்சம் சொல்ல முடியுமா? நான் கேட்டதில்லை.
  மத்த பதிவுகளையும் படிச்சாச்சு!

  ReplyDelete
 4. Nalla padhivu :)

  Podhigai maari nalla channel dhan ipdi urupadiya poduranga... Matha thaniyaar tholai katchi elaam... Namitha b'day'um ... Nayanthara movie releasukum dhan adhiga imprtnce tharanga..kodumai.

  //ஊனமுற்றோர் அனைவருக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திப்போம்!//
  I second you :)

  ReplyDelete
 5. முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரது பாடல் கேட்டு அசந்துபோனேன். நீங்கள் குறிட்டதுபோல் மற்றவர்களுக்கு சளைத்தவரல்ல என்பது அவரது பாடலில்வெளிப்படும்.

  அவர்கள் எந்நாளும் கவனிக்கப்பட வேண்டுமெனும் கருத்து ஏற்புடையது.

  நன்றி

  ReplyDelete
 6. அருமை - அவ்வப்பொழுது நினைக்கிறோம் - மறந்து விடுகிறோம். என்ன செய்வது ? -

  ReplyDelete
 7. நல்ல பதிவு தலைவி :)

  ReplyDelete
 8. .பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் இன்று "ஊனமுற்றோர் தினம்" என்பதால் மட்டுமே இன்று மட்டும் அவரைக் கூப்பிட்டுக் கெளரவித்துப் பாடச் செய்து மற்ற தினங்களில் கூப்பிடாமல் இருப்பது முறையல்ல. ..

  நமது அரசு சார்ந்த தொலைக் காட்சியில் பொதுவாகவே இதுமாதிரியான நிகழ்ச்சிகளை தேவை வரும்போது மட்டும் கடமைக்காக ஒளிபரப்புவார்கள்.

  அங்கக்குறைபாடு உள்ள அன்பர்களுக்கு (நாகை சிவா மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன் / அவர் சொல்லியதும் சரியே) ஊடகங்கள் நல்ல முறையினில் விளம்பரம் தரவேண்டியது கடமையாகும். ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்குத் தரும் முக்கியத்துவம் இது மாதிரியான நிகழ்ச்சிக்கு தருவதில்லை என்பது வேதனையான விஷயம். விளம்பரப் டுத்தாவிட்டாலும் அவர்களை வேடிக்கைப் பொருளாகக் காட்டாமல் இருந்தால் சரி.

  சகோதரி திருமதி கீதா சாம்பசிவம். தாங்கள் கேட்டபடி சுவாரசியமான பல விஷயங்களைத் தனியாக தொகுத்து வைத்துள்ளேன். இருமுறை பதிவினில்
  பதித்தும் டெம்ப்ளேட் சிக்கலினால் சரியான முறையில் அமைக்க முடியவில்லை. வாழ்வியல், இறை நிலை, கல்வி போன்ற தலைப்புகளில் தொகுத்து வைத்துள்ளதை மீண்டும் பதிவினில் கொண்டு வர வழி தெரியாமல் நண்பர்கள் உதவியை நாடியுள்ளேன். வெகு விரைவில் மெய்குண்டம் என்னும் ஒரு க்ஷேத்ர மகிமையைப் பகிர்ந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். மதுரை மக்கள் அதிக அளவில் தமிழ் வலைகளில் வருவது கண்டு மிக மகிழ்ச்சி. சங்கம் கண்ட ஊரல்லவா.

  நானும் மதுரைக்காரன்தான். சிம்மக்கல் லக்ஷ்மி நாராயணபுர அக்ரஹாரத்தான். நீரில்லா வைகை. உறங்கா நன்னிலம், கல்பனா தியேட்டர், இம்பீரியல்
  டாக்கீஸ் எல்லாமும் பார்த்து, கணிணி உலகிற்கும் வந்தாச்சு. அழகான திருமலைராயர் படித்துறையின் கண் கோவில் கொண்டுள்ள அனுமரின் அதி
  பராக்ரமும். திருவிழாக்களும் ஒரு கனவுலக சொர்க்கம். அனைத்து தலைவர்களின் ஓயாத மேடைப் பேச்சு, உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசும் நட்பு வட்டம். அறியாப் பருவ இளமைகாலம் அனைவருக்கும் ஒரு வரமே. அதிலும் மதுரைக்காரர்கள் குழந்தையின் குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படும் மதுரைக் கூட்டத்திலிருந்து தனிமையைத் தேடிக் கொண்ட நானும் ஒரு மதுரைக்காரந்தான்.

  வந்துட்டோம்ல.

  அடிக்கடி வலையில் கண்ணுறுவோம். நன்றி. கணிணி தொழில் நுட்பம், குறிப்பாக பிளாக்குகளை சிறந்த முறையில் அமைக்க எனக்கு உதவ வேண்டும்.

  ReplyDelete
 9. பரிதாபப்பட்டு அல்ல..இதுபோன்ற உண்மையான திறமையை ஊக்குவிப்பதன் மூலம்,
  முடங்கிக் கிடக்கும் எத்தனையோ மனங்களின் உள்ளே ,ஒளிந்து கிடக்கும் கலைஞர்களை வெளிக்கொணரலாம்..
  நல்ல பதிவு கீதா அக்கா..

  ReplyDelete