
//பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices
என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவது
அசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை தருமம் எனச் சொல்கிறார் புலவர் பெருமான்.
மூன்றாவது நிலை. பணிவற்றவன், ஆணவ, அகங்காரத்துடன், தான் தான் கொடுக்கிறேன் என்ற இறுமாப்புடன்,
ஊர் எல்லாம் பறை சாற்றிக் கொடுப்பதும், அவற்றைப் பெறுபவர், இவன் என்ன கொடுத்துவிட்டான் என இகழ்ச்சியுடன் எண்ணத்தோடு செயல்படுவதும், மூன்றாவது கடை நிலை தருமமாகும். இந்தக் காட்சி எப்படி
இருக்கின்றது என்றால், தோலால் செய்த இரு பொம்மைகள் நாடக அரங்கிலே போர் புரிவது போலாகும்.//
சூரி சார், படிச்சுட்டேன், மேலே சொன்ன இரண்டிலே நாங்க எதுனு புரியலை, அதனால் இரண்டையுமே எடுத்துக்கிட்டேன், ஓகேயா? :D அப்புறம் நான் முன் சொன்ன பதிவிலே பெருமாளைப் "பிச்சை எடுக்கும் பெருமாள்"னு எழுதி இருப்பது நிறையப் பேரைப் பாதிச்சிருக்கு. முக்கியமாய் டாக்டருக்கும், சூரி சாருக்கும். "பட்டினி கிடக்கும் பெருமாள்"னு எழுதி இருக்கலாமேனு டாக்டருடைய எண்ணம். பட்டினி நாமாய் விரும்பி இருப்பது. ஆனால் இங்கே அப்படி இல்லை. பெருமாள் கிட்டே எல்லாமே இருக்கு, எதுவும் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சிலருடைய கவனிப்பு இல்லாமையால் அவர் பட்டினி கிடக்கவேண்டி இருப்பதோடு அல்லாமல், தன் சம்பாத்தியத்தில் உள்ளதையும் அனுபவிக்க முடியாமல் இருக்கிறார். அதனால் தான் அந்த ஆற்றாமையால் தான் இப்படி எழுதினேன். உங்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்புக் கேட்பதோடு அல்லாமல், நமக்குப் பிச்சை போட்ட ஆண்டவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா என்றும் தோன்றுகிறது. எப்போவோ அங்கே போய், ஒரு துளி எண்ணெய் கொடுத்து, அன்று மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு, ஒரு துளிக் கண்ணீர் வடிப்பதில் என்ன பயன் என்றும் சூரி சாரின் கேள்வி. இதற்கு அவருக்கு என்னுடைய பதில், திரும்ப ஒருமுறை பதிவைப் படியுங்கள் என்பதே!
//நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம்.// இந்த வரிகளைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நித்தியப் படி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்து, அதற்குப் பணமும் கொடுத்திருப்பதை வெளியில் சொல்லவேண்டாம் என்றே சொல்லவில்லை. வந்து பூஜை செய்யும் அர்ச்சகருக்கு நாங்கள் கொடுக்கும் வருமானம் பத்தாதபடியால் சரியாக வருவதில்லை. நாங்களும் நடுத்தர வர்க்கம்தான் சார், பெருமாள் இந்த அளவுக்காவது படி அளக்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் ஏதாவது செய்யணும்னு எண்ணம். அங்கே போய் இருக்க முடியவில்லை என்பதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சொன்னால் சுயபுராணமாகிவிடும். ஆனால் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதை இப்போது இங்கே போட்டதின் காரணம் கூட R.E.A.C.H.Foundation, சந்திரசேகரன், இணையத்தில் இது பற்றி எழுதுங்கள், நாங்களும் போடுகிறோம் என்று சொன்னதாலேயே. மற்றபடி கண்ணபிரான் சொன்னது எல்லாம் யோசிக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஊரில் இருக்கும் இருவேறு நபர்களின் தலைமை ஒத்துக் கொள்ளவேண்டும், அவ்வளவே! இப்போ தமிழ்த்தேனீ அவர்கள் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்ற விபரங்கள் கேட்டிருந்தார். அவருக்கும், மற்றவர்களுக்கும் விவரங்கள் இதோ:
*************************************************************************************
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வரும் வழியில் கோனேரிராஜபுரத்துக்கு முன்னால் புதூருக்கு அருகே, வடமட்டம் என்னும் ஊர் வரூம். வடமட்டத்தில் இருந்து நேரே சென்றால் பரவாக்கரை என்னும் ஊர் வரும். இது மிக மிகப் பழமையான சிவபதி என்று பேராசிரியர் திரு சு.செளந்திரராஜன்,(ஓய்வு)Ph.D.,(MAdras)., C.Chem.,F.R.S.C(London),(Department of Inorganic and Physical Chemistry, Indian Institure of Science, Bangalore), அவர்கள் சொல்கின்றார். காஞ்சி பரமாச்சாரியாரின் அருளினால் திருமூலரின் திருமந்திரத்தை ஆய்வு செய்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்களைத் தொகுத்துப் புத்தகமாய்ப் போட்டு இருக்கின்றார். அதி இந்த ஊரின் கோயில்களின் பெருமையைப் பற்றியும் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்த ஊரின் கிழக்கே, திருவீழிமிழலை, தெற்கே, கொட்டிட்டை கருவிலி,(தற்சமயம் சற்குணேஸ்வரபுரம் என அழைக்கப் படுகிறது), மேற்கில் திருநாகேச்வரம், வடக்கில் திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுநாயகமாய் உள்ளது பரவாக்கரை என்னும் கிராமம், பண்டைய காலத்தில் இதை வண்தில்லை என்று அழைக்கப் பட்டதாய்ச் சொல்லுகின்றார்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாகக் கூந்தலூர் வந்து அங்கிருந்து சற்குணேஸ்வரபுரம் என்னும் கருவிலியில் இருந்தும் முட்டையாறு என்னும் ஆற்றைக் கடந்து பரவாக்கரை வரலாம். அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத்துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறியாதவர்தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.
எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை. ஒருத்தர் ஒருத்தருக்காத் தனியாப் பதில் சொல்ல முடியலை மன்னிக்கவும், நேரமின்மைதான் காரணம். தவிர இதுக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சா ரொம்பவே பெரியதாய் ஒரு பதிவாப் போயிடும், சில விவாதங்களைத் தவிர்க்கவும் பதில் சொல்லவில்லை. பெருமாள் கோயிலின் உள்படம் தான் தேடினேன், கிடைக்கவில்லை, ரொம்பக் கஷ்டப் பட்டுப் படம் தேடி எடுத்து இருக்கேன், இப்போ re-format செய்ததிலே படங்கள் எல்லாம் back-up செய்தது சரியா இல்லைனு நினைக்கிறேன். வந்தவரைக்கும் போட்டிருக்கேன்.
*
மேடம் கீதாவுக்கு முதற்கண் எனது பணிவான நமஸ்காரம்.
ReplyDeleteதங்களின் புதிய பதிவும் அதில் கண்ட விஷயத்தையும் பார்ப்பதற்கு முன்னாலேயே
பிச்சை எடுத்த பெருமாளுக்கு இன்னொரு பின் மொழி எழுதிவிட்டேன். (I do not know whether it was in haste or waste)
எனது பதிவில் ( http://vazhvuneri.blogspot.com )
குறிப்பிடப்பட்ட அறனெறிச்சாரத்தின் முதல் நிலையில் நீங்கள்
இருக்கிறீர்கள். பணிவே இலக்கணமாக,(in abundant humility ) தாங்கள் தன்னை 2 அல்லது 3
எனச் சொல்லியிருக்கிறீர்கள். அதுவே நீங்கள் முதல் நிலை என்பதை தெளிவாக்குவதுடன், மேலும்
சொல்லப்போனால், சுபாஷிதானி சொல்வதுபோல, நீங்கள் ஒரு கெளஸ்துப ரத்னம்.அதற்கு
அக்மார்க் முத்திரை தேவையில்லை.
மேலும் அந்தப் பதிவு எழுதும்போது
உங்கள் பதிவினை நான் படிக்கவில்லை. அதனால் தூண்டப்பட்டு அது
எழுதப்படவும் இல்லை. ஒரு வாதத்திற்காக, அதைக் குறிப்பிட்டேன்.அவ்வளவு தான்.
எனது வாசகத்தில் தோஷம் இருப்பின் க்ஷமிக்கவும்.
எனது வீட்டு அரசி (மறு பாதி ! ) உங்கள் ஊருக்கு வெகு அருகாமையில் (மூன்று அல்லது
5 கி.மி தொலைவில்) உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தாளாம். அங்கும் பெருமாள்
சான்னித்யம் பிரசித்தம். நாச்சியார் கோவில் அருகே உள்ள திருச்சேரையில் உள்ள சாரனாத
பெருமாள் பள்ளிகொண்ட தலத்தில் பிறந்தவராம். நீங்கள் குறிப்பிடும் அந்த ஊரும் அந்த
ஸ்தலமும் 1950 ல் வெகு பிரசித்தமாக இருந்தது என்றும் அங்கு தன் மாமா மாமியுடன் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சென்று
அந்தப் பெருமாளை தரிசித்த ஞாபகம் இருப்பதாக சொல்கிறார்.
1990 = 1994 வருடங்களில் அந்த வழியாக சென்ற வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்கின்றன்.
2002 ஜூன் திங்களன்று திருச்சேறை வரை சென்று வந்தேன். மார்ச் 12 வாக்கில் மறுமுறை
அந்த வழி செல்லும் பிரமேயம் இருக்கிறது.
பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் என்ற ஆவல் உங்கள் பதிவினைப் படித்தபின்
உந்துகிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பர்.
அவனை வணங்கச்செய்வதும் அவனே.
எல்லாமே பெருமாள். உங்களை, என்னை எழுதச்செய்வது அந்தப் பெருமாள் தான்.
எழுதுவதும் எழுதும் பொருளும் பெருமாளே.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
சூரி சார், நீங்க ரொம்பப் பெரியவர், முதலில் எனக்கு நமஸ்காரம் எல்லாம் வேண்டாம், ரொம்பத் தப்பு, அப்புறம் உங்களோட புகழ்ச்சிக்கும் எனக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை, என் மனசிலே தோணினதை நான் எழுதினேன், உங்க மனசிலே தோணினதை நீங்க சொல்றீங்க, இதிலே எது தப்பு, எது சரினு சொல்ல நான் யார்? மற்றபடி மார்ச் 12-ம் தேதி நீங்கள் போனால் கட்டாயம் சென்று தரிசித்து விட்டு வரவும், போகும் முன்னர் எனக்குத் தகவல் கொடுத்தால், என் கணவர் அங்கே உள்ளவர்களிடம் முன் கூட்டியே சொல்லி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து வைப்பார். கிராமம் பாருங்க, அர்ச்சகர் அவருக்கு எப்போ ஒழியுமோ அப்போ தான் வரார், கூந்தலூரில் இருந்து வரணும், நீங்க போறதுக்குள் அவர் மாறிடறாரோ என்னமோ? அதுவும் சொல்ல முடியாது! :((((((((((
ReplyDeleteபடிச்சேன் அக்கா. என்ன சொல்ல என தெரியவில்லை.
ReplyDeleteநட்போடு
நிவிஷா
Corrections with regard to location of the temple are effected in my blog. Thank U
ReplyDeletesury