 இந்த விருது கொடுக்கிற விஷயம் தெரியும்னாலும் என் வரைக்கும் வரும்னு எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் விருது வாங்கி இருக்கும் மத்தவங்க அளவுக்கு எதுவும் எழுதவில்லை. இப்போவும் திவா தேர்ந்தெடுத்திருக்கும் மற்ற இருவரும் எப்போவோ வாங்கி இருக்கணும். கோமா மனோரமா தான் தெரியும், பனோரமா தெரியாதுனாலும் அதையும் கத்துக் கொண்டு, பின்னி எடுக்கிறார். ஹாஸ்யத்திலும் அப்படியே! பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! எனக்கு மனோரமாவையும் தெரியாது, பனோரமாவும் தெரியாது. மலையாள மனோரமாவானு கேட்பேன்! பனோரமா யாருங்க அதுனு கேட்பேன்! இவ்வளவு ஞானவான் ஆன என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்னு புரியலை!
இந்த விருது கொடுக்கிற விஷயம் தெரியும்னாலும் என் வரைக்கும் வரும்னு எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் விருது வாங்கி இருக்கும் மத்தவங்க அளவுக்கு எதுவும் எழுதவில்லை. இப்போவும் திவா தேர்ந்தெடுத்திருக்கும் மற்ற இருவரும் எப்போவோ வாங்கி இருக்கணும். கோமா மனோரமா தான் தெரியும், பனோரமா தெரியாதுனாலும் அதையும் கத்துக் கொண்டு, பின்னி எடுக்கிறார். ஹாஸ்யத்திலும் அப்படியே! பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! எனக்கு மனோரமாவையும் தெரியாது, பனோரமாவும் தெரியாது. மலையாள மனோரமாவானு கேட்பேன்! பனோரமா யாருங்க அதுனு கேட்பேன்! இவ்வளவு ஞானவான் ஆன என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்னு புரியலை! குமாரோ கேட்கவே வேண்டாம். கட்டுமானத் துறையிலிருந்து ஆரம்பிச்சு, லினக்ஸ் வரை அனைத்தும் இணையவழிப்பாடம் எடுத்துட்டு இருக்கார். இதிலே நான் எங்கே இருந்து வரேனு புரியலை! தப்பு நடந்து போச்சு! போகட்டும். இனி நான் யாருக்குக் கொடுக்கிறதுனு மண்டை காய யோசிக்கவேண்டி இருக்கு. அனைவருமே நண்பர்கள், நண்பிகள். யாரை விடறது, யாரைச் சேர்க்கிறது? எத்தனை பேருக்குக் கொடுக்கிறது? ஒண்ணும் புரியலை! தர்ம சங்கடம்!
முதலில் வருபவர்கபீரன்பன். இவரோட பதிவுகளை முதலில் எல்லாம் பின்னூட்டம் கொடுக்காமலே படித்து வந்தேன். யாரோ ரொம்பப் பெரியவர் நல்லா எழுதறார், நாம குறுக்கிட்டு எதுவும் எழுதக் கூடாது என்று நினைச்சால்???? கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்து தான்) இளைஞர்! அதுக்கப்புறம் நம்ம புத்தி சும்மாவா இருக்கும்? இது எ.பி. இது த.பி. இது க.பி. என்று ஒவ்வொன்றாய்க் கண்டு பிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. என்றாலும் மென்மையாகவும், அதே சமயம் உறுதியுடனும், அழுத்தம் அதிகம் காட்டாமல் வார்த்தைகளை வெளிக்கொண்டுவர முடிந்த இவருக்கு இந்த விருது எல்லாம் ஜுஜுபி!
அடுத்து யார்னு யோசிச்சால் ஜீவாநினைவுக்கு வந்தார். தெளிந்த ஞானம் இவரிடம் நிறையவே உண்டு. இவரோட பதிவுகளும், நிதானமான போக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். "அசலம்"னு பேர் வச்சிருக்கணுமோனு தோணும். இவரோடும் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்.
இன்னொருத்தர் இருக்கார். ஆனால் அவர் ரொம்ப பிசினு நினைக்கிறேன். காணோம் அவரைக் கொஞ்ச நாட்களாய். இது தவிரவும் பகிரவும், மகிழவும் வலை உலகு பூராவும் மக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் உரித்தான இந்த விருதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். இப்போ சொல்லி இருக்கும் மூன்று பேரும் செய்யவேண்டியதைக் கீழே குறிப்பிட்டிருக்கின்றேன். அவங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ இவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். திவாவுக்கு என் நன்றி.
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
 
 





























