எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 27, 2010

தேர் நிலைக்கு வந்தாச்சு, இனிமே எப்போவோ!

என்னவோ பிரார்த்தனை மாதிரி ஒரு மாசமா சனி, ஞாயிறுகளில் வெளியே கிளம்பறாப்போல் ஆயிடுது. முதல்லே கண் ஆஸ்பத்திரி விஜயம். அங்கே நடந்த ஆச்சரியங்களினால் வாய் அடைச்சுப் போய் வந்தால் வழியிலே இந்த சூப்பர் சிங்கர் விளம்பரங்கள். அட ஒரு இரண்டு மாசம், மூணு மாசம் வெளியே வரலைனா உலகம் இவ்வளவா மாறும்?? ஆச்சரியமா இருந்தது. இப்படிக்கூட தொலைக்காட்சி வெறி பிடிச்சு அலைவாங்களானு. அன்னிக்குத் தான் முதல்லே ஏ.சி. பஸ் பிரயாணம். இல்லை, இல்லை, ஏ.சி. பஸ் போயிருக்கேன் தான், ஆனால் எல்லாம் தொலைதூரப் பயணம். அன்னிக்குப் போனது நரகப் சீச்சீ, நகரப் பேருந்திலே ஏ.சி. பேருந்து. வேளச்சேரியிலே இருந்து அம்பத்தூர் தொழில்பேட்டைக்கு வந்துட்டு இருந்தது. வடபழநி சிக்னலில் நின்னுட்டு இருந்தது பேருந்து. சரினு ஏறிட்டோம். மற்றபடி ஸ்டாப்பிங்கிலே நின்னுட்டு இருந்தால் என்னாலே நிச்சயமா ஏற முடியாது. ஏறும்போதே விசில் கொடுத்துடுவாங்களே! அட விசிலை எனக்குக் கொடுக்க மாட்டாங்க, பேருந்து கிளம்பக் கொடுத்துடுவாங்கனு சொன்னேன். பிரயாணம் அன்னிக்கு வெகு சுகம். போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை. அங்கே இருந்து அம்பத்தூருக்கும் செளகரியமா சொகுசுப் பேருந்து கிடைச்சதா? அலுப்பே தெரியலை. அதான் போலிருக்கு திருஷ்டி, பயங்கர திருஷ்டி.

போனவாரம் வேறே ஒரு விஷயத்துக்காகத் தரமணி போனோமா? தரமணிக்கு ரயிலில் போகணும்னு முடிவு பண்ணியாச்சு. தரமணிக்குப் போக சென்னைக் கடற்கரை போயிட்டு அங்கே இருந்து வேளச்சேரிக்குப் போகும் ரயிலில் போகணும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் செல்லும் தொடர் வண்டிகள் அவை. நான் அந்த வண்டிகளிலே போனதே இல்லை. அன்னிக்குத் தான் முதல் முறையாகப் பிரயாணம். பாலத்தில் மேஏஏஏஏஏஏஏஏஏலே ரயில் வண்டிகள் செல்கின்றன. ஸ்டேஷனும் நல்ல உயரத்தில் இருக்கா? கீழே பார்க்கவே கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாத் தான் இருந்தது. ஆனாலும் ஒரு த்ரில். முதல்முறைங்கறதாலே பட்டிக்காட்டான் ஆனையைப் பார்த்தாப்போலனு வச்சுப்போமே. இப்போவும் ஆனையைப் பார்க்கிறது அப்படித் தான்கிறது வேறே விஷயம். சென்னை மெரினா கடற்கரை அங்கே இருந்து நல்லாத் தெரிஞ்சது. அப்படியே அருகே இருந்த குடி இருப்புகள். அதைப் பார்த்தால் தான் வயித்தெரிச்சல். எப்படி எப்படி எல்லாமோ வீடுகள் கட்டிக்கொண்டு எந்த எந்தச் சந்து பொந்துகளில் எல்லாம் மக்கள் இருக்காங்க?? ஆஹா, நாம் சொர்க்கத்தில் இருந்துண்டு இதைக் குறை சொல்றோமேனு எனக்கே வெட்கமாப் போச்சு. அதைப் பார்த்தால் நிஜம்மாவே கண்ணில் நீர் வந்துடுச்சு. வழி நெடுக இப்படியே பார்க்க நேர்ந்தது.

ஆனால் பிரயாணத்தில் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. ஏனெனில் கூட்டம் அவ்வளவாய் இல்லை. குறைந்த கூட்டமே. திருமயிலையில் கொஞ்சம் ஏறினாங்க. திருவான்மியூரில் இறங்கிட்டாங்க. என்றாலும் விரல் விட்டு எண்ணறாப்போல் தான் மக்கள். பெண்கள் தனியா இந்த வண்டிகளில் பிரயாணம் செய்வது பாதுகாப்பா என்ற கேள்வி தோன்றியது. ஸ்டேஷன்களும் பிரம்மாஆஆஆஆஆஆண்டம் என்றால் அப்படி ஒரு பிரம்மாண்டம். பிரமாதமான வசதிகள். கழிப்பறைகளும் கட்டிட்டு அதை எல்லாம் நல்ல பெரிய திண்டுக்கல் பூட்டு, அலிகர் பூட்டு, அதைத் தவிர கோத்ரெஜ் பூட்டு எல்லாம் போட்டுப் பூட்டி வச்சிருக்காங்க. ஆண்களுக்கான கழிப்பறைதான் திறந்திருக்கு. அதுவும் உள்ளே எட்டிப் பார்க்க முடியும் நிலையில் இல்லைனு சொன்னாங்க. ஏன் பெண்களுக்கு இயற்கை உபாதை வராதா? அவங்களுக்குத் தேவை இல்லையா? அதோட கீழே இறங்க அந்த நடைமேடைகளிலே எந்தப் பக்கம்னு பார்த்து அதிலே வழி கண்டு பிடிச்சு இறங்கணும். எஸ்கலேட்டர் வேறே வச்சு இருந்திருக்காங்க. நல்லவேளையா அது இப்போ வேலை செய்யலை. படிகளோ கலங்கரை விளக்கப் படிகள் போல சுத்திச் சுத்திப் போறது. நம்ம ரங்க்ஸ் கீழே இறங்கிட்டுத் திரும்ப எப்படிப் போகறதுனு சில இடங்களில் முழிச்சார். அந்தப் படிகளில் இறங்கிக் கீழே வந்து வெளியே வந்தால் அத்துவானம்! முக்கியச் சாலைக்கு வரப் பத்து நிமிடங்களாவது நடக்கணும். நல்லவேளையா நம்ம ரங்க்ஸ் கூட வந்தாரோ, பிழைச்சேனோ.

நேத்திக்குப் பாருங்க வெளியே கிளம்பினா, கிளம்பறச்சேயே ரெண்டு பேரும் கத்தியை எடுக்கலாமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டோம். எங்களுக்குள்ளே இடி இடிச்சு, மழை பெய்யறதுக்குள்ளே மானம் இடிக்க ஆரம்பிச்சதா? சரினு புத்திசாலித் தனமா நெட்டை டிஸ்கனெக்ட் பண்ணி வச்சேன். சும்மா இருக்காம ரங்க்ஸ் கிட்டே அதைப் பத்திச் சொல்ல, அவருக்கு என்னமோ மூட் அவுட்டா? ரொம்ப சந்தோஷம்னு எரிந்து விழுந்தார். சரி, இப்போப் பேசக் கூடாதுனு வாயை மூடிண்டேன். போகாமல் இருந்துடலாமானு ஒரு சின்ன சபலம். ஆனால் வரேன்னு தொலைபேசிச் சொல்லியாச்சு. கட்டாயம் போகவேண்டிய உறவினர்கள் வீடு. சரினு பேசாம நடையைக் கட்டினேன். பூட்டை வீட்டிட்டு, ச்சீச்சீ,(இந்த மாது டிராமா தாக்கம் திடீர்னு) வீட்டைப் பூட்டிட்டு அவர் வண்டியை எடுத்துண்டு வந்தாரா? வண்டியிலே அம்பத்தூர் பேருந்து நிலையம் போனோமா? போக வேண்டிய இடத்துக்குப் பேருந்தில் தான் போயாகணும். அவர் வண்டியை வைக்கப் போனாரா? பூ வாங்கணும்னு நான் பூக்கடை கிட்டே நின்னேனா? அப்போ ஒரு வண்டி வந்திருக்கு. நான் பார்க்கலை.

அவர் வண்டியை வைச்சுட்டு வரும்போதே கையைக் காட்ட, நான் பூக்கடையைக் காட்டக் கடைசியில் பூக்கடைக்கு அவர் வரவேண்டியதாப் போச்சு. நின்னு, நிதானமாப் பூ வாங்கற வரைக்கும் பேருந்து நிக்காதே? அது போய் இன்னொண்ணும் வந்தாச்சு. அது வெஸ்டிப்யூல் வண்டி. முன்னாலே ஏறப் போனவளை ஏறாதேனு சொல்லிட்டுப் பின்னாடி போய், ''ஏம்பா? உட்கார இடம் இருக்கா? வயசானவங்க, நிக்க முடியாது!" னு சொன்னாரோ இல்லையோ? தூக்கிவாரிப் போட்டுடுத்து எனக்கு. யாரைச் சொல்றார் வயசானவங்கனு?? தன்னைத் தானே? ஆனால் கை என்னமோ என்னை இல்லை காட்டுது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும். இந்த வண்டியே ஏறக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். நல்லவேளையாக் கண்டக்டர் காதிலேயே வாங்காமல் விசில் கொடுக்கவே வண்டியும் கிளம்பிடுச்சு. அவர் ஏறப் போனவர் நான் ஏறலைனு தெரிஞ்சு திரும்பி வந்தார். என்ன? அவர் ஏறி இருந்தா நான் பேசாம வீட்டிற்குப் போயிருக்கலாம்தான். ஆனால் சாவி அவர் கிட்டே இருந்தது. வழக்கம்போல் நான் ஹாண்ட்பாக் கொண்டு வர பயங்கர எதிர்ப்பைத் தெரிவிக்க கையிலே பைசாக் கூட இல்லை. திரும்பிப் போனாலும் அக்கம்பக்கம் எங்கேயாவது தான் அவர் வர வரைக்கும் உட்காரணும். அண்ணா கூட ஊரில் இல்லை. அடுத்த பஸ்ஸுக்கு வந்து நின்னோமோ, இல்லையோ, ஆரம்பிச்சது ரெண்டு பேருக்கும்.

உன்னாலே தான்.

இல்லை உங்களாலே தான்.

நான் தான் ஏறுனு சொன்னேனே? நீ தான் பூ வாங்கப் போயிட்டே? நெசப்பாக்கத்தில் பூவே கிடைக்காதா என்ன?

இங்கே நல்லா இருக்கும் பூ. நெருக்கமாத் தொடுத்து இருப்பாங்க. அங்கே தள்ளித் தள்ளித் தொடுத்திருக்கும்.

உனக்கு இன்னும் மதுரையிலே இருக்கற நினைப்புப் போகலை. மதுரையிலே வாங்கினாப்போல் இங்கெல்லாம் கிடைக்காது.

இப்போ எதுக்கு மதுரையை இழுக்கறீங்க? நீங்க சொல்ல வேண்டியது தானே? பூ வாங்காதேனு. நான் வந்திருப்பேனே?

எங்கே? நீ நடந்து வரதுக்குள்ளே அந்த பஸ் போயிடுத்து. அதிலே கூட்டமே இல்லை.

மனசுக்குள்ளே நல்லவேளையா அந்த பஸ்ஸிலே நாம ஏறலை, கையிலே ஒரு பைசாக் கூடக் கிடையாதுனு தோணிச்சு. ஹோட்டல்னாலும் மாவாட்டிட்டு வந்துடலாம். பஸ்ஸிலே என்ன பண்ணறது? அதுக்குள்ளே அங்கே ஷேர் ஆட்டோக்காரங்க மொய்க்க ஆரம்பிச்சாங்க. அதிலே உட்கார முடியாதுனு தெரியும், அதனால் பேசாமல் இருந்துட்டார். ஆனால் அடுத்து வந்தது பாருங்க டாட்டாவோட புது டாக்சி. அது வரவும் அதிலேயும் அவங்க பில்லர் போறோம்னு சொன்னதும் ஏறுனு ஆனை, சீச்சீ, ஆணை! எங்கே ஏறறது? அது என்னமோ கைலை யாத்திரைக்குப் பரிக்ரமா போன குதிரையை விட உயரம். படியெல்லாம் இல்லை. குதிரையிலே தாவி ஏறுகிறாப்போல் ஏறணும். உள்ளே இருந்த முசல்மான் பெண்ணுக்கு எனக்கு உதவணும்னு எண்ணம் ஆனால், அவங்களையும் சேர்த்துக் கீழே நான் இழுத்துடுவேனோனு ஒரு எண்ணம். அப்புறமா அவங்க திரும்ப ஏறணுமே? பயந்துட்டாங்க. ஒரு மாதிரி, ஒரு மாதிரி தான் என் காலை வச்சுண்டு ஏறிட்டேன். இடது காலைக் காணோமே? அப்புறம் பார்த்தா ஒரு காலைத் தான் வச்சு ஏறி இருக்கேன் போல. மெல்ல இடது காலை மேலே கொண்டு வந்தேன். அது சண்டித் தனம் ஜாஸ்தி பண்ணும். மெல்ல சமாதானப் படுத்தி மேலே வந்து உட்கார்ந்தாச்சு.

போனாங்க, போனாங்க, போனாங்க, மெதுவாஆஆஆஆஆஆஆஆப்போனாங்க. ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிறுத்தி நிதானமாக் கூப்பிட்டு, தேர் கூடச் சீக்கிரமாய்ப் போயிடும். அண்ணா நகர் வரச்சே லேசாத் தூறல். திருமங்கலம் தாண்டும்போது பயங்கரக் காற்று. வண்டியே தூக்கிடுமோனு தோணிச்சு. நல்ல வேளையா காத்திரமா நாங்க உட்கார்ந்திருந்ததாலே வண்டிக்கு ஒண்ணும் ஆகலை. திருமங்கலம் தாண்டினதும் மழை கொட்ட ஆரம்பிச்சது. கொட்டறதுனா நிஜம்மாவே வானம் பொத்துக்கொண்டு கொட்டுது. காற்று ஒரு பக்கம். மழை இன்னொரு பக்கம். முதல்லே சாரல் அடிக்கலை. அப்புறமாச் சாரல் ஜாஸ்தியாச்சு. இந்த வண்டியிலே ஜன்னல் மாதிரித் தான் இருக்கு. அதுக்கு மூட ஒரு கித்தான் தான் ஜிப் வைச்சு. அதை இழுத்தால் மழையிலே ஒண்ணும் பண்ண முடியலை. கொண்டு போன புதுத் துணிகள் நனையாமல் இருக்க ரங்க்ஸ் கிட்டேக் கொடுத்து வச்சேன். இறங்க வேண்டியவங்களுக்கு எங்கே இருக்கோம்னு புரியலை. அதுக்குள்ளே சாலைகளிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே அந்த நூறடி சாலையிலே வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பிச்சது. எல்லாரும் இறங்கியாச்சு, நாங்க ரெண்டு பேர்தான் பில்லர்லே இறங்கணும். டிரைவர் கிட்டே அவருக்கு உதவியாக வந்த ஆள் இவங்க நெசப்பாக்கத்திலே இறங்கணுமாம். அங்கே கொண்டு விடுனு கேட்டுப் பார்த்தார். டிரைவர் ஒத்துக்கலை. உதயம் தியேட்டர் கிட்டே இறக்கிவிட்டுட்டார். மழை கொட்டிட்டு இருக்கு. அங்கே இருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழல் குடையில் ஒரு நூறு பேர் இருந்தாங்க. நூற்றி இரண்டாவதாக நாங்க போயும் ஒண்ணும் முடியலை. அங்கே நின்னுட்டு இருந்த ஆட்டோவைப் பிடிக்கலாம்னா ஆட்டோக்காரரைக் காணோம்.

மெல்ல மெல்ல விசாரித்துப் பக்கத்து டீக்கடையிலே டீ குடிச்சுட்டு இருந்த ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு வீட்டு விலாசம் சொல்லிக் கொண்டுவிடச் சொன்னோம்.அப்போவும் மழை. வீட்டுக்குள்ளே போய் அவங்க வீட்டு ஹாலை எல்லாம் ஈரமாக்கிட்டு உட்கார்ந்தோமா! மழை சொல்லி வச்சாப்பல நின்னது. இப்போ வெள்ளம் வீட்டுக்குள்ளே எங்க உடைகளிலே இருந்து ஓட ஆரம்பிக்க, தாங்காதுனு வேறே துணி கொடுத்து மாத்திக்கச் சொன்னாங்க. அப்புறமாப் பேசி முடிச்சுட்டுக் கிளம்பினோம். மறுபடி பில்லர். அங்கே மீண்டும் அதே டாட்டாவின் டாக்சி வர, நான் மறுக்க, ஒரு கோயம்பேடு வண்டி வர, அதிலே ரங்கு ஏறக் கையிலே பைசா இல்லாத நானும் அலறிப் புடைச்சுண்டு கூடவே ஏறினேன். வண்டியிலே நல்லவேளையா ஒரு பையர் எங்க முகத்தைப் பார்த்துட்டு என்ன நினைச்சாரோ எழுந்து இடம் கொடுத்துட்டார். ரெண்டு பேருக்கு, இரட்டை சீட்டாய்க் கிடைக்கவே குஷியில் ஆழ்ந்து போனேன். ஆனால் பாருங்க, அங்கே தான் விதி சிரித்தது. பலமாய்ச் சிரித்தது.

வண்டி ஊர்வலம் ஆரம்பிச்சது. ஹிஹிஹி, நிஜம்மா ஊர்வலம்தான் எங்க கல்யாணத்திலே ஊர்வலத்திலே நானும் உட்காரலைனு எங்க மாமியாருக்கு வருத்தம். அதைப் போக்கவோ என்னமோ தெரியலை, ஏழு மணிக்கு உட்கார்ந்தோம் அந்த வண்டியிலே பில்லர் தாண்டி நூறடி சாலைக்கு வர எட்டு மணியாச்சு. அப்புறமா அங்கே இருந்து வடபழநி வர ஒன்பது மணியாச்சு. எங்களுக்கு முன்னாடி இருந்த அம்மா தாம்பரத்தில் ஐந்தரை மணிக்கு ஏறினாங்களாம். எல்லாருக்கும் நல்ல பசி வேறே! டிரான்ஸ்போர்ட்டிலேயே டிபன் கூட ஏற்பாடு செய்திருக்கலாமோ என்னமோ. ஒரு வழியாக் கோயம்பேடு வர ஒன்பதே கால் மணி. சீக்கிரம் இல்லை இது? வண்டி ஓடினதே வடபழநி தாண்டி "ஓம் உலகநாதன்" வீடு தாண்டினதும் தான். அதான் சீக்கிரமா ஒன்பதேகாலுக்கு வந்துடுச்சு. அங்கே நல்லவேளையா அம்பத்தூர் பஸ் நின்னுட்டு இருக்க இடமும் கிடைக்க அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டே ஏறிக்கொண்டோம். அதைவிட அதிர்ஷ்டமா அம்பத்தூரில் ராக்கி தியேட்டர் கிட்டே இறங்கி எதிர்ப்பக்கமா நடந்து வரணுமேனு அலுப்புத் தட்ட யோசிக்கும்போது ரவுண்டாணாவிலேயே வண்டியை நிறுத்தி இறக்கி விட்டுட்டாங்க. அப்பாடானு வாழ்த்திட்டு அங்கே வச்சிருந்த எங்க வண்டியை எடுத்துட்டு வீட்டுக்கு வந்து சேரும்போது பத்தே முக்கால். ரங்க்ஸ் மட்டும் பசி தாங்க முடியாமல் சாப்பிட நான் பால்,பழம் சாப்பிட்டுட்டுப் படுத்தேன்.

போறுண்டா சாமி! தேர் நிலைக்கு வந்தாச்சு. இனிமே எப்போவோ! அது சரி, ஒரு நாளைக்கு என்னிக்கோ போகவே எனக்கு இவ்வளவு அலுப்பும், சலிப்புமா இருக்கே? தினம் தினம் அந்த வண்டியிலேயே தங்கள் பிழைப்பை நடத்தும் டிரைவரும், கண்டக்டரும் என்ன செய்வாங்க? அதிலும் அன்னிக்கு கண்டக்டர் ரொம்பவே சோர்ந்து போயிட்டார். அந்த பஸ்ஸிலே தினம் தினம் பயணிக்கும் அன்றாடப் பயணிகள் நிலைமை?? நினைக்கவே முடியலை! வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பேருந்திலேயே கழிக்கறாங்களே? ஏன் இப்படி? போக்குவரத்து கொஞ்சம் கவனம் கொடுத்துப் பார்த்தால் ஒழுங்கு செய்ய முடியும்கிற நிலைமை, ஆனாலும் யாருக்கும் அக்கறை யில்லை. யாருக்கும் வெட்கமில்லை. எப்போ மாறும்?? என்னிக்கு? எந்த வருஷம்?

17 comments:

 1. கீதாம்மா! ஹோட்டல்ல காசில்லைன்னா மாவாட்டலாம். ஆனா பஸ்ஸிலே காசில்லைன்னா டிரைவிங் தான் செய்யனும்.இருங்க, தாவங்கட்டைல ஆள்காட்டி விரலால் தட்டிகிட்டே மோட்டுவலையை பார்த்து கிட்டு யோசிச்சு பார்த்து கிட்டு இருக்கேன் அந்த காட்சியை....கொஞ்ச நேரம் யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க:-)

  ReplyDelete
 2. // தூக்கிவாரிப் போட்டுடுத்து எனக்கு. யாரைச் சொல்றார் வயசானவங்கனு?? // சாம்பு மாமா சொன்னா கரெக்டாதான் இருக்கும்...;PPP

  ReplyDelete
 3. யப்பா...எப்படியோ படிச்சிட்டேன் தலைவி ;))

  ReplyDelete
 4. அன்னிக்கு நானும் மழைல மாட்டினேன். நூறடி ரோட கிராஸ் பண்ண முடியாம ஒரு மணி நேரம் போராட்டம்.

  ReplyDelete
 5. திருமங்கலம் மெட்ராஸ்ல யும் இருக்கா!!. ஆமாம். வட பழனி பூனமல்லி ஹை ரோட் பக்கம் எல்லாம் 5 மணியை தண்டினா ஊர்ந்து தான் போகணும். ஒண்ணுல பேதமில்ல!! பஸ் கார் நு. இதுல ஸ்கூட்டீயும் பைக்கும் பண்ணற அட்டகாஸ ஜாலங்கள்! நெளிஞ்சு பிழிஞ்சு!! இதுல கணவன் மனைவி பிதுங்கி வழியற குழந்தைகள், நாத்தனார் வேற தொங்கிண்டு அந்த மோபட்ல போகாட்டா என்ன? காது அடைச்சு போற ஹார்ன் சத்தம், லாரிகளின் வித விதமான பிளிறல்கள்!! அப்பா மனுஷனுக்கு பொறுமைடா சாமி!! பாவம் தான் ஜனங்கள்!! இதுல டிஸம்பர்ல எங்களை மாதிரி விஸிட் அடிக்கறவங்களுக்கு புன்னகையை வர வைக்கறது பட்டும் தங்கமுமா மின்ன போட்டுண்டு , எக்கசக்க பூ வேற அழகா வைச்சுண்டு கணவரோட பைக் ல போற பெண்கள் தலையை சுத்தி சிவப்பும் வெள்ளையும் கலந்த ஸ்கார்ஃப் !! விஷப்பனியாம்!! இந்த பட்டு புடவைக்கு மேல ,மெட்ராஸ் பெட்ரோல்,தூசி புழுதிக்கு நடுவுல பனி தெரியும்?!! அது ரொம்ப ஜாஸ்திப்பா:))அப்ப இந்தப் பக்கமெல்லம் வந்தா ஸம்மர்ல கூட ரஜாய்ல தான் உருண்ணுண்டு போணும் !!

  ReplyDelete
 6. ஹிஹி அபி அப்பா, டிஸ்டர்ப் எல்லாம் பண்ணலை, எனக்குத் தோணினது என்னன்னா, அரசு வேலையிலே இருந்திருக்கலாமோனு! அப்போ டிக்கெட்டே வாங்க வேண்டாம் பாருங்க, அதான்! :P:P

  ReplyDelete
 7. தாக்குடு, உன்னை................. உன்னை,.......... மாமா தன்னைத் தான் சொல்லிண்டார். அவர் என்னைவிடப் பெரியவராச்சே? அதான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர் இரு, இரு! :P:P

  ReplyDelete
 8. ஹிஹிஹி,கோபி, ரொம்பப் பெரிசாப் போயிடுத்து. பப்ளிஷ் கொடுத்ததும் தான் தெரிஞ்சது. :D

  ReplyDelete
 9. எல்கே, வடபழநி வந்ததும் ,உங்களை நினைச்சிண்டேன். ஆனால் மழையிலே மாட்டினது உதயம் தியேட்டர் பக்கத்து பஸ் ஸ்டாப்பிலே. சொட்டச் சொட்டன்னா சொட்டச் சொட்ட நனைஞ்சு போயாச்சு.

  ReplyDelete
 10. //கணவரோட பைக் ல போற பெண்கள் தலையை சுத்தி சிவப்பும் வெள்ளையும் கலந்த ஸ்கார்ஃப் !! விஷப்பனியாம்!! //

  வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், இங்கே மார்கழி மாசம் பனி, பனினு ரொம்பப் படுத்துவாங்க. நமக்கு அதிலும் குறிப்பா எனக்கு என்னமோ வியர்த்துக் கொட்டும். ஏ.சி. போட்டுண்டு தான் படுத்துப்போம். நீங்க சொல்றாப் போல் கொஞ்சம் குளிர் ஜாஸ்தின்னா ரஜாய் இரண்டு, மூணு கேட்பாங்க போலனு நாங்களும் பேசிப்போம். :)))))))))))

  ReplyDelete
 11. இங்கே ஒண்ணும் பனியெல்லாம் தெரியாது. நீங்க சொல்றாப்போல் புழுதியும், பெட்ரோல், டீசல் கலந்த காற்றும் தான்.

  ReplyDelete
 12. என்னது பிரதமர் இந்திரா காந்தி வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழித்து விடுகிறேன் என்று சொல்லி உள்ளாரா.

  (MRTS is now almost 3 years old matter)

  ReplyDelete
 13. /எல்கே, வடபழநி வந்ததும் ,உங்களை நினைச்சிண்டேன். //

  hmm. neengal sollum athe neram naan 100adi rottil irunthen

  ReplyDelete
 14. ஹிஹிஹி, ராம்ஜி யாஹூ, அதெல்லாம் இல்லை, மன்னர் மானியம் ஒழிக்கப் பட்டு வங்கிகள் தேசீயமயமாக்கப் பட்டனவாம்! :P

  நான் தான் சொல்லிட்டேனே, முதல்முறையா MRTS லே பிரயாணம் பண்ணினதாலே பட்டிக்காட்டான் ஆனையைப் பார்த்தாப்போலனு! இதுக்கு மேலே என்ன?? :P:P:P:P:P:P:P:P:P

  ReplyDelete
 15. ம்ம்ம்ம் நாங்க அப்போ டாக்சிக்குள்ளே உட்கார்ந்துண்டு இருந்தோம், ஆனாலும் என் ஜன்னல் பக்கம் மழைச் சாரல். அப்போவே புடைவை நனைய ஆரம்பிச்சுடுத்து. :(

  ReplyDelete
 16. பீக் அவர்லே போயிட்டு புகார் பண்ணா என்ன அர்த்தம்? :P
  வழக்கம் போல நகைச்சுவையாக எழுதி இருக்கிங்க :-)))

  ReplyDelete
 17. பீக் அவர்லே போயிட்டு புகார் பண்ணா என்ன அர்த்தம்? :P//

  @திவா, அது என்னமோ உண்மைதான், என்றாலும் இப்படியா அங்குலம் அங்குலமா நகரும் வண்டிகள் எல்லாம்? எங்களுக்குப் பரவாயில்லை. முன்னாலே இருந்த அம்மாவுக்கு அவசரமா எங்கேயோ போகணும், பின்னாடி மூணு பொண்ணுங்க அலுவல் முடிஞ்சு வீடு திரும்பறாங்க. அவங்க வீடுகளிலே இருந்து அடுத்தடுத்துத் தொலைபேசியில் விசாரணை. தவிச்சுப் போயிட்டாங்க எல்லாரும்! :(

  ReplyDelete