எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 10, 2012

நான் ஆணையிட்டால்!

ஹெஹெஹெ(எத்தனை நாளைக்கு ஹிஹினு சிரிக்கிறது! போரடிக்குது) தலைப்பைப் பார்த்துட்டு அசந்து போயிருப்பீங்களே! எங்க வீட்டுப் பிள்ளை: இப்போத் தான் இரண்டு நாளைக்கு முன்னாடி முதல் முறையாப் பார்த்தேன். நிஜம்மாங்க. நம்பியார் சாட்டையாலே அடி வாங்கறச்சே கையைத் தட்டிட்டு விசிலடிக்கலை! அவ்வளவு ரசிச்சுப் பார்த்தேன். இன்னும் பாலும் பழமும், பாசமலர், பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும் இந்தப் படங்கள்ளாம் பாக்கி இருக்கு பார்க்கிறதுக்கு.


அதிலே பாருங்க, ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மண்டையை உடைச்சுட்டு இருந்தது. சரோஜா தேவி தான் பாலும் பழமும் படத்திலே செத்துப் போய்ச் சுடுகாட்டிலே போய் எரிச்சுட்டு, "போனால் போகட்டும் போடா!" வெல்லாம் சிவாஜி பாடினதுக்கப்புறம் எங்கேருந்து ஸ்விட்சர்லாந்திலே இருந்து வந்தாங்கனு! மண்டை உடைஞ்சு குழம்பியே போயிடும் போல இருந்தது. பலரையும் கேட்டேன். அல்பம்னு ஒரு பார்வை! பதிலே சொல்லலை!



கடைசியா திவா தான் என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சுட்டு, அந்த சரோஜாதேவி போன ட்ரெயின்லே ஆக்சிடென்ட்(அப்படித்தானே திவா?) ஆகும்னு சொல்லிட்டு, வேறே யாரையோ ஜரோஜா தேவினு ஜிவாஜி நினைச்சுட்டு அழுவார்னு சொல்லி சந்தேகத்தைத் தீர்த்து வைச்சார். அது கேட்டதுக்கு அப்புறமா படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு! சே வழக்கமான மசாலாதானா! அப்புறமா 2-ஆம் கல்யாணம் பண்ணிட்டு இருக்கிற செளகார் என்ன ஆவாங்கனு கேட்டேன். தியாகினு சொன்னார்.


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படத்தைப் பார்க்கவே வேண்டாம்னு ஏகமனதாக முடிவெடுத்துட்டேன்.


 தில்: ஹிஹி, தமிழ்ப் படம் தான். விக்ரம் நடிச்சது. வழக்கமான மசாலாப் படம். லாஜிகலாவே இல்லை. சிவப்பதிகாரம்: இதிலே வர ஹீரோ ஜீவானு நினைச்சேன். இல்லையாமே. யாரோ விஷால்னு சொன்னாங்க. அந்தப் பேரில் எல்லாம் ஹீரோ இருக்கிறது இப்போத் தான் தெரியும்னு சொன்னா, இல்லையே, "கோ" படத்திலே கூட நடிச்சிருக்காரே, நீங்க பார்த்தீங்களேனு மா.பெ. சொல்றா. அ.வ.சி. "கோ" என்ன படம்னு ம.உ.மி. புரியலை. விட்டுட்டேன்.


 வந்தாளே மகராசி: இது நம்ம மு.அ. நடிச்சது. இதுவும் இரட்டை வேடம். வெளுத்துக்கட்டிட்டாங்க. நடிப்பில் மட்டும் இல்லை; அதிலே வந்தவங்களையும் தான். எம்.என்.ராஜம் தான் வில்லி. எல்லாமே ஓகே ரகம். தனியா ஹாஸ்ய நடிப்பு இதிலே இல்லை. நம்ம மு.அ. நடிக்கிறதே ஹாஸ்யமாத் தான் இருக்கு. படமே ஹாஸ்யம் தான். பின்னே! சக்குபாய் காலத்துக்கதை. அது என்னங்க இந்த சினிமாவிலே மட்டும் ஹீரோயின் பாத்திரம் தேய்க்கனு இம்புட்டுப் பெரிய பாத்திரங்களாப் போடறாங்க! வீட்டிலே தினசரி புழங்கும் பாத்திரங்களாவே இருக்காது. அவ்வளவு பெரிய அண்டா, குண்டாவிலே (கல்யாணத்துக்குச் சமைக்கலாம்) தினமும் சமைப்பாங்களா என்ன? அப்புறமா 4 மூட்டை நெல்லை ஒரே ராத்திரியில் புழுக்கறாங்களாம். கடவுளே! பார்க்கிறதிலே குறைச்சல் இல்லை; இது வேறேயானு முணுமுணுக்கிறது யாரு? அதெல்லாம் சென்னை வந்துட்டாப் பார்க்க மாட்டேனாக்கும். வந்துடுவோமுல்ல!



அருஞ்சொற்பொருள்: இல்லையே, "கோ" படத்திலே கூட நடிச்சிருக்காரே, நீங்க பார்த்தீங்களேனு மா.பெ. சொல்றா. அ.வ.சி. "கோ" என்ன படம்னு ம.உ.மி. புரியலை. விட்டுட்டேன். மா.பெ.=மாட்டுப் பெண் ; அ.வ.சி.= அசடு வழியச் சிரித்தேன். ம.உ.மி.= மண்டை உடைஞ்சது தான் மிச்சம். 


 மு.அ. = முதல் அமைச்சர்

12 comments:

  1. எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ் ஆகறச்சே எப்படிச் சேர்ந்துக்குதுனு புரியலை! :(

    ReplyDelete
  2. //எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ் ஆகறச்சே எப்படிச் சேர்ந்துக்குதுனு புரியலை! :(//

    பத்தி பிரிக்கும்போது இரண்டு "Enter" தட்டி இரண்டு Line Gap கொடுங்க...

    சினிமா பார்க்கறதே இல்லை இப்பல்லாம்.... போரடிக்குது....

    ReplyDelete
  3. க பா ப ப ம கா மி. (கடைசி பாரா ......... மிச்சம்) ஐயோ - சுருக்கமா எழுதி எழுதி - இப்படி என்னை பாயைப் பிராண்ட வச்சுட்டீங்களே!

    ReplyDelete
  4. ஹா, ஹா பழயபடங்கள் பார்த்த எபக்டில் எழுதி இருக்கீங்க இல்லியா அதான் பத்தி பிரியமாட்டேங்குதோ என்னமோ?

    ReplyDelete
  5. தமிழ் படத்துல லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது. அப்புறம் படம் பார்க்கிற ஆசையே போயிடும்.

    ReplyDelete
  6. நீங்க வேறே வெங்கட் நாகராஜ், 2 என்டராவது! 3,4 என்டர் தட்டறேன். இப்போக் கூடப் போய்ப் பத்தியை மிகவும் இடைவெளி விட்டுப் பிரிச்சேன்! ம்ஹும்! :((((

    ReplyDelete
  7. வாங்க கெளதம் சார், ஹிஹிஹி, உ.க.ப.ச.தெ.போ(உங்களுக்குக் கடைசிப்பத்தி சரியாத் தெரியுது போல) அப்போ சிலருக்குப் பத்தி தெரியுதுனு நினைக்கிறேன்.

    ஹூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே! :P: Pவர வர எதுக்கு சந்தோஷப் படணும்னு இல்லாமல் ஆக்கிடுச்சு கூகிள்
    !

    ReplyDelete
  8. ஹிஹிஹி, லக்ஷ்மி, அதே அதே!

    ReplyDelete
  9. வாங்க விச்சு, அதான் காதிலே முழம் முழமாப் பூ சுத்தறாங்களேனு சொல்றீங்க! சரி! :)))))

    ReplyDelete
  10. நீங்க சொல்லியிருக்கற லிஸ்ட்டில் எ.வீ.பி.யும், பா.ம ரும் மட்டும் பார்த்திருக்கேன். மற்ற படங்கள் பார்த்ததில்லை. ஆனால் பாட்டு எல்லாம் கேட்டிருக்கேன்.

    ReplyDelete
  11. இந்தச் சுருக்கம் புரியவே எனக்கு ரொம்ப நேரம் ஆகிறது கௌதமன்:)
    விட்டுட்டேன்.
    பாலும் பழமும் படத்தில் தியாகி ரோஜாதேவி ஸ்விஸ் போய்த் திரும்பி வராங்க.
    அந்த நாள்ளலியே ஸ்விஸ்ல கான்சரைக் குணப்படுத்திடறாங்க.

    சௌகார் எல்லாப் படத்திலயும் இப்படித்தான் .ஒண்ணு உயிர விடுவாங்க. இல்லாட்ட ரெட்க்ராஸ்ல சேர்ந்துடுவாங்க:)

    ReplyDelete
  12. ஹாஹா, அருஞ்சொற்பொருள் போட்டிருக்கேன் வல்லி, உங்களுக்குப் பின்னூட்டம் தொடரும் ஆப்ஷன் இருந்தால் பார்க்கலாம். :)))))))

    ஆனா இதைப் போடப் போய்ப் பத்தி பிரிக்கவும் கம்போஸ்லே போய்ப் பிரிச்சாத் தான் செட் ஆகும்னு என்னோட ம.ம.வுக்குப் புரிஞ்சது ஒரு வழியா! :)))))))))))))

    ReplyDelete