எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 01, 2012

காவிரித்தாயே, காவிரித்தாயே
காவிரி அன்னை கோயில்.  அம்மா மண்டபம் படித்துறையில் இருக்கிறது. இன்னிக்குப் பிரதோஷம்னு இந்த சந்நிதிக்கு எதிரில் உள்ள காசி விஸ்வநாதரைப் ப்ரதோஷ தீபாராதனை பார்க்கப் போனப்போ, காவிரி அம்மன் சந்நிதியில் இருந்த குருக்கள் அழைத்தார்.  அங்கே போய் தரிசனம் செய்த பின்னர் தீர்த்தப் பிரசாதமும், சடாரியும் சாதித்தார்.  தீர்த்தம் ஓகே. காவிரி அன்னை நதியாக மாறி விடுவதால் சரியாகத் தோன்றிற்று.  ஏன் சடாரினு கேட்டால் ரங்கனின் தங்கை என்பதால் சடாரி உண்டாம்.  இவளுக்கு ரங்கன் ஆடி மாதம் வந்து சீரெல்லாம் கொடுத்துப் பார்த்துச் செல்வானாம்.  அப்போது ரங்கனுக்குச் செய்யும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் செய்யப்படுமாம்.  ஆகவே அடிப்படையில் சிவனையே சார்ந்திருந்தாலும் விஷ்ணு கோயிலின் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப் படுவதாய்ச் சொன்னார்.  பாதி சொல்றதுக்குள்ளே யாரோ வந்துட்டாங்க.  இன்னொரு தரம் போய் மிச்சம் கதையையும் கேட்கணும். நாளைக்கு இங்கே காவிரியிலிருந்து ரங்கன் திருமஞ்சனத்துக்குத் தங்கக் குடத்தில் யானையார் வந்து எடுத்துச் செல்லப் போகிறார்.  காலம்பர ஏழு மணிக்குள்ளாம்.  கொஞ்சம் கஷ்டம் தான்.  பார்க்கலாம். அப்போத் தான் பால், மோர், தயிர் எல்லாமும் வரும். :P:P:P வீட்டில் இருந்தாகணும். முடிஞ்சால் நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன்.  இந்தப் படம் முன்னாடி எடுத்தது.  இன்னிக்கு எடுக்கலை. :)))

16 comments:

 1. கதையை முழுக்க கேக்காம அப்படி என்ன வேலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
 2. வாங்க வா.தி.
  நான் நின்னுட்டுத் தான் இருந்தேன். அதுக்குள்ளே ஒரே கூட்டமா யார் யாரோ வரவும் அவங்களைக் கவனிக்கப்போயிட்டார். விடுவேனா என்ன?

  ReplyDelete
 3. நான் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லும் பொழுது, என்னுடைய கையில் அல்லது பையில், எம் பி 3 ரிக்கார்டர் தயார் நிலையில் இருந்து ஒலிப் பதிவு செய்யும். குறைந்த பட்சம் செல் போனிலாவது ரிக்கார்ட் செய்து எடுத்து வந்து விடுவேன். பிறகு நிதானமாக ரிக்கார்ட் செய்தவற்றை கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வேன்.

  ReplyDelete
 4. வாங்க கெளதம் சார், எத்தனை கோயில்கள் போயாச்சு! இன்னிக்கு வரைக்கும் ரெகார்டெல்லாம் பண்ணிக் கொண்டதில்லை. கேட்டுக் கொண்டு மனதில் பதிய வைப்பது தான். தல வரலாறு மட்டும் சரி பார்த்துக்கொள்வது உண்டு. பிரதோஷம் என்பதால் கூட்டம். பிரசாத விநியோகம். அதோடு அவரைத் தேடிக் கொண்டு யாரோ வந்துவிடப் போய் விட்டார். எங்கே போகப்போறார். பிடிச்சுடுவேன்.

  ReplyDelete
 5. சின்னச் சின்னக் கோவில் எல்லாம் கூட விட மாட்டீங்க போல....!

  //வாசுதேவன் திருமூர்த்தி said, கதையை முழுக்க கேக்காம அப்படி என்ன வேலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

  :))))

  ReplyDelete
 6. //அப்போத் தான் பால், மோர், தயிர் எல்லாமும் வரும்//

  //முடிஞ்சால் நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன்//

  மோர் ஃபோட்டோஸ் நாளைக்கா?!

  ReplyDelete
 7. கூட்டம் இல்லாத நாளில் போய் பொறுமையா பார்த்து/கேட்டு பதிவு போடுங்க படங்களோடு...

  கதை கேட்கும் ஆர்வத்தில் காத்திருக்கிறேன்....

  ReplyDelete
 8. இதுபோல நிறையா கோவில்களுக்கு போய் வாங்க கீதா ஆனாதானே எங்களுக்கும் உருப்படியான விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். என் பக்கம் வரலியே.

  ReplyDelete
 9. காவிரி அன்னை கோவிலில் , சடாரி
  சாதிப்பது ஏன் என்ற விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி.

  நான் இன்னும் அம்மா மண்டபம், காவிரி அன்னை, விஸ்வநாதர் கோவில் எல்லாம் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 10. வாங்க ஶ்ரீராம், காசி விச்வநாதர் அதை விடச் சின்னது. :)))) காவிரிக்கரையில் இருக்காங்க இவங்க எல்லாம். முதலில் பிள்ளையார், அடுத்து அப்பா, அம்மா, எதிரே காவிரி அம்மன், பிள்ளையாருக்கு எதிரே நவக்ரஹம்.ஆகவே அடிக்கடி போவோம். :))))

  ReplyDelete
 11. //வாசுதேவன் திருமூர்த்தி said, கதையை முழுக்க கேக்காம அப்படி என்ன வேலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

  :))))//

  சிரிக்கிறீங்க???? அநியாயமா இருக்கே! மோர் ஃபோட்டோஸ் போடாமல் ஓ.சி.யிலே வீடியோவே போட்டிருக்கேன், பார்க்கலையா? பிசி போலிருக்கு!

  ReplyDelete
 12. வாங்க வெங்கட், ஒருநாள் போகணும்; ஆனால் அன்னிக்கு குருக்கள் இருக்கணும். :))))

  ReplyDelete
 13. வாங்க லக்ஷ்மி, இணையத்திலே இருக்கேன்; ஆனால் இல்லை. :)))) வரேன் உங்க பதிவுக்கு. கொஞ்சம் வேலை இருந்தது. அதான் வர முடியலை. :))))

  ReplyDelete
 14. வாங்க கோமதி அரசு, விஸ்வநாதர் கோயில் மிகச் சின்னது. வாங்க, வந்து பாருங்க. வரதுக்கு முன்னாடி மெயிலுங்க. நல்வரவு.

  ReplyDelete
 15. இதெல்லாம் பார்க்காத இடங்கள். படித்து தெரிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க வெற்றிமகள், நலமா? ஆன்மீகப் பயணம் பதிவிலே போய்ப்பாருங்க. (நேரம் இருந்தால்)நிறைய ஊர்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.

  ReplyDelete